Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: உலகம் இலங்கை இலங்கையும் அதன் நிர்வாக அலகும் - பொது அறிவுக் கண்ணோட்டம் - இதன் பிரதிகள் பல இணையங்களில்

இலங்கையும் அதன் நிர்வாக அலகும் - பொது அறிவுக் கண்ணோட்டம் - இதன் பிரதிகள் பல இணையங்களில்

E-mail Print PDF


முக்கிய குறிப்புகள்

இலங்கை:

தலைநகரம்: ஸ்ரீ ஜயவர்தனபுர

அமைவிடம்: வடக்காக 6 பாகை 54 கலை கிழக்கு 6°54’ - 6° 9’N 79°54’ - 79°9’E

பெரிய நகரம்: கொழும்பு

ஆட்சி மொழிகள்: சிங்களம், தமிழ்

அரசு: சனநாயக சோசலிசக் குடியரசு

சனாதிபதி: மேன்மை தங்கிய மகிந்த ராசபக்ஷ

பிரதம மந்திரி: மாண்புமிகு தி.மு. ஜயரத்ன

விடுதலை(சுதந்திரம்): பிரித்தானியாவிடமிருந்தூ:04.02.1948

பரப்பளவு: 65,610 கிமீ²  / 25,332 ச்துரமைல் (நீர்-4,4%)

மக்கள் தொகை: 2009 மதிப்பீடு 20,238,000 -  July 2008 குடிமதிப்பு 21,324,791

நாணயம்: இலங்கை ரூபாய் (LKR)

நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி

இணையக் குறி: lk

தொலைபேசி: +94

மின்னழுத்தம்: 230V

அலையெண்: 50Hz

புவியியல் வளம்
இலங்கை இந்து சமுத்திரத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் அமைந்துள்ள; கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் மாங்காய் வடிவிலான ஒரு தீவாகும். இதனை இந்து சமுத்திரத்தின் “முத்து” என வர்ணிப்பார்கள். இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது.

இராமர் அணை எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலை நிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480 தாம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத் தொடர்களைக் கொண்ட ஓர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.

இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை.

இலங்கையின் நிலப்பரப்பை மூன்று பெரும் நிலப்பிரிவுகளாக பிரிக்கலாம், அவையாவன கரையோர தாழ்நிலம், உட்புற சமவெளி, மத்திய மலைநாடு அல்லது உயர்நிலம் ஆகும். மத்திய மலைநாடானது மிக உயரிய மலைத்தொடர்களையும், ஆறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் கொண்ட அழகான, வினோதமான ஒரு பிரதேசமாகும்.

இலங்கையின் அதி உயர்ந்த மலையாகிய, 2,524 மீட்டர் உயரம் கொண்ட “பீதுறுதாலகாலமலை” யும், நான்மதத்தினரிடையும் (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்) புகழ் பெற்றதும், புனிதத்தலமாக கருதப்படுவதுமான “சிவனொளிபாதமலை” யும் அமைந்துள்ளது. இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி “பம்பரகந்த” ஆகும். இலங்கையிலுள்ள ஆறுகள் தற்போது நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்தி உருவாக்கத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையிலுள்ள ஆறுகளில் மிகவும் நீளமானது “மகாவலி கங்கை” ஆகும். இந்த ஆறினைக் கொண்டு உருவான விக்டோரியா திட்டமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. மகாவலி கங்கையானது இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஆரம்பித்து வடதிசையில் சென்று, பின்னர் வடகிழக்கு நோக்கி பயணித்து, திருகோணமலையில் கடலில் சேர்கின்றது.

