Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

கல்லீரலும் அதன் பாதிப்பால் ஏற்படும் நோய்களும்

E-mail Print PDF

நம் உடலானது நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாடி, நாளங்கள் என பலவற்றால், பிண்ணிப் பிணைக்கப் பெற்று உருவாக்கப் பெற்றதாகும். எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு உடலின் உள்உறுப்புகள் யாவும் ஒழுங்காக செயல்பெற வேண்டியது கட்டாயமாகின்றது.

இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயலிழந்தால் அல்லது ஊறு பட்டால்; அது அவற்றுடன் இணைந்து செயல் பெறும் மற்றைய உறுப்புகளையும் செயலிழக்க அல்லது ஊறுபட வைத்து விடுகின்றது. எமது பழக்கவழக்கங்கள், உணவுமுறை, நாம் வாழும் சூழல் போன்ற பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.

கல்லீரல் அமைப்பு:
எமது உடல் உள்உறுப்புகள் எல்லாமே நாம் உயிர்வாழ முக்கியமானதாக உள்ளது. அவற்றுள், கல்லீரல் மனித உடலில் இருக்கும் மிகப்பெரிய சுரப்பியாகும். இது சுமார் 1¼  கிலோ எடை கொண்ட்தும் இருபிவுகளைக் கொண்டதுமாக வயிற்றையில் இரைப்பைக்கும் உதரவிதானத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இது மென்மையும் சம அளவு கடினமும் கொண்ட சொக்கலேட் நிறத்தில் அமைந்த ஒரு உறுப்பு ஆகும்.

கல்லீரலின் ஒரு பகுதி அகன்றும் மறுபகுதி ஒடுங்கியும் இருப்பதுடன் வலது பக்கமாக dexter - Lobe டெக்ஸ்டர் லோப் எனும் - பெரிய மடலும், இடது பக்கமாக sinister - lobe சிநிஸ்டர் லோப் எனும் - சிறிய மடலுமாக இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. இத்துடன் பித்தப்பை, பித்தக்குழாய் மற்றும் இரத்த நாடி – நாளங்கள் இணைக்கப் பெற்றுள்ளன.

கல்லீரலின் செயல்பாடுகள்:
நமது உடலில் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணியாகத் திகழ்வது கல்லீரல். கல்லீரல் Hepatic cells – என்னும் செல்களினால் ஆனது. பல இரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவு ஜீரணித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நாம் உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்கள் ஜீரணிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை சுரப்பது கல்லீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் ஜீரணித்து வளர்சிதை மாற்றம் அடையாது விட்டால் அவை அங்கங்கே படிந்து இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆனால், இந்த கொழுப்பானது கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்த நீர்:
பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச் சுவையுடைய இதில் மூன்று வகையான பொருட்கள் உள்ளன. அவையாவன தண்ணீர் (Water), பித்த உப்பு (Bile salt), பித்த நிறமிகள் (Bile pigments). பித்த நிறமிகள்தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினால் உடலில் நோயின் தாக்கம் இருக்கின்றது என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை ஜீரணிக்கச் செய்து, ஜீரணித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப்பதற்கும் (Absorption) உதவுகிறது. பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ச்,ஞீ,ஞு - ஓ மற்றும் கால்சியம், செரித்தலுக்கும் உதவுகிறது.

பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லாமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உப்புகள்தான்.

உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்குப் பித்த நீர் உதவுகிறது. நாம் உண்ட உணவானது வாய்க்குழியினுள்ளும் (உமிழ்நீராலும்), இரப்பையினுள்ளும் (இரைப்பை சாறினாலும்) சிறு மாற்றம் பெற்றபின் அமிலத் தன்மையுள்ள குளம்பாக சிறுகுடலுக்கு சென்று காரத்தன்மை கொண்ட பித்த நீரால் சமநிலைப் படுத்தப் பெற்று குடல் சாறுடன் இணைந்து ஜீரணிக்கப் பெற்று சத்தாக மாற்றி திசுக்களுக்குச் சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது.

உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும்போது அது குளுக்கோஸ் (Glucose) ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ளபோது சர்க்கரை நோய் வர வாய்புள்ளது. எனவே தேவைக்கு அதிகமான உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

பிளாஸ்மா புரதங்களை தயாரிக்கிறது.
உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. அத்துடன் இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது.

நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.
மாசுபடிந்த உலகிலிருந்து வரும் விஷங்கள், சாராயம், மருந்துகளின் கூட்டுச் சேர்க்கையின் விளைவுகள் - interaction effects, சரியான முறையில் சமைக்காத உணவுகள், உணவுப்பொருட்களின் கூட்டு விளைவுகளினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து  உடலை காப்பாற்ற, விஷ முறிவினை ஏற்படுத்தி மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை முதலில் பாதுகாப்பதும் இந்த கல்லீரல் தான்  

இவை மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் கொடிய விஷங்களான சோலனின் – Solanin, உருளைக்கிழங்கு, தக்காளிப்பழம், காய்களின் பச்சை பகுதியில் இருக்கும் ஒரு நச்சு பொருள் மற்றும் லெக்ரீன் - Lektine, அவரைக்காய், அவரை விதைகளிலும், குளுக்கோசிட்-Glykaside, வத்தாளை கிழங்கு, கட்மியம் – Cadmium,  அரிசி, காளான் நச்சுக்கள், மரவள்ளிக்கிழங்கு விஷம், செடிகள், தாவரங்கள் உற்பத்தி செய்யும் சயனைடு விஷம், அமுற்ரலின்-Amygdalin பாதாம் பருப்பில் இருக்கும் விஷங்களில் இருந்து தினமும் எங்களை காப்பாற்றி வருகின்றது

கல்லீரலை செயலிழக்கச் செய்யும் காரணிகள்:
முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு அருந்துவது, மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது புகை பிடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கமடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக்கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.

கல்லீரலைத் தாக்கும் நோய்கள்:
வைரல் ஹெப்பாடிட்டீஸ் (Viral Hepatitis) A, B, C, D, E என பல வகைகள் உள்ளன. இவற்றுள் வைரல் ஹெப்பாடிட்டீஸ் “B” அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

கல்லீரல்-புற்று நோய், சுய-உடல்-தாக்கி-நோய் -Autoimmune-disease, இரத்த குழாய் அடைப்பு, நுரையீரல் எம்பாலிசம்-embolism, கல்லீரல் அழற்சி - liver-Cirrhosis கல்லீரல் திசுக்கள் இறந்து போதல், பித்தப்பையில் கல் உண்டாதல், கொழுப்பு-ஈரல், சர்க்கரை-நோய், சிறுநீரக-செயலிழப்புக்கள் போன்ற நோய்கள் உருவாகிகின்றன.

வெளி உடலில் தோன்றும் மிக முக்கியமான அறிகுறிகள்:
கல்லீரல் பாதிக்கப்படும்போது அல்லய்ஜு செயலிழக்கும்போது உடலில் பருக்கள்; உள்ளங்கை சிவந்து போதல்; கால், கை, விரல் நகங்களின் இளஞ்சிவப்பு-வெள்ளை நிற நிறமாற்றம்; மற்றும் சிவப்பு வண்ண பளபளப்பான உதடுகள்; உலர்ந்த நாக்கு; ஆண் பெண்களின் மார்பக விரிவாக்கம்-பால்மடிச்சுரப்பிகள்; அக்குள் மற்றும் அந்தரங்க – இடங்களில் முடி இழப்பு; தொப்பை போன்ற அறிகுறிகளை வைத்து ஓரளவுக்கு இந்த நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

