Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: உலகம்
 

கனடா தேசம் தனது 151 வது (பிறந்த தினத்தை) "Canada Day" 01.07.2018 இன்று கொண்டாடுகின்றது.

E-mail Print PDF

No automatic alt text available.

கனடா தினம் என்பது கனடாவின் தேசிய தினமாகும்.

வட அமெரிக்காவின் மூன்று குடியேற்றத்திட்டங்களை ஆண்டுவந்த பிரித்தானியா; அவை மூன்றையும் ஒன்றாக இணைத்து “கனடா” என்னும் ஒரு நாடாக (பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867ன் கீழ்) பிரகடனப்படுத்திய நாளே கனடா தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது.

கனடா தனது முதலாவது பிறந்த தினத்தை 01.07.1868 ல் கொண்டாடியது. ஆரம்பத்தில் இத் தினத்தை “டொமினியன் தினம்” என அழைத்தனர். அதன் பின்னர், 1982 ம் ஆண்டு ஒக்ரோபர் 27 திகதி இத் தினத்தை "கனடா தினம்" (Canada Day) என சட்ட பூர்வமாக மாற்றப் பெற்றது. இத் தினத்தை கனடாவின் "பிறந்த தினம்" எனவும் அழைப்பதுண்டு.

புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் இன்முகத்துடன் வரவேற்று, வாழ்வளித்து நாம் வேறு நாடுகளில் பிறந்திருந்த போதும் தனது நாட்டில் எமக்கும் பிரஜா உரிமையும் தந்து எல்லா மக்களையும் தாம் பெற்ற மக்களாக மதித்து காத்தருளும் “கனடா தாயை” வணங்குகின்றோம், இன்முகத்துடன் வாழ்த்துகின்றோம்.

வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு நாடாகும்.

”ஒட்டாவா” கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. கனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது.

ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடி மக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும். கனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்:

”இன்டியன்ஸ்”,

”இனுவிட் (Inuit)”,

”மெயிற்ரீஸ் (Metis)”.

மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள். கனடிய பழங்குடிகள் தங்களை ”முதற் குடிகள் (First Nations)” என்று அழைத்தார்கள்.

இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது.

வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம்.

அவை பின்வருமாறு:

• சமவெளி மக்கள் – (Plains)

• இறொக்குவா குடிகள் – Iroquoian Nations

• வட வேட்டுவர் – Northern Hunters

• வட மேற்கு மக்கள் – Northwest Cost

• அல்கோன்கிய குடிகள் – Algonkian Nations

• பீடபூமி மக்கள் (Plateau)

பழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே ”இனுவிட்” ஆவார்கள். இவர்களை அழைக்க ”எஸ்கிமோ” என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு.

பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர்.

ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள்.

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது.

கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும். பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது.

கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.

1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது.

குறிப்பாக “Chinese Exclusion Act” 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது.

1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது.

இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.

உலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள்

"கனடா தாயே ஊழி உள்ளவரை நிலைத்து நின்று ஆதரவற்றவர்களுக்கு இடமளித்து காத்தருள்வாய் தாயே"

"வாழ்க கனடா வாழிய வாழியவே"

கோடைகால ஒன்றுகூடல் -2018 - பண்கலை பண்பாட்டுக் கழகம் -கனடா

E-mail Print PDF

No automatic alt text available.

கனடா – பண்கலை பண்பாட்டுக் கழகம் வருடாவருடம் கொண்டாடிவரும் கோடைகால ஒன்றுகூடல் ஜூலை மாதம் 2ம் திகதி (02.07.2018) திங்கட்கிழமை (அரச விடுமுறை தினம்) ஸ்காபறோ மிலிகன் பாக்கில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

கோடைகால ஒன்றுகூடலில் தன்னார்வத் தொண்டு செய்யும் மாணவ தொண்டர்களுக்கு (Volunteer Student Hours) தொண்டு சேவைக்கான சான்றிதழ் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன.

