Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2018

E-mail Print PDF

Image may contain: text

அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2018 மலர வாழ்த்துகின்றோம்.

Wish you a joyful, bright, healthy, prosperous and happiest New Year ahead!!

HAPPY NEW YEAR 2018

கனடா, அமெரிக்கா - (வட அமெரிக்க நாடுகள்) ஹேவிளம்பி புத்தாண்டு 13.04.2017 பிற்பகல் 3:36 மணிக்கு மலர்கின்றது

E-mail Print PDF

Image may contain: text

கலியுகாதி சுத்ததினம் 1869391, நாடி 21 விநாடி 20, தற்பரை 15 க்கு; சரியாக ஹேவிளம்பி தமி்ழ் புத்தாண்டு 13.04.2017 வியாழக்கிழ்மை பிற்பகல் 3:36 மணிக்கு அபரபக்க திருதியை திதியில்,விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில்; சித்தி நாம யோகத்தில், வணிசக் கரணத்தில், சிங்கலக்கினத்தில், மிதுன நவாம்சத்தில், செவ்வாய் காலவோரையில், குரு சூக்குமகுணவோரையில், தாமத குண வேளையில், நட்ஷத்திர பட்சியாகிய காகம் உண்டித் தொழிலும் சூட்சும பட்சி நடைத் தொழிலும் செய்யும் காலத்தில் மங்களம் பொங்கும் ஹேவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

விஜூபுண்ணிய காலம்: முற்பகல் 11:16 முதல் பிற்பகல் (19:16).7:16 மணிவரை விஜூபுண்ணிய காலமாகும்.

இப் புண்ணிய காலத்தில்; யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து சிரசில் வேப்பமிலையும், காலில் கொன்றையிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து, மஞ்சள் நிறமுள்ள பட்டாடையாயினும் தரித்து புஷ்பராகம், மாணிக்க பதித்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி விநாயகர், குலதெய்வங்களை வணங்கி, பெற்றோர், பெரியோகளை வணங்கி அவர்களின் ஆசி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்வீர்களாக.!!

 


"தைப் பொங்கல் வாழ்த்துகள் - 14.01.2018 - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

E-mail Print PDF

Image may contain: 1 person

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும் ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

எம் சமூகத்தின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துகளும் கூறி அவர்கள் சேவையை உள்ளன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

 

 

Read more...

முதுமை அனைவருக்கும் பிறப்புரிமை

E-mail Print PDF

Unavngivet

நன்றி: பனிப்புலம்.நெற்

தைப் பொங்கல் வாழ்த்துகள் - 14/15.01.2019

E-mail Print PDF

Image may contain: 1 person

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும்  ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை,  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம்மூர் சிறார்களின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறி அவர்கள் சேவையை உள்அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” குறள்

எல்லோரும் எல்லாமும் பெற்று நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள்

வாழ்த்துக்களை கீழே பதிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

 

 


உலகத் தொழிலாளர்களின் தியாகத்தில் உருவானதே தொழிலாளர் தினம் எனும் "மே தினம்"

E-mail Print PDF

பார் முழுதும் வாழும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு  மருந்து போட்ட நன்னாள்,..  காலவரையற்ற உழைப்பு,  மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த உன்னத நாளே மே 1 தொழிலாளர் தினம்….

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாக, விடியல் நாளாக, விடுமுறை நாளாக, ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல்; உலகம் முழுக்க வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுதும் ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

Read more...
 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 6

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்