Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: மங்கையர் மலர் சாதனைப்பெண்கள்

உலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ”மேகான் யங்” தேர்வு

E-mail Print PDF

இந்தோனேசியாவில் நடந்த உலக அழகி போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ”மேகான் யங்” உலக அழகியாக வெற்றி பெற்றார். மிஸ் பிலிப்பைன்ஸ் அழகியான மிஸ் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

அவர் 126 அழகிகளை தோற்கடித்துள்ளார். மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர். கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சீன அழகி வென்சியா யூ, உலக அழகி பட்டத்தை ”மேகான் யங்” க்கு சூட்டினார்.

இந்தியா சார்பில் போட்டியிட்ட அழகி நவ்னீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்தோனேசியாவில் 3 வாரங்களுக்கு முன்பு உலக அழகி போட்டி தொடங்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் இங்கு, உலக அழகி போட்டி நடத்துவது மதக்கொள்கைக்கு எதிரானது; வெட்கக்கேடானது என்று கூறி முஸ்லிம் பாதுகாப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போரா ட்டம் நடத்தினர். மேலும், சகோதரத்துவம், கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லிம் இளம்பெண்களுக்கு என தனியாக உலக அழகி போட்டியும் நடத்தினர்.

எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலக அழகி போட்டியின் இறுதி சுற்று, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவில் நேற்று நடந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் (23) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர். டிஜிட்டல் பிலிம் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்.

மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அழகி நவ்னீத் கவுர், பல சுற்று போட்டிகளில் வென்று டாப் 20 அழகிகள் பட்டியலில் இடம் பிடித்தார்.

உலக அழகிகள் விபரம்:

ரீட்டா பரியா(1966),
ஐஸ்வர்யா ராய்(1994),
டயானா ஹைடன்(1997),
யுக்தா முகி(1999),
பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோரும்;

பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஷ்மிதா சென்(1994), லாரா தத்தா(2000) பெற்றுள்ளனர்.


அகில இந்திய பட்டயக் கணக்காளர் இறுதிப் பரீட்சையில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டு இளம் பெண்:

E-mail Print PDF

25.01.2013


இந்தியாவின் மும்பை நகரில் தனது சிறிய வயது முதல் வசித்து வரும் பிரேமா ஜெயக்குமார் என்னும் தமிழ்ப்பெண் அண்மையில் முழு இந்தியாவிலும் நடத்தப்பட்ட பட்டயக் கணக்காளர் (Chartered Accountants Finals Examination) இறுதிப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஈட்டித் தந்துள்ளார்.

மேற்படி அவரது சாதனை குறித்த பெறுபேறுகள் வெளியானதும் அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமா அதிக சம்பளம் வாங்கும் வேலை கிடைத்தவுடம் தனது பெற்றோருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுக்கவுள்ளதாக சிரித்த முகத்துடன் கூறினார்.

ஆகில இந்திய ரீதியில் மேற்படி சாதனையை நிலைநாட்டிய பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த 20 வருடங்களாக மும்பை மாநகரில் ஒரு ஆட்டோ சாரதியாக பணியாற்றுகின்றார். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது சொந்த கிராமத்தில் தொழில் கிடைக்காததால் அவர் மும்பாய் நகரிற்குச் சென்றார்.

800 புள்ளிகளுக்கு 707 புள்ளிகளைப் பெற்று அகில இந்தியாவில் முதலிடம் பெற்ற பிரமேவை அவரது நண்பிகள் ஆசிரியைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் :நான் முந்தி! நீ முந்தி! என்று பாராட்டத் தொடங்கியுள்ளார்கள். தனது சாதனைகளுக்கு தனது பெற்றோரே காரணம் என்று கூறிய பிரேமா தனது உயர் கல்விக்கு தேவையான பண உதவிகளைச் செய்ய தனது தந்தையின் வருமானம் போதவில்லை என்றும் இதனால் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து தொடர்ச்சியாக கணக்கியல் துறையில் கற்றுவந்ததாகவும் கூறினார். அத்துடன் தனக்கு கிடைத்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் புலமைப் பரிசில் தனது பொருளாதாரக் கஸ்டத்தை நீ;ககியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதேவேளை பிரேமாவின் சகோதரன் தனராஜ் கணக்கியல் துறையில் ஆர்வம் கொண்டு தன்னோடு இணைந்து பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்றுள்ளதாகவும் தங்கள் இருவருக்கும் போதிய ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கியது தங்கள் தாயும் தந்தையும்தான் என்று கூறியபோது அவரது கண்கள் கண்ணீரைச் கொட்டின என்பது இ;ங்கு குறிப்பிடத்தக்கது.

