Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் ஜோதிடம் 2016 - ஆங்கில புதுவருட ராசி பலன்கள் - பன்னிரண்டு ராசிகளுக்கும்

2016 - ஆங்கில புதுவருட ராசி பலன்கள் - பன்னிரண்டு ராசிகளுக்கும்

E-mail Print PDF

 

01.01.2016 முதல் 31.12.2016 வரையான காலத்து 12 இராசிகளுக்கும் பொதுவான கோசர பலன்கள் இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம்.

01.01.2016 புத்தாண்டு கன்னியா லக்னத்தில் உத்திரம் நட்சத்திரம் சிம்மராசியில் உதயமாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். புதபகவான் லக்னம் மற்றும் பத்தாம் வீட்டுக்கு அதிபதியாவதால், சுபக்கிரகங்கள் கேந்திர வீடுகளுக்கு ஆதிபத்யம் பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்கிற ஜோதிடவிதி அடிபட்டு அவர் திரிகோண ராசியில் அமர்ந்து முழுபலத்தையும் பெறுகிறார்.

புதபகவான் திருமாலின் அம்சத்தைப் பெற்றுள்ளதால் அவரே லக்னாதிபதியாக ஆவதால் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகக் கழியும். அதுவும் சுக்கிர வாரம் என்கிற மஹாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக் கிழமையில் தொடங்குவதும் மற்றொரு சிறப்பாகும்.

தன பாக்கியாதிபதியான சுக்கிர பகவான் பூர்வபுண்ணிய மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சனி பகவானுடன் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானம் என்கிற தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்கிறார். வித்தை, கல்வி, ஞானம், பஞ்சதந்திரம், நுண்ணறிவு, சமயோசிதபுத்தி போன்றவற்றிற்கு புதபகவானே காரகராகிறார்.

இதனால் இந்த ஆண்டு வெளிநாட்டுக் கொள்கையில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். சிறந்த வழக்கறிஞர்களுக்கு புதபகவானின் பலம் இன்றியமையாதது. அதனால் இந்த ஆண்டு நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் சிறப்பான வாதத்தால் மக்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் தீர்ப்புகள் கிடைக்கும்.

புதபகவானே பத்திரிகைத் தொழில், நவீன தொலைத் தொடர்பு ஆகியவற்றிற்கும் காரகராகிறார். அதனால் இந்தத் துறைகளும் மேன்மையடையும் என்றால் மிகையாகாது.

சுக்கிரபகவானின் துறைகளான கலை, ஓவியம், நடனம், நாடகம், சங்கீதம், வியாபாரம் போன்றவைகளும் சீராக வளர்ச்சியடையும். புத, சுக்கிர பலத்தால் நமது நாட்டின் ஆலோசனைகளை உலகவர்த்தகக்கழகம் ஏற்றுக்கொள்ளும்.

கிரக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவருக்கும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. அவருடன் சந்திரபகவான் இணைந்து இருப்பதால் குருசந்திர யோகமும் உண்டாகிறது.

குருபகவானின் பார்வை தன் ராசியான தனுசு ராசியில் அமர்ந்திருக்கும் விரயாதிபதியான சூரியபகவானின் மீதும் படிகிறது. அதோடு அவர்கள் இருவரும் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் அறியவேண்டும். இதனால் சிவராஜயோகமும் உண்டாகிறது. மக்கள் சரியான தீர்ப்புகளை வழங்குவார்கள்.

ராகு – கேது பகவான்கள் லக்னம் மற்றும் நட்பு ஸ்தானங்களில் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள் இன்னும் ஒருவாரம் கழித்து அதாவது 08.01.2016 அன்று முறையே சிம்ம, கும்ப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆவதால் இது ஆறு மற்றும் பன்னிரண்டாம் ராசிகளாக ஆவதால் சர்ப்பக் கிரகங்களுக்கு இது உகந்த ராசிகளாக ஆகிறது என்று கூறவேண்டும்.

முருகப்பெருமானை அதிபதியாகக் கொண்ட அங்காரகபகவான், நவக்கிரகங்களில் தனாதிபதியாகிறார். இவர் குடும்ப ஸ்தானத்தில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரத்தில்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிகத்தில் ஆட்சியும் பெறுகிறார். இதனால் தைரிய ஸ்தானமும் புதையல் ஸ்தானம் என்கிற எட்டாம் வீடும் வலுப்பெறுகிறது. மேலும் செவ்வாய்பகவானின் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் ராணுவம், காவல், விவசாயம், கட்டுமானத் துறைகளும் ஏற்றம் பெறும் என்றால் மிகையாகாது.

08.01.2016 அன்று நண்பகல் 12.37 மணிக்கு மேஷ லக்னத்தில் மூலம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ராகு- கேது பகவான்கள் கன்னி, மீன ராசிகளைவிட்டு சிம்ம, கும்ப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ராகு – கேது பகவான்கள்:
சராசரியாக ராகு – கேது பகவான்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள். நவக்கிரக மண்டலத்தில் ராகுபகவான் தென் துருவத்திலும் கேது பகவான் வடதுருவத்திலும் 180 டிகிரி வித்தியாசத்தில் கிழக்கிலிருந்து மேற்காக அப்பிரதட்சணமாக கிரகமண்டலத்தைச் சுற்றுகிறார்கள்.

அசுரர் தலையுடன் சர்ப்பத்தின் உடலுடனும் காட்சியளிப்பவர் ராகுபகவான். சர்ப்பத்தின் தலையுடன் அசுரரின் உடலுடனும் காட்சியளிப்பவர் கேதுபகவான். ராகுபகவான் தந்தை வழி பாட்டனையும் கேதுபகவான் தாயார் வழி பாட்டனையும் குறிக்கும் காரகத்துவம் கொண்டவர்கள். ராகுபகவானை போக காரகர் என்றும் கேதுபகவானை மோட்ச காரகர் என்றும் அழைப்பார்கள்.