நுரையீரல்-நோயினால் ஏற்படும் ஒட்சிசன் குறைபாடு, அளவுக்கதிகமான இனிப்பு உணவுகள், பழங்களை உண்பவர்களின் கல்லீரல் தேவைக்கு அதிகமாக கொழுப்புகளின் உருவாகும், கொழுப்பு-ஈரல், சர்க்கரை-நோய், சிறுநீரக-செயலிழப்புக்கள் கல்லீரலின் அன்றாட-இயக்கத்திற்க்கு இடையூறு, விளைவிக்கும் கல்லீரல்-நோய்யாக பரிணாமிக்கின்றது   

உதாரணமாக குள்ளமாக வளரும் லறோன்-நோய் - Laron-syndrome  மற்றும் நெடு நெடு என்று ஒட்டக சிவிங்கி போல் வளரும் அங்கப்பாரிப்பு-நோய் - Acromegaly-disease இந்த இரண்டு நோய்களுக்கும் காரணமாக இருப்பது கல்லீரலிலுள்ள சாவித்-தொகுப்பு-வழங்கியின்-IGF 1- recepto தகவல்கள் கிடைக்காததினால் உடல் வளர்ச்சியில் ஏற்படும்  இந்த மாற்றங்கள், தீராத கல்லீரல் நோய்க்கு ஒரு காரணமாக அமைந்து விடுவது மட்டுமல்லாது பின்னால் இது பரம்பரை மரபணு குறைபாடாகவும்  பரிணாமிக்கின்றது

கல்லீரல்-நோயின் அறிகுறிகள்:
களைப்பு, வயிற்றுப் பொருமல் (உப்புசம்), நீர்க்கோவை, அடிவயிற்றில் அழுத்தம், பசியின்மை மற்றும் எடை இழப்பு, உடல் முழுவதும் அரிப்பு, உணவுக்குழாய் மற்றும் இரத்த வாந்தி, வயிற்றுப்பகுதிகளில் இரத்தம் வருதல், ஹார்மோன்களில் மாற்றங்கள், நாக்கு தடித்து போதல், பேச்சில் உழறல், கைகளில் நடுக்கம், குளிப்பதில் நாட்டமின்மை, சின்ன குளிரைக் கூட தாங்கமுடியாது போதல் என்பன அறிகுறிகளாக தோன்றும். மொத்தத்தில் இவர்கள் தங்களுடைய தனித்தன்மையை இழந்தவர்களாக இருப்பார்கள்  

களைப்பு-Fatigue:
கல்லீரல் நோயின் தாக்கம் பொதுவான களைப்பு, சோர்வு, சோம்பல், பலவீனம், அலட்சியம் என்பனவற்றை தோற்றுவிக்கும், இவர்களுக்கு எந்த வேலையும் செய்ய நாட்டம் இருக்காது, சும்மா இருக்கவே அதிகம் விரும்பும் இவர்கள் அடிக்கடி பகலில் குட்டித்தூக்கம் போடுகின்றவர்களாகவும் இருப்பார்கள்.

வயிற்றுப் பொருமல் (உப்புசம்) - Stomach Bloat:
விரும்பத்தகாத அறிகுறியாக இந்த வயிற்று பொருமல் இருக்கின்றது குடலில் காற்று அல்லது வாயு அதிகளவு தங்கி விடுவதினால் காற்றடித்த பலூன் போல் ஊதிப் வயிறு போயிருக்கும். இதுவும் கல்லீரல் - நோய்க்கு ஒரு முக்கியமான அடையாளமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

நீர்க்கோவை-Ascites:
கல்லீரல் நோயின் கடைசி எப்பிசோட்,  அடிவயிற்றில் திரவங்கள் சேகரிக்கப்பட்டு வயிறு உப்பி போய், இரத்த நாடி-நாளங்கள் வீங்கி வெளியில் தெரிவது மற்றும் வயிற்றிலுள்ள தசைநார்கள் முற்றுலுமாக பாதிக்கப்பட்டதால்  தொப்பையை மேலும் கீழுமாக அசைக்க முடியாமல் போவது, இழை நார்களின் இழப்பினால் குடல் செயலிழப்பு என முடிகின்றது

