Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: சைவமும் தமிழும்

கந்தரனுபூதி - ஒலி வடிவம் இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

கந்தரனுபூதி:

ஆடும் பரிவேல்

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனி யானைச் சகோதரனே.

2. உல்லாச நிராகுலம்

உல்லாச, நிராகுல, யோக இதச்

சல்லாப, விநோதனும் நீ அலையோ?

எல்லாம் அற, என்னை இழந்த நலம்

சொல்லாய், முருகா சுரபூ பதியே.

3. வானோ புனல் (ஆறுமுகமான பொருள் எது?)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.

4. வளைபட்ட (மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்)

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


5. மகமாயை (மாயை அற)

மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே.

6. திணியான மநோ (ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்)

திணியான மனோ சிலை மீது, உனதாள்

அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?

.. பணியா? என, வள்ளி பதம் பணியும்

தணியா அதிமோக தயா பரனே.

7. கெடுவாய் மனனே (ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது

இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

8. அமரும் பதி (மயக்கம் தீர்ப்பான் முருகன்)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பெரு தானவ நாசகனே.


9. மட்டு ஊர் (மங்கையர் மையல் தூரத்தேக)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே.

10. கார் மா மிசை (காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்)

கார் மா மிசை காலன் வரில், கலபத்

தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்

தார் மார்ப, வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடுவே லவனே.

11. கூகா என (உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது)

கூகா என என் கிளை கூடி அழப்

போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகாமணியே.

12. செம்மான் மகளை (சும்மா இரு சொல் அற)

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்

.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

13. முருகன் தனி வேல் (முருகனின் அருளைக் கொண்டு மட்டுமே அவனை அறிய முடியும்)..

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

14. கைவாய் கதிர் (மனதிற்கு உபதேசம்)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று

உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்

மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.


15. முருகன் குமரன் (நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து

உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்

பொரு புங்கவரும், புவியும் பரவும்

குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

16. பேராசை எனும் (பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

ஓரா வினையேன் உழலத் தகுமோ?

வீரா, முது சூர் பட வேல் எறியும்

சூரா, சுர லோக துரந்தரனே.

17. யாம் ஓதிய (கற்றதன் பலன் கந்தன் கழலடிக்கு தன்னை அர்ப்பணம் செய்வதே)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்

தாமே பெற, வேலவர் தந்ததனால்

பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர், நடவீர் இனியே.

18. உதியா மரியா (துதி மயமான அநுபூதி)

உதியா, மரியா, உணரா, மறவா,

விதி மால் அறியா விமலன் புதல்வா,

அதிகா, அநகா, அபயா, அமரா

பதி காவல, சூர பயங் கரனே.

19. வடிவும் (வறுமையை நீக்கி அருள்வாய்)

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

20. அரிதாகிய (உபதேசம் பெற்றதை வியத்தல்)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்

உரிதா உபதேசம் உணர்த்தியவா

விரிதாரண, விக்ரம வேள், இமையோர்

புரிதாரக, நாக புரந்தரனே.

21. கருதா மறவா (திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு

இருதாள் வனசம் தர என்று இசைவாய்

வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.

22. காளைக் குமரேசன் (தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்)

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுர பூபதி, மேருவையே.

23. அடியைக் குறியாது

அடியைக் குறியாது அறியா மையினால்

முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்

கொடியைப் புணரும் குண பூதரனே.

24. கூர் வேல் விழி (மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல, புரந்தர பூபதியே.

25. மெய்யே என (வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து

ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?

கையோ, அயிலோ, கழலோ முழுதும்

செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

26. ஆதாரம் இலேன் (திரு அருள் பெற)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே

நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே

வேதாகம ஞான விநோத, மன

அதீதா சுரலோக சிகாமணியே.

27. மின்னே நிகர் (வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?

பொன்னே, மணியே, பொருளே, அருளே,

மன்னே, மயில் ஏறிய வானவனே.

28. ஆனா அமுதே (நீயும் நானுமாய் இருந்த நிலை)

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,

ஞானாகரனே, நவிலத் தகுமோ?

யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே.

29. இல்லே எனும் (அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்

சொல்லே புனையும் சுடர் வேலவனே.

30. செவ்வான் (உணர்த்திய ஞானம் சொல்லொணானது)

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று

ஒவ்வாதது என உணர்வித் ததுதான்

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

31. பாழ் வாழ்வு (ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க)

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே

வீழ்வாய் என என்னை விதித்தனையே

தாழ்வானவை செய்தன தாம் உளவோ?

வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

32. கலையே பதறி (கலை ஞானம் வேண்டாம்)

கலையே பதறிக், கதறித் தலையூடு

அலையே படுமாறு, அதுவாய் விடவோ?

கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்

மலையே, மலை கூறிடு வாகையனே.

33. சிந்தா ஆகுல (பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா, முருகா, கருணாகரனே.

34. சிங்கார மட (தீநெறியினின்று எனைக் காவாய்)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்

மங்காமல் எனக்கு வரம் தருவாய்

சங்க்ராம சிகாவல, சண்முகனே

கங்காநதி பால, க்ருபாகரனே.

