Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: சிறுவர் பூங்கா

மனித உடல் - நாம் அறிந்ததும் அறியாததும்

E-mail Print PDF

நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும். அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...

மனித மூளையின் எடை 1.36 கிலோ

மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.

மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.

மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

“புல்லட் ரெயில்கள்” இயங்குவது எப்படி எப்படி?

E-mail Print PDF

அதிவேக ரெயில்கள் (புல்லட் ரெயில்கள்) `கோட் சிஸ்டம்’ எனப்படும் கணினியில் பதியப்பெற்ற சங்கேதக் குறிப்பு முறையில் இயக்கப்படுகின்றன. ரெயில் எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கணினியில் தகவல்களை கட்டளைகளாகப் பதிவு செய்து விட்டால்,  அது ரெயிலின் இயக்கத்தை மிகச் சரியாகக் கட்டுப்படுத்துகிறது.

எங்கு மெதுவாகச் செல்ல வேண்டும், எங்கு வேகம் எடுக்க வேண்டும், எங்கு நிற்க வேண்டும் என்பதோடு, வேறு பல பிரச்சினைகளையும் கணினி கவனித்துக்கொள்கிறது.

இந்தக் கணினி தரும் சங்கேதக் குறிப்புகள் ரெயிலின் டிரைவிங் பகுதி, அதை இயக்கும் பகுதி போன்றவற்றுக்கும் தகவல்களாகச் செலுத்தப்படுகின்றன. இதுவே வெளிநாடுகளில் நவீன ரெயில்கள் இயக்கப்படும் விதமாகும்

தானாகவே இயங்கும் ரெயில்கள், ரெயில் பாதையில் ஏற்படும் மின்காந்த அதிர்வலைகளை வைத்து இயக்கப்படுகின்றன. வேகம் எடுப்பதற்கு அதிக அதிர்வலைகளும், `பிரேக்’ போடுவதற்கும், மெதுவாகச் செல்வதற்குக் குறைந்த அதிர்வலைகளும் தேவை.

இந்த சங்கேதக் குறிப்புகள் இயங்கத் தவறினால் ரெயில் தானாகவே நின்றுவிடும். `ஆட்டோமேட்டிக் சிக்னல்’களைக் கவனிக்க இந்த ரெயிலில் ஓர் இயக்குநர் மட்டும் இருப்பார். அவர் இரண்டு பட்டன்களை அழுத்தி ரெயிலை `ஸ்டார்ட்’ செய்வார். மற்றபடி சிக்னல்களின் குறிப்புப்படி ரெயில் ஓடும். அபாய வேளைகளில் அதற்கான உத்தரவு செலுத்தப்பட்டு ரெயில் நிறுத்தப்படும்.

பாம்பைக் கொன்ற கீரியின் கதை

E-mail Print PDF

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

Read more...

ஆசியாக் கண்ட நாடுகள்

E-mail Print PDF

ஆசிய நாடுகளின் பட்டியல்

நாடுகள்

தலைநகரம்

மக்கள் தொகை
(மில்லியனில்)

1. ஆப்கானிஸ்தான்

காபூல்

16.56

2. பாகாரேயின்

மனாமா

0.43

3. பங்களாதேஷ்

தாக்கா

122.0

4. பூடான்

திம்பு

1.40

5. புரூணை

பந்தர் சேரி பெகவான்

0.27

6. கம்போடியா

நாம்பென்

12

7. சீனா

பெய்ஜிங்

1,143

8. சைப்ரஸ்

நிகோசியா

0.7

9. இந்தியா

புதுடில்லி

1,014

10. இந்தோனேசியா

ஜகார்த்தா

183

11. ஈரான்

தெஹரான்

58.10

12. ஈராக்

பாக்தாத்

17.90

13. இஸ்ரேல்

டெல் அவிவ்

5.20

14. ஜப்பான்

டோக்கியோ

124

15. யோர்தான்

அம்மான்

3.2

16. கசகஸ்தான்

அல்மா-ஆடா

16.70

17. குவைத்

குவைத்

2.10

18. கிர்கிஸ்தான்

பிஷ்கெக்

4.40

19. லாவோஸ்

வியன்டியன்

4.10

20. லெபனான்

பெய்ரூட்

2.76

21. மலேசியா

கோலாலம்பூர்

18.60

22. மாலைதீவுகள்

மாலே

0.214

23. மங்கோலியா

உலன் படோர்

2.30

24. மியான்மார்

யாங்கூன்

41.6

25. நேபாளம்

கத்மந்து

19.4

26. வடகொரியா

ப்யாங்யோங்

22.4

27. ஓமன்

மஸ்கட்

2.2

28. பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்

114

29. பிலிப்பைன்ஸ்

மணிலா

60.9

30. கட்டார்

தோஹா

0.4

31. ரஷ்யா

மாஸ்கோ

148.0

32. சவூதி அரேபியா

ரியாத்

15.4

33. இலங்கை

கொழும்பு

17.3

34. சிங்கப்பூர்

சிங்கப்பூர்

2.7

35. தென்கொரியா

சியோல்

43.3

36. சிரியா

தமஸ்கஸ்

12.6

37. தாய்வான்

தாய்பெய்

20.6

38. தாஜிகிஸ்தான்

துஷான்பே

5.4

39. தாய்லாந்து

பேங்காக்

57.6

40. துருக்கி

அங்காரா

59.8

41. துர்க்மெனிஸ்தான்

ஆஷ்காபாத்

3.7

42. ஐ.அ.அ.

அபுதாபி

1.9

43. உஸ்பெகிஸ்தான்

தாஷ்கன்ட்

20.7

44. வியட்நாம்

ஹோ சி மின் நகரம்

69.3

45. யெமன்

சனா

13.3

Page 9 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்