வல பக்க மேல் வயிற்றில் அழுத்தம்:
நாள்பட்ட கல்லீரலின் விரிவாக்கத்தினால், கல்லீரலின் மேல் பகுதியில் உள்ள உறையில் - liver capsule ஏற்படும். அழுத்தம் காரணமாக வயிற்றின் மேல், வலது பக்கத்தில் ஒரு மந்தமான வலி ஏற்படும், சில நோயாளிகளுக்கு கடுமையான வலியுடன் வீக்கமும் சேர்ந்து மார்பு பகுதியில் ஏற்படும். இறுக்கத்தின் காரணமாக சில நேரங்களில் திடீர் மாரடைப்பைக் கூட வரவழைத்து விடுகின்றது

பசியின்மை மற்றும் எடை இழப்பு - Lack of appetite:
கடுமையான கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை, வாய்த் துர்நாற்றம், வாந்தி, குமட்டல், சிறிய அளவு உணவு எடுப்பதினால் உடல் மெலிந்து, ஒல்லிக்குச்சி போல் காட்சி அளிப்பார்கள், அடிவயிற்றில் வலி, மற்றும் கால்களில் நீர் தேங்கி இருப்பதினால் முழங்கால் வீக்கம்

உடல் முழுவதும் அரிப்பு-Itching
நோயின் தாக்கத்தினால் கல்லீரல் அதிகமாக பித்த அமிலத்தை சுரந்து இரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதினால் கடுமையான உடல் அரிப்பு போன்ற தொந்தரவுகள், உணவுக்குழாய் மற்றும் வயிறு, அமிலத்தினால் தாக்கப்பட்டு இரத்த வாந்தி, கருப்பு மலம், மல வாசலில் இரத்தம் வருதல், உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் சுருள்-சிரை நாளங்களில்-Varicose veins உருவாக்கம், குடலில் ஏற்படும் சிறு கழலை, வீக்கம், சளிச்சவ்வு புடைப்பால் மலம் இறுகி, மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும் இந்த நோய் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை உருவாக்கி விடும்

ஹார்மோன்களில் மாற்றம்:
நாட்பட்ட கல்லீரல் நோய்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் ஒன்றுதான் ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்ச்சி அல்லது முற்றிலும்  இல்லாமலே போவது மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் மிக முக்கியமானது ஆண் உறுப்பில் ஏற்படும் விறைப்பில் பாதிப்பு மற்றும் பால் சுரப்பியின் வீக்கம் போன்றவைகளை சொல்லலாம்.

இந்த குறைபாடுகளை தீர்ப்பதற்க்கு, சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் கல்லீரலின் செயல்பாட்டினை திரும்பவும் நிலை நாட்டப்படும் போது இந்த ஹார்மோன்களில் சுழற்சி வழக்கம் போல் சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றது

பித்தநீர் - Biliary:
மஞ்சள் நிறமி-பிலிரூபின், கொழுப்பு அமிலங்கள்,  பித்த அமிலங்கள், பாஸ்போலிப்பிடுகள் மற்றும் ஹார்மோன்கள், சர்க்கரைக் கூறுகள் என பல்வேறு கூட்டு கழிவு பொருட்கள் இதில் காணப்படுகின்றது.

பித்தப்பை-கல்
70 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் மஞ்சள் நிறமி-பிலிரூபின்,10 சதவீதம் சுண்ணாம்பு படிவுகள் கொண்ட கலப்பு கற்கள் தான் இது,  இந்த கற்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும் முற்றிலுமாக கொழுப்பு உணவை தவிர்ப்பவர்களுக்கு  அதிகம் ஏற்படுவதாக பல ஆய்வுகள் சொல்கின்றது   

