Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

வட அமெரிக்கா

கனடா கோடைகால ஒன்றுகூடல் - 1700 க்கு மேற்பட்ட படங்கள் பதிவாகியுள்ளன

E-mail Print PDF

வீடு (வாங்க - விக்க) முகவர் சிவநேசன் சிவகுமார் அவர்கள் தனது நிறுவனத்தின் சார்பாக வழங்கிய பரிசு

வீடு (வாங்க - விக்க) முகவர் சிவபாதம் கிருஷ்ணகுமார் அவர்கள் தனது நிறுவனத்தின் சார்பாக வழங்கிய பரிசு

வீடு (வாங்க - விக்க)முகவர் கந்தசாமி வைகுந்தன் அவர்கள் தனது நிறுவனத்தின் சார்பாக வழங்கிய பரிசு

மார்க்கம் நகரில் பிரசித்தி பெற்ற "ஆரபி நகைமாடம்" உரிமையாளர் குமாரசாமி ஈஸ்வரன் அவர்கள் தங்கள் நகைமாடத்தின் சார்பாக தங்க நகையை பரிசாக வழங்கும் போது

ஸ்காபறோ நகரில் பிரசித்தி பெற்ற "தேவி நகைமாடம்" உரிமையாளர் குமாரசாமி கண்ணன் அவர்களின் பாரியார் தங்கள் நகைமாடத்தின் சார்பாக தங்க நகையை பரிசாக வழங்கும் போது

வீட்டுக் கடன் (மோகேச்) முகவர் சுப்பிரமணியம் சுபேந்திரன் அவர்கள் தமது நிறுவனத்தின் சார்பாக வழங்கிய பரிசு

 

 

 

ஆரம்பம் முதல் 900 படங்களைப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

மிகுதி 750 படங்களையும் பார்க்க இங்கே அழுத்துங்கள்

 

நன்றி

விசேட அறிவித்தல் - இன்று சனிக்கிழமை பண் கலை பண்பாட்டுக் கழக கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

E-mail Print PDF

05.08.2012 ஞாயிற்றுக்குக் கிழமை நடைபெற இருந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும், அன்றைய தினம் அடைமழை பெய்ய இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்திருப்பதனால்; 04.08.2012 சனிக்கிழமை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்பதனை எம்மூர் உறவுகள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குறுகிய இடைவெளியில் திகதி மாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இதனை எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் அழைத்து கூறுவதற்கு முடியாமல் உள்ளது என்பதனை மனவருத்ததுடன் தெரியப் படுத்திக் கொள்கின்றோம்.

இது உங்களின் மகிழ்ச்சிக்காக நீங்களே நிகழ்த்தும் நிகழ்வு, எனவே எல்லோரும் தவறாது சமூகம் தந்து விளையாட்டுப் போட்டிகளிலும், ஒன்று கூடலிலும் பங்கு பற்றிச் சிறப்பிக்கும் வண்ணம் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

தாங்கள் தொடர்ந்து வழங்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா


கோடைகால ஒன்றுகூடல் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - சனிக்கிழமை 4th of August 2012

E-mail Print PDF

 

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் 2012 - கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிவரும் 04.08.2012 சனிக்கிழமை Steels & McGowan சந்திப்பில் அமைந்துள்ள "மிலிக்கன் பூங்கா திடலில்" முற்பகல் 10 : 00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் விளையாட்டுப் போட்டிகள் யாவும் கனடா வாழ் எமூம்மூர் மக்களால் முன்னெடுத்துச் செயல் பெறும் தொழில் அதிபர்களினதும், தொழில் முகவர்களினதும் அனுசரனைகளுடன் இடம்பெறுவதால்; அவர்களால் வழங்கப்பெறும் பெறுமதி மிக்க தங்க நகைகளும், வீட்டுப் பொருட்களும், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் பரிசாக வழங்கப்பெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

நிகழ்ச்சிகள்:

பழம் பெறுக்கல் (சிறுவர்களுக்கு)

