Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: உலகம் இந்தியா தமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல் தொகுதிகளும் - பொது அறிவுக் கண்ணோட்டம்

தமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல் தொகுதிகளும் - பொது அறிவுக் கண்ணோட்டம்

E-mail Print PDF
No automatic alt text available.

தமிழ்நாடு

தமிழகம் என அழைக்கப் பெறும் தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். மதராஸ் மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.


 

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள் தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்) உள்ளது.

2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

 

கல்வி அறிவு:
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாடு கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 1991-2001 இடைப்பட்ட காலத்தில் 62.66%ல் இருந்து 73.47% கல்வியறிவு அதிகரித்தது. இதில் ஆண்கள்: 82.33% ம் பெண்கள்: 64.56%ம் ஆகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகம், 454 பொறியியல் கல்லூரி, 1150 கலை கல்லூரி, 2550 பள்ளி மற்றும் 5000 மருத்துவமனைகள் உள்ளன.

இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவம் உள்ளது அவை ஐஐரி (IIT-Chennai) சென்னையிலும், தேசிய தொழில்நுட்ப நிறுவனம்(NIT) திருச்சியிலும் உள்ளன. மேலும் புகழ்மிக்க சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழக, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம், வேலூர் க்றிஸ்தவ மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம்-கோயம்பத்தூர், இலயோலாக் கல்லூரி-சென்னை ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடம்தோரறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.

தமிழக அரசியல் வரலாறு
1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. காங்கிரஸ் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

1900 - 1947
தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

1947 - 1962
இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது.

மொழி அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார்.

இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றது.

மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

1962 - 1967
1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர்.

1967 - 1971
அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.

எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார்.

இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். கருணாநிதி சதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.

1977 - 1990
தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்.

இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

1991 - 2006
1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.

2006 - 2011
தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது.

2011 -
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்கு பின் அஇஅதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது.
குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டில் 4 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31.1.1976 முதல் 30.6.1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 17.2.1980 முதல் 6.6.1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின்னரும், 30.1.1988 முதல் 27.1.1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30.1.1991 முதல் 24.6.1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளும் மாவட்டங்களும்:
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39.புதுச்சேரி -1

தமிழ் நாட்டின் 32 மாவட்டங்கள்
1. அரியலூர் மாவட்டம்
2. இராமநாதபுரம் மாவட்டம்
3. ஈரோடு மாவட்டம்
4. கடலூர் மாவட்டம்
5. கரூர் மாவட்டம்
6. கன்னியாகுமரி மாவட்டம்
7. காஞ்சிபுரம் மாவட்டம்
8. கிருஷ்ணகிரி மாவட்டம்
9. கோயம்புத்தூர் மாவட்டம்
10. சிவகங்கை மாவட்டம்
11. சென்னை மாவட்டம்  
12. சேலம் மாவட்டம்
13. தஞ்சாவூர் மாவட்டம்
14. தர்மபுரி மாவட்டம்
15. திண்டுக்கல் மாவட்டம்
16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
17. திருநெல்வேலி மாவட்டம்
18. திருப்பூர் மாவட்டம்
19. திருவண்ணாமலை மாவட்டம்
20. திருவள்ளுவர் மாவட்டம்
21. திருவாரூர் மாவட்டம்
22. தூத்துக்குடி மாவட்டம்
23. தேனி மாவட்டம்
24. நாகபட்டினம் மாவட்டம்  
25. நாமக்கல் மாவட்டம்
26. நீலகிரி மாவட்டம் மாவட்டம்
27. புதுக்கோட்டை மாவட்டம்
28. பெரம்பலூர் மாவட்டம்
29. மதுரை மாவட்டம்
30. விருதுநகர் மாவட்டம்
31. விழுப்ப்ரம் மாவட்டம்
32. வேலூர் மாவட்டம்

மறு சீரமைப்புச் சட்டம்:
மக்களவை, சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு சட்டம் 2008 படி சட்டமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் படி சில தொகுதிகள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளன. தனி தொகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சேந்தமங்கலம், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை.

சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் மாவட்ட ரீதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.சென்னை மாவட்டம்
1.  இராயபுரம்
2.  துறைமுகம்
3.  ராதாகிருஷ்ணன் நகர்
4.  பெரம்பூர்
5.  எழும்பூர் (தனி)
6.  அண்ணாநகர்
7.  தியாகராய நகர்
8.  ஆயிரம் விளக்கு
9.  மைலாப்பூர்
10.  சைதாப்பேட்டை
11.  கொளத்தூர்
12.  வில்லிவாக்கம்
13.  திரு.வி.க நகர் (தனி)
14.  விருகம்பாக்கம்
15.  வேளச்சேரி
16.  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

2. திருவள்ளுவர் மாவட்டம்

17.  கும்மிடிப்பூண்டி
18.  பொன்னேரி(தனி)
19.  திருவொற்றியூர்
20.  பூவிருந்தவல்லி(தனி)
21.  திருவள்ளுவர்
22.  திருத்தணி
23.  ஆவடி
24.  மதுரவாயல்
25.  அம்பத்தூர்
26.  மாதவரம்

3. காஞ்சிபுரம் மாவட்டம்
27.  ஆலந்தூர்
28.  தாம்பரம்
29.  திருப்போரூர்
30.  செங்கல்பட்டு
31.  மதுராந்தகம்
32  உத்திரமேரூர்
33.  காஞ்சிபுரம்
34.  திருப்பெரும்புத்தூர்(தனி)
35.  சோளிங்கநல்லூர்
36.  பல்லாவரம்
37.  செய்யூர்(தனி)

4. வேலூர் மாவட்டம்
38.  அரங்கோணம்(தனி)
39.  சோளிங்கர்
40.  ராணிப்பேட்டை
41.  ஆற்காடு
42.  காட்பாடி
43.  குடியாத்தம்(தனி)
44.  வாணியம்பாடி
45.  திருப்பத்தூர்
46.  அணைக்கட்டு
47.  வேலூர்
48.  கீழ்வைத்தனன் குப்பம்(தனி)
49.  ஆம்பூர்
50.  ஜோலார்பேட்டை

5. திருவண்ணமலை மாவட்டம்
51.  செங்கம்(தனி)
52.  திருவண்ணமலை
53.  கலசப்பாக்கம்
54.  போளூர்
55.  ஆரணி
56.  செய்யாறு
57.  வந்தவாசி(தனி)
58.  கீழ்பெண்ணாத்தூர்

6. விழுப்புரம் மாவட்டம்
59.  செஞ்சி
60.  திண்டிவனம்
61.  வானூர்(தனி)
62.  விழுப்புரம்
63.  உழுந்தூர்ப்பேட்டை
64.  இரிஷிவந்தியம்
65.  சங்கராபுரம்
66.  மயிலம்
67.  விக்கிரவாண்டி
68.  திருக்கோயிலூர்
69.  கள்ளக்குறிச்சி(தனி)

7. கடலூர் மாவட்டம்
70.  கடலூர்
71.  பண்ருட்டி
72.  குறிஞ்சிப்பாடி
73.  புவனகிரி
74.  காட்டுமன்னார்கோவில்(தனி)
75.  சிதம்பரம்
76.  விருத்தாசலம்
77.  திட்டக்குடி(தனி)
78.  நெய்வேலி

8. கிருஷ்ணகிரி மாவட்டம்
79..  ஓசூர்
80.  தளி
81.  கிருஷ்ணகிரி
82.  பர்கூர்
83.  ஊத்தங்கரை(தனி)
84.  வேப்பனஹள்ளி

9. தர்மபுரி மாவட்டம்
85.  அரூர்(தனி)
86.  பாலக்கோடு
87.  தர்மபுரி
88.  பெண்ணாகரம்
89.  பாப்பிரெட்டிபட்டி

10. சேலம் மாவட்டம்
90.  கங்கவள்ளி(தனி)
91.  மேட்டூர்
92.  ஓமலூர்
93.  ஏற்காடு(தனி)
94.  சேலம்-வடக்கு
95.  சேலம்-தெற்கு
96.  சேலம்-மேற்கு
97.  சங்ககிரி
98.  வீரபாண்டி
99.  ஆத்தூர்(தனி)
100.  எடப்பாடி

11. நாமக்கல் மாவட்டம்
101.  இராசிபுரம்(தனி)
102.  சேந்தமங்கலம்(தனி)
103.  நாமக்கல்)
104. திருச்செங்கோடு
105. குமாரபாளையம்
106. பரமத்தி-வேலூர்