மஞ்சள் காமாலை-jaundice  > ஹெபடைடிஸ்-A,B-C,D வைரஸ்:
கல்லீரல் நோய்களிலேயே, மஞ்சள் காமாலை நோய் தான் மக்களிடையே, நீண்ட காலமாக இருந்து வந்த நோய்களில் ஒன்று. ஹெபடைடிஸ்-A,B வைரஸ் தான் இந்த நோய்க்கான காரணம் என கண்டறியப்பட்டு, தடுப்பூசி மருந்துகளினால் 70சதவீதம் ஒழிக்கப்பட்டும் விட்டது  

இந்த நோயின் அறிகுறிகள் தோல், சளி சவ்வுகள் மற்றும் இரத்தம் மற்றும் உடல் திசுக்கள் குறிப்பாக கண்கள்  மஞ்சள் நிறமாக மாறிவிடுவதும் தான்

கண்களின் மஞ்சள் நிறத்திற்கான காரணம்:
உடல் இயக்கத்திற்க்கு தேவையான தனிமங்களில் இரும்பு-சத்து தான் திரும்பத்திரும்ப உபயோகிக்கப்படுகின்றது தாய் தந்தையினர், ஊட்டிய உணவில் இன்னும் உடலில் ஒட்டியிருப்பதும் இந்த இரும்பு-சத்து மட்டுமே.
சிகப்பு அணுக்களிலிருந்து-Erythrocytes இரும்பு-சத்து தனியாக பிரிக்கப்பட்டு, சிகப்பு அணுக்களின் எஞ்சியிருக்கும் நிறப்பொருளான பிலிரூபின் தான் இதற்கு காரணம்.

சிகப்பு-நிற ஹிமோகுளோபின் இறப்பின் எஞ்சி இருக்கும் சிகப்பு கலர்தான் பிலிரூபின்-bilirubin  என்பதை அறிந்து கொண்டோம்.  இது பித்தநீரிலுள்ள கூட்டு கழிவு பொருட்களின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது. மஞ்சள் நிறமி-பிலிரூபினை பித்த நிறப்பொருள் என்று கூட சொல்லலாம்

பிலிரூபினுடன்-ஆல்புமின் புரதமும்:
கல்லீரலினால் உற்பத்தி செய்யப்பட்டு, இரத்த பிளாஸ்மாவில் கலந்திருக்கும் ஒரு புரதமே ஆல்புமின். இது நீருடன் இணையக் கூடிய புரதம். இதை ஒரு ஆரோக்கியமான சிறுநீரகங்களால் வெளியேற்ற முடியாது. இதை வடிகட்டி, திருப்பி அனுப்பிவிடும். சிறுநீரில் ஆல்புமின் கண்டறியப்பட்டால் கல்லீரல் -நோய், நீரிழிவு தொடர்பான சிறுநீரக பாதிப்புக்களை ஆரம்பத்திலேயே, கண்டறிய முடியும். மற்றும் குருதியில் ஆல்புமின் குறைபாட்டினை வைத்து கல்லீரல் - நோயினையும் கண்டறியலாம்.

சிகப்பு-நிற ஹிமோகுளோபின் இறப்பின் மறுவடிவம் தான் பிலிரூபின். இது மண்ணீரலிருந்து குருதி-பிளாஸ்மா ஆல்புமின் புரதத்துடன் இணைந்து  குருதிச்சுற்றில் கலந்து வரும் போது ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை திருப்பி அனுப்பி விடுகின்றது. அப்படி திரும்பி, குருதிச்சுற்றில் கலந்து  கல்லீரலை வந்தடைந்த ஆல்புமின் புரதத்துடன் இணைந்து மறைமுகமாக இருக்கும். நீரில்-கரையாத பிலிரூபின், கல்லீரலிலுள்ள குளுக்ரோனிக் அமிலத்துடன் இணைந்தவுடன் ஆல்புமின் புரதம் தனியாக பிரிந்து செல்கின்றது.      

