Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை சினிமா

”:இருமுகம்” திரைப் படம் - சுவிஸ் வாழ் எம்மூர் மக்களின் தயாரிப்பு - 23.062013 அன்று சுவிஸ் திரையில்

E-mail Print PDF

அனைவருக்கும்  வணக்கம்
சுவிஸ் வாழ் ஊரவர்கள் ஆகிய நாம் கடந்த சில ஆண்டுகளாக பாடல்கள் மற்றும் குறும்படத்  தொடர்கள் தயாரித்து வந்தமை நீங்கள் யாபெரும் அறிந்தமையே. கடந்த ஒன்றரை வருடங்களாக ஓர் முழுநீளத்  திரைப்படம் (இருமுகம்) தயாரிக்கும் நோக்குடன் களமிறங்கி எதிர் வரும் 23.June 2013 அன்று அதனை சுவிஸ் நாட்டில் வெளியிட உள்ளோம்.

சுவிஸ் வாழ் ஊர் உறவுகளே, நண்பர்களே எதிர்வரும் 23.June ஞாயிற்றுக்கொழமை பிற்பகல் 15:00 மணியளவில் Basel kult.kino atelier இல் இடம்பெறவுள்ள முதல் காட்சிக்கு வருகை தந்து உங்கள் ஆதரவினை நல்கி எமக்கு ஊக்கமும். உற்சாகமும் தந்துதவுமாறு அனைத்து அன்பு உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

டTicket  தொடர்புகள்: 0041 78 695 86 22 (விசாகன்)

திரைப் படத்தின் முன்னோடி வீடியோ பார்வையிட இங்கே அழுத்துங்கள்

நன்றி

“இருமுகம்” திரைப்பட குழுவினர்

முயற்சியால் உயற்சி அடைய துடிக்கும் எம்மூர் மக்களின் கடின உழைப்பின் படைப்பு; பல தடைக் கற்களை படிக்கற்களாக்கி கடந்து, உயர்ந்து சினிமாப் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்து திறமை பெற்றமை போற்றுதற்குரியது.

ஊருக்கு பெருமை சேர்க்கும் நல் முயற்சியில் தம்மை ஏடுபடுத்தியுள்ள எம் உறவுகளை நாம் ஏணிபோல் அமைந்து அவர்களை மேலும் உயர்ந்து செல்ல ஆதரவு வழங்கி உயர்த்தி விடுதல் எமது ஊர் மக்களின் கடமையும் உரிமையுமாகும்

”இருமுகம்” திரைப் படம் எல்லோரினதும் நல்ஆதரவைப் பெற்று எமது ஊரின் ஒளிவிளக்காக மிளிர எமது வாழ்த்துக்கள்

”விடாமுயற்சி உயற்சிதரும்”

பணிப்புலம்.கொம்

 

121/12/06

”இருமுகம்” திரைப் படம் - சுவிஸ் வாழ் எம்மூர் மக்களின் தயாரிப்பு - வெகு விரைவில்

E-mail Print PDF

கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ”வயசு 18” எனும் குறும்படங்களும், பாடல்களும் ”Rapstars Entertainment” எனும் பெயரில் தயாரிந்து வெளியிட்டு வந்த நாம்; தற்பொழுது ”DIASPORA REPUBLIC” என பெயரை மாற்றி  கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக “இருமுகம்” என்னும் ஓர் திரைப்படத்தினை தயாரித்து வருகின்றோம்.

எமது படைப்பான இத் திரைப் படத்தின் வேலைகள் 99% பூர்த்தியடைந்து விட்டநிலையில் எதிர் வரும் ஜூன் மாதம் வெளியிடுவதற்கான முயற்சியில் ஏடுபட்டுள்ளோம். ஜூன் மாதம் வெளி வர இருக்கும் இத் திரைபடத்தின் அறிமுகமே இப் போஸ்டர்..

இதுவரை காலமும் எம்மை ஆதரித்து, உச்சாகப் படுத்தியது போல்; வெளிவர இருக்கும் இத் திரைப்படத்திற்கும் உங்கள் ஆதரவும், ஆசிகளும் இருக்கும் என நம்புகின்றோம்.

குழு சார்பாக அகிலன்

எம் ஊரவர்கள்:
Anojan Nakuneswaran - germany - Actor

Prathees Kuna - swiss - Actor

Visakan Kuna - swiss - Actor,Sound Expert, Music director

Akilan Arunakirinathan - swiss - Direction, Dialogue, Screenplay, Camera, Editing, Lyrics and Singer

Kisanthan Natkuneswaran - Technical Support

நன்றி

அகிலன் - சுவிஸ்

 

135/07/05

துள்ளி விளையாடுவதைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள்..! சிரிப்போ சிரிப்பு..!

E-mail Print PDF

விரைவில் திரைக்கு வரவிருக்கும் துள்ளி விளையாடு படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். அப்படியொரு கொமெடியாக வந்துள்ளதாம் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம். ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர்.

தற்போது படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம். இது குறித்து இயக்குனர் செல்வா கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

நம்ம பிரகாஷ் ராஜ் சார்தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோரும்தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர கொமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது என்றும் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

அஜித்தின் அதிரடி முடிவு !

E-mail Print PDF

அதிரடி பன்ச் வசனங்களும், கதாநாயகன் அறிமுகமாகும் போது வரும் கதாநாயகனை புகழ்ந்துபாடும் பன்ச் பாடல்களும் இனி தனது படங்களில் இருக்கக் கூடாது என, நடிகர் அஜித் தனது அடுத்த படங்களை இயக்குவுள்ள இயக்குனர்களிடம்  தெரிவித்துள்ளாராம்.

இது என்ன முடிவு என்று பலரும் வியப்பாக பேசி வருகிறார்களாம்.

கதாநாயகர்கள் அனைவரும் கட்டாயமாக வேண்டும் என்று சொல்லும் மிக முக்கிய அம்சம் இனி தனது படத்தில் இருக்கக் கூடாது என ஏன் அஜித் நினைக்கிறார் என, முடிவின் ஆழம் தெரியாமல் பலர் சிந்தித்து வருகிறார்களாம்.

இன்று நேற்று வந்த சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் பன்ச் வசனங்களை பேசி நடிப்பதால், திரையுலகின் மூத்த நடிகரான அஜித் அவற்றை தவிர்க்க நினைத்திருக்கக் கூடும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ,,, அஜித் எடுக்கும் அதிரடி முடிவுகளால் திரையுலகம் அதிருவது உண்மையே…

பாகன் – திரை விமர்சனம்

E-mail Print PDF

குறுக்கு வழியில், சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது நண்பர்கள் சூரி, பிளாக் பாண்டி ஆகியோருடன் இணைந்து பலபேருடைய பணத்தை அபேஷ் செய்து, பல தொழில்களை தொடங்கி நட்டம் அடைகிறார்.

இந்த நிலையில் பெரிய பணக்காரருடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் சீக்கிரமாக பணக்காரனாகிவிடலாம் என்று யோசித்து, அதற்காக பணக்கார பெண்னான ஜனனி ஐயரை காதலிக்கும், ஸ்ரீகாந்த், காதலையே ஒரு தொழிலாக செய்ய தொடங்குகிறார். சில காட்சிகளுக்குப் பிறகு ஜனனி ஐயரும் ஸ்ரீகாந்தின் காதலை ஏற்கிறார்.

ஜனனி ஐயரின் ரூபத்தில் நமக்கு கோடிகள் பல கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், தனது சொத்துக்களை உதரிவிட்டு வருகிறார் ஜனனி. கோடிகளை அள்ளிட்டு வரவேண்டிய தனது காதலி, வெறும் கையோடு வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோகும் ஸ்ரீகாந்த், தனக்கு காதலை விட பணம் தான் முக்கியம் என்பதை சொல்லி ஜனனியை நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்.

தனது காதலை இப்படி கசக்கிப்போட்ட ஸ்ரீகாந்தை இனி வாழ்க்கையில் எப்பவுமே சந்திக்க கூடாது என்று எண்ணி வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார் ஜனனி.
இந்த நிலையில்தான் ஒரு திருப்பமாக ஜனனியின் டைரியை படிக்கும் ஸ்ரீகாந்த், ஜனனி தன்னை சிறுவயதில் இருந்தே காதலித்ததை தெரிந்துகொள்கிறார்.

பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று எண்ணிய ஸ்ரீகாந்த் தனது தவறுகளை உணர்ந்து மனம் வருந்துகிறார். எப்படியாவது ஜனனியை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு, தனது காதலை சொல்ல நினைத்து வெளிநாட்டுக்கு போக தயாராகும் நிலையில், ஸ்ரீகாந்த் இருக்கும் திருப்பூருக்கே படிப்பு சம்மந்தாமக ஜனனி வருகிறார்.

திருப்பூரில் ஜனனியை சந்திக்கும் ஸ்ரீகாந்த், தனது காதலை புதுப்பித்தாரா? அவரை ஜனனி ஏற்றுகொண்டாரா? என்பதை, முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்லம்.

இப்படத்தின் கதையையே ஒரு சைக்கிள் தான் சொல்கிறது. அந்த சைக்கிளுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே இருக்கும் பந்தத்தை ஒரு சிறுகதையைப் போல ரொம்ப அழகாக இயக்குநர் அஸ்லம் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் அந்த சைக்கிள் பயணிக்கும் விதத்தை சாமர்த்தியமாக கையாண்ட இயக்குநர் முதலில் எப்படியாவது பணக்காரனாக ஆகவேண்டும் என்று ஏங்கும் ஸ்ரீகாந்தை, இரண்டாம் பாதியில் காதலுக்காக ஏங்க வைத்து திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.

கிராமத்து இளைஞனாக வெகுளித்தனமான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். சூரி, பாண்டி என்ற ஜூனியர் காமெடி நடிகர்களை சப்போட்டாக வைத்துகொண்டு ஒட்டு மொத்த தியேட்டரையும் குலுங்க வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், காமெடி சுமையையும் தன் தலைமீது வைத்துகொண்டு சுமந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்திற்கும் தான் தயார் என்பதை காட்சிக்கு காட்சி இமேஜ் பார்க்காமல் நிரூபிக்கும் ஸ்ரீகாந்த், தனது உடம்பை ‘நண்பன்’ படத்தில் இருந்ததை விட இன்னும் மெலிதாக்கியிருக்கிறார்.

முட்ட கண்ணும், ஆளை விழுங்கும் சிரிப்புமாக நம்மை ரசிக்க வைக்கிறது ஜனனி ஐயரின் அழகு. பாலா படத்தில் கிடைக்காத சில வாய்ப்புகள் ஜனனிக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது.

சூரி, பிளாக் பாண்டி ஆகியோரது காமெடி தியேட்டரையே அதிர வைக்கும் சிரிப்பு சத்தத்தை ஏற்படுத்துகிறது. “உலகத்திற்கே ஜட்டி தச்சி கொடுக்கும் திருப்பூர்ல இருந்துகிட்டு இப்படி ஓட்ட ஜட்டி போட்டு ஏன்டா திருப்பூருக்கு அவமானத்தை ஏற்படுத்துற…” என்று சூரி, பாண்டியைப் பார்த்து கேட்கும் இடத்தில் திரையரங்கமே சிரிப்பால் அதிர்ந்துப் போகிறது. இதுபோல பல காட்சிகளில் இவர்களது காமெடி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.

‘காஞ்சனா’ படத்திற்குப் பிறகு கோவை சரளா, தமிழக மக்களை இப்படத்தின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் இணைந்து ஸ்ரீகாந்துக்கு அப்பாவாக நடித்த நடிகர், அனுமோகன் ஆகியோரும் அவ்வப்போது நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வில்லனாக சில காட்சிகளில் வந்தாலும் தனது வேலை சரியாக செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் புரியவில்லை என்றாலும் “சம்பா சம்பா…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றப் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

லக்ஷ்மணின் ஒளிப்பதிவில் சாதரண லொக்கேஷன்கள் கூட பிரமாண்டாக தெரிகிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும், தேர்வு செய்த லொக்கேஷன்களும் பிரமாதம்.