12. கோயம்புத்தூர் மாவட்டம்

107.  மேட்டுன்பாளையம்
108.  தொண்டாமுத்தூர்
109.  சிங்காநல்லூர்
110.  கிணத்துக்கடவு
111.  பொள்ளாச்சி
112.  வால்பாறை(தனி)
113.  சூலூர்
114.  கோயம்புத்தூர்-வடக்கு
115.  கோயம்புத்தூர்-தெற்கு
116.  கவுண்டம்பாளையம்

13. திருப்பூர் மாவட்டம்
117.  பல்லடம்
118.  மடத்துக்குளம்
119.  திருப்பூர்-வடக்கு
120.  திருப்பூ-தெற்கு
121.  உடும்லைப்பேட்டை
122.  அவினாசி
123.  காங்கேயம்
124.  தாராபுரம்(தனி)

14. ஈரோடு மாவட்டம்

125.  மொடக்குறிச்சி
126.  பெருந்துறை
127.  பவானி
128.  அந்தியூர்
129.  கோபிச்செட்டிப்பாளையம்
130.  பவானிசாகர்(தனி)
131.  ஈரோடு-கிழக்கு
132.  ஈரோடு மேற்கு

15 நீலகிரி மாவட்டம்
133.  குன்னூர்
134.  உதகமண்டலம்
135.  கூடலூர்

16. திண்டுக்கல் மாவட்டம்

136.  பழநி
137.  ஒட்டன் சத்திரம்
138.  நிலக்கோட்டை(தனி)
139.  நத்தம்
140.  திண்டுக்கல்
141.  ஆத்தூர்
142.  வேடசந்தூர்

17. தேனி மாவட்டம்

143.  பெரியகுளம் (தாழ்த்தப்பட்டோருக்கான)
144.  போடிநாயக்கனூர்
145.  கம்பம்
146.  ஆண்டிப்பட்டி

18. மதுரை மாவட்டம்

147.  திருமங்கலம்
148.  உசிலம்பட்டி
149.  சோழவந்தான்(தனி)
150.  திருப்பரங்குன்றம்
151.  மதுரை-மேற்கு
152.  மதுரை-மத்தி
153.  மதுரை-கிழக்கு
154.  மேலூர்
155.  மதுரை-வடக்கு
156.  மதுரை-தெற்கு

19. கரூர் மாவட்டம்
157.  அரவக்குறிச்சி
158.  கரூர்
159.  கிருஷ்ணராயபுரம்
160.  குளித்தலை

20. பெரும்பலூர் மாவட்டம்
161.  பெரும்பலூர்(தனி)

21. அரியலூர் மாவட்டம்
162.  அரியலூர்
163.  ஜெயங்கொண்டான்
164.  முன்னம்

22. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
165.  முசிறி
166.  இலால்குடி
167.  ஸ்ரீரங்கம்
168.  திருவெறும்பூர்
169.  மணப்பாறை
170.  திருச்சிராப்பள்ளி-கிழக்கு
171.  திருச்சிராப்பள்ளி—மேற்கு
172.  மண்ணச்சநல்லூர்
173. துறையூர்(தனி)

23. நாகபட்டினம் மாவட்டம்

174.  சீர்காழி(தனி)
175.  பூம்புகார்
176.  மயிலாடுதுறை
177.  நாகபட்டினம்
178.  வேதாரண்யம்
179.  கீழ்வேளூர்

24. திருவாரூர்மாவட்டம்
180.  நன்னிலம்
181.  திருவாரூர்
182.  திருத்துறைப்பூண்டி(தனி)
183.  மன்னார்குடி

25. தஞ்சாவூர் மாவட்டம்
184.  பட்டுக்கோட்டை
185.  பேராவூரணி
186.  ஒரத்தநாடு
187.  தஞ்சாவூர்
188.  திருவையாறு
189.  பாபநாசம்
190.  கும்பகோணம்
191.  திருவிடைமருதூர்(தனி)

26. புதுக்கோட்டை மாவட்டம்
192.  திருமயம்
193.  புதுக்கோட்டை
194.  ஆலங்குடி
195.  அறந்தாங்கி
196.  விராலிமலை
197.  கந்தர்வக்கோட்டை(தனி)

27. சிவகங்கை மாவட்டம்
198.  திருப்பத்தூர்
199.  காரைக்குடி
200.  சிவகங்கை
201.  மானாமதுரை(தனி)

28. இராமநாதபுரம் மாவட்டம்
202.  திருவாடாணை
203.  பரமக்குடி
204.  இராமநாதபுரம்
205.  முதுகுளத்தூர்