உலக அழகியாக சீனாவின் வென் சியா யூ, தேர்வு - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

2012 ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின், பீஜிங் நகரில், உலக அழகிப் போட்டி நடந்தது. 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  இதில் பங்கேற்றனர்.இந்தியாவின் சார்பில் வன்யாமிஸ்ரா  கலந்து கொண்டார். ஆனால், இறுதி சுற்று வரை வந்த அவர் தேர்வாகவில்லை

சீனாவின் வென் சியா யூ, உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடம் பிரிட்டனைச் சேர்ந்த வேல்ஸ் அழகி ஷோபிக்கும், மூன்றாம் இடம் அவுஸ்திரேலிய அழகி ஜெசிகாவுக்கும் கிடைத்தது. உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட வென் சியா, இசை ஆசிரியையாக விரும்புவதாக தெரிவித்தார்.இந்திய முதல் தமிழ் பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு

E-mail Print PDF

பிரியம்வதா என்னும் பிரியா ஓர் வானியல் பௌதிக விஞ்ஞானி. அவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினியர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி.

இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். டெல்லியில் பௌதிகத்தில் கீழ்நிலை விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பௌதிகம், கணிதத் துறைகளை மேலாக விரும்பி மேற்படிப்புக்கு M.I.T (Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA) ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார்.

பிறகு கோட்பாடு வானியல் பௌதிகத்தில் (Ph.D. in Theoretical Astrophysics) டாக்டர் வெகுமதி பெற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், டிரினிடி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை) பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸர் மார்டின் ரீஸ் (Dr. Martin Rees) மேற்பார்வையில் பயின்றார்.

வானியல் பௌதிக விஞ்ஞானியான பிரியாவுக்கு விருப்பப் பிரிவுகள் : பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு, கருந்துளைப் பௌதிகம் (Cosmology, Gravitational Lensing & Black Hole Physics). “என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள்மணல் (Granularity of Dark Matter) பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று பிரியா நடராஜன் கூறுகிறார்.

Ph.D. ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிடி கல்லூரி ஐஸக் நியூட்டன் ஸ்டூடன்ஷிப் ஆராய்ச்சி -வானியல் பௌதிக ·பெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண் ·பெல்லோஷிப் ஆய்வாராளாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கு வருவதற்கு முன்பு டொரான்டோ கனடாவில் (Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் டாக்டர் முன்னோடிப் பயிற்சிக்கு விஜயம் (Postdoctoral Fellow Visits) செய்தார்.

ஓராண்டு யேல் பல்கலைக் கழக விடுமுறை எடுத்து 2008-2009 தவணை ஆண்டுப் பங்கெடுப்பில் ஹார்வேர்டு ராட்கிளி·ப் மேம்பாட்டுக் கல்விக் கூடத்தில் (Radcliffe Institute for Advanced Study at Harvard) ஓர் ஆராய்ச்சி ஃபெல்லோஷிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் பிரியா “கருமை அகிலவியல் மையத்தின்” இணைப்பாளராய் டென்மார்க் நீல்ஸ் போஹ்ர் கருமை அகிலவியல் மையத்தில் (Associate of the Dark Cosmology Centre, Niels Bohr Institute, University of Copenhagen, Denmark) இருந்து வருகிறார்.

பிரியா நடராஜன் தனது வானியல் பௌதிகத் துறை ஆய்வுகளை ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தருங்குகளை ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார்.

2008 அக்டோபர் 25 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் (Science News) அசுரப் பெருநிறை கருந்துளைகள் (Ultra-massive Black Holes) பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை அட்டைக் கட்டுரையாய் வரப் போகிறது. அவற்றின் அரிய உட்கருத்துக்கள் மேலும் ஏற்கனவே டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத் தகவல் (Discover Magazine, Nature, India Abroad, Honolulu Times, Dutch Popular Science, Harvard Gezette, Yale Daily News) ஆகியவற்றிலும் வந்துள்ளன.

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார்.

நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது!

“இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது.

 

 

1199/06/05

விண்வெளிக் கப்பலில் பணிசெய்து வீர காவியமான பாரத வீராங்கனை கல்பனா செளலா

E-mail Print PDF

2003 பிப்ரவரி முதல் தேதியன்று அமெரிக்காவில் உள்ள புளொரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போனதால் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்விகற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்த "கல்பனா சௌலா" உள்ளிட்ட ஏழு வீண்வெளி வீரர்களும் வீண்வெளியிலே சங்கமமாயினர்.கல்பனா சௌலா - Kalpana Chawla Ph.D. (1962-2003)

Read more...