ராகுபகவான் சனிபகவானைப் போலவும் கேதுபகவான் செவ்வாய்பகவானைப் போலவும் பலனளிப்பார்கள் என்றால் மிகையாகாது. இவர்கள் பூர்வஜன்ம வினைப் பயன்களை விட்டுக் கொடுக்காமல் நிழல் போல் தொடர்ந்து கொடுப்பதால் இவர்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று கூறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, ராகு – கேது பகவான்கள் 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிப்பது விசேடமாகும். ராகுபகவானுக்குரிய தலம் திருநாகேஸ்வரமாகும். கேதுபகவானுக்குரிய தலம் கீழப்பெரும்பள்ளமாகும்.
சர்ப்பதோஷம்:

ராகு-கேது பகவான்கள் லக்னம், இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஐந்தாம் வீடுகளில் இருந்தால் சர்ப்ப தோஷமுண்டாகும். இதனால் திருமணத்தடை, வருமானத்தில் குறைவு, புத்திரபாக்கியத்தில் இடையூறுகள் போன்றவைகள் உண்டாகும்.

காலசர்ப்பயோகம்:
இதை, 1. விலோம காலசர்ப்ப யோகம் அதாவது முன்னால் கேதுபகவான், பின்னால் ராகுபகவான் என்கிற அமைப்பிலும் 2. அனுலோம காலசர்ப்பயோகம் அதாவது முன்னால் ராகுபகவானும் பின்னால் கேதுபகவான் என்கிற அமைப்பிலும் உண்டாகிறது என்று கூறுவர். இத்தகைய அமைப்பில் ராகு- கேது பகவான்களின் பிடிக்குள் அனைத்து கிரகங்களும் லக்னம் உட்பட அகப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு கிரகம் இந்த கட்டுக்குள் இல்லாமல் இருந்து அந்தக் கிரகம் ராகு- கேது பகவான்களின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் சஞ்சரித்தால் அந்த கிரகம் ராகு, கேது பகவான்களின் பிடிக்குள்ளாகவே அமைந்துள்ளது என்று கொள்ளவேண்டும்.

இந்த இரண்டு அமைப்புகளில் எது சிறந்தது என்று சரியாகக்கூற சான்றுகள் இல்லை என்றே கூறமுடிகிறது. அதனால் இரண்டு அமைப்புகள் உள்ளவர்கள் சர்ப்பசாந்தி செய்து கொள்வது நலம். பெரும்பாலும் இந்த யோக அமைப்பில் உள்ளவர்கள் 32 வயதுக்குப்பிறகே சிறப்புகளைப் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள்.

காலசர்ப்பயோகம் உள்ளவர்களுக்கு காலசர்ப்பயோகம் உள்ள வரனையோ அல்லது பெண்ணையோதான் திருமணம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு இல்லை என்றே பதில் கூறவேண்டும்.
இத்தகையோருக்கு ராகு- கேது பகவான்கள் இருக்கும் இடங்களை பரிசீலித்து சேர்த்தால் மட்டுமே போதுமானது. அதாவது சர்ப்ப தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும்.

மேஷ ராசி : அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

பணத்தால் மகிழ்ச்சி-உறவினரால் பிரச்னை! (100/65)
அமைதியான குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

தங்கத்தின் தரம்கூட குறையலாம். ஆனால், உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான்.

நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். முக்கிய கிரகங்களில் குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கன்னியில் உள்ளார். அவரால் மனதில் தளர்ச்சி என்றாலும், அதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் பிப். 7 முதல் ஆக. 1 வரை அவர் வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் குரு பகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். இன்னொரு முக்கிய கிரகமான சனி இப்போது 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அஷ்டமத்து சனி காலம். அவரால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும்.

சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், இந்த பலன்கள் அப்படியே தொடரும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருக்கிறார். மேற்கண்ட கிரக நிலைகளைக் கொண்டு விரிவான பலனை காணலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்ரவரி மாதத்தில் இருந்து தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு என்ற நிலையை எடுக்கலாம். கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சியில் ஏற்படும் தடையை குருவின் பார்வையால் தடுத்து நிறுத்தலாம்.

மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மார்ச் மாதத்திற்கு பிறகு மறையும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். கடந்த சில மாதங்களாக தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பிப். 7க்குப் பிறகு கைகூடும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். ராகுவால் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். ஆனால், குருவின் பார்வையால் எந்த தடையையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். அலைச்சல் ஏற்படும்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு
எதிலும்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டி வரும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்க  முயற்சி தேவை. பணப்புழக்கத்தில் எந்த குறையில்லை.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு சிறப்பானதாக அமையும்.

விவசாயிகள்: நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருவாய் பெறுவீர்கள். கரும்பு, எள். பனை , பயறு மற்றும் மானாவாரி பயிர்களில் ஜூலை மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். ஜூலைக்கு பிறகு நெல், கோதுமை, கொண்டை கடலை போன்ற பயிர் வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள்: புத்தாடை, நகை வாங்கலாம். ஜனவரி, பிப்ரவரி, டிசம்பர் மாதங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்., அக்டோபர் மாதங்களில் எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். ராகுவும், சனியும் சிறப்பான நிலையில் இல்லாததால் பத்ரகாளியம்மன் வழிபாடு முன்னேற்றம் அடைய செய்யும்.

செல்ல வேண்டிய கோவில்: விழுப்புரம் அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் கோவில்

 

ரிஷப ராசி: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்? வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

வீடும் காரும் ரெடி- வேண்டாதவர்கள் அடாவடி! (100/70)
சேவை மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

காரசாரமாக கை ஓங்கிப் பேசத் தயங்கும் உங்கள் உள்மனதில் எப்போதும் காதல் கசிந்து கொண்டிருக்கும். வெகுதொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில்  கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலை கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள்.

நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். முக்கிய கிரகங்களில் குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கன்னியில் உள்ளார். அவரால் மனதில் தளர்ச்சி என்றாலும், அதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் பிப். 7 முதல் ஆக. 1 வரை அவர் வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் குரு பகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். இன்னொரு முக்கிய கிரகமான சனி இப்போது 8-ம் இடத்தில் இருக்கிறார். இது அஷ்டமத்து சனி காலம். அவரால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும்.

சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், இந்த பலன்கள் அப்படியே தொடரும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருக்கிறார். மேற்கண்ட கிரக நிலைகளைக் கொண்டு விரிவான பலனை காணலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.

பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிப்ரவரி மாதத்தில் இருந்து தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு என்ற நிலையை எடுக்கலாம். கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சியில் ஏற்படும் தடையை குருவின் பார்வையால் தடுத்து நிறுத்தலாம். மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மார்ச் மாதத்திற்கு பிறகு மறையும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். கடந்த சில மாதங்களாக தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பிப். 7க்குப் பிறகு கைகூடும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். ராகுவால் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். ஆனால், குருவின் பார்வையால் எந்த தடையையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். அலைச்சல் ஏற்படும்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு
எதிலும்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டி வரும்.

அரசியல்வாதிகள்:
எதிர்பார்த்த பதவி கிடைக்க  முயற்சி ஏதவை. பணப்புழக்கத்தில் எந்த குறையில்லை.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு சிறப்பானதாக அமையும்.

விவசாயிகள்: நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருவாய் பெறுவீர்கள். கரும்பு, எள். பனை , பயறு மற்றும் மானாவாரி பயிர்களில் ஜூலை மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். ஜூலைக்கு பிறகு நெல், கோதுமை, கொண்டை கடலை போன்ற பயிர் வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள்: புத்தாடை, நகை வாங்கலாம். ஜனவரி, பிப்ரவரி, டிசம்பர் மாதங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்., அக்டோபர் மாதங்களில் எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். ராகுவும், சனியும் சிறப்பான நிலையில் இல்லாததால் பத்ரகாளியம்மன் வழிபாடு முன்னேற்றம் அடைய செய்யும்.

செல்ல வேண்டிய கோவில்: விழுப்புரம் அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் கோவில்

மிதுன ராசி : மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

பணம் உங்கள் பையில் - வம்பு உங்கள் வாயில்! (100/75)
இளமை நினைவுகளை என்றும் மறக்காத மிதுன ராசி அன்பர்களே!

இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழகமாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து  கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள்.

உங்கள் நட்பு கிரகமான சனிபகவான் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்துச் செல்வார். குருபகவான் 4-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். அவரால் மன உளைச்சலும், உறவினர் வகையில் வீண் பகையும் உருவாகலாம். ஆனால், அதைக்கண்டு கவலை கொள்ள வேண்டாம். பிப்ரவரி முதல் ஜூலை வரை, குரு வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் கெடுபலன்கள் வராது.  சனிபகவான் 6-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இங்கு அவர் நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவார். மேலும், சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும்.

அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழில் விருத்தியைத் தந்து நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். இவர் மார்ச் 28  முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருப்பதால், பலன்களில் குறையிருக்காது. சனி, குரு, ராகு, கேது ஆகிய முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலன்களை இனி காணலாம்.

தேவையான பொருளாதார வளம் இருக்கும். எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்னைகள் வரலாம். வம்பு பேசும் வாயை அடக்கி சற்று விட்டுக்கொடுத்து போனால் பிரச்னைகளை தவிர்த்து விடலாம். ஆக.1க்கு பிறகு கருத்து வேறுபாடு படிப்படியாக குறையும். திருமணம் தாமதம் ஆகலாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும்.

தொழில், வியாபாரம்: நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கேதுவால் பணவிரயம் ஆகலாம் என்பதால், யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் நன்றாக வளர்ச்சி அடையும். இரும்பு வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையுடனும் இருக்கவும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை புதிய வியாபாரம் துவங்க வேண்டாம்.

பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் பிரச்னை இருக்காது. அதன்பிறகுள்ள காலத்தில், மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு குரு வக்கிர காலம் உன்னதமாக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கலைஞர்கள்:
புதிய ஒப்பந்தங்களை அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி கடும் முயற்சியின் பேரில் கிடைக்கும். எனினும், பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

மாணவர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.

விவசாயிகள்: மிக கடுமையாகக உழைக்க வேண்டி இருக்கும். ஜூலை முதல் நெல், சோளம் கொள்ளு, எள், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்போர் மன நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங்களில் முதல் ஆறுமாதம் வரை விசாரணை நீடித்து கொண்டே போகும். ஜூலைக்கு பிறகு சாதகமான நிலை ஏற்படும்.

பெண்கள்: பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, வாகனம், புத்தாடை, நகை, ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அபார ஆற்றலுடன் திகழ்வீர்கள். சுக்கிரனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு ஆடை மற்றும் கல்வி உதவி நிதி வழங்குங்கள். திங்கள்கிழமைகளில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்.

 

கடக ராசி : புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

பிறரின் அன்புக்கு கட்டுப்படும் கடக ராசி அன்பர்களே!
லட்டு லட்டா பணம் வரும் - கட்டு கட்டா செலவாகும்! (100/65)

கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். கற்பனையில் சிறகடித்து கதை, கவிதை வடிக்கும் நீங்கள்  யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர பறவைகள். உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள்.