29. விருதுநகர் மாவட்டம்
206.  அருப்புக்கோட்டை
207.  சாத்தூர்
208.  விருதுநகர்
209.  சிவகாசி
210.  திருவில்லிபுத்தூர்(தனி)
211.  இராஜபாளையம்
212.  திருச்சுழி

30. தூத்துக்குடி மாவட்டம்

213.  விளாத்திக்குளம்
214.  ஒட்டப்பிடாரம்(தனி)
215.  கோவில்பட்டி
216.  திருச்செந்தூர்
217.  ஸ்ரீவைகுண்டம்
218.  தூத்துக்குடி

31. திருநெல்வேலி மாவட்டம்
219.  சங்கரன்கோவில்(தனி)
220.  வாசுதேவநல்லூர்(தனி)
221.  கடையநல்லூர்
222.  தென்காசி
223.  ஆலங்குளம்
224.  திருநெல்வேலி
225.  பாளையங்கோட்டை
226.  அம்பாசமுத்திரம்
227.  நாங்குநேரி
228.  ராதாபுரம்

32. கன்னியாகுமரி மாவட்டம்

229.  கன்னியாகுமரி
230.  நாகர்கோயில்
231.  குளச்சல்
232.  பத்மனாபபுரம்
233.  விளவங்கோடு
234.  கிள்ளியூர்

மக்கள்
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கள் தொகை மிகுந்த மாநிலமாகும். யூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

1947 இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, பிரித்தானிய-இந்தியா(பிரித்தானிய ஆட்சியில) காலத்தில் மதராஸ் மாகாணம் (The Madras Province) என அழைக்கப்பட்ட பிரதேசம் மதராஸ் மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது.

1953 இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956 இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது.

1969 இல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழும் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

அரசியல்
தமிழ் நாட்டில் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற (மத்திய அரசாங்க) தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986  வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

அறிஞர் அண்ணா (சி. என். அண்ணாதுரை) அவர்கள், தந்தை பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்களால் 1916 இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். 1947  -ல் இந்திய விடுதலைக்குப் பின்பு 1967  வரை தமிழ் நாட்டைகாங்கிரசு கட்சி ஆண்டு வந்தது.

1967 -ல் அறிஞர் அணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1997 -ல் ம, கோ. இராமச்சந்திரன்(MGR) அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். 1977  இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967  முதல் 2001-ல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி. மு. க. அல்லது அ. இ. அ. தி…மு. க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.

தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2010) செயல்படுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இலங்கைதமிழர் பிரச்சினை,  இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல், இலஞ்சம், நிதிமோசடி, சாதி அரசியல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் உள்ளவை. தற்போது குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

புவியமைப்பு
தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவேரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.

மதராஸ் என்று 1996  வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே இம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான “மெரீனா” கடற்கரை சென்னையிலேயே உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திரிருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

வரலாறு
சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்..

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்திற்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள்.

இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி. மு. ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து. பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.

பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி. முதாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனிம், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600) பௌத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை

இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும்

இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இலட்சதீவுகள், சுமத்திரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான்.

அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு

14 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது.

இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பிகையை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது. தஞ்சை மற்றும் மதுரையச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1839 இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது)  கிழக்கிந்தியக் கம்பபெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மருது பாண்டியர், புலித்தேவன், மாவீரன், அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன், சுந்தரலிஞ்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர். --

1909-ல் சென்னை மாகாணம் – தெற்குப் பகுதி

சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.

சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச் செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது.

இந்திய அரசு சட்டம் 1919 இல் இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப்பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இந்திய அரசு சட்டம் 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (The legislative council), எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.

1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1946 ன் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

சென்னை மாநிலம்
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ் நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு -1, 1952 -ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லைமாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்பிரல்-1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.

சென்னை மாகாணம் ஜனவரி-14, 1967 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மாணம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் “தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம்-1986” (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமூல்படுத்தப்பட்டு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது.

தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது. முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும்.

மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம்-356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு. கருணாநிதியின் ஆட்சி லஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி அமூல்படுத்தப்பட்டது.  

முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கெட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும். அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.

தொடரும்……

12496.06.04.2017இந்திய அரசியல் அமைப்பும் தேர்தலும் அறிந்து கொள்ள இங்கே ழுத்துக

 

12600.09.04.2017

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS