சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய மஹோற்சவ விழா 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் பெருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
04.03.2019 திங்கட்டிழமை (சிவராத்திரி தினம்) தேர்த் திருவிழாவும்; மறுநாள் 05.03.2019 அன்று தீர்த்தத் திருவிழாவும் (சம்பில்துறை தீர்த்தக் கரையில்) நடைபெற்று மஹோற்சவ விழா நிறைவு பெறும்.
இவ் விழாக்காலங்களில் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் திருவருள்பெற்று உய்வீர்களாக
சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை
ஆக்கம்: "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள் (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)