காட்சிக்கு காட்சி ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இயக்குநர் அஸ்லம் திரைக்கதை அமைத்திருந்தாலும், குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களுக்கு ஒரு நேர்மையான வழியை காண்பித்து மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

பரதேசி - திரை விமர்சனம்

E-mail Print PDF

ரிலீசாவதற்கு முன்பே பாலாவின் படங்களில் மிகச்சிறந்த படம் என்ற பெருமையை தட்டி சென்று விட்ட பரதேசி, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று என்பதை படம் பார்த்த யாராலும் மறுக்க முடியாது.

இந்தியர்களை எப்படி டீ குடிக்கும் பழக்கத்திற்கு ஆங்கிலேயர்கள் அடிமை ஆக்கினார்கள் என்பதையும், அதற்காக அப்பாவி மக்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டார்கள் என்பதையும் மனதில் பதியும் படி சொல்லி இருக்கிறார் பாலா.

1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கிறது கதை. கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், திருமணமுறை என எந்த சலனமும் இல்லாமல் பயணிக்கிறது.

தண்டோரா போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி (எ) ராசா) . வெகுளியான அதர்வாவை காதலிக்கிறார் வேதிகா(அங்கம்மா). வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும் அதர்வாவை கங்காணி சந்திக்கிறான். தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், அங்கெ வேலை செய்தால் கூலி நிறைய கிடைக்கும் என்றும், மனைவி மக்களை உடன் அழைத்து வரலாம் என்றும், வருடம் ஒருமுறை சொந்த மண்ணுக்கு வரலாம் என்றும் ஆசை காட்டுகிறான். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்கும் அப்பாவி மக்கள், 48 நாட்கள் கஷ்டப்பட்டு நடந்து தேயிலை தோட்டத்தை அடைகிறார்கள்.

இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம் அடைகிறாள். வீட்டில் இருந்து துரத்தப்படும் அங்கம்மா அதர்வாவின் பாட்டி வீட்டுக்கு வந்து விடுகிறாள். தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா. தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் வெள்ளைக்காரன் பெண்களை தவறாக நடத்துகிறான். இந்த நிலையில் அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி பாட்டியுடன் இருந்து வந்த கடிதம் மூலம் அதர்வாவுக்கு தெரிகிறது.

விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைக்கும் கங்காணி, சம்பளத்தை பிடித்து விட்டு இன்னும் சில வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான். அங்கம்மாவை பார்க்க துடிக்கும் அதர்வா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது மாட்டிக் கொள்கிறான். மீண்டும் தப்பி ஓடாமல் இருக்க கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பரவி வரும் விஷ காய்ச்சலுக்கு மரகதம் பலியாகி விடுகிறாள். ராசா தப்பித்தானா?

கொத்தடிமைகளின் நிலை என்ன ஆனது என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் பாலா.

கதாநாயகன் அதர்வா முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா, இந்தப் படத்தில் நடிப்பு சாம்ராஜ்யமே நடத்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் தன்சிகாவின் நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. படத்தின் தரத்தையறிந்து அதற்கேற்ப இசையில் விளையாடி இருக்கிறார் ஜி வி பிரகாஷ். உலகத் தரமான படம் என்று கூறுவார்களே அது இது தானோ என்ற எண்ணம் வருகிறது.

சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் என படம் முழுக்க பட்டையைக் கிளப்பி இருக்கிறார் பாலா. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் தான் நினைவுக்கு வரும்.

டீயைப் பார்த்தால் இரத்தம் என்று கூட தோன்றலாம். அந்த அளவுக்கு நெஞ்சைப் பிழியும் வலியை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த வருடத்திற்கான அனைத்து விருதகளையும் பரதேசி படத்துக்கே கொடுத்து விடலாம். நான் பாலாவின் ரசிகன் என இனி காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லலாம்.

Page 5 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்