தொண்டு செய்வதற்கு ஆர்வமுள்ள உயர்தர பாடசாலை மாணவர்கள் (High School Students) .தங்கள் பெயர், விபரங்களை தயவு கூர்ந்து முன்பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர். முன்பதிவு செய்து கொள்வதற்கு கழக செயலாளர் வைகுந்தன் அவர்களை 416-726 -1698 ல் தொடர்பு கொள்ளவும்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2018 - சொற்கள் இணைப்பு

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ் சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் 18.03.2018 அன்று Scarborough Civic Center ல் 10:00 AM - 12:00 Pm வரை நடைபெறும் என்பதனை கழக நிர்வாகம் அறியத்தருகின்றது.

பிள்ளைகளின் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பெற்று, போதிய கால அவகாசமும் வழங்கப்பெற்றுள்ளது.

வகுப்பு ரீதியிலான போட்டி என்பதனால் பங்குபற்றும் பிள்ளைகளில் அதிகமானோர் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வகுப்பு ரீதியிலான போட்டி முறையானது தமிழ் சொல்வதெழுதல் போட்டியின்போது மட்டுமே நடைமுறைப் படுத்தப்பெறும் என்பது கவனிக்கத்தக்கது.

பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகள் தற்போது கல்விகற்கும் வகுப்புகளுக்கு உரிய சொற்களை; கீழே கொடுக்கப் பெற்ற பிரிவுகளில் பெற்று அவர்களை தயார் படுத்தி நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறச்செய்து அவர்களிடம் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊட்டுவித்து பெறுமதியான பரிசில்களையும் தம்வசமாகிக் கொள்வதற்கான ஊக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

போட்டிகள் மூலம் பிள்ளைகளுடன் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். ஏனைய பிள்ளைகளுகளுடன் உறவினைப் பலப்படுத்துவோம். இன்றே உங்கள் பிள்ளைகளை தயார் படுத்த ஆரம்பியுங்கள். சந்திப்போம்.

நிர்வாகம் தொடர்புகளுக்கு:

மனுவேந்தன் - 416 569 5121]

இள - முது பாலர் பிரிவு [ kg]

1. ஈ

2. வை

3. தா

4. போ

5. கை

6. மா

7. நீ

8. மை

9. வா

10. தை

11. தீ.

12. பூ.

13. கூ .

14. பை

15. நோ.

வகுப்பு:01

1. படு .

2. காது.

3. கண் .

4. வாய்.

5. கால்

6. பாடு

7. அது .

8. வீடு

9. சீனி .

10. கறி

11. பிடி.

12. பாதி .

13. ஓடு.

14. ஆடு.

15. விழு.

வகுப்பு;02

1. கோழி.

2. காலை.

3. தோழி

4. தலை.

5. மொழி

6. தொடை.

7. தோடு

8. சோதி.

9. மாலை.

10.மேடை .

11.தொடு.

12.கலை.

13.கடை.

14.சோறு.

15.பாதி.

வகுப்பு:03

1 .அம்மா.

2. அப்பா.

3. அக்கா.

4. அண்ணா.

5. அப்பு.

6. ஆச்சி.

7. தம்பி.

8. படம்.

9. கனடா.

10. சுடும்.

11. குளிர்.

12. பாடல்.

13. தளம்.

14. அவள்.

15. தட்டு.

வகுப்பு:04

1. முகில்.

2. அந்த .

3. கத்து.

4. இவள் .

5. அறிவு.

6. வீரன்.

7. அழகு.

8. வானம்.

9. என்ன?

10. அவர்.

11. நன்றி.

12. ஆவல்.

15. ஆடல்.

16. அரிசி

17. காட்டு

18. இந்த.

19. குட்டு.

20. பயம்.

வகுப்பு:05

1. அமைதி.

2. பெருமை .

3. கேள்வி.

4. கோபம் .

5. பொட்டு .

6. பொழுது .

7. கொத்தி

8. நொண்டி.

9. கதிரை.

10. சொத்து

11. போற்று .

12. போட்டி.

13. கொள்ளு.

14. காவடி.

15. பொட்டு.

16. இல்லை.

17. கொத்து

18. தொட்டு.

19. தொழில் .

20. மழழை

வகுப்பு:06

1. மின்னல்.

2. மிருகம்.

3. மனிதன்.

4. விரதம்.

5. நடிகன்.

6. நடுக்கம்.

7. பக்கம்.

8. இருவர்.

9. ஒருவர்.

10. புதினம்.

11. வட்டம்.

12. எப்படி?

13. தடிமன்.

14. கணக்கு.

15. கழகம்.

16. பருப்பு..

17. துக்கம்.

18. அபாயம்.

19. துக்கம்.

20. இருமல்.

வகுப்பு: 07 -

1.அவசரம்.

2.சந்தனம்.

3.ஒழுக்கம்.

4.மலிவானது.

5.தூரத்தில்.

6.கத்தியது.

7.கழித்தல்.

8.சுடுகிறது.

9.நல்லவன்.

10.இருங்கள்.

11.இனிக்கும்.

12.அழுகிறான்.

13.இரக்கம்.

14.புளிக்கும்.

15.கசக்கும்.

16.மன்னிப்பு.

17.காய்ச்சல்.

18.கழிவுகள்.

19.பாடுங்கள்.

20.மரக்கறி.

21.சிரித்தான்..

22.மயக்கம்.

23.காய்ச்சல்.

24.மன்னிப்பு.

25.கற்றவன்

26.குங்குமம்.

27.திருக்குறள்.

28.குளித்தல் .

29.பாருங்கள்.

30.ஆறுதலாக.

வகுப்பு:08

1.மழைமேகம்.

2.வெளிக்கிடு.

3.வைத்தியர்.

4.மெலிந்தேன்.

5.பேசுங்கள்.

6. நம்பினேன்.

7.நல்லவேளை.

8.கடுமையான.

9.போற்றினர்.

10.பொய்முகம்.

11.உடைத்தாள்.

12.போதனைகள்.

13.பொறுங்கள்.

14.கருமேகம்.

15.முழுகினேன்.

16. ஒளிபரப்பு.

17.ஒழுங்கானது.

18.வருந்தினேன்.

19.திரைப்படம்.

20. நடக்கிறேன்.

21.பெண்பிள்ளை.

22. மெலிந்தவன்.

23.சைவசமயம்.

24.போக்குவரவு.

25.தொலைக்காட்சி.

26.விளையாடுவோம்.

- 27. தொலைக்காட்சி.

28.பொல்லாதவன். .

29.பிறந்தநாள்.

30.சுடுதண்ணீர்.

No automatic alt text available.

கனடா - பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துக் கூறல் போட்டி முடிவுகள்

E-mail Print PDF

No automatic alt text available.

முதலாவது,இரண்டாவது,மூன்றாவது இடத்தினை பெற்ற சிறுவர்களும் பங்குபற்றிய ஏனைய சிறுவர்களும்..

