Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

ஆலயங்கள்

சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த் திருவிழா - தீர்த்தத் திருவிழா - 2015 - படங்கள், கவிதை, இணைப்பு

E-mail Print PDF

சாந்தை சித்திவிநாயகர் தேரினில் ஆரோகணித்து அருள்பாலிக்கும் காட்சிகளை தரிசிக்க இங்கே அழுத்துக

சாந்தை - சித்திவிநாயகர் சம்பில்துறை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடி சம்புநாதீஸ்வரருடன் சங்கமிக்கும் நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துக

தேரேறி வருகிறான்!

சாந்தைத் தளபதி செல்வக் கணபதி

சாந்த சொரூபி இன்று தேரேறி வருகிறான்!

மாந்தர் ஆண் பெண்கள் மகிழ்ந்தே வடம்பிடிக்க

காந்த விநாயகன் இன்று தேரேறி வருகிறான்!

ஆடிப் பூரணையில் அலங்காரத் தேரேறி

ஆடி ஆடி அவன் வீதி உலா வருகிறான்!

கூடி வரும் அடியார் குறை அழித்து ஒழிப்பதற்கு

நாடிய எம் தலைவன் தேரேறி வருகிறான்!

செட்டியார் குலத்துதித்த சித்தி விநாயகன்

கட்டிய தேரேறிக் காட்சி தர வருசிறான்

முட்டியே அடியவர்கள் சூழ்ந்து வரும் சாந்தையில்

வட்டியுடன் வரமருளும் வள்ளல் தேரேறி வருகிறான்

ஆதியந்தம் அறியாத அப்பன் சாந்தையான்

ஆணவ மலமழிக்கத் தேரேறி வருகிறான்!

நாதியற்ற தமிழினம் படுகின்ற துயர் துடைக்க

நற்றவ விநாயகன் தேரேறி வருகிறான்!

பாரதக் கதையெழுதி அறமுரைத்த நாயகன்

மா ரதத்தில் ஏறி இன்று வீதி உலா வருகிறான்!

வாரண முகத்தான் ஓங்காரப் பொருளின்

காரண கர்த்தன் சாந்தையான் தேரேறி வருகிறான்!

ஆ .த . குணத்திலகம்
ஓய்வு நிலை ஆசிரியர்
அகில இலங்கை சமாதான நீதிவான்
சாந்தை, பண்டத்தரிப்பு .


சாந்தை சித்திவிநாயகர் ஆலய திருவிழாவை தரிசிக்க இங்கே அழுத்துக

சரித்திர நோக்கில் சாந்தையும் விநாயகர் ஆலயம் ( ஆய்வுக்கட்டுரை)

ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.
ஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.

2015 - காலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் தேர்த் திருவிழா - 16.05.2015 - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

ஞானவேலவனை தேரினில் தரிசிக்க கீழே உள்ள பகுதிகளை அழுத்துக

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

குதி - 5

குதி - 6

குதி - 7

பகுதி - 8

பகுதி - 9

நன்றி: வீடியோ - காலையடி.ஒஆர்ஜி

”கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” - திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - 04.09.2016

E-mail Print PDF


இலங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி விழா; இம் முறை புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துடன் எதிர் வரும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 19ம் நாள் (04.09.2016) ஞாயிற்றுக் கிழமை அத்த நட்சத்திரமும் கன்னி லக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தல் காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் குடமுழுக்கு வைபவம் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.

திருவெண்காடு புண்ணிய பதியும் மண்டைதீவு கிராமமும் விழாக்கோலம் காணவிருக்கும் இப்புனித நன்நாளில் வெண்காட்டுப் பெருமானின் குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு வாயாரப் பாடி மனதார நினைந்து ஆனந்த கண்ணீர் சொரிந்து வாழ்நாளில் இன்பம் காண விரும்பும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு எம் பெருமானின் பெருங் கருணைக்கு பாத்திரமாகி பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக !
பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.

திருவெண்காடு சித்திவிநாயகரை தரிசிக்க இங்கே அழுத்துக

இங்ஙனம்.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.

 

 

 

1300.19.03.3016

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா - 2015

E-mail Print PDF

கச்சதீவு அந்தோனியார் ஆலய திரு விழா இன்று 28ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகி, மறுநாள் மார்ச் மாதம் முதலாம் திகதி காலையில் தேர் பவனி, திருப்பலி பூஜைகளும், கொடி இறக்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த திருவிழாவில் பங்கு கொள்வதற்காக இந்தியாவிலிருந்து 5,000 பேரும் இலங்கையிலிருந்து 2,000 பேரும் பதிவுகளை மேற் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று 28ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவைகள் ஆரம்பிக்கும். அதிகாலை 5 மணியிலிருந்து தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற் கான கட்டணமாக 72 ரூபாய் அற விடப்படும். படகு சேவையில் ஒரு வழிப்பயணத்துக்கு 225 ரூபாய் அறவிடப்படும். இந்த படகுசேவை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்.

கச்சதீவு திருவிழா நடைபெறும் தினத்தில் 150 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். அம்பியூலன்ஸ் சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

28ஆம் திகதி இரவு உணவும் மார்ச் முதலாம் திகதி காலை உணவும் கடற்படையினரால் வழங்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு செல்பவர்கள் ஆலய சூழலை சுகாதாரமாக பேணுவதுடன், பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை தடைசெய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை முதல் கச்சதீவு நோக்கி தமிழகத்திலிருந்து வரும் படகுகளுக்கும் இலங்கையிலிருந்து கச்சதீவு நோக்கி செல்லும் படகுகளுக்கும் கடற்படை படகுகள் விசேட பாதுகாப்பு வழங்குவதுடன் கச்சதீவுக்குள் உணவு, குடிநீர் மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிக்காட்டுவானிலிருந்து இன்று காலை அரச அதிகாரிகளுக்காக விசேட படகுச் சேவையொன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு சிறப்பு திருப்பலி, சிலுவை பாதை பூஜை நடக்கிறது. 1 ஆம் திகதி காலை திருப்பலி பூஜை முடிந்ததும், கொடி இறக்கப் படும். விழாவில், இலங்கை யாழ்ப் பாணம் மறை மாவட்ட பிஷப், தமிழக கத்தோலிக்க பாதிரியார்கள் கலந்து கொள்வார்கள்.

Page 9 of 46