அன்னை தெரேசா

E-mail Print PDFகுட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் வலம் வந்தவர் அன்னை திரேசா. மகத்துவம்மிக்க மாபெரும் பணிகளை ஆற்றி வந்த இந்த மனிதநேயம் மரணித்து கடந்த (2012) செப்டெம்பர் 5 ஆம் திகதி பதினைந்து வருடங்கள் நிறைவு பெறுகிறது.

இவ்வொளி விளக்கு இவ்வுலகில் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியமே. யார் இந்த அன்னை திரேசா? கருணையே வடிவான இம்மலர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியருக்கு கடைக்குட்டியாக பிறந்தது. ஞானஸ்நானத்தின் வழியே கொன்சா அக்னஸ் என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்ட இம்மலர் 1916 ஆம் ஆண்டு தனது ஐந்தாம் வயதில் முதல் நன்மை திருவருட்சாதனத்தை பெற்றுக் கொண்டது.

எந்தவொரு பணி வாழ்வில் ஈடுபடுவோரும் தமது வாழ்வில் மேடுபள்ளங்களை சந்திப்பது இயற்கையே. அப்படித்தான் இம்மலரின் வாழ்விலும் ஏற்பட்டது. தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தது. இதனால் இக்குடும்பம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய சூழலில் இம்மலர் இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தியது. தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டது. அத்துடன் தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டது.

அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற விழைந்தார். இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்' என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய பெருந்தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார்.

அதே ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தனது "அர்ப்பண உறுதி' வார்த்தைப்பாட்டின் போது கொன்சா அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் திரித்துக் கொண்டார். அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார்.

1931 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். அன்னையவர் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருந்தது. தனது உள்ளத்து உணர்வுகள் இறை ஏவுதலால் நிரம்பப் பெற்றிருப்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது.

ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். இது அன்னையவர் தனது பணிக்கு அடித்தளமிட்ட முதல் அத்திவாரமாகும். தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி தொடங்கி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார்.

எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றி கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். ஆக, அன்னையின் செயலில் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கினார்.

இதனிடையே அன்னையவர் தினமும் கரத்தில் செபமாலையை ஏந்தி செபித்து அனுதினமும் திவ்விய நற்கருணையை உட்கொண்டு இறைவனின் சந்நிதியில் சங்கமிக்கலானார்.

அன்னையின் வழியில் பல மாணவர்கள் இணைந்து கொள்ளலாயினர். அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். அத்துடன் வெனிசுலா நாட்டிலும் இச்சபையை ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெனிசுலாவில் மட்டுமன்றி உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற விளைந்தனர். இத்தகைய நிலையில் சபையின் உயர் நோக்கத்தை அறிந்துணர்ந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர்.

மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். இச்சபைகள் 1980 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினூடாக யாவரினதும் கண்கள் அவரின்பால் திரும்பின. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச விருதான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமையை வழங்கியது. மேலும் அன்னையவர் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு அப்போதைய கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் தோமஸ் குரே ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னையவர் இரு அருட் சகோதரிகளுடன் இலங்கை வந்து இரு மாதங்கள் தங்கியிருந்தார்.

அவ்வேளையில் சேரிப் புறங்களுக்குச் சென்று பல உதவிகளை புரிந்தமை நினைவு கூரத்தக்கது. செக்கடித்தெரு புனித அன்னம்மாள் பங்கில் "பிரேம் நிவாஸ' எனும் பெயரில் சபை ஆரம்பிக்கப்பட்டது. காலப் போக்கில் இடவசதியின்மை காரணமாக அது முகத்துவாரம் சாந்தி நிவாஸவிற்கு மாற்றப்பட்டு சேவைதனை தற்போது தொடர்கிறது. அத்துடன் மொரட்டுவ, கண்டி, திருகோணமலை, வவுனியா, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அன்னையின் வழியில் சேவை இல்லங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன. அர்ப்பணிப்பின் இலக்கணம், சேவைகளின் பிரதிவிம்பம் அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காலப் பகுதியை ஏழைகள், பிணியாளர்கள், துன்பப்பட்டவர்கள், அநாதைகள் ஆகியோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஆறுதலுடன் இறை சந்நிதியில் சங்கமித்தார்.

அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாட வந்தார். அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். அன்னை திரேசாவின் வழியே அப்பொறுப்பினை தற்போது ஏற்று அன்பின் துறவற சபையை வழி நடத்தி வரும் அருட் சகோதரி நிர்மலா உள்ளிட்ட உலகெங்கும் பரந்து வாழும் அன்னை திரேசாவின் அன்பின் துறவற சபையின் அருட் சகோதரிகளின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம்

நீ கருவுற்று இருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய்
ஆனால், நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்.

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 2