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சுக்கிரன் பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் இடத்தில் இருக்கிறார். அவரின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவர் நன்மை தருவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரியோர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனை கிடைக்கும்.  குரு பகவான் 3-ம் இடமான கன்னியில் உள்ளார்.

பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். எனினும், குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளதால், எந்த இடையூறையும் முறியடிப்பீர்கள். மேலும் குரு பிப். 7ல் வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். ஜூன் 20ல் வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்குள்ளேயே இருக்கிறார். ஆக. 1ல் தான் கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சனி பகவான் 5-ம் இடத்தில் இருப்பதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் சில பிரச்னைகளைத் தருவார். ஆனால் அவரது 7-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பலனை காணலாம். ஆண்டு தொடக்கத்தில் குரு பார்வையால் கூடுதல் பலன் பெறலாம். அதற்காக அவரின் வக்கிர காலத்தில் கட்டு கட்டாக பணம் செலவழிந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு லட்டு லட்டா வருமானம் இருக்கும். பிப். 7க்கு பிறகு மந்தநிலை மாறும். துணிச்சல் பிறகும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி எடுபடாமல் அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

இந்த பலன்கள் ஆக. 1 வரை கிடைக்கும். அதன் பிறகு குருவின் 5-ம் இடத்தின் பார்வை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். 7-ம் இடத்துப் பார்வை மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும்.

குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. 9-ம் இடத்துப்பார்வை மூலம் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். தொழில், வியாபாரம்: சனிபகவானின் வக்கிர காலத்தில் லாபம் கிடைக்கும்.புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளம் காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறலாம். அலைச்சலும், வெளியூர் வாசமும் அடிக்கடி இருக்கும். அரசு உதவி கிடைக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.

பணியாளர்கள்: பெரிய அளவுக்கு பலன் இராது. அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வீண் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். எனினும், குருவின் பார்வை வேலையைத் தக்க வைக்கும்.

கலைஞர்கள்: பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர். ஜூன் வரை புதிய ஒப்பந்தங்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அப்போது எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். என்றாலும் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.

அரசியல்வாதிகள்:
அனைத்து வகையிலும் முன்னேறி பதவி, பாராட்டு கிடைக்க பெறுவர்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். அடுத்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

விவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலன் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டை கடலை ஆகிய பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை எள், கொள்ளு, பயறு வகைகளில் நல்ல மகசூல் காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியும், பொருள் சேர்க்கையும் பெறுவர். சிறு தொழில் செய்பவர்கள் மேலும் முன்னேற்றம் காணலாம்.

பெண்கள்: தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளம் காணலாம்.

பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். அம்மன் வழிபாடு மிகவும் உயர்வை தரும். புற்றுள்ள கோவில்களில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

சிம்ம ராசி: மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

சாதக காற்று வீசுது! - பாதகம் கொஞ்சம் இருக்குது! (100/55)
எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே!

புரட்சியையும் புதுமையையும் விரும்பும் நீங்கள், தொலைநோக்குடன் சிந்திப்பீர்கள். அடிக்கிற கை அணைப்பது போல கோபப்பட்டாலும், அக்கம்  பக்கமுள்ளவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். சமயோஜித புத்தி கொண்ட நீங்கள், விவாதமென வந்து விட்டால் வெளுத்து வாங்குவீர்கள்.

உங்களுக்கு தற்போது 2-ம் இடத்தில் குரு சாதகமாக இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவர் மூலம் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் இடையூறு மறையும். இந்த நிலையில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமையும். இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். எந்த பிரச்னையையும் முறியடித்து முன்னேறும் வல்லமை பெறுவீர்கள்.

குரு பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் கிடைக்கும் நற்பலன்கள் சற்று குறையலாம். சனி பகவான் தற்போது 4-ம் இடத்தில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது சனிபகவான் ஊரை விட்டோ, தாயை விட்டோ பிரிந்து செல்லும் பாதக நிலையை உருவாக்குவார். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் பலனின் அளவு குறையும். இனி முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனை காணலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு ஆண்டின் தொடக்கத்திலும், பிற்பகுதியிலும் குரு உறுதுணையாக இருப்பர். இதனால் முன்னேற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.

செல்வாக்கு, சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பிப். 7 முதல் ஆக. 1 வரை மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. வீண் விவாதத்தை தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். செலவு களும் ஏற்படும். அதன்பின் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வீட்டில் ஆனந்தம் அதிகரிக்கும். தற்போது தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். கேதுவால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு வந்தாலும், உடனடியாக மறைந்து போகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: லாபம் அதிகரிக்க அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனினும் வருமானம் அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு பத்திரிகை, தானியம், தங்கம், உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது போட்டியாளர்களின் இடையூறுகள் வந்தாலும், சாதுர்யமாக முறியடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வெகுவான முன்னேற்றம் கிடைக்கும். அரசின் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். வேலைப்பளு கூடும். ஆனால் ஆகஸ்ட் முதல் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம். மதிப்பு பாராட்டு கிடைக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவர். தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு போன்றவை ஜூலை மாதத்திற்கு பிறகு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உன்னத நிலையை அடையலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள்: குருவால் சிறப்பான நிலையை காணலாம்.ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். சிலர் மாநில ரேங்க் எடுக்கும் நிலைக்கு வருவர். எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்கும்.

விவசாயிகள்:
சீரான வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் பெறலாம். சிறு தொழில் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பர். கூலி வேலை செய்பவர்கள் நல்ல வருமானம் காண்பர். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்கள்பக்கம் அமையும். கைவிட்டுப்போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்: மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்.

