Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: வாழ்த்துக்கள் திறமை பாராட்டு / அறிவியல் மேதைகள் ”கேது” அவர்களின் சேவையும் அதன் முக்கியத்துவமும் - ஊரின் வளர்ச்சிக்கு பொருத்தமானவர் முன்வந்துவிட்டால் உயற்சி நிச்சயம்

”கேது” அவர்களின் சேவையும் அதன் முக்கியத்துவமும் - ஊரின் வளர்ச்சிக்கு பொருத்தமானவர் முன்வந்துவிட்டால் உயற்சி நிச்சயம்

E-mail Print PDF
Image may contain: 6 people, people smiling, people standing

தேவைக்கும் சேவைக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. தேவை இருக்கும் இடத்தில்தான் சேவை தேவைப்படுகின்றது. சேவையால் பல உயிர்கள் காப்பாற்றப் பெறுகின்றன. பல துன்பங்கள் தீர்க்கப் பெறுகின்றன.

கடந்த கால போர்ச் சூழலில் பல துன்பங்களை அனுபவித்து, உறவுகள், உடமைகளை இழந்து வாழும் தமிழ் மக்களுக்கு பலவகைத் தேவைகள் இருந்தபோது;  அவற்றை பூர்த்தி  செய்வதற்கு பல வழிகள் இருந்தும் கிடைக்கச் செய்வதில் பல பாகுபாடுகள் சுயநலம் கொண்டவர்களால் ஏற்படுகின்றன. பொது நலம் கொண்ட சிலரால் மட்டுமே அதனை சரியாக செயல்படுத்த முடியும்.

சமூக சேவை செய்ய வந்தோர் எல்லோரும் தொண்டர்களும் அல்ல உத்தமர்களுமல்ல. எமது கிராமத்திற்காக ஒதுக்கப் பெற்றனவற்றை அயல் கிராமத்திற்கு கொடுத்து நல்ல பெயர் கேட்டவர்கள். விலை போகக் கூடியவர்கள். ஆனால் என்ன விலை கொடுத்தாலும் விலை போகாதவரே திரு. கேது அவர்கள். அதனை அவரின் வயதும், பொதுச் செயல்களும் நினைவு படுத்துகின்றன. இதனை எம்மூர் மக்கள் நன்கு அறிந்து வாக்களித்துள்ளனர்.

பல்முக போட்டிகளையும் தாண்டி ”மக்களின் சேவையே மகேசன் சேவை” என முன்வந்த “கேது” அவர்களுக்கு எமது வாழ்த்துகள். பல தடைகளையும் தாண்டி அவருக்காக வாக்களித்து அவரை தெரிவு செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

சூட்சியும், கபடமும், சுயநலமும்  கொண்டவர்கள் பதவிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைதான் உருவாகும். கடந்த காலங்களில்  ஏற்பட்ட  அநீதியான செயல்களால் அமைதியாக இருக்கும் ஒரு பகுதியினர் பாதிக்கப் பெறுகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் பொதுநலம் கொண்ட ஒரு பெருமகன் தேவைப்படுகின்றான். எதுவித பலனையும் எதிபாராது தமக்கு சொந்தமான பணத்தை அல்லது கிடைக்கும் பணத்தை சுயநலம் கருதாது எமது ஊரின் வளர்ச்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் கண்ணாயிருந்து சேவை செய்யக் கூடிய ஒருவர் அவசியமாகியது.

அதற்கு எம்மூர் இளையோர் மத்தியில் ஊக்க சக்தியாக விளங்கும்  எல்லோருக்கும் “நண்பனான -  ”கேது” அவர்கள் தமிழ் மக்களுக்காக மாற்றம் தேடும் ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில்” இணைந்து அகில இலங்க தமிழ் காங்கிரஸ் சின்னமான சயிக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

எமது கிராமத்தை பொறுத்தளவில் பல வருடங்களாக கிராம அபிவிருத்தியில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. உதாரணமாக நான் சிறுவனாக இருந்த காலத்தில் செட்டி குறிச்சியில் இருக்கும் இரண்டு பிரதான பாதைகள் இப்பவும் கவனிப்பாரற்று கவலைக்கிடமாக இருக்கின்றன. அதே நேரம் அயல் கிராமங்களுக்கு சென்று பார்த்தால் குச்சொழுங்கைகள் எல்லாம் தார் போட்டு விசாலமாக்கப் பெற்று திருத்தப் பெற்றுள்ளன. காரணம் பொதுமக்களின் அக்கறையிமைதான். இவை வீதி புனரமைப்புக்கான சேவைகளில் ஒன்று.