இப்படி தனியாக பிரித்து  விடப்பட்ட பிலிரூபின் பித்த-அமிலத்துடன் இணைந்து நீரில்-கரையக்கூடிய ஒரு கலவையாக கல்லீரல்தான் பிலிரூபினை பித்த-நீராக மாற்றி பித்தப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டு கொழுப்பு உணவுகளின் சமிபாட்டிற்கு உதவியபின், கழிவு-சிறுநீர், மலம் மூலம் வெளியேற்றுகின்றது. இதனால்தான் சிறுநீர் வெளிறிய மஞ்சள் நிறமாக இருக்கின்றது, இருக்கவேண்டும். இது நல்ல ஆரோக்கியமான கல்லீரலின் அறிகுறி

கல்லீரலின் இந்த இயற்கையான  திறன்  ஹெபடைடிஸ் A , B, C, D வைரஸ்களினால் பாதிக்கப்படும் போது கல்லீரல் இந்த சேவையை சரியாக செய்ய முடியாமல் இரத்தத்தில் இந்த பிலிரூபின்- bilirubin  நிறப் பொருள் கலந்திருப்பது தான் இதற்கு காரணம் கண்களின் நிறத்தை வைத்து இந்த நோயின் தாக்கத்தை அறிந்து, மருந்துகள் மூலம் குணப்படுத்திக்கொள்ள முடியும். இந்த A,B வைரஸ் அசுத்தமான உணவு, குடிநீர் மூலம், பரவக்கூடியது

ஹெபடைடிஸ் - C வைரஸ்:
ஹெபடைடிஸ் - C வைரஸ் 1989-90 களில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நோய், HIV எய்ட்ஸ் வைரஸ்சை விட பல மடங்கு சக்தி வாய்ந்த உயிர்கொல்லி நோயாக பல்கிப் பெருகி வருகின்றது. இதற்கு எதிரான தடுப்பூசி இதுவரைக்கும் சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருக்கின்றது. இந்த C-வைர‍ஸ் - காமாலை நோய்தான் கல்லீரலை தாக்கி அழிக்கும் நோய்களில் முதல் இடத்தை பிடிக்கப் போகின்றது. இந்த C வைரஸ் போதை - ஊசி, தகாத பால் - உறவுகள் மூலம், பரவக்கூடியது.

ஹெபடைடிஸ்- D வைரஸ்:
B வைரஸ்சின் மறு உருவம் தான் D வைரஸ் என ஆய்வுகள் சொல்கின்றன. இது, B வைரஸ்சின் கோட் - புரதமுடன்-HBsAg பிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு உருவான புதுவகை வைரஸ்-HDV.  இது இயற்கையில் இல்லாத வைரஸ் இதுவும் எய்ட்ஸ் - நோயைப்போலத்தான் மனிதர்கள் மூலம் பரவுகின்றது.

கர்பிணி பெண்கள் - Pregnant கவனத்திற்கு ....
கருவி்ல் வளரும் குழந்தைக்கு இந்த வைரஸ்கள் தாய் மூலம் பரவியிருந்தால், அந்தக் குழந்தை பெரியவர்களாக வளரும் போது தீராத -கல்லீரல் நோயாக மாறி, அவர்களை வாட்டி வதைக்கும் ஏதுமறியாத குழந்தைகளுக்கு இப்படி ஒரு  தண்டனையா?

சிறு-பிள்ளைகளின் கல்லீரல் நோய்க்கான காரணம்:
வைரஸ் தொற்றுகளினால் மட்டுமல்ல, குழந்தைகள் அளவுக்கதிகமாக பழங்கள், இனிப்பு உணவுகளை விரும்பி உண்பதினால் கல்லீரலில் அளவுக்கதிகமாய் கொழுப்புகள் சேமிக்கப்பட்டு, கொழுப்பு - ஈரல் என்னும் நோயை உருவாக்கிக் கொள்கின்றனர். இதனால் அவர்களின் கல்லீரல் அன்றாட செயல்திறனை இழந்து, நாக்கில் தடிப்பு ஏற்பட்டு, வார்த்தைகளை உச்சரிக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள்.

நன்றி

BLOG COMMENTS POWERED BY DISQUS