 

கன்னி ராசி : உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

தொட்டதெல்லாம் துலங்கும் - வியாபாரத்தில் சிறு விரயம்! (100/80)
கனிவான உள்ளம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால், குறிக்கோளிலிருந்து மாறமாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறமாட்டீர்கள். பழைய நினைவுகளை  அவ்வப்போது அசைபோடும் நீங்கள், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தயங்க மாட்டீர்கள். குழந்தையின் அழுகையையும் சங்கீதமாய் பார்க்குமளவிற்கு  கலை ஞானம் உங்களுக்கு உண்டு.

உங்கள் ராசி நாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். விருச்சிக ராசியில் இருக்கும் சனி மார்ச் 28முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.

குரு பகவான் தற்போது உங்கள் ராசியில் உள்ளார். இதனால் கலகம் விரோதம் வரும் என்றும், மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குரு பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும், பிப். 7முதல் ஆக. 1 வரை அவர் வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன் தரமாட்டார். இதுதவிர குரு உங்கள் நட்புகிரகம் என்பதாலும் கெடுபலன் குறையும். மேற்கண்ட நிலையை கருத்தில் கொண்டு பலனை காணலாம்.

இந்த ஆண்டு சனி பகவானாலும், கேதுவாலும் நல்ல பொருளாதார வளம் இருக்கும். தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி நிறைவேறும். எடுத்த செயலை செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். அதில் குறுக்கிடும் தடைளை உங்கள் சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பிப்ரவரிக்கு பிறகு வீடு, மனை, வாகனங்கள் வாங்க யோகம் கூடி வரும். அதற்காக வாங்க உள்ள கடன் சிக்கலின்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். யாரிடமும் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குருவின் பார்வையால் குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7ம் இடபார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 9-ம் இடபார்வையால், தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரம்: சீரான வளர்ச்சியை அடையலாம். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கடன் போன்ற உதவிகளையும் பெறலாம். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை புதிய வியாபாரத்தை தொடங்க வேண்டாம். மீறி தொடங்கினால் பணவிரயம் ஏற்படலாம். நிர்வாகச் செலவுகள் எல்லை மீறும் என்பதால் கவனம் தேவை. போட்டியாளர்களின் தொல்லை இருக்கத்தான் செய்யும். இரும்பு தொடர்பான தொழில் செய்பவர்கள் பணம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஜூலை 14க்கு பிறகு, சனிபகவான் வக்கிர நிவர்த்தி ஆகி விடுவார் என்பதால் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: தன்னம்பிக்கையோடு பணி செய்வீர்கள். பிப்ரவரி முதல் ஜூலை வரை வேலையில் அதிக பளு இருக்கும். அதன் பின் அது குறையும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதன்பின் வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியிருக்கும். பிறகு புதிய ஒப்பந்தங்களை எளிதாகப் பெறுவீர்கள். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசியல்வாதிகள்: கட்சியில் முக்கியத்துவம் பெறுவீர்கள். பதவியும் பணமும் கிடைக்கும். வயதில் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலன் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பெண் உயரும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர். ஆனால் அடுத்த கல்வி ஆண்டில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள்: ஜூலை வரை மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களையும், கறுப்பு நிற தானிய வகைகளையும் பயிரிடுவதை தவிர்க்கவும். ஜூலைக்குப் பின் நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். புதிய வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டாம்.

பெண்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை கணவர், மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன்பின் பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னையும் மறைந்து விடும். அவர்களால் பெருமையும், கணவரின் அன்பும் கிடைக்கும். குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பர். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள். ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: தஞ்சாவூர் மாவட்டம் திட்டை குரு கோவில்.

துலாம் ராசி : சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

பணபலம் கூடும் - உறவினரால் பிரச்னை! (100/60)
உழைப்பில் உறுதி மிக்க துலாம் ராசி அன்பர்களே!

எதையும் ஆற, அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்திற்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும், எடுத்த  வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், மாடாக உழைத்து ஓடாக தேய்பவர்கள்.

உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களமாக இருக்கும். இது ஏழரை சனியின் இறுதி காலம் என்பதை அறிவீர்கள். சனிபகவான் தற்போது ராசிக்கு 2ல் இருக்கிறார். ஏழரை சனியின் இறுதிக் கட்டமான இந்த காலத்தில் பணிச்சுமையைக் கொடுத்தாலும், அதற்கான பலன் தர தயங்க மாட்டார். சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரகதியில் இருக்கிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார். குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். பொருள் விரயம் ஏற்படும். குடும்பத்தில் தொல்லைகள் உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் நன்மை கிடைக்கும். நிழல் கிரகமான ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னி ராசியில் இருந்ததால் பண இழப்பை தந்திருக்கலாம்.

முயற்சிகளில் தடையும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்ப்பாடு அனைத்தும் விலகும். ஜன. 8 முதல் ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை இருந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை ஏற்படுத்துவார். பெண்களால் நன்மை கிடைக்கும். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6-ம் இடமான மீனத்தில் இருந்து பொன்,பொருளை வழங்கினார். இப்போது 5-ம் இடமான கும்பத்திற்கு கேது வருகிறார். இதனால் அரசு வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். மேற்கண்ட கிரகங்களின் நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பிப்.7 க்குப் பிறகு குருவால் வருமானம் பெருகும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்குப் புதிய பதவி கிடைக்க யோகமுண்டு. அதே நேரம் ஜூலை மாதத்திற்கு பிறகு தடைகளைச் சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குருவக்கிர காலத்தில் கைகூடும். ஜூலை மாதத்திற்கு பிறகு உறவினர் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத்தகாத பிரச்னை வரலாம். வீடு, மனை வாங்கும் யோகம் தள்ளி போகலாம். செலவு அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை.