35. விதி காணு (நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?

மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்

துதியா விரதா, சுர பூபதியே.

36. நாதா குமரா (சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.

37. கிரிவாய் விடு (உன் தொண்டனாகும்படி அருள்வாய்)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்

பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியோடும் அகந்தையையே.

38. ஆதாளியை (என்னையும் ஆண்ட கருணை)

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்

தீது ஆளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கு இறைவா

வேதாள கணம் புகழ் வேலவனே.

39. மாவேழ் சனனம் (பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா)

மாஏழ் சனனம் கெட மாயைவிடா

மூஏடணை என்று முடிந்திடுமோ

கோவே, குறமின் கொடிதோள் புணரும்

தேவே சிவ சங்கர தேசிகனே.

40. வினை ஓட (வேல் மறாவதிருப்பதே நமது வேலை)

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங்கிடவோ?

சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்

தினையோடு, இதணோடு திரிந்தவனே.

41. சாகாது எனையே (காலனிடத்திலிருந்து எனைக் காப்பாற்று)

சாகாது, எனையே சரணங் களிலே

கா கா, நமனார் கலகம் செயும் நாள்

வாகா, முருகா, மயில் வாகனனே

யோகா, சிவ ஞான உபதேசிகனே.

42. குறியை (எவ்வேளையும் செவ்வேளையே நினை)

குறியைக் குறியாது குறித்து அறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்

செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

43. தூசா மணியும் (சொல்லற எனும் ஆனந்த மெளனம்)

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்

பேசா அநுபூதி பிறந்ததுவே.

44. சாடும் தனி (முருகன் திருவடி தந்தான்)

சாடும் தனிவேல் முருகன் சரணம்

சூடும் படி தந்தது சொல்லு மதோ?

வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்

காடும், புனமும் கமழும் கழலே.

45. கரவாகிய கல்வி (மெய் பொருளே, உன் நிலையை உணர்த்து)

கரவாகிய கல்வி உளார் கடை சென்று

இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?

குரவா, குமரா, குலிசாயுத, குஞ்

சரவா, சிவயோக தயாபரனே.

46. எந்தாயும் (மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

கந்தா, கதிர் வேலவனே, உமையாள்

மைந்தா, குமரா, மறை நாயகனே.

47. ஆறாறையும் (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்

பேறா அடியேன், பெறுமாறு உளதோ?

சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்

கூறா உலகம் குளிர்வித்தவனே.

48. அறிவு ஒன்று (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய

வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

49. தன்னம் தனி (இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?)

தன்னந் தனி நின்றது, தான் அறிய

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?

மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்

கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

50. மதி கெட்டு (முருகன் அருளால் முக்தி பெற்றேன்)

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்

கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?

நதி புத்திர, ஞான சுகாதிப, அத்

திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

51. உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்)

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

ஒலி வடிவில் கேட்க

https://youtu.be/izNYcRxKRXA?list=RDqGj_zHbU00w

வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க,

ஆறுமுகம் வாழ்க, வெற்பை

கூரு செய் தனிவேல் வாழ்க,

குக்குடம் வாழ்க, செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க,

ஆனை தன் அணங்கு வாழ்க,

மாறிலா வள்ளி வாழ்க,

வாழ்க சீர் அடியார் எல்லாம்.

கந்தசஷ்டி கவசம்

E-mail Print PDF

No automatic alt text available.

கந்தசஷ்டி கவசம்

குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்

நிஷ்டையும் கைகூடும்.

நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி ஆட

மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திர முதலா எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம

நிபவ சரஹண நிறநிற நிறன.........20

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளுக இளையோன் வருக

பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக

ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்

உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்

நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செகக ணசெககண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க

நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கையிரண்டும் பின்னவள் காக்க

நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனக வேல் காக்க

வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்

அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட

இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115

கன புசைகொள்ளும் காளியோடனே வரும்

விட்டங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக்காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்

பாவைகளுடனும் பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்ட பாசக் கையிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு

கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெருண்டது வோட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும் செய்யான் புரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150

சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்

நில்லாதோட நீ எனக் கருள்வாய்

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரஹண பவணே சையொளி பவனெ

திரிபுர பவனெ திகழொளி பவனெ

பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ

அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே

இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா

பழனிப் பதிவாழ் பாலகுமாரா

ஆவினன்குடி வாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யான் உனைப் பாட

எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை

பாடினே ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து

மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கந் துலக்கி

நேச முடன் ஓருநினைவது வாகி

கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .

இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த

குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும்

என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்...238

சித்திரா அவர்களின் குலில் கேட்க்க இங்கே அழுத்துக:

https://youtu.be/ElVaIJJmpBk?list=RDqGj_zHbU00w

https://youtu.be/_N7zPRN446o?list=RDqGj_zHbU00w

 


குரு பெயர்ச்சியும் அதனால் ஒவ்வொருவர் வாழ்கையில் ஏற்படக் கூடிய மாற்றங்களும்.

E-mail Print PDF

Image may contain: 1 person, smiling

யார் இந்த குரு பகவான்?