ஆனால் இப்போது எம் ஊர்மக்கள் தம் தவறை உணரத் தொடங்கி விட்டார்கள். அதிலும் ஒதுங்கி இருந்த நம் இளையோர் அனியாயத்தைக் கண்டு கொதித்தெழுந்து எமது ஊரின் ஏன் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மாற்றம் ஒன்று கட்டாயம் அவசியம் என்பதனை உணர்து மாற்றத்திற்கான ஒரு நல்ல முடிவாக கேது அவர்களும் சேவை செய்வதற்கு முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

எமது ஊரில் பல இளைஞர்களை தம்மாலான தொழில் பயிற்சி வழங்கி (தமக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஏற்று) பலனை எதிபாராது பொதுநல சேவை செய்துவரும் திரு. ஜெகதீஸ்வரன் (கேது) கேதீஸ்வரன் அவர்களின் வருகை எமது கிராமத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

கடந்த 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 3ம் வட்டாரத்தில் போட்டியிட்டவர்கள் பெரும்பாலானோர் பெரும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து (தாம் தோற்றுப் போவோம் என தெரிந்தும்) போட்டியிட்டுள்ளனர். அதற்கான காரணம் அக் கட்சி மூலம் கிடைக்கும் தேர்தல் செலவுக்கான உதவிப் பணமும், அக் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல உதவிகளை பெறமுடியும் என்ற உள் நோக்கமும், பேர் எடுத்துக் கொள்வதற்கும் மட்டுமே. அவர்கள் உண்மையிலே பொது நலவாதிகளாக இருந்திருந்தால் அப் பொறுப்பை இளையோர் கையில் ஒப்படைத்து அவர்களுக்கு தூண்டு துணையாக இருந்திருப்பார்கள்.

கேது அவர்களோ இளைய தலைமுறையினரின் தலைமையில் எம் இனத்தை காப்பற்ற துடிக்கும் ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற தாரக மந்திரத்துடன் செயல்பெறும் ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன்” இணைந்து போட்டியிட்டார். இங்கே அங்கம் வகிப்போர் எல்லோருமே் மக்களின் நலன் விரும்பிகளே..

ஒரு வட்டாரத்தில் 7 பேர் போட்டியிடும் அளவுக்கு எமது ஊரின் ஒற்றுமை குட்டிச் சுவராகியுள்ளது. எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக தகுதியான எம்மவர் ஒருவரை தெரிவு செய்ய விடாது தமது சுய நலத்திற்காக பலபேரை அதில் புகுத்தி ஊழல் செய்துள்ளனர்.

அப்படி இருந்தும் தனித்து நின்று மக்களின் வாக்குகள் 500 பெற்று சூட்சியால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் போனசாக கிடைத்த 3 ஆசனங்களில் ஒன்றில் 3 ம் வட்டார அங்கத்தவராக சுழற்சி முறையில் தெரிவு செய்யப் பெற்றுள்ளார். அதுவும் அவர் இந்த வயதில் பெற்ற பெரு வெற்றியாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் (பிரதேச சபை, நகர சபை  மாநகர சபை)  மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்...

01. பொதுச் சுகாதாரம்

02. திண்மக் கழிவகற்றல்

03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்

04. வடிகானமைத்தல் பராமரித்தல்

05. தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்

06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்

07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

08. இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்

09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.

11. கிராமிய நீர் வினியோகம்

12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்

13. தீயணைப்பு சேவைகள்

14. தாய் சேய் நலப்பணி

15. பிரதேசத்தை அழகுபடுத்தலும் சுத்தம் பேணலும்

16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்

17. தொற்று நோய் தடுத்தல்

18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்

19. தொல்லைகளைத் தவிர்த்தல்

20. கிராமிய மின்சாரம் வழங்கல்

21. வீடமைப்புத் திட்டம்

22. கல்வித் தளபாடங்கள்

23.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்

24. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்

25. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.

திரு. கேது அவர்களின் தலைமைையில் எம் ஊரையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் வாரீர்.

நன்றி

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS