சுப நிகழ்வுகளில் ”அட்சதை” ”அறுகரிசி” தூவி வாழ்த்துவது எப்படி?

Print
Image may contain: one or more people

எல்லா சுப சடங்குகளிலும் ”அட்சதை” எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். வாழ்த்துகள் கூறி திருமண தம்பதியினரை ஆசீர்வதிக்கும்போது அட்சதை தூவி அவர்களை வாழ்த்துவதைப் பார்த்திருக்கின்றோம்.

அட்சதை தூவும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின்பற்றுகின்றார்கள். பலர் தலைப் பகுதியில் தொடங்கி, கால்வரை தூவுவதையும், சிலர் கால்ப் பகுதியில் ஆரம்பித்து தலைவரை தூவி வாழ்த்துவதையும் பார்த்திருக்கின்றோம். இவை யாவும் தவறானது என அர்ச்சகர்கள் கூறுவதுடன் தவறான முறையில் அட்சதை தூவுவது கெடுதலை விளைவிக்கும் என்றும் கூறுகின்றனர்.

அட்சதையை இரண்டு கைகளாலும் எடுத்து ஒரு சில வினாடிகளாவது கையில் பொத்தி வைத்து தியானித்த பின் உச்சியில் தூவுதலே நல்ல பலனைத் தரும் என குறிப்பிடுகின்றனர். மலர்களைவிட மேலானது அட்சதை. மலர்களும் புனித தீர்த்தமும் அட்சதை இல்லாதபோது உபயோகிக்கலாம் என்பது ஐதீகம்.

வடமொழியில் ”க்ஷதம்” என்றால் இடிப்பது என்று பொருள். ”அக்ஷதம்” என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத அரிசியை ”அட்சதை” என்கிறார்கள். ”முனை முறியாத அரிசிதான் அட்சதை” எனப்படும். முனை முறிந்த அரிசிகளைக்கொண்டு இதைத் தயாரிப்பது தவறானது

அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது. புளுங்கல் அரிசியும், முனை முறிந்த அரிசியும் இறந்தவை என ஒதுக்கப்படுகின்றன. முனையுள்ள பச்சரிசி உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. அதனால் அரிசியை கையில் கிள்ளிக் கொடுப்பது தவறானது. அதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுக்கச் செய்கிறார்கள்.

அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, அறுகம்புல் தெய்வசக்தி என்பதே ஆன்றோர்கள் கூற்று. உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்பதே பொருள். ஹோமங்கள் முடிந்த பிறகும், சிரார்த்தம் முடிந்த பிறகும், அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி அட்சதையை தூவுவார்கள்.

பிறந்தநாள் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவார்கள். இதை வீசி எறிவது தவறான விஷயம். திருமண வீடுகளில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொருவராகச் சென்று வாழ்த்தி தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது.

இன்னும் சொல்லப்போனால், மெள்ளத் உச்சியில் வைப்பதுதான் சிறந்தது. புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி இதைத் தூவி வாழ்த்துவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

நன்றி

சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளது. பழுதில்லாத அட்சதையைப்போல எல்லா நிகழ்வுகளும் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்பதைப் புரிந்து அதன் மகிமை உணர்ந்து பயன்படுத்தி பலன் பெறுவோமாக.

நன்றி:

BLOG COMMENTS POWERED BY DISQUS