Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: பல்சுவை சினிமா

இது கதிர்வேலன் காதல் : 320 திரையரங்குகளில் வெளியீடு

E-mail Print PDF

 


உலகமே கொண்டாடும் காதலர் தினமான 14.02.2014 அன்று இது கதிர்வேலன் காதல் திரைப்படமானது 320 திரையரங்குகளில் இன்று ரிலீசாகியது.

உதயநிதி-நயன்தாரா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.

உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவதாக இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்கிறார். இதேபோல, நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ஆரம்பம், ராஜா ராணி படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்தது. கிட்டதட்ட 320 திரையரங்குகளில் படம் வெளியாகியதால் சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இப்படம் ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா காலமானார்

E-mail Print PDF

தென்னிந்தியாவின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சுகயீனம் காரணமாக இன்று முற்பகல் 11 மணிளவில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 74ஆவது வயதில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் மாத்திரமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா.

மட்டக்களப்பில்1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் ஒளிப்பதிவாளராக திரையலகிற்கு அறிமுகமானார்.

தனது தந்தையால் ஒளிப்பதிவு மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், படதொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர்.

இலங்கையில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.

இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்.

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இயக்குநர் பாலுமகேந்திரா  1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தலைமுறைகள் என்ற படத்தையும் இவர் இயக்கி உள்ளார்.

பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா வரலாற்றில் பாரிய இழப்பாக இயக்குநர் பாலுமகேந்திராவின் மரணம் அமைந்துள்ளது.


நடிகை மீரா ஜாஸ்மின் பதிவுத் திருமணம் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

பிரபல நடிகை மீரா ஜஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ஆம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜஸ்மினின் வீட்டில் இருவருக்கும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் அனில் ஜான் நேற்று பரபரப்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நானும், பெங்களூரை சேர்ந்த இந்து மத பெண்ணும் திருப்பதியில் மாலை மாற்றிக் கொண்டோம்.

ஆனால், அது சட்டப்படி நடந்த திருமணமல்ல. பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால், அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது. நடிகை மீரா ஜஸ்மினுடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்த அந்த பெண், திருமணத்தை தடுத்து நிறுத்த போவதாக கூறி மிரட்டி வருகிறார்.

எனவே, எனது திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதையடுத்து, திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் நேற்று நடந்தது.

இதில், நடிகர்கள் ஜெயராம், திலீப், நடிகை காவ்யா மாதவன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருமணத்தை வீடியோவில் பார்வையிட் இங்கே அழுத்துக

வீரம் - திரைவிமர்சனம்

E-mail Print PDF


நான்கு தம்பிகளை வளர்த்து வரும் அஜீத், அவர்களை தங்களிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்பதற்காகவே கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், தம்பிகள் காதலில் விழுந்து விட, அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கத் திட்டமிடுகிறார்கள். அண்ணனுக்கு பிடித்த கோப்பெருந்தேவி என்ற பெயரைக் கொண்ட பெண்ணை தேடி அலைகிறார்கள். அகப்படுகிறார் தமன்னா. அண்ணனை பற்றி நல்ல விதமாகச் சொல்லி தமன்னாவை காதலில் தள்ளுகிறார்கள். காதல், கல்யாணத்தை நெருங்கும்போதுதான் அஜீத், அடிதடி பார்ட்டி என்று தெரியவருகிறது. தமன்னாவுக்காக தன் அடிதடி வாழ்க்கையை விட்டு விட்டு அவர் வீட்டுக்குச் செல்கிறார் அஜீத். எந்த காதலிக்காக ஆயுதங்களை கைவிட்டாரோ, அதே காதலிக்காக மீண்டும் அதை எடுக்க வேண்டிய கட்டாயம். ஏன் என்பது மீதி கதை. வேட்டி கலையாமல் வெரைட்டி ஆக்ஷனில் வெளுத்து வாங்குகிறார் அஜீத். சால்ட் அண்ட் பெப்பர் லுக், சட்டை காலரை அடிக்கடி பின்னுக்கு இழுத்துவிட்டு, வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் இறங்குவதிலிருந்து, என்ன நான் சொல்றது? என்று  பஞ்ச் அடிப்பது வரை அழகாக அசத்துகிறார் தல. நீ யார்? என்று கேள்வி கேட்டவனுக்கு பதில் அளிக்கும்போது அல்லு சில்லாகிறது தியேட்டர். இப்படி கைதட்டல்களை அள்ளிக் கொட்டும் வசனங்களை படம் முழுக்கப் பேசுகிறார் அஜீத்.

