Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: மங்கையர் மலர் சமையல்

ஓட்ஸ் கேசரி

E-mail Print PDFதேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 1 கப்
நெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கேசரி கலர் – சிறிது
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
முந்திரிப்பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது

செய்முறை:
ஒரு தாச்சியில் (வாணலியில்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும்.

பின்னர் அதில் சீனி (சர்க்கரை) மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும்.

1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளறவும்.

முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து கேசரியில் சேர்க்கவும்.

ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும்.

கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது,

அடுப்பிலிருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். 

சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ்

E-mail Print PDF

சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ்.கீழே தரப்பெற்றுள்ளன அவை  பல பேருக்குத் தெரிஞ்சும் இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்குத் தெரியாத டிப்ஸை தெரிஞ்சுகொள்ளுங்கள்

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

உளுந்து வடை

E-mail Print PDF

தென்னிந்திய, இலங்கைத் தமிழர் உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள்.

ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீர் விட்டு, இரவு படுக்கும் போது ஊற வைத்து விட வேண்டும்.

பின் மிளகை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி, அதனை லேசாக தண்ணீர் விட்டு, நன்கு மென்மையாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த உளுந்து மாவில் மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற  வேண்டும். அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து மாவை எடுத்து, வட்டமாக தட்டி, எண்ணெய் காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

இதே போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான உளுந்து வடை ரெடி!!!

இதனை மிளகாய் சம்பல், க்ட்டுச் சம்பல், தேங்காய் சட்னி மற்றும் ஒரு கப் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.


தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

E-mail Print PDF

தீபாவளி ஸ்பெஷல்"

தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி


செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக   பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.

வழங்கியவர்: துஷி தாஸ் - டென்மார்க்

பூந்தி லட்டு - 30 உருண்டைகள்

E-mail Print PDF

தீபாவளி ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்

செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.

பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.

அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது எண்ணெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)

தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.

பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு எண்ணை வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.

பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காச்சவும். பாணிடை தண்ணீரக்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.

அத்துடன் கயு ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு  பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம்.

பூந்தியை பொரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும் பாவிக்கலாம். நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். ஆனால் நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

பச்சைக் கற்பூரம் இந்தியாவில் சேர்ப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர் பாவிப்பதாக தெரியவில்லை. கராம்பு அனேகம் பேருக்குப் பிடிக்கும்.  பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்னையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.

குறிப்பு:

உங்களுக்குத் தேவையான உருண்டைகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

வழங்கியவர்: திருமதி. துஷி தாஸ்

றவ்வை லட்டு - 30 உருண்டை

E-mail Print PDF

தீபாவளி ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்
1 சுண்டு றவ்வை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்

செய்முறை
றவ்வை, தேங்காய்ப்பூ, எள்ளு என்பவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
சீனியை அரைத்து எடுக்கவும்.பின்னர் வறுத்து எடுத்தவற்றை தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த றவ்வை, அரைத்த சீனி, அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் சேர்த்து நன்றாக கலக்கவும். (உருட்டும் பதம் வரவில்லையென்றால் சிறிது கொதிநீர் சேர்க்கலாம்)

பின்னர் அக்கலவையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.

வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமைமாவையும்  தண்ணீர் சேர்த்து தடித்த கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை அவ் மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.  

வழங்கியவர்: துஷி தாஸ்

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 5