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைத்து தேவர்களுக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

திக்கு - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

ப்ரத்யதி தேவதை - இந்திரன்

தலம் - திருச்செந்தூர்

நிறம் - மஞ்சள்

வாகனம் - மீனம்

தானியம் - கடலை

வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

அன்னம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்

குரு பகவான்; வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 4, 2018 வியாழக்கிழமை 10:33 மணிக்கும், திரு கணித பஞ்சாங்கத்தின்படி வியாழக்கிழமை அக்டோபர் 11, 2018 வியாழக்கிழமை 4:49 மணிக்கும் இந்திய நேரப்படி குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

இங்கே பதியப்பெற்றுள்ள பலன்கள் யாவும் கிரகங்களின் தற்போதைய கோசர நிலைக்கான பொதுப் பலன்களே். 12 இராசிகளிலும் ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் ஆட்சி புரிகின்றன.

அவற்றுள் சில கிரகங்கள் இரண்டு இராசிகளையும் பெற்றிருக்கின்றன. ராகு, கேது கிரகங்களுக்கு இராசிகள் இல்லை. அவை எந்த இராசியில் இருக்கின்றனவோ அவையே அவற்றின் இராசிகளாகின்றன.

குரு பகவான் நவம்பர் 4, 2019 2:39 PM IST வரை விருச்சிக (Vrischika Rasi) ராசியில் சஞ்சரிப்பார்.

ஒரு சிசு பிறக்கும் போது அப்போதைய கோசர நிலையே ஜனன ஜாதகத்தில் பதியப் பெறுகின்றன அத்துடன் எந்த இலக்கினம் உதயமாகின்றதோ அதுவே உதய லக்கினம் ஆகின்றது.

சரியான பலன்கள் அறிய ஜனன ஜாதக குறிப்புடன் ஜோதிடரின் ஆலோசனையை பெறுக.

குரு பகவான் அக்டோபர் 29, 2019 4:25 AM IST வரை விருச்சிக (Vrischika Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

சிறப்பு குறிப்பு: குரு பகவான் மார்ச் 27, 2019 11:44 AM முதல் 28 நாட்களுக்கு தனுசு (Dhanushu Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார்.

விசாகம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 11, 2018 7:39 AM முதல் அக்டோபர் 27, 2018 12:11 PM வரை [விருச்சிக ராசி]

அனுஷம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 27, 2018 12:11 PM முதல் டிசம்பர் 27, 2018 3:03 AM வரை [விருச்சிக ராசி]

கேட்டை நட்சத்திரத்தில்: டிசம்பர் 27, 2018 3:03 AM முதல் மார்ச் 27, 2019 11:44 AM வரை [விருச்சிக ராசி]

மூலம் நட்சத்திரத்தில்: மார்ச் 27, 2019 11:44 AM முதல் ஏப்ரல் 10, 2019 10:31 PM வரை [தனுசு ராசி]

மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 10, 2019 10:31 PM முதல் ஏப்ரல் 25 2019 9:53 AM வரை [தனுசு ராசி]

கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 25 2019 9:53 AM முதல் ஆகஸ்ட் 11 2019 7:08 PM வரை [விருச்சிக ராசி]

கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 7:08 PM முதல் நவம்பர் 4, 2019 5:29 PM [விருச்சிக ராசி]

மீனா ராசி, ரிஷப ராசி, கடக ராசி, துலா ராசி மற்றும் மகர ராசிக்காரர்கள் மிகவும் நல்ல பலன்களை அனுபவிப்பர்.

மேஷ ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மோசமான முடிவுகளை சந்திக்க நேரிடும்.

சிம்ம ராசி மற்றும் கும்ப ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளை அனுபவிப்பர்.

குறிப்பாக துலா ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியின் போது பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

ஒவ்வொரு இராசிக்குமான பலன்களை தெரிந்து கொள்ள

1.) https://youtu.be/QX83LEtoE34

2.) https://youtu.be/hAxm79cve4I

3.) https://youtu.be/lRn6F93e7E4

4.) https://youtu.be/_iYHyoJyP9g

5.) https://youtu.be/JZWnD_b0luY

சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்

E-mail Print PDF

Image may contain: 1 person, sitting

சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

 

Read more...

சுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்படி?

E-mail Print PDF

எல்லா சுப சடங்குகளிலும் ”அட்சதை” எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். வாழ்த்துகள் கூறி திருமண தம்பதியினரை ஆசீர்வதிக்கும்போது அட்சதை தூவி அவர்களை வாழ்த்துவதைப் பார்த்திருக்கின்றோம்.

அட்சதை தூவும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின்பற்றுகின்றார்கள். பலர் தலைப் பகுதியில் தொடங்கி, கால்வரை தூவுவதையும், சிலர் கால்ப் பகுதியில் ஆரம்பித்து தலைவரை தூவி வாழ்த்துவதையும் பார்த்திருக்கின்றோம். இவை யாவும் தவறானது என அர்ச்சகர்கள் கூறுவதுடன் தவறான முறையில் அட்சதை தூவுவது கெடுதலை விளைவிக்கும் என்றும் கூறுகின்றனர்.

Read more...
 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 28

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்