முன்பகுதியில் வம்பு தும்புக்கு அலைந்து அடிப்பதற்கும், பிற்பகுதியின் தமன்னாவின் குடும்பத்தை காப்பாற்ற அந்த குடும்பத்துக்கு தெரியாமல் எதிரிகளை மடக்குவதிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அஜீத்தின் தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஷ், சொகைல் ஆகியோர் ஏதோ ஒரு வகையில் கவர்கிறார்கள். இந்த நால்வருடன் ஐவராக இணைந்து சந்தானம் அடிக்கும் லூட்டிகள் தடார் மடார் காமெடி. அஜீத், தமன்னா காதலுக்காக சந்தானம் போடும் பிளான்கள் கரெக்ட்டாக ஒர்க்காவதும், பிற்பகுதியில் தம்பி ராமையாவை இவர்கள் படுத்தும்பாடும் வயிற்றைப் புண்ணாக்குகிறது. இதில் தமன்னாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பு. எப்போதும் சோகம் சுமந்து நிற்கும் அவரது முகம் கோப்பெருந்தேவி கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. தமன்னாவின் அப்பா நாசர், வில்லன்கள் அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் ஆகியோர் வழக்கமான கேரக்டர்களை வழக்கமான பாணியில் செய்திருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் துள்ளாட்ட வகை.

பின்னணி இசையில் ஆக்ஷன் மிரட்டல், வெற்றியின் ஒளிப்பதிவு, ஆக்ஷன்களில் வேகமாகப் பணியாற்றி இருக்கிறது. அஜீத்தின் இளநரைக்கு காரணம் சொல்லிகூட லாஜிக்கை காப்பாற்றும் இயக்குனர் மற்ற இடங்களில் அதை வசதியாக மறந்திருக்கிறார். அடிதடியே வாழ்க்கையாகிப்போன ஒரு குடும்பம் ஒரு பெண்ணுக்காக அத்தனையையும் ஒரே நாளில் தூக்கிப்போடுவது, வன்முறையை விரும்பாத நாசர், தன் குடும்பத்தை காப்பாற்ற அஜீத் நடத்தும் வன்முறையை மட்டும் ஏற்றுக்கொள்வது, பக்கத்து வீட்டில் அடிதடி குடும்பம் இருப்பது கூட தெரியாமல் ஹீரோயின் ஏமாறுவது என ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள். இருந்தாலும் வசீகரிக்கிறது இந்த வீரம்.

தனுஷுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்தார் அக்ஷரா ஹாசன்

E-mail Print PDF

இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிப்பு கணக்கு தொடங்கினார் அக்ஷரா. கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையே இருந்தது. பாலிவுட்டில் ஒரு சில இயக்குனர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயன்றனர். வாய்ப்பை ஒதுக்கி தள்ளிவந்த அக்ஷரா இறுதியில் நடிக்க சம்மதித்தார். ராஞ்சனா படம் மூலம் ஏற்கனவே இந்தியில் அறிமுகமான தனுஷ் அடுத்து பால்கி டைரக்ஷன் செய்யும் படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக அக்ஷரா அறிமுகமாகிறார். இயக்குனர் ஆசையில் இருந்து வந்த அக்ஷரா தனது தோற்றத்தின் மீது அக்கறை காட்டாமல் இருந்தார். நடிக்க முடிவு செய்தபின் அதற்கேற்ப தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கவனம் செலுத்தி அவசர கதியாக கேமராவுக்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

கிளாப் பிடித்துக்கொண்டு ரெடி டேக் என்ற சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போது மேக்கப் பாக்ஸும் கையுமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

"பேராசை” பெரு நஷ்டம் என உணர்த்தும் குறும் படம்

E-mail Print PDF

எம்மூர் இளையோரின் தயாரிப்பில் உருவாகிய “பேராசை” என்னும் குறும் படத்தினை பார்வையிட

இங்கே அழுத்துக

 

Page 4 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்