Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: வாழ்த்துக்கள்

”கேது” அவர்களின் சேவையும் அதன் முக்கியத்துவமும் - ஊரின் வளர்ச்சிக்கு பொருத்தமானவர் முன்வந்துவிட்டால் உயற்சி நிச்சயம்

E-mail Print PDF

Image may contain: 6 people, people smiling, people standing

தேவைக்கும் சேவைக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. தேவை இருக்கும் இடத்தில்தான் சேவை தேவைப்படுகின்றது. சேவையால் பல உயிர்கள் காப்பாற்றப் பெறுகின்றன. பல துன்பங்கள் தீர்க்கப் பெறுகின்றன.

கடந்த கால போர்ச் சூழலில் பல துன்பங்களை அனுபவித்து, உறவுகள், உடமைகளை இழந்து வாழும் தமிழ் மக்களுக்கு பலவகைத் தேவைகள் இருந்தபோது;  அவற்றை பூர்த்தி  செய்வதற்கு பல வழிகள் இருந்தும் கிடைக்கச் செய்வதில் பல பாகுபாடுகள் சுயநலம் கொண்டவர்களால் ஏற்படுகின்றன. பொது நலம் கொண்ட சிலரால் மட்டுமே அதனை சரியாக செயல்படுத்த முடியும்.

சமூக சேவை செய்ய வந்தோர் எல்லோரும் தொண்டர்களும் அல்ல உத்தமர்களுமல்ல. எமது கிராமத்திற்காக ஒதுக்கப் பெற்றனவற்றை அயல் கிராமத்திற்கு கொடுத்து நல்ல பெயர் கேட்டவர்கள். விலை போகக் கூடியவர்கள். ஆனால் என்ன விலை கொடுத்தாலும் விலை போகாதவரே திரு. கேது அவர்கள். அதனை அவரின் வயதும், பொதுச் செயல்களும் நினைவு படுத்துகின்றன. இதனை எம்மூர் மக்கள் நன்கு அறிந்து வாக்களித்துள்ளனர்.

பல்முக போட்டிகளையும் தாண்டி ”மக்களின் சேவையே மகேசன் சேவை” என முன்வந்த “கேது” அவர்களுக்கு எமது வாழ்த்துகள். பல தடைகளையும் தாண்டி அவருக்காக வாக்களித்து அவரை தெரிவு செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

சூட்சியும், கபடமும், சுயநலமும்  கொண்டவர்கள் பதவிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைதான் உருவாகும். கடந்த காலங்களில்  ஏற்பட்ட  அநீதியான செயல்களால் அமைதியாக இருக்கும் ஒரு பகுதியினர் பாதிக்கப் பெறுகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் பொதுநலம் கொண்ட ஒரு பெருமகன் தேவைப்படுகின்றான். எதுவித பலனையும் எதிபாராது தமக்கு சொந்தமான பணத்தை அல்லது கிடைக்கும் பணத்தை சுயநலம் கருதாது எமது ஊரின் வளர்ச்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் கண்ணாயிருந்து சேவை செய்யக் கூடிய ஒருவர் அவசியமாகியது.

அதற்கு எம்மூர் இளையோர் மத்தியில் ஊக்க சக்தியாக விளங்கும்  எல்லோருக்கும் “நண்பனான -  ”கேது” அவர்கள் தமிழ் மக்களுக்காக மாற்றம் தேடும் ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில்” இணைந்து அகில இலங்க தமிழ் காங்கிரஸ் சின்னமான சயிக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

எமது கிராமத்தை பொறுத்தளவில் பல வருடங்களாக கிராம அபிவிருத்தியில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. உதாரணமாக நான் சிறுவனாக இருந்த காலத்தில் செட்டி குறிச்சியில் இருக்கும் இரண்டு பிரதான பாதைகள் இப்பவும் கவனிப்பாரற்று கவலைக்கிடமாக இருக்கின்றன. அதே நேரம் அயல் கிராமங்களுக்கு சென்று பார்த்தால் குச்சொழுங்கைகள் எல்லாம் தார் போட்டு விசாலமாக்கப் பெற்று திருத்தப் பெற்றுள்ளன. காரணம் பொதுமக்களின் அக்கறையிமைதான். இவை வீதி புனரமைப்புக்கான சேவைகளில் ஒன்று.

