Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் -திரு. முத்தையா பொன்னுத்துரை அவர்கள் - தகனம்: 03.02.2019

மரண அறிவித்தல் -திரு. முத்தையா பொன்னுத்துரை அவர்கள் - தகனம்: 03.02.2019

E-mail Print PDF
Image may contain: 1 person, beard

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கலட்டி பண்டத்தரிப்பை வாழ்விடமாகவும் கொண்ட திரு. முத்தையா பொன்னுத்துரை அவர்கள் 01.02..2019 அன்று தமது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார், சிவபதம் எய்திய முத்தையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும்;

சிவபதம் எய்திய கந்தையா – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அண்மையில் சிவபதம் எய்திய சின்னம்மா அவர்களின் அன்புக்கணவரும்;

தேவரஞ்சிதமலர், பேபிசந்திரா (சிவபதம்), பொன்ராசா, ஜெகதீஸ்வரன், தேவிகா, உதயசூரியன், மோகனதாஸ், இளவரசன் பத்மசிறீ ஆகியோரின் அன்புத் தந்தையும்;

முத்தம்மா, பொன்னம்மா, பாலசிங்கம், இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

சிவச்ந்திரபோஸ், மோகனதாஸ், சிவராணி, பவானி, உலகநாதன், நாகேஸ்வரி, வசந்தறூபி, ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03.02.2019  ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS