Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சிறுவர் பூங்கா புதிர்கள்

வழி தவறாத பூனை

E-mail Print PDF

"நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி விட்டுவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார், "உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?" "ஆம்" என்று மனைவி சொல்ல

நாராயணசாமி சொன்னார், "போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை"."

பாப்பாப் பாட்டு

E-mail Print PDF


௧)
ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!
௨)
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
௩)
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!
௪)
பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!
௫)
வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
௬)
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
௭)
பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
௮)
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
௯)
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
௰)
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
௰௧)
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
௰௨)
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
௰௩)
வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
௰௪)
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
௰௫)
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
௰௬)
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!

ஆராரோ ஆரிரரோ

E-mail Print PDF


ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!

பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!

நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!

சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

பொது அறிவுக் கணக்கு

E-mail Print PDF


ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்

இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?

12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்

மாத்தி யோசி - சிந்திக்கச் சில...

E-mail Print PDF

அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் பொலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

பொலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு காப்பென்ரர், ஒரு றைவர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைக்கும் உத்தியோகத்தன் ஆக 4 பேர் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பொலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம். இல்லையேல் ஒருசில தினங்களில் இங்கே பதிவாகும்.

 

இதற்கான பதில் அங்கு இருந்த மற்றைய மூவரும் பெண்களாவர். அதனால் பொலிசாருக்கு கந்தசாமியை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது

சிந்திக்க சில -2.....

E-mail Print PDF

மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும்.  இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம்.

அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது அதன் வாயையும், மூடியையும் வட்ட வடிவில் அமைத்தமைக்கு  காரணம் என்னவாக இருக்கலாம்?

பதில்: நீள் வடிவமாக, அல்லது சதுர வடிவமாக இருந்தால்; அதன் மூடி மூலைப்பாட்டின் பக்கமாக (மூலை விட்டம் நீளமாக இருப்பதால்) உள்ளே விழும் சந்தற்பம் அதிகம். அதனைத் தவிர்ப்பதற்காகவே மூடியும், வாயிலும் வட்ட வடிவமாக அமைந்துள்ளது.

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 3

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்