ஆனால் இப்போது எம் ஊர்மக்கள் தம் தவறை உணரத் தொடங்கி விட்டார்கள். அதிலும் ஒதுங்கி இருந்த நம் இளையோர் அனியாயத்தைக் கண்டு கொதித்தெழுந்து எமது ஊரின் ஏன் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மாற்றம் ஒன்று கட்டாயம் அவசியம் என்பதனை உணர்து மாற்றத்திற்கான ஒரு நல்ல முடிவாக கேது அவர்களும் சேவை செய்வதற்கு முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

எமது ஊரில் பல இளைஞர்களை தம்மாலான தொழில் பயிற்சி வழங்கி (தமக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஏற்று) பலனை எதிபாராது பொதுநல சேவை செய்துவரும் திரு. ஜெகதீஸ்வரன் (கேது) கேதீஸ்வரன் அவர்களின் வருகை எமது கிராமத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

கடந்த 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 3ம் வட்டாரத்தில் போட்டியிட்டவர்கள் பெரும்பாலானோர் பெரும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து (தாம் தோற்றுப் போவோம் என தெரிந்தும்) போட்டியிட்டுள்ளனர். அதற்கான காரணம் அக் கட்சி மூலம் கிடைக்கும் தேர்தல் செலவுக்கான உதவிப் பணமும், அக் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல உதவிகளை பெறமுடியும் என்ற உள் நோக்கமும், பேர் எடுத்துக் கொள்வதற்கும் மட்டுமே. அவர்கள் உண்மையிலே பொது நலவாதிகளாக இருந்திருந்தால் அப் பொறுப்பை இளையோர் கையில் ஒப்படைத்து அவர்களுக்கு தூண்டு துணையாக இருந்திருப்பார்கள்.

கேது அவர்களோ இளைய தலைமுறையினரின் தலைமையில் எம் இனத்தை காப்பற்ற துடிக்கும் ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற தாரக மந்திரத்துடன் செயல்பெறும் ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன்” இணைந்து போட்டியிட்டார். இங்கே அங்கம் வகிப்போர் எல்லோருமே் மக்களின் நலன் விரும்பிகளே..

ஒரு வட்டாரத்தில் 7 பேர் போட்டியிடும் அளவுக்கு எமது ஊரின் ஒற்றுமை குட்டிச் சுவராகியுள்ளது. எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக தகுதியான எம்மவர் ஒருவரை தெரிவு செய்ய விடாது தமது சுய நலத்திற்காக பலபேரை அதில் புகுத்தி ஊழல் செய்துள்ளனர்.

அப்படி இருந்தும் தனித்து நின்று மக்களின் வாக்குகள் 500 பெற்று சூட்சியால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் போனசாக கிடைத்த 3 ஆசனங்களில் ஒன்றில் 3 ம் வட்டார அங்கத்தவராக சுழற்சி முறையில் தெரிவு செய்யப் பெற்றுள்ளார். அதுவும் அவர் இந்த வயதில் பெற்ற பெரு வெற்றியாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் (பிரதேச சபை, நகர சபை  மாநகர சபை)  மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்...

01. பொதுச் சுகாதாரம்

02. திண்மக் கழிவகற்றல்

03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்

04. வடிகானமைத்தல் பராமரித்தல்

05. தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்

06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்

07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

08. இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்

09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.

11. கிராமிய நீர் வினியோகம்

12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்

13. தீயணைப்பு சேவைகள்

14. தாய் சேய் நலப்பணி

15. பிரதேசத்தை அழகுபடுத்தலும் சுத்தம் பேணலும்

16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்

17. தொற்று நோய் தடுத்தல்

18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்

19. தொல்லைகளைத் தவிர்த்தல்

20. கிராமிய மின்சாரம் வழங்கல்

21. வீடமைப்புத் திட்டம்

22. கல்வித் தளபாடங்கள்

23.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்

24. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்

25. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.

திரு. கேது அவர்களின் தலைமைையில் எம் ஊரையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் வாரீர்.

நன்றி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2018

E-mail Print PDF

Image may contain: text

அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2018 மலர வாழ்த்துகின்றோம்.

Wish you a joyful, bright, healthy, prosperous and happiest New Year ahead!!

HAPPY NEW YEAR 2018

யாழ்ப்பாணம் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா - இலக்கிய கவி புனைதல்

E-mail Print PDF

யாழ்ப்பாணம் மாவட்ட கலாச்சார அதிகார சபை; மாவட்ட ரீதியில் நடாத்திய இலக்கிய ”கவி புனைதல்” போட்டியில் இலக்கிய கலாபூஷணம் உயர்திரு. தம்பித்துரை குணதிலகம் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று எமது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Image may contain: one or more people

கனடா, அமெரிக்கா - (வட அமெரிக்க நாடுகள்) ஹேவிளம்பி புத்தாண்டு 13.04.2017 பிற்பகல் 3:36 மணிக்கு மலர்கின்றது

E-mail Print PDF

Image may contain: text

கலியுகாதி சுத்ததினம் 1869391, நாடி 21 விநாடி 20, தற்பரை 15 க்கு; சரியாக ஹேவிளம்பி தமி்ழ் புத்தாண்டு 13.04.2017 வியாழக்கிழ்மை பிற்பகல் 3:36 மணிக்கு அபரபக்க திருதியை திதியில்,விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில்; சித்தி நாம யோகத்தில், வணிசக் கரணத்தில், சிங்கலக்கினத்தில், மிதுன நவாம்சத்தில், செவ்வாய் காலவோரையில், குரு சூக்குமகுணவோரையில், தாமத குண வேளையில், நட்ஷத்திர பட்சியாகிய காகம் உண்டித் தொழிலும் சூட்சும பட்சி நடைத் தொழிலும் செய்யும் காலத்தில் மங்களம் பொங்கும் ஹேவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

விஜூபுண்ணிய காலம்: முற்பகல் 11:16 முதல் பிற்பகல் (19:16).7:16 மணிவரை விஜூபுண்ணிய காலமாகும்.

இப் புண்ணிய காலத்தில்; யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து சிரசில் வேப்பமிலையும், காலில் கொன்றையிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து, மஞ்சள் நிறமுள்ள பட்டாடையாயினும் தரித்து புஷ்பராகம், மாணிக்க பதித்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி விநாயகர், குலதெய்வங்களை வணங்கி, பெற்றோர், பெரியோகளை வணங்கி அவர்களின் ஆசி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்வீர்களாக.!!

 


கலாபூஷணம் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்ற பணிப்புலம் மைந்தன் - செல்லையா சிவபாதம் அவர்கள்

E-mail Print PDF

Image may contain: 1 person, standing

பணிப்புலம், பண்டத்தரிப்பில் வாழ்ந்துவருபவரும்; சைவ சித்தந்த பண்டிதரும், ஓதுவார்-கலைவாரிதியும், பௌராணிக வித்தகரும், கந்தபுராண யுத்தகாண்ட உரை பக்ர்வருமாகிய  மதிப்பிற்குரிய செல்லையா சிவபாதம் அவர்களை;  இலங்கை இந்து சமய கலாச்சார அமைச்சர் மாண்புமிகு டி. எம். சுவாமிநாதன் அவர்கள் (தாமரைக் குளம்) நெளும் பொகுண மகிந்த ராஜபக்‌ஷ அரங்கைல் 24.12.2016 அன்று நடைபெற்ற இந்து சமய கலாச்சார கௌரவிப்பு விழாவில் “கலாபூஷணம்” பட்டம் வழங்கி கௌரவித்தார் எம்பதனை அறியத் தருவதில் பெரு மகிச்சி அடைகின்றோம்.

