Thursday, Mar 22nd

Last update08:40:09 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

வாங்க சிரிக்கலாம்

பிச்சைக் காரனின் பேராசை

E-mail Print PDF

ஒரு ஊரிலை ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் தினமும் பிச்சை எடுத்தே வயிற்றை வளப்பான்

ஒருநாள் அவன் தெரு வீதீ அருகே இருந்த வீட்டு வாசலில் நின்று ”பசிக்குதம்மா” ”பிச்சை போடுங்கம்மா” என்று கேட்டான்

வீட்டுக்காற எசமானி எட்டிப்பாத்தாள் பிச்சைக் க்காரன் வயிற்றைத் தடவிக் கொண்டு பசிக்குதம்மா ஏதன் சாப்பாடு இருந்தா தாருங்கம்ம என்று கேட்டான்

எசமானி வீட்டில் இருந்த சாப்பாட்டில் கொஞ்சத்தை அவருக்கு கொடுத்தாள்

மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்குச் சென்று வழமைபோல் பசிக்குதம்மா சாப்பாடு இருந்தா தாங்கம்மா என்று கேட்டான்

எசமானி அன்றும் சாப்படு குடுத்து அனுப்பினாள்

மறுநாளும் அந்த பிச்சைக்காறன் அந்த வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான். எசமானி சாப்பாட்டைக் குடுக்கும்போது அம்மா இந்த புத்தகத்தை கொஞ்சம் படியுங்கமா என்று ஒரு புஸ்தகத்தை கொடுத்தான்

எசமானி அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தள். அதில்”அறுசுவை உணவு சமைப்பது எப்படி” என சமையல் முறை எழுதப்பட்டு இருந்த்து.

மறுநாள் பிச்சைக்காரனுக்கு என்ன நடந்திருக்கும்.........

ஏப்ரல் 01 எனப்படுவது...

E-mail Print PDF

 1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!


அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

www.panippulam.com April 1st News::

பணிப்புலத்தில் மனிதர்களை விழுங்கும் பாம்பு.  பீதியில் மக்கள்.  ஒரு சிலரை காணவில்லை - வீடியோ

VIDEO: http://www.youtube.com/watch?v=chJNjZurNLw&feature=related

வேலைக்காரியின் இடுப்பில் கிள்ளும் எசமான்

E-mail Print PDF

கணவன்  மனைவியுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது மனைவியின் இடுப்பில் கணவன் கிள்ளிவிட்டார். அதற்கு

மனைவி: உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது ஆக்கள் இருக்கிற நேரத்திலை இப்படிச் செய்யாதேங்கோ எண்டு. ஆக்கள் பார்த்தால்?

வேலைகாரி: நல்லாய் சொல்லுங்கம்மா, நானும் எத்தனையோ தடவை அவருக்கு சொல்லியிட்டன்.

மனைவி: அப்ப உனக்கும்ம்ம் ?? ?

மாணவனின் டூப்

E-mail Print PDF

மாணவன்: எங்க பாட்டி செத்துப் போனாங்க. ஒருநாள் லீவு தாருங்க சேர் என்று கேட்டான்

வாத்தியார்: அப்படியா!, மற்றவங்க லீவு எடுத்துவிட்டு பின்பு வந்துதான் காரணம் சொல்லுவாங்க. நீ முன்னோடியான பிள்ளையாய் இருக்கிறியே இரண்டுநாள் லீவு எடுத்துக்கொள் என்று அனுப்பிவைக்கிறார்.

பாடசாலை முடிந்து வாத்தியார் வீட்டுக்குச் செல்லும் போது அந்த மாணவன் இறந்து விட்டதாக சொன்ன அந்தப் பாட்டி அவங்கவீட்டு வாசல் படியில் இருந்து பாக்குவெத்திலை இடித்துக் கொண்டிருந்தா. இதைப்பாத்ததும் வாத்தியாருக்கு தூக்கிவாரிப்போட்டது.,

வாத்தியார் பாட்டியாரிடம் போய் உங்க பேரன் நீங்க செத்துப்போய் விட்டதாக சொல்லி இரண்டுநாள் லீவு வாங்கி வந்தானே. நீங்க உயிரோடைதானே இருக்கிறியள் என்றார்.

பாட்டி: சிரிச்சுப் போட்டு அப்படியா சொன்னான். நான் ஏன் நேரத்துக்கு வீட்டை வாறாய் எண்டு கேட்டதுக்கு அவன் எங்கடை தமிழ் வாத்தியார் செத்துப் போனார் அதுதான்  பள்ளிக்குடம் நேரத்துக்கு விட்டுவிடாங்கள் என்றல்லோ சொன்னான் என்றாள்

தாத்தாவின் கரற்ரர்

E-mail Print PDF

வாத்தியார்: கந்தசாமி நேற்று ஏன் பள்ளிக்குடம் வரவில்லை? என்று கேட்டார்?

மாணவன்: சேர் எங்க பேத்தியார் செத்துப்போவிட்டா என்று சொன்னான்.

வாத்தியார்::
கந்தசாமி நீ போன கிழமைதானே பேத்தியார் செத்தது எண்டு லீவு எடுத்தனி; அதுக்கு முதல் மற்றப் பேத்தியார் செத்தது எண்டு லீவு எடுத்தனி இப்ப பேத்தி செத்துப் போச்சு என்று சொல்லுறியே என்றார்.

மாணவன்: அதற்கு கந்தசாமி, சேர் எங்கடை தாத்தாவின்ரை கரற்ரரைப் பற்றி உங்களுக்கு தெரியாதுங்க என்றான்.

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 5