Wednesday, Sep 20th

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

ஆலயங்கள்

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மகர மண்டல பூஜை - 18.12.2016 - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

கனடா - ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய மகரமண்டல பூஜையின் 33வது நாள் பூஜை 18.12.2016 அன்று பணிப்புலம் மக்களின் விழாவாக நிகழ்கின்றது.
இவ் விழா கனடா வாழ் மாலை அணிந்த (மணிகண்ட சாமிமார், கன்னிச் சாமிமார்) சாமிமார் ஆதரவில் நிகழ்வுற்றது.

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

Image may contain: 1 person, indoor

 


பறாளை சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான புனராவர்த்தன கும்பாபிஷேகம் - புனருத்தாரண திருப்பணி நன்கொடை கோரல்

E-mail Print PDF

No automatic alt text available.

ஓம் சரவணபவ

பறாளை முருகன் துனை

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே

சுழிபுரம் பறாளை முருகன் தேவஸ்தான ”புனராவர்த்தன கும்பாபிஷேகம்” எதிவரும் 09.04.2017 ம் திகதி அமைந்துள்ள சுப முகூர்த்தத்தில் நடைபெற வேண்டும் என சிவாச்சாரியர்களினால் நிர்ணயிக்கப் பெற்றுள்ளதால்; ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பிக்கப் பெற்று நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஆலய கருவறை, பிரகாரம், கோபுரம், உள்பிரகார தரை முதலியன பழுது பட்டிருப்பதனால்; மூலவர், பரிவார மூர்த்திகள் பாலஸ்தாபனம் (பாலாலயம்) செய்து; பழுதடைந்த கட்டிடங்கள் புனருத்தாரணம் செய்யப் பெற்று, வர்ணங்கள் பூசப் பெற்று அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்பிரகார வேலைகள் ஆரம்பிக்கப் பெற்று நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன்; மூலமூர்த்தியும், பரிவார மூர்த்திகளும் 19.01..2017ம் திகதி அமைந்துள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் செய்யப் பெற்று; கருவறை-ஸ்தூபி, மகாமண்டப-ஸ்தூபி, மற்றும் கோபுர வேலைகள் ஆரம்பமாக உள்ளன.

சாந்தை சித்திவிநாயகர் மஹோற்சவ விழா - 2017 முன்னறிவித்தல். - விளக்கங்களுடன்

E-mail Print PDF
சாந்தை சித்திவிநாயகர் தீர்த்த உச்சவம் ஒவ்வொரு வருடமும் தமிழுக்கு ஆடிமாதத்தில் வரும் "பௌர்ணமி" திதி தினத்தில் நடைபெறுவதால்; அத் தினத்தை ஆதாரமாக கொண்டு கொடியேற்ற விழாவுக்கான தினம் தீர்மானிக்கப் பெறுகின்றது. அத்துடன் தீர்த்த உச்சவம் காலைப்பொழுதில் நடைபெறுவதால்  ”பௌர்ணமி திதி" காலைப் பொழுதில் உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப் பெறுகின்றது.

அதன் பிரகாரம் கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும்  மஹோற்சவ விழா பன்னிரண்டு தின்ங்கள் நடைபெறுகின்றன.  ஒன்பதவது நாள் ”வேட்டைத் திருவிழா”வும், பத்தாவது நாள் ”சப்பறத் திருவிழா”வும், பதினொராவது நாள் ”தேர்த்திருவிழா”வும், பன்னிரண்டாவது நாள் ”தீர்த்த திருவிழா”வும் நடைபெற்று நிறைவு பெறுகின்றது.

பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் மஹோற்சவ விழா முன்னறிவித்தல் -2017 - விளக்கம் இணைப்பு

E-mail Print PDF

No automatic alt text available.

அம்பிகையின் தீர்த்த உச்சவம் "ஆடிப்பூரம்" தினத்தில் நடைபெறுவதால்; அத் தினத்தை ஆதாரமாக கொண்டு கொடியேற்ற விழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பெறுகின்றது. அத்துடன் தீர்த்த உச்சவம் காலைப்பொழுதில் நடைபெறுவதால் "பூரம் நட்சத்திரம்" காலைப் பொழுதில் உதயமாகி உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப் பெறுகின்றது.

அதன் பிரகாரம் கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும்  மஹோற்சவ விழாவின் பன்னிரண்டாவது நாள் ”வேட்டைத் திருவிழா”வும், பதின்மூன்றாவது நாள் ”சப்பறத் திருவிழா”வும், பதின்நான்காவது நாள் ”தேர்த்திருவிழா”வும், பதினைந்தாவது நாள் ”தீர்த்த திருவிழா”வும் நடைபெற்று நிறைவு பெறுகின்றது.

 


வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவ விழா - 2016 நிகழ்வுற்ற தேர்த் திருவிழா நிகழ்வுகள் இணைப்பு

E-mail Print PDF

15.10.2016 வெள்ளிக்கிழமை நிகழ்வுற்ற தேர் உறாவ நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துகr

வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம் யாழ்மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் ”வல்லிபுரம்” எனும் ஊரில் அமைந்துள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.

இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக சுயம்பு வடிவில் (தானாகவே) தோன்றிய விஷ்ணுவின் ”சுதர்சனச் சக்கரம்”அமைந்துள்ளது. ஆலயத்தில் திருத்த வேலைகளுக்காக பாலஸ்தானம் செய்யப் பெறும்போது கூட இவ் சுதர்சன சக்கரம் பாலஸ்தானம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 4 of 46