இலங்கையில் ஆறுகள் இல்லாத இடம் யாழ்பாணம். இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளையாகும். இலங்கையின் காலநிலை, டிசம்பரிலிருந்து மார்ச் வரை வீசும் வடகிழக்குப் பருவப்பேயற்சிக் காற்று, ஜூனிலிருந்து அக்டோபர் வரையிலான தென்மேல் பருவப்பெயற்சிக் காற்று என்பவற்றால் தன்மை கொடுக்கப்பட்ட (characterised) அயனமண்டல காலநிலையாகும். பொதுவாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் மழை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பெய்வதால் அவை உலர்வலயமாகவும், அதிக மழைபெறும் மலைப்பிரதேசமாகிய மத்தியவலயம் ஈரவலயமாகவும் காணப்படுகிறது.

இலங்கை (ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் ஸ்ரீலங்கா Sri Lanka) என அழைக்கப்பெறுகின்றது. இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் Ceylon (சிலோன்) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதல் கொழும்பு மாநகரம் இலங்கையின் தலைநகராக இருந்துவருகிறது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையிலுள்ள கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டது.

குடியரசு (அரசு)
குடியரசு என்பது, வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும்.

குடியரசின் தலைவர்
இலங்கை குடியரசின் தலைவர் ”குடியரசுத் தலைவர்” அல்லது ”ஜனாதிபதி” என அழைக்கப்படுவார்.  இலங்கையின் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்.

நிர்வாக கட்டமைப்பு
இலங்கையின் நிர்வாக சேவை இரு சமாந்தர கட்டமைப்புகளை கொண்டன. அரச அதிகாரிகள் மூலம் பொதுமக்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்க சேவையும்; பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்ற பிரதிநிதிகள் மூலம் அபிவிருத்தி சேவைகள் செய்வதற்கு மாகாண சபையும் அமைக்கப் பெற்றுள்ளன.

அவையாவன:
1. அரசாங்க சேவை (குடியேற்ற காலத்தில் இருந்து வருவது)
2. மாகாண சபை (1987 ல் அமைக்கப்பட்ட மாகாண சபைகளினால் உண்டாக்கப்பட்டது)

இலங்கை அரசாங்க சேவையானது பொதுச்சேவை ஆணைக்குழுவின் (Public Service Commission) கீழும்,
மாகாண சேவைகளானது மாகாண சேவைகள் ஆனைக்குழுவின் கீழும் இயங்குகின்றன.

பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையின் நிர்வாக சேவைகள் நேரடி அரச கட்டுப்பாட்டில் உள்ளன. இது வீண்விரயமற்ற, வேகமான நிர்வாக சேவையை ஏற்படுத்துவதாக கொள்ளப்படுகின்றது.

1. அரசாங்க சேவை - நிர்வாக அலகுகள்

இலங்கை ஒன்பது அரசியல் மாகாணங்களாக (Province) பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இவ் மாகாணங்களை ஒவ்வொரு அரச திணைக்களமும் தங்கள் சேவைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக வித்தியாசமான அலகுகளாக பிரித்து நிர்வகிக்கின்றன. அரசாங்க சேவைகள் மாவட்ட ரீதியாக நிர்வகிக்கப் பெறுகின்றன.

அரசாங்க சேவைகளை மேற்கொள்வதற்காக 9 மாகாணங்களும் 25 நிர்வாக மாவட்டங்களாக (District) பிரிக்கப்பட்டுள்ளன,  ஒவ்வொரு மாவட்டமும் அரசினால் நியமிக்கப்படும் (மாவட்ட செயலாளர் என அழைக்கப்படும்) அரசாங்க அதிபரால் நிர்வகிக்கப்படுகின்றது.

இலங்கையில் பிரதேசச் செயலாளர் பிரிவுகள் மாவடத்தின் பரப்பளவு, மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் 3 தொடக்கம் 27 வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மாவட்டம் மிகக்கூடிய எண்ணிக்கையாக 27 பிரதேசச் செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச் செயலாளர் (உதவி அரசஅதிபர்) ஒருவரின் கீழ் இயங்குகின்றது.  இப் பிரதேசச் செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான  அரசாங்க அதிபர்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையில் மொத்தமாக 25 மாவட்ட (கச்சேரி) நிர்வாக பிரிவுகளும், 319 பிரதேசச் செயலாளர் (A.G.A) பிரிவுகள் உள்ளன.  யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் அமைந்துள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு

சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அராலி, சங்கானை, சுழிபுரம், மூளாய், பண்ணாகம், பணிப்புலம், பொன்னாலை, சங்கரத்தை, சித்தங்கேணி, தொல்புரம், வட்டுக்கோட்டை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன.

இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் சங்கானையில் அமைந்துள்ளது.

வலிகாமம்-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு 44 சதுர கிலோமீற்ரர் பரப்பளவைக் கொகொண்டதாகும்.

பணிப்புலம் என்னும் எமது கிராமம், வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பணிப்புலம் கிராம சேவயாளர் (திரு. ஜே. ஜீவராசா) பகுதியாக அமைந்துள்ளது.

இப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள 25 கிராம சேவகர் விபரம்.

யா/157 வட்டு கிழக்கு
யா/158 வட்டு வடக்கு
யா/159 சங்கரத்தை
யா/160 அராலி மேற்கு
யா/161 அராலி மத்தி
யா/162 அராலி தெற்கு
யா/163 அராலி கிழக்கு
யா/164 அராலி வடக்கு
யா/165 வட்டு தெற்கு
யா/166 வட்டு தென்மேற்கு
யா/167 வட்டு மேற்கு
யா/168 தொல்புரம் கிழக்கு
யா/169 தொல்புரம் மேற்கு
யா/170 பொன்னாலை
யா/171 மூளாய்
யா/172 சுழிபுரம் மேற்கு
யா/173 சுழிபுரம் மத்தி
யா/174 சுழிபுரம் கிழக்கு
யா/175 பண்ணாகம்
யா/176 பணிப்புலம்
யா/177 சித்தன்கேணி
யா/178 சங்கானை கிழக்கு
யா/179 சங்கானை மேற்கு
யா/180 சங்கானை தெற்கு
யா/181 சங்கானை மத்தி

உள்ளூராட்சி அமைப்பு:

இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன.

இலங்கையின் மாகாணங்களின் பட்டியல்:
வடக்கு மாகாணம்
கிழக்கு மாகாணம்
வடமத்திய மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
ஊவா மாகாணம்
தென் மாகாணம்
மேல் மாகாணம்


1. மாகாண சபை (உள்ளூராட்சி சேவை - நிர்வாக அலகுகள்

இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகும். எனவே இலங்கையின் உள்ளூராட்சி முறைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அமைப்புக்களாகவே நோக்குதல் வேண்டும். ஏனெனில், மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், கடமைகளையும் செய்யும் நிறுவனங்களாகவே இவை விளங்குகின்றன.

இலங்கையில் தற்போழுது 330 உள்ளூராட்சி சபைகள் உள்ளன.
இவற்றுள் மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23
நகர சபைகளின் எண்ணிக்கை - 42
பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 270

இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்

(”பிரதேச செயளாளர் பிரிவு” அரசாங்க சேவையின் கீழ் வருவது; ”பிரதேச சபை” மாகாண சேவையின் கீழ் வருவது)

ஒவ்வொரு மாகாணத்திலும் அமைந்துள்ள அரச நிர்வாக பிரதேச செயளாளர் பிரிவுகளும், உள்ளூராச்சிசபைகளின் விபரங்களும்:

