Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: சிறுவர் பூங்கா அறிவியல்

மேற்கில் உதிக்கும் சூரியன்

E-mail Print PDF

பூமி மற்றும் பிற கிரகங்களில் கிழக்கில் தோன்றி மேற்கே மறையும்.

சூரியன் வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றுகிறது. ஏனெனில் பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வது போல் வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும்.

ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வந்தால் அதை நாம் ஒரு நாள் என்கிறோம்.

மேலும் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வந்தால் ஒரு வருடம் என்கிறோம்.

அந்த முறைப்படி பார்த்தால் வெள்ளி கிரகத்தின் வருடம் அதன் ஒரு நாளை விட குறைவு. அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 5832 மணி நேரமாகிறது.

ஆனால் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர அதற்கு 5400 மணி நேரமே ஆகிறது

சூரிய குடும்பம் - அறிவியல்

E-mail Print PDF

சூரியன்
சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது.
சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது.

கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

புதன்
இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் ''மெர்க்கூரி'' என்று அழைக்கின்றனர். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும்.

இக்கிரகத்தின் விட்டம் 4800 கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது. புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன.

புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் 400 பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ 280 பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர்.

வெள்ளி
சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம்.
இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.

இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் 2012 ஆண்டு ஜூன் 06 நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.

பூமி
சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது.
பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான உருண்டை வடிவாக அமைந்திருக்கவில்லை. இருதுருவங்களும் சிறிது தட்டையாகவும், கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று பருத்தும் காணப்படுகின்றது.. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் 12742  கிலோ மீற்றரரும் துருவங்கள் இரண்டிற்குமிடையில் உள்ள விட்டம் 12713 கிலோ மீற்ரராகும்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன்  365,2563 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் சுற்றி வருவதனால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.

செவ்வாய்
செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம்  செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை.
செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 687 நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற 24 மணி 37 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும்.

பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

வியாழன்
ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது.
இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ என அழைக்கப்படுகின்றது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது.  இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது.

வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர்.

சனி
சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும்.

இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட (அடர்த்தி குறைந்தவை)  இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன.

யுரேனஸ்
ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன.
யுரேனஸ் ஆகும். 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் 48000 கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற 84 வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன.

நெப்டியூன்
நெப்டியூன் எட்டாவது கோளாகும். இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும்.
இக்கிரகம் 1846 ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும்.

இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் (நேகட் ஐஸ்) பார்க்க முடியாது.

புளூட்டோ
ஒன்பதாவது கோளான புளூட்டோ தான் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோள்களிலேயே மிகச் சிறியது புளூட்டோதான். புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள் ஆகின்றன.
தற்போது, இது ஒரு கோள் அல்ல என்றும், கோளுக்கான தகுதி இதற்கு இல்லை என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

சூரியனுக்கும் ஒரு குடும்பம் உண்டு.

வானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் கோள்களை - அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

நாம் வாழுகின்ற பூமியும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது.

கிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன.

பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விஷயமாகும்.

யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன.

சூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது.

சூரியனுக்கு என்று கோள்களினால் ஆன ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன.

சூரியனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமாக சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து.

சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்து.


4372/18/-5

காதும் கண்ணும் இல்லாத மண்புழு

E-mail Print PDF

மண் புழுவில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவைகள் சராசரியாக 10 அங்குல நீளம் உள்ளவை. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை மண்புழு மட்டும் 11 அடி நீளம் வளர்கின்றது. மண்புழுவின் உடலில் இலேசான செந்நிறம் காணப்படுவதன் காரணம் உடலுக்கு ஒக்சிஜனை எடுத்துச் சென்று இரத்தத்துக்குக் கொடுக்கும் ஹோமோ குளோபின் அதன் மேல் தோலில் இருப்பதுவே ஆகும்.

