Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை சினிமா

தீபாவளி ரேஸில் விஜய், சிம்பு மோதல்

E-mail Print PDF

இம்முறை தீபாவளி ரேஸில் விஜயின் துப்பாக்கியும் சிம்புவின் போடா போடி திரைப்படமும் மோதிக்கொள்ளப்போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதற்கேற்றவாறு நேற்று இந்த 2 படங்களினது ட்ரெய்லரும் வெளியிடப்பட்டு எதிர்பார்ப்பினையும் தூண்டியுள்ளது.

வழக்கமாக தீபாவளி என்றால் சின்ன பட்ஜெட் படங்களுடன் சேர்த்து 5 தொடக்கம் 10 வரையில் வெளியாகும் ஆனால் கடந்த 2 தீபாவளிக்கும் அவ்வாறில்லாமல் சினிமா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது தமிழ் சினிமா.

இருப்பினும் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து 5 படங்கள் வரை வெளியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக விஜயின் துப்பாக்கி மற்றும் சிம்புவின் போடா போடி மற்றும் வாலு, கும்கி என ரேஸில் பல படங்கள் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசேடமான நாட்களில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றிக்கொள்வதனால் ஏனைய படங்கள், திரையரங்குகள் கிடைக்காமல் திணறும் போக்கு அண்மைக்காலங்களில் தமிழ்சினிமாவில் அதிகரித்துள்ளது.

இம்முறை விஜய்யின் துப்பாக்கி படத்திற்கான எதிர்பார்ப்பு காரணமாக பெரும்பாலான திரையரங்குகளை அது கைப்பற்றிக்கொள்ளுமாயின் இறுதி நேரத்தில் தீபாவளி ரேஸிலிருந்து சில படங்கள் விலகிக்கொள்ளவும் செய்யும் என திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் துப்பாக்கி மட்டுமே நவம்பர் 9ஆம் திகதி தீபாவளி வெளியீடாக திரைக்குவரவுள்ளமையை உறுதிசெய்துள்ளது. ஏனைய படங்கள் பின்வாங்குமா அல்;லது மல்லுக்கு வருமா என விரைவில் உறுதிசெய்யப்படும்.

நாளை 3 படங்களின் இசை வெளியீடு

E-mail Print PDF

நாளை அக்டோபர் 10ம் தேதியன்று மூன்று படங்களின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ‘துப்பாக்கி’,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தரண் குமார் இசையமைப்பில், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’,

சீனு ராமசாமி இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில், விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ் நடிக்கும் ‘நீர்ப்பறவை’,

ஆகிய படங்களின் இசை வெளியீடு நாளை நடக்க இருக்கிறது. மூன்று படங்களுமே ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
இசை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கலாம்.

ஒட்டிப்பிறந்த இரட்டையராக சூர்யா

E-mail Print PDF

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்'

ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.

மாற்றான் படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்ரோபர் 12ம் திகதி 'மாற்றான்' திரைக்கு வருகின்றது. 'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சு+ர்யா முடித்துக் கொடுத்து விட்டார்.

கமலின் விஸ்வரூபம் திரைப்படம் ஒக்டோபரில் திரைக்கு வருகிறது

E-mail Print PDF

கமலின் விஸ்வரூபம் திரைப்படம் புதிய தொழில்நுட்பமான  3டிக்கு மாற்றப்படுவதனால் அடுத்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய தகவலின்படி 2013 ஆம் ஆண்டில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வெளியான வதந்தியாம். உண்மையில் கமல், விஸ்வரூபம் படத்தினை வரும் ஒக்டோபர் மாதமே திரையிட தீர்மானித்துள்ளாராம்.

மேலும் படம் வெளியிடப்படவுள்ள திகதியை விரையில் உத்தியோகபூர்வமாக அறிவுக்கவுள்ளதாம் விஸ்வரூபம் படக்குழுவினர்.

முகமூடி - திரை விமர்சனம் (வீடியோ இணைப்பு)

E-mail Print PDF

இதுவரை ஹாலிவுட் சூப்பர் கதாநாயகர்களை பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, தமிழக சூப்பர் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விதத்தில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம் முகமூடி.

இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான்.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து அவனை பொலிசில் பிடித்துக் கொடுக்கிறாள்.

பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.

திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.

மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.
அவர் மீது குண்டு பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான்.

சத்தம் கேட்டு அங்கு வரும் பொலிசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க பொலிசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.

பின்னர் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலே நம்மை சீட் நுணியில் அமரவைக்கும் மிஷ்கின், ஒவ்வொரு காட்சியையும் உற்றுநொக்க வைத்திருக்கிறார்.

முதலில் கொள்ளை கும்பலை அறிமுகப்படுத்தி விட்டு அவர்கள் யார், எப்படிபட்டவர்கள் என்பதை பொலிஸின் மூலம் தெரியப்படுத்தி விட்டு அடுத்ததாக கதாநாயகன் யார் அவர் எப்படி பட்டவர் என்பதை காட்டும் திரைக்கதை, ஜீவா சூப்பர் கதாநாயகன் ஆவது என பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் முதல் பாதியை பயணிக்க வைக்கிறது.

பெரும் ஆவலோடு இடைவேளை முடிந்து அதே சுவாரஸ்யத்தோடு சீட் நுனியில் அமந்த ரசிகர்களை படத்தின் இரண்டாம் பாதி சற்று சலிப்படைய செய்கிறது.

கொள்ளையர்கள் யார் என்பதை ஜீவாவும், ஜீவா யார் என்பதை வில்லனும் சுலபமாக தெரிந்து கொள்வதால் முதல் பாதியில் பரபரப்பாக நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜீவா இந்த படத்திற்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். குங்பூ மாணவன் என்பதை ஜீவா தனது அறிமுக காட்சியிலேயே நிரூபித்து விடுகிறார்.

வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாக இருந்து சூப்பர் கதாநாயகனாக மாறும் ஜீவா இரண்டு கதாபாத்திரத்திற்கும் கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

புதுமுகம் பூஜா ஹெக்டேவுக்கு அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நரேனின் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறது. முதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.

கே இசையில் "வாயை மூடி சும்மா இருடா..." பாடல் இந்த ஆண்டு அதிகப் பேர் முனுமுனுத்த பாடலாக இருக்கும். பார் ஆன்தமும் பட்டையை கிளப்ப போகும் பாடலாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யாவின் உழைப்பு அறுமை. ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

பட்ஜெட் ரீதியாக படத்தில் பிரமாண்டம் இல்லை என்றாலும், காட்சி ரீதியாக படத்தை பிரமாண்டமாக மிஷ்கின் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமையும் மிஸ் பண்ணாம பார்க்கனும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்கு காட்சிகளை நகர்த்தியிருக்கும் மிஷ்கின், தனது முந்தையப் படங்களைப் போலவே இதிலும் கால்களை காட்டி சில ஷாட்களை வைத்திருந்தாலும், காட்சிகளுக்கு சற்று வேகத்தை கொடுத்திருக்கிறார்.

வில்லன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதற்கு முன்பே பொலிஸ் ரொம்ப சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது.
அதற்குப் பிறகு வில்லனின் செயல்பாடுகள் பயங்கராமாக இருக்கும் என்றால், அங்கேயும் இயக்குநர் சற்று தடுமாறியிருப்பதால் படமும் சற்று தடுமாறியிருக்கிறது.

என்னதான் சூப்பர் கதாநாயகன் படமாக இருந்தாலும், இதிலும் தனது எதார்த்த பாணியை பின்பற்றியிருக்கும் மிஷ்கின், இதன் மூலம் சில இடங்களில் ஜீவா போட்டுகொண்டிருந்த முகமூடியை அவர் போட்டுகொண்டது போல இருக்கிறது.
"அதிகமான எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தைப் பார்த்தால் முகமூடி உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்." என்று நிகழ்ச்சி ஒன்றி முகமூடி படத்தைப் பற்றி மிஷ்கின் சொன்னார். அவர் கூறியதை ரசிகர்கள் மனதில் வைத்துகொண்டு படத்தைப் பார்த்தால் இந்த முகமூடி உண்மையிலே தமிழக சூப்பர் கதாநாயகன் தான்.

வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

ராணா - த்ரிஷா காதல் 'கன்ஃபர்ம்': அடுத்த ஆண்டு திருமணம்.

E-mail Print PDF

சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும், ராணாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். ராணாவுக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவும் கலந்து கொண்டார்.

ராணா தங்கையின் திருமணம், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. தங்கை திருமணம் முடிந்ததும், த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள ராணா திட்டமிட்டு இருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேர்களின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அடுத்த வருடம் ஆரம்பத்தில், ஜனவரி அல்லது பிப்ரவரியில் த்ரிஷா-ராணா திருமணம் நடைபெறும் என்று த்ரிஷா தரப்பில் தெரிவித்தனர்.

Page 9 of 75

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்