தொழில், வியாபாரம்:  ராகுவின் பலத்தால் போதிய வருமானம் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். நெல், கோதுமை போன்ற தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஜூலை மாதத்திற்கு பிறகு பொருள் விரயம் ஏற்படலாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இது ஏழரை சனிகாலம் என்பதால் புதிய தொழில் தொடங்க வேண்டாம். ராகுவின் பலத்தால் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கேதுவால் எதிரி தொல்லை அவ்வப்போது தலைதுõக்கலாம். கவனமாக இருக்கவும்.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பிப். 7க்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். வேலைப்பளு குறையும். தடைபட்டு வந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளிடம் நன்மதிப்பு உண்டாகும். வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.

கலைஞர்கள்: முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள்: எதிர்பார்ப்பு இல்லாமல் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். ஆனால் ஆக.1க்கு பிறகு நன்மை அதிகரிக்கும்.

மாணவர்கள்: குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். ஜூலை மாதம் வரை மானாவாரி விவசாயத்தில் ஈடுபடுவது நல்லது. அதன்பின் நெல், கோதுமை, பழவகைகள், கேழ்வரகு போன்ற பயிர்களிலும் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

பெண்கள்: குடும்பவாழ்வில் மகிழ்ச்சி யுடன் காணப்படுவர். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்: குருபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது நன்மை தரும்.

செல்ல வேண்டிய கோவில்:  திருச்செந்துõர் முருகன் கோவில்

விருச்சிக ராசி : விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

பொருளாதார வளர்ச்சி -ஏழரையால் பிரச்னை! (100/65)
கவர்ச்சியாக பேசி காரியம் சாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

முயற்சியை முதுகெலும்பாக கொண்டவர்களே. குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே. எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள்,  பாரம்பரியத்தை விட்டு கொடுக்க மாட்டீர்கள். பணம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள்.

குருபகவான் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. அவர் 11ம் இடமான கன்னி ராசியில் இருப்பது சிறப்பான இடம். பலவிதத்திலும் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். குருவால் இப்படி நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் சில பின்னடைவுகளையும் நீங்கள் சந்திக்கலாம். அத்துடன் குரு பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் தரும் பலன்கள் சற்று குறையலாம். ஏழரை சனியால் உடல் உபாதைகள் வரலாம், உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம். வெளியூர் வாசம் இருக்கும். அதே நேரம், அவரது 3-ம் இடத்துப் பார்வை பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தரும். அவர் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார்.

இந்த காலத்தில் அவர் கெடுபலன்களைக் குறைத்து நன்மை தர ஆயத்தமாவார். ராகு, கேதுவும் உகந்த இடங்களில் இல்லாததால் அவர்களாலும் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேற்கண்ட கிரக நிலை அடிப்படையில் விரிவான பலனை காணலாம். ஜனவரியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். எடுத்த காரியம் சிறப்பாக முடியும். உங்கள் செல்லாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை மன சஞ்சலம் ஏற்படலாம். வீண்விவாதங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கவும். எதையும் தீவிர முயற்சியின் பேரில்தான் செய்து முடிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் பொருளாதார வளத்திற்கு குறைவில்லை என்பதால், ஆடம்பர பொருட்கள், புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும். சனியும், ராகுவும் தொடர்ந்து சாதகமற்ற இடத்தில் இருப்பதால் தம்பதியினர் இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரம்: குருவால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். குறிப்பாக இரும்பு, கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திரம் தொடர்பான தொழில் நல்ல வளர்ச்சி அடையும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை சனி வக்கிரத்தில் சிக்குவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். புதிய தொழிலையும் ஜூலை மாதத்துக்குள் தொடங்கி விடவும். கையில் இருக்கும் பணத்தை நிரந்தர டெபாசிட் செய்வது புத்தி சாலித்தனம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது.

பணியாளர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை வேலையில் அலைச்சலும், பளுவும் இருக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். வேலையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அதன் பிறகு வேலையில் ஆர்வம் பிறக்கும். பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். அவர்களால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை பார்த்துக் கொண்டே பக்க தொழில் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காணலாம். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கும், வேலையின்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். அதன்பின் ஒப்பந்தங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பாராட்டுகள், விருதுகள் போன்றவை வந்து சேரும்.

அரசியல்வாதிகள்:
நல்ல வளத்தோடு இருப்பர். சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம்.

மாணவர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை சற்று சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். பிறகு நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை உங்களை உயர்த்தும். விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகள்: நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் வருவாயை காணலாம். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும்.

பெண்கள்: குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். புதிய நகை, ஆடைகள் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். அதே நேரம் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சற்று விட்டுக் கொடுத்து போகவும்.

பரிகாரம்: சனி, ராகு-கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அந்த கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரமும், கேதுவுக்கு பலவண்ண நிற வஸ்திரமும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். பவுர்ணமி விரதம் இருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்.


தனுசு ராசி :
மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

குருவால் சாதகம் -சனியால் பாதகம்! (100/55)
திட்டமிட்டு செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே  தெரிவீர்கள். தலைமைப் பண்பு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்கள். போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களும்  நீங்கள்தான்.

இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும். கடந்த ஆண்டு இருந்த பிரச்னை அனைத்தும் விலகும். கேது ஜன.8ல் 3-ம் இடமான கும்பத்திற்கு வந்து நன்மைகளை தரப் போகிறார். பொருளாதாரத்தை வாரி வழங்குவார். உடல் உபாதை மறைந்து பூரண குணமாக்குவார். ராகு ஜன.8ல் 9-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல என்றாலும் திறமையில் இருந்த பின் தங்கிய நிலை இருக்காது. குருபகவான் இப்போது 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமற்ற நிலை என்றாலும், அவரது 5-ம் பார்வை மகரத்தில் இருப்பது சிறப்பானது. குரு பகவான் பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைந்து சிம்ம ராசியில் இருக்கிறார். இந்த காலத்தில் நன்மை மேலோங்கும்.