அதன் உடலின் முன் பகுதியில் வாய் உள்ளது. உதடுகள் கூர்மையாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்கு உணவை மெல்வதற்கான பற்களோ, தாடையோ கிடையாது.

அதன் உடலின் முன் வளையங்கள் முதலில் சுருங்கி விரிகின்றன. இந்தச் சுருங்கி விரியும் செயல் ஒரு அலைபோல உடலின் கடைசிப் பகுதிவரை பரவி அதன் மூலம் மண்புழு நகர்கின்றது. இச் செயலின்போது உடலின் ஒவ்வொரு பகுதியும்

ஒரு தனி அங்கமாகச் செயல்படுகின்றது. மண்ணைத் துளைத்துக்கொண்டு பூமிக்கு அடியில் செல்வதாலேயே இதற்கு மண்புழு என்று பெயர் ஏற்பட்டது.

மண் புழு மூச்சு விடுவதற்கு வேண்டிய காற்றினை அதன் மேல் தோல் நேரடியாக உள்ளிழுத்து வாங்குகிறது. அதன் உடலின் முன்பகுதியில் அமைந்துள்ள ‘போலி இருதயம்’ என்று அழைக்கப்படும் ஐந்து ஜோடி சுருங்கி விரியும் இரத்த தேக்கக் குழாய்களின் மூலம் இரத்தம் உடல்- முழுவதும் பீய்ச்சி அனுப்பப்படுகிறது.

மண்புழுவில் ஆண் என்றும், பெண் என்றும் தனித் தனியாக இல்லை.

மண்புழு வளை தோண்டி உள்ளே செல்லும்போது பாதியளவு மண்ணை வாயில் விழுங்கி அதிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு, மண்ணைப் பதப்படுத்தி வெளிவிடுகிறது. தண்ணீரின் அடியில்
அதனால் மாதக் கணக்கில் உயிர்வாழ முடியும்.

மண் புழுவுக்குக் காதுகளோ, கண்களோ இல்லை. ஆனால், அதன் உடலின் மேற்பகுதியின் உதவியால் அதிக வெளிச்சம் அதன்மீது பட்டாலும் உணர்ந்துகொள்ள முடியும்.

மண் புழுவின் உடலை வேறு பிராணிகள் ஒரு பகுதியைத் துண்டித்துவிட்டாலும் மீண்டும் வளர்ந்து முழு உடலை அடையும். உடலின் முன்பகுதி அல்லது பின்பகுதி ஆகிய இரண்டு பகுதிகளுமே மீண்டும் வளர முடியும். இத்தகைய

அரிய சக்தி வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. மண் புழுவின் முக்கிய உணவு மக்கிப் போன தாவரப் பொருள்கள் தான். ஆனால் அதனால் இறந்த விலங்கினங்களின் சதைப் பகுதிகளையும், பிற பொருள்களையும் தின்ன முடியும்.

மண் புழுவின் வாழ்நாள் எவ்வளவு என்று தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் சோதனைச் சாலைகளில் வைத்திருந்த மண் புழுக்கள் nஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கின்றன. சில ஆஸ்திரேலிய மண் புழுக்கள் 10.5 ஆண்டுகள் வாழ்ந்தன.

பூமியின் மேற் பகுதியை மனிதன் ஆள்கிறான் என்றால், பூமியின் அடிப்பகுதியில் நிறைந்து வாழ்பவை மண் புழுக்களே ஆகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் 30 இலட்சம் மண் புழுக்கள் உள்ளன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், இந்தப் பரந்த பூமி முழுவதும் எத்தனை ஆயிரம் கோடி மண் புழுக்கள் இருக்கக்கூடும்.

ஔவைக்கிழவி நம் கிழவி

E-mail Print PDF


ஔவைக்கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி

கூழுக்காகக் கவி பாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே


அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஔவியம் பேசேல்.
அஃகம் சுருக்கேல்கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து.
ஐயம் புகினும் செய்வன செய்.
ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

பாப்பா பாட்டு

E-mail Print PDF

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.

Read more...

Page 7 of 8

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்