கைலாயத்தில் உமாதேவியாகவும், கஞ்சியிலே காமாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், மதுரையிலே மீனாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், தில்லையில் சிவகாமியாகவும், திருக்கடவூரில் அபிராமியாகவும், நயினையில் புவனேஸ்வரியாகவும், தெல்லிப்பளையில் துர்காதேவியாகவும், பணிப்புலத்தில் முத்துமாரியாகவும் எழுத்தருளி; மானிட வாழ்கை சீரோடும், சிறப்போடும் அமைய, கல்வி செல்வம், வீரம் என்பனவற்றை அருளும் முப்பெரும் தேவியர்களாக தோற்றமளிக்கும் சரஸ்வதி, இலட்சுமி, துர்க்கா ஆகிய தேவியர்க்கு நோற்வே வாழ் எம்மூர் மக்கள் 19.10.2012 அன்று விழா எடுத்து வழிபட்டனர்.
இவ் நிகழ்வின்போது தம் பிள்ளைகளைப்போல் ஊர் மக்களையும் நேசித்து "தாம் பெற்ற செல்வம் பெறுக எம் ஊரும் என எண்ணி" ஊரின் வளர்ச்சிக்காக தம் உழைப்பின் பெரும் பகுதியை வழங்கி சிறப்பித்து வரும் மதிப்புக்குரிய சின்னதுரை ஜெயராஜா அவர்கள் பொன்ஆடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார்.
ஈரேழு உலகையும் சிருஷ்டித்து, மனித குலத்தின் ஜென்ம, கர்ம, பாப வினைகளைத் தன்னுள் அடக்கி மகிழ்ந்துறையும் நீலகண்டனாம் எம்பெருமான் சிவனையும் மனித குலத்தைக் காத்து, எப்பிறவியிலும் செல்வத்தை அள்ளி வழங்கும், மால் எனப் போற்றும் விஷ்ணுவையும், பூமண்டல உயிர்களைப் படைத்து, திக்கெட்டிலும் திகம்பரனாய் விளங்கும் பிரம்மாவையும் இயக்கும் சக்திகளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரும் விளங்குகின்றனர்.
தயாள குணவதியாய் எண்ணிலடங்கா உயிரினங்களை இயக்கி வரும் தாயாகவும், உற்சாகமும், மனவலிமையும், தன்னம்பிக்கையும் தந்து எம்மை உற்சாகத்துடன் வாழ அருள் தரும் பூமகளாய் நிற்கும் பராசக்தி துர்கா தேவியாக; ஸ்வர்ண தேவியாய் அஷ்ட செல்வங்களை உலகிற்கு ஈந்து, மனித குலத்தையும் பிற உயிர்களையும் மகிழ்ச்சியாய் வாழ வைக்கும் மஹா லக்ஷ்மி தேவியாக; விரும்பியவர்க்கு அறிவாற்றலையும், ஞானத்தையும் அள்ளித் தரும் நாமகளாக சரஸ்வதி தேவியாக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு சக்திகளாக இருந்து இப்பூமண்டலத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த முப்பெரும் சக்திகளான துர்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை முதன்மையாக்கிக் விரதம் அனுஷ்டித்து அவர்களின் அருளைப்பெற கொண்டாடப் பெறுவதே இந்த நவராத்திரி விரதமாகும்.
நவராத்திரி விழாவின்போது எடுக்கப் பெற்ற நிழல் படங்களும், வீடியோ பதிவாகியுள்ளன.
வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்
நிகழ்வினப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்
படங்கள் அனுப்பி வைத்தவர்: கஜேந்திரன் அவர்கள்
பண் தமிழ் கலை பண் பாட்டு கழகம் நோர்வே