தற்போது சனிபகவான் 12 ல் இருக்கிறார். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஏழரை சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரமாக இருப்பதால் கெடுபலன் தர மாட்டார். சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலன்களை இனி காணலாம். இது ஏழரை சனிகாலம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுத்தவும். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும். ஆனால் பிப். 7 முதல் உங்களுக்கு சாதகமான காற்று வீசத் தொடங்கும். குருவும், கேதுவும் நல்ல பொருளாதார வளத்தை தருவார்கள். நீண்ட கால ஆசை பூர்த்தியாகும். வீடு, நிலம் போன்றவை வாங்கலாம். குடும்பத்தில் இருந்த பின்தங்கிய நிலை படிப்படியாக மறையும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூலை மாதத்திற்குள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை இனி இருக்காது. மார்ச் மாதத்திற்குப் பிறகு தொழிலில் வளர்ச்சியை காணலாம். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். ஜூலை 14க்கு பிறகு புதிய வியாபாரம் வேண்டாம். எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம். இருப்பதைக் கொண்டு நிறைவாக இருப்பது நல்லது.

பணியாளர்கள்: பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பணிச்சுமையைச் சந்தித்தாலும், அதற்குரிய லாபம் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆர்வம் மிகும். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். மேல்அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க பெறுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள்: திறமைக்கு ஏற்ற நற்பெயரும், புகழும் கிடைக்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை தட்டிப்பறிக்கப்பட்ட பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். நடிப்பு திறனை வெளிப்படுத்தி முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தலைமையின் கருத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது அவசியம். சிலருக்கு எதிர்பாராமல் புதிய பதவி கிடைக்கலாம்.

மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகாது. பிப்ரவரி முதல் ஜூலை வரை முன்னேற்றமான காலமாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்க பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள்: பிப்ரவரி வரை அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். அதன்பின் நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூலும், வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. ஆண்டின் இறுதியில் கைவிட்டு போன சொத்து கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் பிப்.7 வரை விட்டுக்கொடுத்துப் போகவும். அதன்பின் நிலைமை சீராகும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். தொழில் நடத்தும் பெண்கள் நல்ல வளத்தை காண்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ராகு கால பைரவர் வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

மகர ராசி : உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

நிமிர்ந்து நிற்பீர்கள் - உறவில் மனக்கசப்பு! (100/60)
எல்லாரையும் அனுசரித்து செல்லும் மகர ராசி அன்பர்களே!

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்தக் காலம், பொங்கி எழுந்தால்தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும் இந்தக் காலம் என்பதை  அறிந்தவர்கள் நீங்கள். தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. எனவே இந்த ஆண்டு சிறப்பாக அமையும். உங்கள் நிலை நிமிர்ந்தே இருக்கும். குருபகவான் ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான கன்னி ராசியில் உள்ளார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இது தவிர அவரது 9-ம் இடத்துப் பார்வை மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் தற்போது 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ராகு, கேது மட்டும் சாதகமாக இல்லாததால் அரசு வகையிலும், பொருட்கள் காணாமல் போதல் உள்ளிட்ட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனை காணலாம்.  எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். புதிய வாகனங்கள் வாங்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பிப். 7 முதல் ஆக. 1 வரை குரு வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் வசதிகள் இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். ஆனால் பிப். முதல் ஜூலை வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தடை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.

தொழில், வியாபாரம்: மார்ச் 28முதல் ஜூலை 14 வரை சுமாரான வருமானமே கிடைக்கும். அதன்பின் லாபம் கூடும். சேமிப்பு அதிகரிக்கும்.அலைச்சல், வெளியூர் வாசம் இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் அனுகூலத்தைத் தரும். வேலை இன்றி இருப்பவர்கள் சுயதொழில் துவங்க ஏற்ற ஆண்டு இது.

பணியாளர்கள்: கோரிக்கைகள் நிறைவேறும். பிப். முதல் ஜூலை வரை வேலைப்பளு கூடும். அதன்பிறகு வேலையில் முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவும், விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் முக்கிய பதவியைப் பிடிப்பர். படித்து விட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்

கலைஞர்கள்: பிப். முதல் ஜூலை வரை ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பிறகு பிரச்னையின்றி புதிய ஒப்பந்தங்களை பெறலாம். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு குறையாது.

அரசியல்வாதிகள்:
பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும்.

மாணவர்கள்:
சீரான பலனை காணலாம். உழைப்புக்கு ஏற்ற வெற்றியும், மதிப்பெண்களும் கிடைக்கும். ஆனால் பிப். முதல் ஜூலை வரை அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.

விவசாயம்: உழைப்பிற்கு ஏற்ற பலனை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். ஜூலை வரை நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் ஆண்டின் பிற்பகுதியில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள்: பணவரவில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ராகுவால் நகை திருட்டு போக வாய்ப்பு உண்டு. கவனம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.

பரிகாரம்: ராகு காலத்தில் கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: திருநாகேஸ்வரம் நாகநாதர் (ராகு) கோவில்.

கும்ப ராசி : அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

ஜூலைக்குள் சாதனை - ஆகஸ்ட் முதல் சோதனை! (100/55)
நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே!

விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குண
ம்.   


சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன்களை தரும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 8ல் இருக்கிறார். வீண் விரோதத்தை உருவாக்குவார். எதிரிகளால் தொல்லை ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு பலம் அதிகம் உண்டு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். குருபகவானின் வக்ர காலமாகிய பிப். 7 முதல் ஆக. 1 வரை நன்மை கிடைக்கும். குருபகவான் உங்கள் நட்புகிரகம் என்பதால் கெடுபலன் தர மாட்டார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் தொழிலில் அவ்வப்போது பின்னடைவு ஏற்படலாம். இதை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். சனி பகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார். இந்த காலத்தில் கெடுபலன் உண்டாகாது. ராகு ஜன. 8ல் 7-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.

திடீர் இடப்பெயர்ச்சியைச் சந்திக்க நேரலாம். கேது ஜன. 8ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. முயற்சியில் தடை, உடல் உபாதை ஏற்படலாம். சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நிலையைக் கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.  ஆண்டின் முற்பகுதியில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் சாதனை படைப்பீர்கள். ஜூலை மாதத்துக்கு பிறகு எதையும் பலமுறை சிந்தித்து செயல்படுத்துங்கள். பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு பெறுங்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாகவே இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஆண்டின் பிற்பகுதியில் செலவும் அதிகரிக்கும். சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. பிப்ரவரி முதல் ஜூலைக்குள் புதுவீடு கட்டவோ, வாங்கவோ யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஜூலை மாதத்திற்கு பிறகு சுப விஷயத்தில் தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரம்: வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை தலை துõக்கலாம்.மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும். ஜூலை மாதத்திற்கு பிறகு ஒப்பந்தம் பெறுவதில் காலதாமதம் உண்டாகும். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபார விஷயமாக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள நேரிடும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை வரை திருப்திகரமான நிலையில் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். ஆனால் ஜூலை மாதத்துக்கு பின் நிலைமை மாறுபடும். எதிர்பார்த்த பலனை காண முடியாது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம், பணிச்சுமை ஏற்படும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பிப்ரவரி முதல் ஜூலை வரை கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு போன்றவை வந்து சேரும். அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கவுரவத்துக்கு பங்கம் வரும் நிலை உருவாகாது.

மாணவர்கள்: ஆண்டு முழுவதும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் முயற்சிக்கேற்ற வளர்ச்சி இருக்கும். சிலருக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

விவசாயிகள்: உழைப்பை விட சற்று குறைந்த வருமானமே கிடைக்கும். ஆண்டின் முற்பகுதியில் நெல், கேழ்வரகு, சோளம், கோதுமை, மஞ்சள் மற்றும் மானாவாரி போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை காணலாம். ஜூலை மாதத்துக்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கலாம்.

பெண்கள்: குடும்பத்தை பொறுத்த வரை விட்டு கொடுத்து போவது நல்லது. ஆண்டின் முற்பகுதியில் நல்ல பலனை காணலாம். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் செல்வாக்கோடு இருப்பர். ஆண்டின் பிற்பகுதியில் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். சனி, ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்யுங்கள். துர்க்கையை ராகுகாலத்தில் வழிபடுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: பழநி தண்டாயுதபாணிசுவாமி கோவில்

மீன ராசி : பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

அமோக லாபம் - எதிரி தொல்லை! (100/60)
வெள்ளை உள்ளம் படைத்த மீன ராசி அன்பர்களே!

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். ஒற்றுமை  உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள்.

கடந்த ஆண்டு நீங்கள் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருக்கலாம். அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இல்லாததே. புத்தாண்டில் இந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பது உயர்வான நிலை. அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் உயர்வதால் தேவைகள் பூர்த்தியாகும். பிப். 7 முதல் ஆக. 1வரை குரு வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் நன்மை பெற இயலாது சனிபகவான் 9-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் எதிரிகளின் இடையூறு தலைதுõக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சனிபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சனிபகவான் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார்.

ராகு ஜன. 8ல் 6-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். அவர் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பார். கேது ஜன. 8ல் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இவரால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை உருவாகலாம். குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனைக் காணலாம். பொருளாதாரம் அதிகரிக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் கவுரவம் மேம்படும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஓகோ என்று உங்களை புகழ்வார்கள். ஆனால் பிப்ரவரி முதல் ஜூலை வரை தானத்துடன் செயல்படவும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். தடைபட்டு வந்த திருமணம் ஜூலை மாதத்திற்கு பிறகு கைகூடும். புதிய வீடு சொத்து போன்றவை வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம்.

தொழில், வியாபாரம்: கடந்த காலத்தில் செய்த உழைப்பிற்கான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்த ஜூலை மாதத்திற்கு பிறகு நல்ல காலம். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை துணிந்து தொடங்கலாம். தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் வருமானம் உயரும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணை நிற்கும். எதிரிகளின் இடையூறு குறுக்கிட்டாலும்,  சாதுர்யமாக சமாளித்து விடுவீர்கள்.

பணியாளர்கள்: பணியாளர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். கடந்த காலங்களில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகியவர் கூட தங்களின் தவறை உணர்ந்து கொள்வர். பணியில் திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்வு பெறுவீர்கள். ஜூலை மாதத்திற்கு பிறகு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர். திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவீர்கள். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல் தொழில் புரிவோர் சிறந்த நிலையிலேயே இருப்பர்.

கலைஞர்கள்: கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். பிப்ரவரி முதல் ஜூலை வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதன் பிறகு வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் வளர்ச்சிப்பாதையில் செல்வர். தலைமையின் ஆதரவால் சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.

விவசாயிகள்: நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூலி வேலை செய்பவர்கள் சுய தொழிலில் இறங்கும் காலம் உருவாகும்.

பெண்கள்:
பெண்கள் திருப்திகரமாக இருப்பர். வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். உறவினர் மத்தியில் கவுரவம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்: நவக்கிரகங்களில் சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனியன்று ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது நன்மை தரும். சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். பிப்ரவரி முதல் ஜூலை வரை வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

சுபம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS