Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை சினிமா

டிச. 2ஆம் திகதி விஸ்வரூபம் இசை வெளியீடு

E-mail Print PDF

உலக நாயகன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு டிச. 2ஆம் திகதி நேரு உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

நாளை, நாளை மறுதினம் என்று காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு படம் மற்றும் பாடல்கள் எப்போதுதான் வரும் என்று ஏக்கம் வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

சங்கர் எசன்லாய் இசையமைத்துள்ள இப்படத்திற்காக 5 பாடல்களில் 3 பாடல்களை உலக நாயகனே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் விமானம் மூலம் அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலையால் அது கைகூடவில்லை.

தற்போது சென்னையில் மட்டும் பாடல்களை வெளியிடுவதோடு படத்தினை டிசம்பர் மாத இறுதி வாரத்தில் திரையிடவும் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

படப்பிடிப்பில் விபத்துக்குள்ளானார் அஜித்

E-mail Print PDF


விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்காக மும்பையில் நடக்கும் படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சி ஒன்றில் அஜித் காரின் டயரில் மோதி காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

25 அடி தூரத்திலிருந்த காரிலிருந்து இன்னொரு காருக்கு தாவும் காட்சியொன்றில் டூப் இல்லாமல் பிடிவாதமாக அஜித்தே நடித்துள்ளார். இதன்போது நிலைதடுமாறி அவரது வலது கால் டயருடன் மோதுண்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில மணி நேரம் படப்பிடிப்புக்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. ஆனால் மீண்டும் குறித்த அச்சண்டைக்காட்சியினை வலியையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக முடித்துக்கொடுத்துள்ளார்.

இச்செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது ட்விட்டரில் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இதில் இயக்குனர் வெங்கட் பிரபு இவ்வாறு ட்வீட் பண்ணியுள்ளார், அந்த வலியுடன் அஜித் சேர் படப்பிடிப்பபை தொடர்ந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அஜித்துடன் பேசினேன் அவர் நலமாக உள்ளார். ஆனாலும் பின்னர் ஒரு அறுவை சிகிச்சை நடந்தாலும் நடக்கலாம்.

காதலியை மணமுடிக்கிறார் சிவா

E-mail Print PDF

நடிகர் மிர்ச்சி சிவா தனது காதலியான பேட்மிட்டன் வீராங்கனை பிரியாவை மணமுடிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மிர்ச்சி சிவாவும் பிரியாவும்  ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை-28 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. தொடர்ந்து சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பிரான்ஸில் செவாலியர் பரிசு வென்ற ஐஸ்வர்யா

E-mail Print PDF


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு பிரான்ஸின் கலைத்துறைக்கான செவாலியர் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செவாலியர் விருது, பிரான்ஸில் சிவிலியனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருது ஆகும்.

இதனை பிரான்ஸ் அரசு சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸுவாஸ் ரிசியெர் அறிவித்தார்.

உலக சினிமா மற்றும் இந்திய – பிரெஞ்சு சினிமா இடையில் நல்லுறவை வளர்த்தெடுக்கும் முகமாக சினிமா, கலை, கலாச்சாரம் போன்ற துறைகளில் ஐஸ்வர்யா ராயின் அர்ப்பணிப்பு பணிகளை நினைவுகூர்ந்து இவ்விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு, பாலிவுட் நடிகர் ஷாருகான், ரகு ராய், நந்திதா தாஸ், ஹாபிப் தன்வீர் மற்றும் உம்ப்மன்யு சட்டர்ஜீ போன்ற இந்திய கலைஞர்கள் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பத்மசிறீ விருதினை பெற்ற இளவயது நடிகை எனும் பெருமை பெற்றவர் ஐஸ்வர்யா ராய்.

கடந்த 2002ம் ஆண்டு அவர் நடித்த தேவதாஸ் திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்திய தெரிவாக அனுப்பிவைக்கப்பட்டது.

பிரான்ஸ் மக்களால் அதிக பாராட்டுக்களை இத்திரைப்படம் பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழா நடுவர் குழுவில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை எனும் பெருமையும் ஐஸ்வர்யா ராயை சாரும்.

நேற்று(நவம்பர் 1) ஐஸ்வர்யா ராயின் பிறந்த தினம் என்பதால், அன்றைய தினம் அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பீட்சா திரை விமர்சனம்

E-mail Print PDF

பிட்சா பெயருக்கு ஏற்றவாறு இளசுகளுக்கு ஏற்ற படம் தான்.  கல்யாணம் கட்டிகாமலே ஒரே வீட்டில் வசிக்கும் இருவரைச் சுற்றி நடப்பதை வைத்து முன் பாதியை நகர்த்திய இயக்குனர், பின் பாதிக்கு திகிலை துணைக்கு அழைத்திருக்கிறார்.  பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் நன்றாகவே கை கொடுத்துள்ளது கார்த்திக் சுப்புராஜுக்கு.

பிட்சா விநியோகிக்கும் இளைஞனாக வரும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்.  பல இயக்குனர்களின் கண் கண்டிப்பாக இந்தப் படத்தினால் அவர் மீது விழும்.  சரியாக தெரிவு செய்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று உண்டு.  அவரது பள்ளித் தோழியாகவும் ஒரே வீட்டில் கல்யாணம் கட்டிக்காமல் வாழ்ந்து கர்ப்பமாகும் பெண்ணாக வருகிறார் ரம்யா நம்பீசன்.  அவரும் நன்றாக நடித்துள்ளார்.

மிகவும் அழகாக திரைக்கதையை நெய்துள்ளர் இயக்குனர்.  திகில் நிறைந்த திரைக்கதைக்கு மிக்க உறுதுணையாக இருப்பது இசையும் ஒளிப்பதிவும்.  சந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார்.  அதே போல் கோபி அமர்நாத்தும் ஒளிப்பதிவை திறம்படக் கையாண்டிருக்கிறார்.  திகில் படங்களுக்கு இரவு காட்சிகள் அதிகம்.  எரிச்சல் ஊட்டாமல் படத்தோடு ஒன்றி ரசிக்குமாறு படமாக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துள்ளார் என நம்பலாம்.  எதற்கும் அடுத்த படத்தைப் பார்த்த பின் முடிவு எடுப்போம்.

பிட்சா சுவை நன்றாகத்தான் இருக்கிறது.

Page 8 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்