தனது அயராத உழைப்பினால் தனது குடும்பத்திற்கும், எமது ஊருக்கும், மக்களுக்கும் கௌரவத்தை பெற்றுத் தந்த ”கலாபூஷணம்” சிவபாதம் அவர்களை வாழ்த்துகின்றோம்.


திரு. நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (மணி மாஸ்ரர்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்

E-mail Print PDF

”இளமையில் கல்” என்பது ஔவைப் பாட்டி எமக்கு ஆத்திசூடி மூலம் ஊட்டிய முது உரை. இளமையில் கல்லாது விட்டால் என்னவாகும் என்பதை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் பிற்பாதி கூறப்படவில்லைப் போலும்.  இக் கூற்றை நாம் இளமையில் கல் - கல்லாதவன் கல்லு” என்றும் ”இளமையில் கல் கல்லாதவன் - முதுமையில் மண்” என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அத்துடன் இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். இளமையில் பெற்ற கல்வியானது சிலையில் பதியப் பெற்ற எழுத்துக்கள் போல் அழியாது என்பதும், பசுமரத்தாணிபோல் சுலபமாக பதியக் கூடியதாகவும் நிலைத்து நிற்பதாலும் ”இளமையில் கல்” என்றார்.

சிறுவர்கள் எப்போதும் விளையாட்டிலும், நண்பர்களோடு உல்லாசமாக ஊர் சுற்றுவதிலும், சுவையான சாப்பாட்டிலும் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்வது பருவத்தின் பழக்கமாகும். இப் பழக்கமானது அவர்கள் வாழும் சுற்றாடல், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். கற்றவர்கள், கல்லாதவர்கள், பணக்காரர், ஏழைகள் வாழும் சூழலில் வாழ்வோர் தம் சுற்றாடல் பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர். இளம்பராயம் என்பது பொறுப்புகள் அற்ற துன்பங்கள் அற்ற இன்பமான பருவம். அங்கே உழைக்க வேண்டும் என்ற கட்டாயமோ, பொறுப்புகளோ இல்லையெனலாம்.

பொதுவாக இந்த வயதில் பள்ளிப் படிப்பு என்றால் முதலில் நெல்லிக்காய் போல் துவர்க்கத்தான் செய்யும். அதனை மெல்ல மெல்ல சுவைக்க இனிக்க ஆரம்பிக்கும். ஆனால் அவை இனிக்கும் காலம் வருவதற்கு முன்பே அதனை சிலர் கக்கி விடுகின்றார்கள். அதனால் அவர்களுக்கு அதன் இனிப்புப் தன்மை புரிவதில்லை. அத்துடன் நெல்லிக் கனியானது ஒரு சர்வ நிவாரணி என்பதனை புரியாதவர்கள். அது இருந்தால் எந்த துன்பத்தையும் நீக்க வல்லது என்பதனை அவர்களுக்கு எடுத்துரைக்க பெற்றோருக்கும் முடிவதில்லை. இவ்வாறான இளையோரை எவர் ஒருவர் அவர்களைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றுக்கொளும் விதமாக எடுத்துரைத்து இனிக்கும் வரை சுவைக்கச் செய்து கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றும் திறன் கொண்டவராக உள்ளாரோ அவரே உண்மையான ஆசிரியனாவான்.

அந்தவகையில் எம் ஊரில் இலைமறை காய்போல் வாழ்ந்து; கல்வி வலயத்தின் மத்தியில் நற்கனி மரமாக கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், அன்பு, அறிவு, ஆற்றல், பண்பு, பணிவு, விவேகம், இறை பக்தி, மதிநுட்பம், கல்வி, பெருந்தன்மை, உடையவராக விளங்கும் எம்மூர் கல்விமானும், பாடசாலை அதிபருமான மதிப்பிற்குரிய நல்லதம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் திறமையை அடையாளம் கண்டு கௌரவித்த வலிகாமம் கல்வி வலய இயக்குனர் குழுவினரை போற்றி பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றோம்.

நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணி வேராகவும், எமது வாழ்கையின் அத்திவாரமாகவும் இருக்கும். எழுத, வாசிக்க தெரியாதவர்கள் கண்கள் இருந்தும் குருடர்கள் போல் வாழ்கின்றார்கள். இதனை கூறவந்த  திருவள்ளுவரும் கல்வி கற்றவர்களிற்கு மட்டுமே முகத்தில் இரு கண்கள் இருப்பதாகவும், கற்காதவர்களுக்கு கண்களிற்குப் பதிலாக முகத்தில் இரு புண்களே உள்ளன என்றும் திருக்குறளில் வலியுறுத்துகின்றார்.

இளமையில் கற்க வேண்டியதை கற்காது கல்லாகவும், மண்ணாகவும் இருக்கும் சிலரை நாம் இன்று பார்க்கின்றோம். இக்கல்வியில் சிறிதளவையேனும் கற்றுச் சிந்தையுள் இருத்தி, அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்படைகிறது. அப்போதே மனிதன் மாமனிதனாகிறான். இதையே அன்று தொட்டு இன்று வரை பல நூல்களும் பழமொழிகளும் பறைசாற்றி வருகின்றன.

மன்னனையும், கற்றோனையும் ஒப்பிடுகையில் மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனி கல்வியை பெறுவதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு உயர்ந்த நுால்களையும் கற்று வரும் போதே அந்நுால்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களையும் நாம் பழகி வருதல் வேண்டும். அதற்காக கல்வி கிடைத்ததையிட்டு செருக்கு அடையாமல் பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமையாய் எல்லா உயிர்களிடத்தும் அனபும் இரக்கமுங்காட்டி நல்லொழுக்கத்தில் வாழுவதும் கற்றதனால் ஆய பயனாகும் என வள்ளுவ பெர்ந்தகை எடுத்துரைக்கின்றார்.

தான் கற்ற கல்வியினாlலும் பெற்ற அறிவினாலும் மட்டும்மன்றி உள்ளத்தாலும் உயருகிறான். வாழ்வினையும் வாழ்வின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியங்கள் கட்டுரைகள் கவிகைகள் முதலானவற்றைப் படிப்பதால் வாழ்வில் தான் கண்டறியாத புதிய புதிய மாந்தரோடு பழகுகிறான்; அவர்களின் குணாதியங்களை உணருகிறான்; வாழ்வின் பல கோணங்களையும் காணுகிறான். பல பல புதிய அனுபவங்களைப் பெறுகிறான். நல்லன எவை தீயவை எவை எனப் பகுத்துணரும் பகுத்தறிவுப் பண்பை பெறுகிறான். இதனால் அவனது உள்ளம் விரிவடைகிறது; பண்படுகிறது. ஏதிர்கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னதநிலையை பெறுகிறான்.

இளமையில் கல். கல்லாதவன் கல்லு:
நாம் பல ஆலயங்களுக்கு சென்றிருக்கின்றோம். அங்கே முக்கியமான இடங்களில் (கருங்)கற்கள் வைக்கப் பெற்றிருப்பதையும் பார்த்திருக்கின்றோம். அவற்றுள் ஒன்று தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைப்பதற்கு வைக்கப் பெற்றிருக்கும் கல்லாகும், மற்றொன்று ஆலயத்தினுள் செல்வதற்கு படிக்கல்லாக அமைந்திருப்பதாகும், இன்னொன்று ஆலய கருவறையில் மூலமூர்த்தியாகவும் பதியப் பெற்றிருக்கும். இவை யாவும் (கருங்)கற்களே. ஆனால் அவற்றிற்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் வித்தியாசமானவை. பொதுவாக இவ் வித்தியாசத்தை நாம் மானிட வாழ்க்கையிலும் காணலாம்.

ஆலயத்தில் தேங்காய் உடைக்க வைத்துள்ள கல்லுக்கோ தினமும் தேங்காய்களால் அடியும், எறியும் கிடைக்கின்றன. படிக்கட்டில் உள்ள கல்லுக்கோ தினமும் பலரின் மிதியும், உதையும் கிடைக்கின்றன. ஆனால் கருவறையில் இருக்கும் கல்லுக்கோ தினமும் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிசேகமும், தீபாராதனைகளும், படையல்களும் கிடைக்கின்றன. இவற்றை பார்த்துகொண்டு முன்னால் இருக்கும் படிக் கட்டு கல்லுக்கும், தேங்காய் உடைக்கும் கல்லுக்கும் பொறாமையும், வெறுப்பும் ஏற்பட்டது.  

ஒருநாள் அவை இரண்டும் கருவறையில் உள்ள கல்லைப் பார்த்து நீயும் எங்களுடன் இருந்த கல்லுத்தானே. இதில் உனக்கென்ன அதிவிஷேசமாக ஆடை அலங்காரங்களும், ஆபரணங்களும் தந்து  ஆராதனை செய்கின்றார்கள் என வினவினர். அப்போது; மூலமூர்த்தியாக கருவறையில் அமர்ந்திருந்த கல்லானது அவர்களைப் பார்த்து நாங்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்கள்தான்; ஆனால் நான் எனது சிற்பாச்சாரியராக இருந்த ஆசிரியரிடமும், விரிவுரையாளர்களிடமும் பல உளிக் கொத்துகளை தாங்கி உடையாது பொறுமை காத்து அவர்கள் கூறியவற்றை கிரகித்து நித்திரையின்றி கற்றதனால் அழகான சிற்பமாகி வணக்கத்திற்குரிய தெய்வமாக இங்கு அமர்ந்துள்ளேன். நீங்களோ பொறுமையின்றி அற்ப இன்பத்திற்காக விளையாடி, ஊர்சுற்றித் திரிந்தீர்கள் அதனால் உங்களுக்கு அழகான சிற்பமாக வரமுடியவில்லை.

சிற்பியின் உளிக் கொத்துகளை தாங்கி உடையாது பொறுமை காத்த கருங்கல்லானது அழகான உருவமாகி வணக்கத்திற்குரிய தெய்வமாக தினமும் தூபம் தீபம் அபிழ்ஷேகம் பெறுவதுபோல்; ஆசிரியரின் உபதேசங்களை பொறுமையாக கேட்டு ஆர்வமாக படித்தவன் வித்தகனாகி படித்தோர் அவையில் முன்னிருந்து பலபேர் போற்ற சுக வாழ்வு வாழ்கின்றான்

சிற்பியின் உளிக் கொத்தைத் தாங்காது பொறுமை இழந்து உடைந்த கல்லானது படிக்கல்லாகவும், தேங்காய் உடைக்கும் கல்லாகவும் மாறி தினமும் உதையும், உழக்கும், அடியும் வாங்குகின்றன. ஆசிரியரின் உபதேசங்களை பொறுமையாக கேட்டு படிக்காதவர்களும், நொண்டிச் சாட்டு பல கூறி படிப்பிற்கு ஆப்பு வைத்தவர்களும் தினமும் கூலி வேலை செய்து கஷ்டப்டுகின்றனர்

இங்கே ”இளமையில் கல்”.  கல்லதவன் கல்லு என்ற ஔவையின் கூற்று நிஜமாகியுள்ளது.

நன்றி

பணிப்புலம்.கொம்

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 13

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்