Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: ஆரோக்கியம் பொது அறிவு இதய இயக்கமும்; இரத்த ஓட்டமும் - விளக்கமாக அறிந்து கொள்வோம்

இதய இயக்கமும்; இரத்த ஓட்டமும் - விளக்கமாக அறிந்து கொள்வோம்

E-mail Print PDF
Article Index
இதய இயக்கமும்; இரத்த ஓட்டமும் - விளக்கமாக அறிந்து கொள்வோம்
பகுதி - 2
All Pages

இதயம்:

இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம். 
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. 
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம். 
இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலை.

ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான்.

உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே.

நாம் உட்கொண்ட உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் உணவு சமிபாடு அடைந்து; சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது.  இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது

இரத்த சுற்றோட்டம்:
இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் (LIFE GIVERS) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி /பிராண வாவு (அ) ஆக்ஸிஜன் (oxygen) சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது, இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DISPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.

இருதயத்தின் ஓய்வும் இயக்கமும்:
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும். ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது.

இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதுபோல் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை. இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்?

இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழி முறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது. லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது இயங்குவதற்கான அறிகுறி.

அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம்.

முதலில் ஏற்படுவது ”லப்” என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும். இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள இரண்டு வால்வுகள் மூடுவதாலும் இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது. இரண்டாவது ஒலியான ”டப்” இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது.

இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப்போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம். நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப முடியாமல் கேட்பது புரிகிறது.

இதயம் இயங்குவது மின்சாரத்தில்?:
இதயம் தனக்குத் தேவையான மின் ஆற்றலை (Electric power) தானே உற்பத்தி செய்து தன்னைத் தானே தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மின் ஆற்றலை இதயம் எப்படி உற்பத்தி செய்கிறது? அதற்காகவே ஒரு சிறப்பு அமைப்பு இதயத்துக்குள் அமைந்துள்ளது. இதயத்தின் வலது பக்க மேல் அறையின் மேற்பகுதியில் நரம்புகளாலும், தசை நார்களாலும் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு போன்ற அமைப்பு உள்ளது. இந்த நரம்புத் தசை முடிச்சை ஆங்கிலத்தில் சைனோ ஆக்டீரியல் நோடு (Sino Arterial Node) என்று சொல்வார்கள். சுருக்கமாக எஸ்.ஏ.நோடு (S.A.Node) என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பை மோட்டார்களில் உள்ள மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்போடு ஒப்படலாம்.

இதயத்துக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய மின் உற்பத்தி அமைப்பானது நிமிடத்துக்கு 72 முறை என்ற எண்ணிக்கையில் மின்பொறியை அல்லது மின் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதய மேல் அறையில் தொடங்கும் மின் ஆற்றலானது. மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே அமைந்துள்ள மற்றொரு நரம்பு முடிச்சு அமைப்புவரை (NODE) ஒரே சீராகப் பரவுகிறது. இங்கிருந்து இந்த மின் ஆற்றல், ஒரே சீராக இதயத்தின் இடப்பக்கம் உள்ள கீழ் அறையின் கடைசிப் பகுதிவரை பரவுகிறது.

இவ்வாறு மின் ஆற்றல் ஒவ்வொரு முறையும் சீராக இதயம் முழுவதும் பரவுவதால் இதயம் இயக்கப்படுகிறது. மின் ஆற்றலால் இதயம் நிமிடத்துககு 72 முறை என்ற அளவில் துடிக்கிறது. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை என்பது எல்லோரும் அறிந்ததே. அப்படியானால் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை இல்லையா?, அந்த ரத்தத்தை இதயம் எப்படி பெறுகிறது?

ஒரு வங்கியில் சாதாரணமாகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய வங்கியில் அலுவலக நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கையாண்டாலும், தன்னுடைய சொந்தத் தேவைக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக வங்கியில் இருந்து மாத ஊதியமாகப் பெறும் பணத்தை மட்டும்தான் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவும், தன்னுடைய குடும்பச் செலவுக்காகவும் பயன்படுத்த இயலும்.

இதுபோல் இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிமையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் (Aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியின் இருந்து முதல் கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன.

குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் உறிஞ்சும் குழல்களின் (STRAWS) அளவில்தான இதயத்தமனிகள் இருக்கும். மனிதனின் மொத்த எடையில் இதயமானது 200&ல் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது. அளவு சிறயதாக இருந்தாலும், மனிதனின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் மொத்த அளவில் 200&ல் ஒரு பங்கு அளவுள்ள ரத்தத்தை இதயம் பயன்படுத்திக் கொள்கிறது.

இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை ஆங்கிலத்தில் (CORONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இந்த ரத்ததக் குழாய்கள் அனைத்தும் இன்னும் பல சிறு கிளைகளாகப் பிரிந்து இதயத்தை ஒருவலைபோல் போர்த்தியுள்ளன. (CORONARY ARTERIES) என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம் அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது.

இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் உடலின் மற்ற பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதயத்தமனிகள், இதயத்தின் இடைவிடாத இயக்கத்துக்கு ஏற்றவாறு இயற்கையாகவே நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதயம் விரிவடையும்போது இந்த ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைந்து, தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றன.இதுபோல் இதயம் சுருங்கும் போது இதயத்தின் ரத்தக் குழாய்கள் நன்றாகச் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இதயம் & சில ஆச்சரியமான உண்மைகள் மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது. இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது இந்தியா நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால் கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது.

ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில் கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன் அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் கலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 கலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்

·    மனித உடம்பில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு: 6.8 லிட்டர் (70 கிலோ உடலில்)

·    சாதாரண நிலையில் இரத்த அழுத்தம்: 120/80மி.மீ. Hg பாதரசம்.

·    இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஆண்: 4.5-5.0 மில்லியன் / கன.மி.மீ.

·    இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெண்: 4.0-4.5 மில்லியன் / கன மி.மீ.

·    இரத்தச் சிவப்பணுக்களின் ஆய்ட் காலம்: இரண்டு முதல் மூன்று வாரங்கள்

·    இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை: 2,00,000-400.000/கன.மி.மீ

·    ஹீமோ குளொபின் - ஆண்: 14-15.6 கிராம்/100க.செ.மீ. இரத்தத்தில்

·    ஹீமோ குளொபின- பெண்:11-14 கிராம்/ 100 க.செ. மீ/ இரத்தத்தில்

·    இரத்தம் உறைய ஆகும் நேரம்: 2-5 நிமிடங்கள்

·    சராசரி உடலின் எடை: 70 கிலோ கிராம்

·    சாதாரண உடலின் வெப்ப நிலை: 98.4 F allathu 36.9 C

·    சுவாச விகிதம் - நிமிடத்திற்கு: 16-20 வரை

·    கபாலத்தின் எண்ணிக்கை: 12 இணைகள்

·    தண்டு வடத்தின் எண்ணிக்கை: 31 இணைகள்

·    நாளமில்லாச் சுரப்பியில் பெரியது: தைராய்டு சுரப்பி

·    கர்ப்ப காலம் - 9 மாதங்கள்: (253 - 266 நாட்கள்)

·    சாதரண இதயத் துடிப்பு: 72-75/ நிமிடம்

·    மிகப் பெரிய சுரப்பி: கல்லீரல்

·    உடலின் மிகப் பெரிய தசைகள்: கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பை

·    உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ்: ( காதில் உள்ளது )

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது.  இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.  ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.  இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை,  இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும்.  இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.  கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.  இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம்.  ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு.  இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும்.  டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்” செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?
24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் ஏற்பட வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A”,”B”, ”AB”, ”O” (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ”A1”, ”A2” என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “O” பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ”O” குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்” என்று பெயர்.

இரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; ”B” ஆன்டிஜன் இருந்தால், ”B” குரூப் ஆகும். A யும் B யும் என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ்.  இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.



முத்துமாரி அம்மன் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS