Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: சிறுவர் பூங்கா

நாம் வாழும் பூமி - அறிவியல் ரகசியம் அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

சூரியனில் இருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது.

சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது.

எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் “புளூ பிளானெட்” என பூமி அழைக்கப் படுகின்றது.

புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.

பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன.

நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -

1.  பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்

2.  சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்

3.  சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s

4.  பூமியின் சராசரி ஆரை: 6371 Km

5.  துருவ ஆரை: 6356.8 Km (பூமி பந்துபோல் உருண்டையாக இல்லாது துருவப் பகுதி சற்று  தட்டையாக இருப்பதனால்)

6.  சுற்றளவு (கிடை அச்சில்) : 40 075.02 Km

7.  நீள் கோள மேற்பரப்பளவு : 510 072 000 Km2

8.  கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3

9.  நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg

10.  சராசரி அடர்த்தி : 5.5153 g/cm3

11.  மையத்திலிருந்து ஈர்ப்பு விசை : 9.780327 m/s2 அல்லது 0.99732 g

12.  தப்பு வேகம் : 11.186 Km/s

13.  சாய் கோணம் : 23.439281 பாகை

14.  எதிரொளி திறன் : 0.367

15.  மேற்பரப்பு வெப்பம் : 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)

16.  வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் : 101.3 Pa

17.  துணைக் கோள் : 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும், சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம்.

பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந்நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும்.

வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன.

பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.

பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது.

புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.


818.05.02.2015


14832 -04.05.2018

”பாலைவனக் கப்பல்" என்று அழைக்கப்பெறும் ஒட்டகத்தின் குணதிசயங்கள் – அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

ஒட்டகமானது கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் செய்யும்போது அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடை போட்டு பாலைவனத்தை கடக்க கப்பல் போல் அமைவதால் இப் பெயரைப் பெற்றுள்ளது.

ஒட்டகம் பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்காகும்.

பொதுவாக ஒரு ஒட்டகம் 250 கிலோ எடையிலிருந்து 680 கிலோ எடை வரை வளரும். இப் பாலைவனக் கப்பல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல், உணவில்லாமல். பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது,

Read more...

அறிவுக்கு விருந்து !!!

E-mail Print PDF


பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.

பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.

 

பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ

பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ

பூமியின் விட்டம்: 7920 கி.மீ

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ

பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ

பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி

பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக

பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 செக்கன் (8 நிமிடம்)

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவது அமாவாசையில் வரும்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

நன்றி

உலகில் மிகச்சிறிய உலங்கு வானூர்தியும் மிகப் பெரிய பயணிகள் வானூர்தியும் - படங்கள், வீடியோ இணைப்பு

E-mail Print PDF

GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது.

GEN H-4 முதன் முதலில் 1998 இல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இதன் இயக்கவியல் மிகவும் எளிதானது. வானோடியின் கழுத்துப்பகுதியில் உள்ள throttle lever மூலம் உலாங்கு வானூர்தியின் உயர்வு மற்றும் வேகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் Moving the control bar மூலம் பயண திசை, வலது அல்லது இடது பக்கம் திரும்புதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

GEN H-4 ஆனது இரண்டு அங்குல அலுமினிய குழாய்கள் மூலம் உருவாக்கப்பட்டது. 10hp, 125cc வலுவுள்ள நான்கு GEN125 இயந்திரங்கள் இந்த உலாங்கு வானூர்தியை இயக்குகின்றன. இரண்டு சுழலிகளும் எதிர் எதிர் திசையில் பயணிப்பதன் மூலம் இதன் torque கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் வால்ப்பக்க சுழலி தேவை இல்லை. Yaw திருப்பம் ஒரு சிறிய மின் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் எரிபொருள் automobile gasoline மற்றும் two stroke oil ஆகியவற்றின் 30:1 கலவையாகும்.

இதில் பாதுகாப்புக்காக ballistic parachute (வான்குடை) வழங்கப்படுகிறது மற்றும் கூடுதலாக இரண்டு இயந்திரங்கள் மூலம் ஒரு பாதுகாப்பான அவசர தரையிறக்கம் செய்ய முடியும். எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இதில் automatic altitude controller (தனிச்சை உயரக் கட்டுப்பாட்டாளர்) அமைக்கவும் மற்றும் இருக்கையின் கீழ் air bags (காற்று பைகள்) பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன நெரிசல் அதிகரித்த நிலையில் இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியானது மனிதனுக்கு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

உலகின் மிகப் பெரிய பயணிகள் வானூர்தி..
அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய செகுசு விமானத்தை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

250 அடி நீளமுள்ள போயிங் 747-8 இண்டர்காண்டினென்டல் என்ற அந்த விமானத்தில் 467 பயணிகள் செல்லலாம். இது போயிங் நிறுவனத்தின் போட்டியாளரான ஃபிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏ380இல் செல்லக்கூடிய பயணிகள் எண்ணிக்கையை விட 51 பேர் அதிகமாகும்.

போயிங்கின் முந்தைய தயாரிப்பான 747-400 விமானத்தை விட இந்த புதிய அறிமுக விமானத்தின் சத்த அளவு 30 விழுக்காடு குறைவு என்றும், அதன் கரியமிள வாயு வெளிப்பாடு ஒரு பயணி அளவோடு மதிப்பீடு செய்கையில் 16 விழுக்காடு குறைவு என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

“இந்த விமானத்தின் குறைந்த இயக்கச் செலவும், உள் அமைப்பும் பயணிகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்பதாக” போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜிம் ஆல்பாக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் போயிங் 747-8 விமானத்தின் முதல் தயாரிப்பு சேவைக்கு வரவுள்ளது. இதுவரை 33 விமானங்களுக்கு விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதில் லுஃப்தான்சா, கொரியன் ஏர் ஆகியனவும் அடக்கம் என்றும் போயிங் கூறியுள்ளது.

இந்த விமானத்தின் அறிமுக விலை 31.75 கோடி டாலர்களாகும் (ரூ.1,430 கோடி). இந்த புதிய விமானம் வாஷிங்டனில் உள்ள போயிங் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு நடுவில் கோலாகலமான விழா நடத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

போயிங் விமானத்தின் விமானியின் அறை 360 பாகையில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

வழி தவறாத பூனை

E-mail Print PDF

"நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி விட்டுவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார், "உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?" "ஆம்" என்று மனைவி சொல்ல

நாராயணசாமி சொன்னார், "போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை"."

இலங்கையின் மாகாண முதலமைச்சர்கள்

E-mail Print PDF

இலங்கையில் அமந்துள்ள ஒன்பது மாகாணங்களுக்குமான முதலமைச்சர்கள் விபரம் கீழே தரப்பெற்றுள்ளன

மேல் மாகாண முதலமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

வடமத்திய மாகாண முதலமைச்சர் - எஸ். எம். ரஞ்சித்

மத்திய மாகாண முதலமைச்சர் - சரத் ஏக்கநாயக்க

வடமேல் மாகாண முதலமைச்சர் - அதுல விஜேசிங்க

ஊவா மாகாண முதலமைச்சர் - சசிந்திர ராஜபக்‌ஷ

சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் - மஹிபால ஹேரத்

தென்மாகாண முதலமைச்சர் - சான்ஸ்விஜேலால் டி சில்வா

கிழக்கு மாகாண முதலமைச்சர் - நஜீப் ஏ. மஜீத்

வடமாகாண முதலமைச்சர் - தெரிவு செய்யப்பெறவில்லை

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்