அரசாங்க சேவை

மாகாண சேவைகள்

மாவட்டம்

பிரதேசச்  செயலாளர் பிரிவு

பிரதேச சபைகள்

மாநகரங்கள்

நகரங்கள்

தேர்தல் தொகுதிகள்

கொழும்பு

13

6

4

3

15

கம்பகா

13

12

2

5

13

கழுத்துறை

14

10

0

4

8

கண்டி

20

17

1

4

13

மாத்தளை

11

11

1

0

4

நுவரெலியா

5

5

1

2

4

காலி

18

15

1

2

10

மாத்தறை

16

12

1

1

7

அம்பாந்தோட்டை

12

9

0

2

4

யாழ்ப்பாணம்

14

12

1

3

10

மன்னார்

5

4

0

0

1

வவுனியா

4

4

0

1

1

முல்லைத்தீவு

4

4

0

0

1

கிளிநொச்சி

3

3

0

0

1

மட்டக்களப்பு

12

10

1

1

3

அம்பாறை

19

14

0

2

4

திருகோணமலை

10

10

0

1

3

குருநாகல்

27

18

1

1

14

புத்தளம்

16

10

0

2

5

அனுராதபுரம்

22

18

1

0

7

பொலன்னறுவ

7

6

0

0

3

பதுளை

15

14

1

2

9

மொனராகலை

11

10

0

0

3

இரத்தினபுரி

17

13

1

1

8

கேகாலை

11

10

0

1

9


தோற்றம்

சுதந்திரத்துக்குப் பின், இலங்கையில் நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில

1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
1987/88 மாகாணசபை முறை

சட்டம்
1987 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.  இது மாகாணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

நிர்வாகம்
மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
1. ஆளுனர்
2. மந்திரி சபை
3. முதலமைச்சர்
4. மாகாணசபை அமைச்சர்கள்
5. மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு
6. தலைமை செயலாளர்

உள்ளூராட்சி சபைகள்
இவ்வடிப்படையில் இலங்கையில் தற்போது
1. மாநகரசபைகள்
2. நகரசபைகள்
3. பிரதேச சபைகள்
4.கிராம அபிவிருத்தி சபைகள் என்பன அமைந்துள்ளன.

இலங்கையின் காணப்படும் இவ் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு மாத்திரம் பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை.  குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவுசெய்யப்படுவர்

ஏனைய அமைப்புகளுக்கான தேர்தல்கள்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.

பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை

1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.

உதாரணம்
1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 12 + (12இன் 1/3) 4 = 16

2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 24+06 = 30
மேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும், உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.
மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில் 40% க்குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.

விருப்பத் தெரிவு வாக்குகள்
விருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல)

வாக்குக் கணிப்பு
வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்
2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.
ஆசனங்களைப் பகிர்ந்தளித்தல்

ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவிற்கு இரண்டு போனஸ் ஆசனங்களை வழங்குதல்

முடிவான எண்ணைக் கணித்தல்
ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து '2' ஐக் கழித்து செல்லுபடியான மொத்த வாக்குகளை வகுக்கும் போது பெறப்படுவதே முடிவான எண்ணாகும்.

முடிவான எண்ணைக் கொண்டு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளைப் பிரித்து கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
இவ்வாறு பகிரப்பட்டபின் மேலும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின் மிகப் பெரும் மிகுதிக்கமைய அந்த ஆசனங்களை வழங்குதல்.
இறுதியாக விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் அங்கத்தவர்களைத் தீர்மானித்தல்

இலங்கையில் மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தலின்போது தற்போது இந்த வழிமுறையே பின்பற்றப்படுவது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாகாணங்களின் விபரம்

மாகாணம்

Province

தலைநகர்

Capital

பரப்பளவு
(ச.கி. மீ)

மாவட்டங்கள்

Distric

மத்திய

கண்டி

5,584

3

கிழக்கு

திருகோணமலை

9,951

3

வட-மத்திய

அனுராதபுரம்

10,724

2

வடக்கு

யாழ்ப்பாணம்

8,882

5

வடமேற்கு

புத்தளம்

7,812

2

சபரகமுவா

இரத்தினபுரி

4,902

2

தெற்கு

காலி

5,559

3

ஊவா

பதுளை

8,488

2

மேற்கு

கொழும்பு

3,709

3


இலங்கை நாடாளுமன்றம் (பாராளு மன்றம்)
இலங்கை நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை பாராளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சாபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது பிரதி குழுக்களின் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் சனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 தேர்தல் மாவட்டங்களிலிருந்து மிருந்து 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசிய பட்டியலிருந்தும் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.