பிரிவு- Jk+Sk


1.
ஓவியா பாலசிங்கம்

2. அஷ்விகன் கிருபாகரன்

3. ஜாஸ்வின் தயாளரூபன்

4. கிருஷ்ணவி தர்மகோபாலன்

5. அகிசா குலதீஸ்வரன்

6. அனாமிகா கிருஷ்ணராசா

7. றமேசன் சிவனேசன்


பிரிவு- Grade- 01+02


1.
அபிரன் றதீஸ்குமார்

2. பிரித்திகா புலேந்திரன்

3. கிசானன் நந்தகுமார்

4. தரணிகா கஜன்

5. பர்மிகா கிருஷ்ணராஜா

6. கிறிஸிகா கிருஷ்ணகுமார்

7. திசா உமாபதிசிவம்

8. சஜீன் செல்வச்சந்திரன்

9. திசாந்த் தீபவதனன்

10. சானுஜா சுதாகரன்

11. தனிஸ்கா குகன்

12. றக்சனா ரதீஸன்


பிரிவு- Grade- 03+04

1. ஆதித்யா பாலசிங்கம்

2. பிரித்திகா வினோதரூபன்

3. கிஷோன் தயாள ரூபன்

4. அஸ்வின் சுகிந்திரன்

5. கிரிசாந்த் தர்மகோபாலன்

6. டிலக்சன் ஜெயக்குமார்

7. கிரிஷ்ணிகா சர்வானந்தன்

8. ரனிஸ்கா தீபவதனன்

9. சாகித்தியன் நந்தகுமார்

10. அதீதன் ரசனிகாந்தன்

11. கபிஸ்ணன் கிருஷ்ணகுமார்


பிரிவு- Grade- 05+06


1.
மதுசன் செல்வரத்தினம்

2. பிரணவி தர்மகோபாலன்

3. வர்சிகா குணபாலன்

4. டஸ்மிகா குலதீஸ்வரன்

5. பகிசன் சிவனேஸ்வரன்

6. யதுஷன் முகுந்தன்

7. துவாரகா பாஸ்கரன்

8. செனுஜா செல்வச்சந்திரன்

9. டிலக்சனா ஜெயக்குமார்

10. அனோஜன் செல்வரத்தினம்

11. சகிஸ்யன் சர்வானந்தன்

12. சந்துசன் சுகந்தன்

13. அபிசன் ரதீஸ்குமார்


பிரிவு- Grade- 07+08


1.
கோபிஷன் வினோதருபன்

2. அனோஜ் நடேசன்

3. கஜாயினி சண்முகம்

4. ரிசிபன் சிவனேஸ்வரன்

5. தாரகன் கஜன்

6. சாருகன் முகுந்தன்

7. சபீசன் பாஸ்கரன்

8. அபி ரவி [ abi Ravi]

9. சுருதிகா குணபாலன்

10. அபிரா ரதீஸ்குமார்

11. சுவேதா புலேந்திரன்

12. கஜானன் கிருபைநாதன்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நடாத்தும் ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2017

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2017 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் தற்போது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.

தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பிற்கு பொருத்தமான ”சொற் கூட்டங்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இப் போட்டி நடைபெறும் காலம் பின்னர் அறியத்தரப்படும். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் வகுப்பினை உறுதிப்படுத்த பாடசாலை மதிப்பீட்டு [reportcard ] அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

போட்டியில் பங்குபற்றுவோருக்கான கட்டணம் $5.00 மட்டுமே.

இள மழழைகள் பிரிவு: [வகுப்பு:kg]

1. fun

2. red

3. cat

4. sun

5. dog

6. jam

7. gum

8. bat

9. net

10. pig

11. fun

12. sat

13. end

14. top

15. bat

16. ran

17. big

18. box

19. cup

20. club

21. rub

22. hot

23. bed

24. jet

25. sad

முதுமழழைகள் பிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு:-01,02)

1. blue

2. milk

3. hand

4. stop

5. fast

6. brown

7. name

8. bake

9. kite

10. home

11. five

12. nose

13. green

14. ask

15. girl

16. bird

17. down

18. glad

19. baby

20. best

21. plan

22. nest

23. sing

24. made

25. gate.

மத்தியபிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு;- 03,04)

1. school

2. paint

3. because

4. space

5. worry

6. trouble

7. hurry

8. please

9. climb

10. smell

11. should

12. earth

13. sugar

14. catch

15. early

16. corner

17. learn

18. large

19. whole

20. family

21. twice

22. quick

23. never

24. almost

25. point.

மேற்பிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு:05,06)

1. disguise

2. percent

3. recommend

4. official

5. stomach

6. exercise

7. instruction

8. restaurant

9. success

10. piano

11. decide

12. future

13. shoulder

14. distance

15. familiar

16. wrinkle

17. disease

18. journey

19. doubt

20. breathe

21. equal

22. discourage

23. tournament

24. achieve.

அதிமேற்பிரிவு - பிறந்த வருடம்-: (வகுப்பு:07,08)

1. environment

2. sympathy

3. imagination

4. recognize

5. committee

6. collaborate

7. strength

8. ordinary

9. opportunity

10. enormous

11. accomplish

12. disappear

13. familiar

14. beneath

15. location

16. innocent

17. guarantee

18. ancient

19. receipt

20. engineer

21. tongue

No automatic alt text available.

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 28

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்