முயல் பாய்ச்சல் (சிறுவர்களுக்கு)

வினோத உடை (பொதுவானது)

ஓட்டப் போட்டி 100 மீற்ரர், 50 மீற்ரர் (கீழ், மத்திய, மேற்பிரிவினர்க்கும் முதியோர்க்கும்)

தடையோட்டங்கள் - (எல்லாப் பிரிவினர்க்கும்)

தேசிக்காய்-கறண்டி ஓட்டம் (எல்லாப் பிரிவினர்க்கும்)

ஜோடி சேர்தல் - கணவன் மனைவியர்க்கு

கயிறு இழுத்தல் எல்லாப் பிரிவினர்க்கும் (ஆண்கள் எதிர் பெண்கள்)

முட்டியடித்தல் (பொதுவானது)

வழமைபோல் மதிய போசனமாக கூழும், மாலை சிற்றூண்டியும்-வடை வாய்ப்பன் தேநீர், இரவு கொத்து றொட்டியும் வழங்கப்படும். ஆரம்பம் முதல் குளிபானம், பாபி கியூ (ஆடு, மாடு, கோழி, பண்டி), சோளன், வத்தகைப் பழம், குடிநீர் ஆதியன பரிமாறப்படும்

கனடா - ரொறொன்ரோ நகரில் பரந்து வாழும் எம்மூர் மக்கள் ஒன்றுகூடலில் இணைது கூடிக் குலாவி மகிழ்வுறும்போது; உறவுகள் மேம்படுகிறன, ஒற்றுமை வளர்கின்றது, புதிய உறவுகள் அறிமுகமாகின்றனர், இளையோர் இடையே புதிய நட்பும், உறவும், ஒற்றுமையும் உருவாகின்றன.

விளையாட்டில் திறமைசலிகள் கௌரவிக்கப்படுகின்றனர். விளையாட்டுகளில் விளையாட்டாக தோல்விகளைச் சந்தித்து சகித்துக் கொள்ளும் மனப்பாங்கைப் பெறுவதுடன். முயற்சி செய்து வெற்றி பெறவும் தூண்டப்படுகின்றனர்.


இவ் ஒன்றுகூடலின்போது பல புதிய விளையாட்டுக்களும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற எலா விளையாட்டுக்களும் இடபெறும் என்பதனையும் எல்லா உணவுகளும் பரிமாறப்பெறும் என்பதனையு அறியத் தருகின்றோம்.

இவ் விழாவை எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் இன்ப நாளாக கொண்டாட எம்மூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

 

2010 ம் ஆண்டு நடைபெற்ற கனடா - கோடைகால ஒன்று கூடல் நிகழ்வின் ஒரு பகுதி பார்வையிட இங்கே அழுத்துங்கள்


வரவேற்பு விருந்துபசாரம் - சோ. தேவராசா அவர்கள் - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

28,10.2011 அன்று கனடா வாழ் காலையடி மறுமலர்ச்சி மன்ற பழைய அங்கத்தினர்களால்; கனடா நாட்டிற்கு வருகை தந்திருந்த எம்மூர் பிரபல சட்டவல்லுனரும், காலையடி மறுமலர்ச்சி மன்ற ஸ்தாபகர்களுள் ஒருவருமான உயர்திரு. சோ. தேவராசா அவர்களை வரவேற்று நிகழ்வுற்ற விருந்துபசார நிகழ்வின்போது கனடாவில் நடைபெறும் எம்மூர் மக்களின் பொது நிகழ்வுகளை அதிநவீன கருவிகள் மூலம் படமாக்கும் "அபிநயா வீடியோ" உரிமையாளரான திரு. ஆனந்தன் அவர்களால் படமாக்கப்பெற்ற வீடியோ காட்சிகள் கீழே பதிவாகியுள்ளன.

வீடியோ பகுதி - 1

வீடியோ பகுதி - 2

வீடியோ பகுதி - 3

வீடியோ பகுதி - 4

Page 10 of 18