Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் கும்பாபிஷேக விழா படங்கள் இணைக்கப் பெற்றுள்ளன

சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் கும்பாபிஷேக விழா படங்கள் இணைக்கப் பெற்றுள்ளன

E-mail Print PDF

சிவமயம்

 

கும்பாபிஷேக விழாவை பார்வையிட -இங்கே அழுத்துங்கள்

 

திருச்சிற்றம்பலம்


இலங்கையில் பிரசித்திபெற்று விளங்கும் பழம் பெரும் சிவாலயங்களில்  சுயம்பு சேஷ்திரமாகிய சம்புநாதர் சேஷ்திரம் என அழைக்கப்படும் சம்புநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இவ் ஆலயம் தட்சண கைலாசமாகிய திருகோணமலைக்கு (கோணேஸ்வரத்திற்கு) வடக்கு திசையிலும் இராமசேதுவுக்கு (இராமேஸ்வரத்திற்கு) கிழக்கு திசையிலும் (குறிப்பாக வலிகாமம்-மேற்கில்) அமைந்திருந்ததாக தட்சண கைலாய புராணம் - சுயம்புநாத படலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் காலத்திற்கு காலம் ஏற்பட்ட இயற்கை (பஞ்ச பூதங்களின்) அனர்த்தங்களினால் தென்-இந்திய கடற்கரையில் இருந்த காவிரிப்பூம் பட்டினம் இந்து சமுத்திரத்தில் சங்கமமானது போல் இவ் ஆலயமும் சம்பில்துறை துறைமுகமும் மிகவும் சிதைவுற்று காலப்போக்கில் இந்து சமுத்திரத்தில் சங்கமமாகிவிட்டதாக வரலாறு கூறுகின்றது.

புதிய ஆலயத்தின் தோற்றம்:
வரலாற்றுப் புகழ் மிக்க புராதன ஆலயம்  கடலினுள் சங்கமித்த இடத்தின் கடற்கரையில்; "பணிப்புலத்துச் சித்தர் நரசிங்க சுவாமி" அவர்கள் பல வருடங்களூக்கு முன்னர் புதியதோர் ஆலயம் (சிறிதாக) அமைத்து
அதனைப் பராமரித்து வழிபட்டு வந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட போர்க்கால சூழ்நிலைகாரணமாக இடம்பெயராது அங்கேயே குடில் அமைத்து தங்கி இருந்து சிவபூசையும் செய்து வழிபட்டு வருகின்றார்.

இவ் ஆலயம் தற்போது, சம்புநாதீஸ்வரர் அருளினாலும், நரசிங்க சுவாமிகளின் அயராத உழைப்பினாலும் ஆகம விதிகளுக்கு அமைய விரிவாக்கம் செய்யப் பெற்று, சித்திரை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுகிழமை(01.05.2011) குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்துவதற்கான ஆயத்தங்கள் செய்யப் பெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப கிரியைகள் 29.04.2011 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. திரு. சின்னத்தம்பி ஜெயராசா (செயன்) தலைமையிலான நிர்வாக சபை அமைக்கப்பெற்று அவர்கள் மூலம் கும்பாபிஷேகத்திற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையும், காலையடி ஸ்ரீ ஞான வேலாயுதசுவாமியும், சாத்தாவோலை சம்புநாதீஸ்வரரும், தீர்தமாடச்செல்லும் தீர்த்தத் தலமாகவும் சம்பில்துறை தீர்த்தக் கரை பிரபல்யம் அடைந்திருப்பதுடன், அருகில் இருக்கும் “சங்கமித்த பௌத்த விகாரையை தரிசிக்க வரும் பௌத்த மக்களும், அரச படையினரும் தரிசிக்கும் புனித தலமாகவும் பிரபல்யம் பெற்றுள்ளது. சென்ற வருடம் சங்கமித்த பௌத்த விகாரைக்கு வழிபடுவதற்காக விஜம் செய்திருந்த மாண்புமிகு ஜனாதிபதியின் குடும்பத்தினர் இவ்வாலயத்தில் வழிபாடு செய்து "பணிப்புலதுச் சித்தர்நரசிங்க சுவாமிகளின்" ஆசீர்வாதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆலயம் இருக்கும் பகுதி தற்பொழுதும் அரசபடைகளின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளமையால் விசேட ஆலய தீர்த்த உற்சவ காலங்களில் மாத்திரம் ஊர்மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.

இவ் ஆலயத்தின் கும்பபிஷேக காலத்திலும் அதன் பின்னரும் இவ் ஆலயத்தை தரிசிப்பதற்காக வரும் பொதுமக்கள் அனைவரையும் அனுமதிப்பதற்கான அனுமதியை, நரசிங்க சுவாமிகளின் வேண்டுதலில் படையினர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆலய கும்பாபிஷேக விழா பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான  பிரதமகுரு சிவஸ்ரீ. இன்பராசக் குருக்கள் தலைமையில் நடைபெற இறையருள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகம் ஏன், எப்ப்டி, எதற்காகம், எப்பொழுது செய்யப்பெறுகின்றது?
கும்பாபிசேகத்தின் போது புதிய விக்கிரகங்களாயின் சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்று இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.

கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.

கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும்.
1.  தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.

2.  கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.

3.  ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.

4.  கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.

புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது?
புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது பாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.

கருவறையில் உள்ள மூர்த்திக்கு “அஷ்ட பந்தனம்’ (மருந்து) சாத்தப்படுவது ஏன்? அதில் என்னென்ன கலந்துள்ளன?
விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் “அஷ்டபந்தனம்’ என்ற கலவையைச் சாற்றுவது வழக்கம்.

கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
எருமை வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான்தூள் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
ஆகிய எட்டு விதமான பொருட்களை அளவுப்படி கலந்து, இடித்துச் சேர்த்து சூடாக்கி அணிவிப்பது அஷ்டபந்தனமாகும்.

ஆலய வரலாறு.

இவ் ஆலயத்தின் புராண வரலாறு "சம்புநாதீஸ்வரர் ஆலய வரலாறும்..." என்னும் தலைப்பிலும்,  முன் பகுதியில் தனியாக பதியப் பெற்றுள்ளன.

ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள பிக்குணி சங்கமித்த வெள்ளரச மரக்கிழையுடன் வந்திறங்கிய சம்பவத்தை குறிக்கும் மஹாபோதி

நன்றிமுத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS