Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சைவமும் தமிழும் ஜோதிடம்

குரு பெயர்ச்சியும் அதனால் ஒவ்வொருவர் வாழ்கையில் ஏற்படக் கூடிய மாற்றங்களும்.

E-mail Print PDF

Image may contain: 1 person, smiling

யார் இந்த குரு பகவான்?

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைத்து தேவர்களுக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

திக்கு - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

ப்ரத்யதி தேவதை - இந்திரன்

தலம் - திருச்செந்தூர்

நிறம் - மஞ்சள்

வாகனம் - மீனம்

தானியம் - கடலை

வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

அன்னம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்

குரு பகவான்; வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 4, 2018 வியாழக்கிழமை 10:33 மணிக்கும், திரு கணித பஞ்சாங்கத்தின்படி வியாழக்கிழமை அக்டோபர் 11, 2018 வியாழக்கிழமை 4:49 மணிக்கும் இந்திய நேரப்படி குரு பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

இங்கே பதியப்பெற்றுள்ள பலன்கள் யாவும் கிரகங்களின் தற்போதைய கோசர நிலைக்கான பொதுப் பலன்களே். 12 இராசிகளிலும் ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் ஆட்சி புரிகின்றன.

அவற்றுள் சில கிரகங்கள் இரண்டு இராசிகளையும் பெற்றிருக்கின்றன. ராகு, கேது கிரகங்களுக்கு இராசிகள் இல்லை. அவை எந்த இராசியில் இருக்கின்றனவோ அவையே அவற்றின் இராசிகளாகின்றன.

குரு பகவான் நவம்பர் 4, 2019 2:39 PM IST வரை விருச்சிக (Vrischika Rasi) ராசியில் சஞ்சரிப்பார்.

ஒரு சிசு பிறக்கும் போது அப்போதைய கோசர நிலையே ஜனன ஜாதகத்தில் பதியப் பெறுகின்றன அத்துடன் எந்த இலக்கினம் உதயமாகின்றதோ அதுவே உதய லக்கினம் ஆகின்றது.

சரியான பலன்கள் அறிய ஜனன ஜாதக குறிப்புடன் ஜோதிடரின் ஆலோசனையை பெறுக.

குரு பகவான் அக்டோபர் 29, 2019 4:25 AM IST வரை விருச்சிக (Vrischika Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

சிறப்பு குறிப்பு: குரு பகவான் மார்ச் 27, 2019 11:44 AM முதல் 28 நாட்களுக்கு தனுசு (Dhanushu Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார்.

விசாகம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 11, 2018 7:39 AM முதல் அக்டோபர் 27, 2018 12:11 PM வரை [விருச்சிக ராசி]

அனுஷம் நட்சத்திரத்தில்: அக்டோபர் 27, 2018 12:11 PM முதல் டிசம்பர் 27, 2018 3:03 AM வரை [விருச்சிக ராசி]

கேட்டை நட்சத்திரத்தில்: டிசம்பர் 27, 2018 3:03 AM முதல் மார்ச் 27, 2019 11:44 AM வரை [விருச்சிக ராசி]

மூலம் நட்சத்திரத்தில்: மார்ச் 27, 2019 11:44 AM முதல் ஏப்ரல் 10, 2019 10:31 PM வரை [தனுசு ராசி]

மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 10, 2019 10:31 PM முதல் ஏப்ரல் 25 2019 9:53 AM வரை [தனுசு ராசி]

கேட்டை நட்சத்திரத்தில் வக்கிரமாக: ஏப்ரல் 25 2019 9:53 AM முதல் ஆகஸ்ட் 11 2019 7:08 PM வரை [விருச்சிக ராசி]

கேட்டை நட்சத்திரத்தில், ஆகஸ்ட் 11, 2019 7:08 PM முதல் நவம்பர் 4, 2019 5:29 PM [விருச்சிக ராசி]

மீனா ராசி, ரிஷப ராசி, கடக ராசி, துலா ராசி மற்றும் மகர ராசிக்காரர்கள் மிகவும் நல்ல பலன்களை அனுபவிப்பர்.

மேஷ ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மோசமான முடிவுகளை சந்திக்க நேரிடும்.

சிம்ம ராசி மற்றும் கும்ப ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளை அனுபவிப்பர்.

குறிப்பாக துலா ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியின் போது பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

ஒவ்வொரு இராசிக்குமான பலன்களை தெரிந்து கொள்ள

1.) https://youtu.be/QX83LEtoE34

2.) https://youtu.be/hAxm79cve4I

3.) https://youtu.be/lRn6F93e7E4

4.) https://youtu.be/_iYHyoJyP9g

5.) https://youtu.be/JZWnD_b0luY

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?- அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

Image may contain: 1 person, smiling

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம்

ரவி புத்ரம், யமா க்ரஜம்

ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸனைச்சரம்

 

சனி பகவான் காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|

தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

 

Read more...

சனி பெயற்ச்சி பலன்கள் - 12 இராசிகளுக்கும் - ஜோதிடர் செல்வி அவர்கள் கூறிய பலன்கள் வீடியோவாக இணைப்பு

E-mail Print PDF

Image may contain: 1 person, text

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலன் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடைகிறார்கள், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை ராசி வாரியாக விரிவாக பார்ப்போம்

Read more...

சனிப் பெயர்ச்சி 2017 - 2020 காலப் பகுதியில் கிரகங்களின் கோசார நிலைப்படி பொதுவான பலன்கள்.

E-mail Print PDF

நிகழும் துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கின்றார்.

Read more...

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை

E-mail Print PDF

 

மேஷம்: உரிய நட்சத்திரங்கள் - அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%

எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும். பிரபலங்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு விசா வந்து சேரும்.

குருபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் குரு ,6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

Read more...

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?- அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

Image may contain: 1 person, smiling

ஏழரைச் சனி என்றால் என்ன என்பதை பார்ப்போம்...

மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகமுமாகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.

Read more...
 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 5

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்