இலங்கை சனாதிபதி
இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சனாதிபதி பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக அமைந்துள்ளது. தற்போதய இலங்கை சனாதிபதி மாண்பு மிகு பேர்சி மகேந்திர ராசபக்ச (மகிந்த ராசபக்ச - Mahinda Rajapaksa) அவர்கள் ஆவார். இவர் இலங்கையின் ஆறாவது இலங்கைக் குடியசு ஜனாதிபதி்யாகவும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் 19.11.2005 அன்று பதவியேற்றார்.  மேன்மை தங்கிய மகிந்த
ராசபக்ச அவர்களே இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவருமாவார்.

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது.

1978 அரசியலமைபுச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது.

சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயலாளருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்..

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விலக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
மேன்மை தங்கிய வில்லியம் கோபல்லவ அவர்கள் (22.05.1972 – 04.02.1978)
மேன்மை தங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தன
அவர்கள் (04.02.1978 – 02.01.1989)
மேன்மை தங்கிய ரணசிங்க பிரேனதாச
அவர்கள் (02.01.1989 – 01.05.1993)
மேன்மை தங்கிய டிங்கிரி பண்டா விகயதுங்க
அவர்கள் (02.05.1993 – 12.11.1994)
மேன்மை தங்கிய சந்திரிகா குமாரதுங்க
அவர்கள் (12.11.1994 – 19.11.2005)
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச
அவர்கள் (19.11.2001 – இன்றுவரை)

இலங்கை பிரதமர்

இலங்கைப் பிரதமர் (Prime Minister of Sri Lanka) இலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார். இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார்.

இலங்கை 1972 இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு 1978  மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது.

பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். நாடாளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.

இலங்கையின் தற்போதய பிரதமர் மாண்பு மிகு திசாநாயக்க முதியான்சலாகே ஜயரத்த. இலங்கை சனாதிபதி மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச அவர்களினால் 21.04. 2010 ல் நியமிக்கப்பெற்றார்.

இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972  ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978 ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து இலங்கை பிரதமர் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.

நியமனம்
அரசியலமைப்பின் படி இலங்கை சனாதிபதியே பிரதமரைத் நியமனம் செய்வார்.
அரசியலமைப்பின் 43(3) உறுப்புரைப்படி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை சனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார். (இதன்படி ஆளும்கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்.)

அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ள நிலை
1978க்கு முன்னர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்புடன் ஒப்புநோக்கும் போது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின்படி பிரதமரின் அதிகாரங்களும், கடமைகளும் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு சனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், கடமைகளையும் நிறைவேற்ற பிரதமரின் ஆலோசனை அவசியமில்லை. பிரதமரின் ஆலோசனை தேவை எனக் கருதினால் மட்டுமே சனாதிபதி பிரதமரின் ஆலோசனையைப் பெறலாம். எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை.

அதிகாரங்களை வகைப்படுதல்
பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின்படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம்.

பதில் கடமை
அரசியலமைப்பின்படி ஜனாதிபதி சுகவீனமுற்றால், நாட்டிலிருந்து வெளியே சென்றால், அல்லது வேறு காரணங்களுக்காக ஜனாதிபதி கடமையாற்ற முடியாது என்றிருந்தால் ஜனாதிபதிக்கு பதில் கடமையாற்ற பிரதமர் நியமிக்கப்படலாம்.

பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல அதேநேரம், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதில்லை. 2ம் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இன்றுவரை சனாதிபதி பிரதமருக்கு மந்திரிசபைப் பொறுப்புக்களை வழங்கியமைனால் அவர் அமைச்சரவைக்குச் செல்கிறார். (பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.)

ஆதாரம்: புஸ்தகங்கள், விக்கிப்பீடியா, பத்திகைகள்


4038.25.04.2015

BLOG COMMENTS POWERED BY DISQUS