Tuesday, Dec 12th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், ஆலயத்திற்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக்களை (சூறையாடும்) தம்முடமையாக்கும் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என தம்மை அறிமுகம் செய்யும் தர்மகர்த்தாக்கள் - பல புதிய விபரங்களுடன்:

ஆலயத்திற்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக்களை (சூறையாடும்) தம்முடமையாக்கும் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என தம்மை அறிமுகம் செய்யும் தர்மகர்த்தாக்கள் - பல புதிய விபரங்களுடன்:

E-mail Print PDF

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான அசையும், அசையா சமயத்தரும நம்பிக்கைச் சொத்துக்களை இவ் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என தம்மை கூறிக் கொள்ளும் இவர்கள்; ஆலய உறுதிகளிலும், மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பெற்ற தீர்ப்புகளிலும் இவர்கள் யாபெரும் தர்மகர்த்தாக்கள் என உறுதி செய்யப் பெற்றுள்ளனர்.

இவர்களில் இருவர் ஆலயத்திற்கு சொந்தமான ஆலயம் அமைந்துள்ள 7 பரப்பு காணியையும், சாந்தையில் இருக்கும் இரண்டு வளவுகளையும், இடையன்புலத்தில் இருக்கும் வயல் காணியையும்; இவை தவிர்ந்த பொது மக்களால் வழங்கப் பெற்ற தேரோடும் வீதியாக இருக்கும் ஆதனத்தையும், வீட்டையும்  தமது சொந்த ஆதனங்களாக 02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 இலக்க உறுதி மூலம் தமதாக்கியுள்ளனர்.

1.
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறைபணிப்புலம்பரப்பு நிலம் இலாச்சம் ஏழு என்னும் ஆதனத்தில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதனைச் சேர்ந்த ஆதனங்களும், அசையும் அசையா சொத்துக்களுக்கும் சுழிபுரத்தைச் சேர்ந்த வேலாயுதர் கனகர் அவர்கள் உரிமையாளராகவும், தர்மகர்த்தாவாகவும், மனேச்சராகவும், பூசகருமாக உள்ளார் என 25.06.1906 ம் திகதி பிரசித்த நொத்தாரிஸ் வீ. சீனிவாசகம் அவர்கள் அத்தாட்சிப் படுத்திய உறுதி இலக்க 11265 ல் உறுதியின் பிரகாரம் உறுதிப்படுதப் பெற்றுள்ளது.

2.    15.02.1934 அன்று பிரசித்த நொத்தாரிஸ் தா. வைத்திலிங்கம் 399ம் இலக்கத்தில் அத்தாட்சிப் படுத்திய உறுதி மூலம் பூசகர் வேலாயுதர் கனகர் அவர்கள் சுழிபுரம் இறைபணிப்புலம்பரப்பு நிலம் இலாச்சம் ஏழு என்னும் ஆதனத்தில் எழுந்தருளியிருக்கும் மகாமுத்துமாரி அம்மன் ஆலயபூசை உரிமையையும், அசையும் அசையா சொத்துக்கள் பராமரிக்கும் உரித்துக்களையும் தனது பிள்ளைகளான பூசகர் சுப்பையா, கந்தையா, பூசகர் வேலாயுதம், பூசகர் தம்பிப்பிள்ளை ஆகியோருக்கு சமபங்காக கையளித்து ஆலயத்தை பராமரித்து பூசைகள் செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார்.

அதன்பிரகாரம்; பூசகர் கனகரும், அவரின் வாரிசுகளாக உள்ளோரும் ஆலய தர்மகர்த்தாக்களாகவே இருந்துள்ளார்கள். விளக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் ஆலய ஸ்தாபகர் பரம்பரையில் வந்தவர்கள் அல்ல என்பதுவும்; இடையிட்டு வந்த

வர்கள் என்பதுவும் புலனாகின்றது.

ஆனால்; தாமே இவ் ஆலயத்தின் ஆதீனகர்த்தாக்கள் என விளம்பரப்படுத்தும் நோக்குடன் அண்மைக் காலமாக ஆலய மஹோற்சவ விழா நோட்டீஸ்களில் பதிவிலிட்டும், CD மூலம் கதையாகவும், பாடலாகவும் பதிவிலிட்டு ஆலயத்தில் ஒலிபெருக்கி மூலம் தவறாது ஒலிபரப்புச் செய்து இளம் சந்ததியினரை திசைதிருப்பி வருகின்றனர்.


3.    23.11.1979
ம் திகதி யாழ்/மாவட்ட நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கட்டளை பிறப்பிக்கப் பெற்றஆலய பரிபாலன முகாமைத்துவ நடவடிக்கை முறைத் திட்டத்தின் முதலாம் பந்தியில் குறிப்பிட்டிருப்பதாவது;

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சுழிபுரம் இறைபணிப்புலம் பரப்பு நில இலாச்சம் ஏழுஎன்னும் காணியில் எழுந்தருளி இருக்கும் மகாமுத்துமாரி அம்மன் கோவிலும் அதைச் சேர்ந்த அசைவுள்ள (உறுதிகள் உள்ள) அசைவற்ற ஆதனங்களும் சமயத்தரும நம்பிக்கைச் சொத்தாகும்என 23.11.1979 அன்று யாழ்மாவட்ட நீதிமன்றினால் அங்கீகரிக்கப் பெற்று அதனை அமூல் படுத்துவதற்கான கட்டளையும் அன்றே பிறப்பிக்கப் பெற்றுள்ளது.

4.
இவ் ஆலயமும், அதனுடன் இணைந்த எல்லாக் கட்டிடங்களும், அதனைச் சேர்ந்த அசையும், அசையா சொத்துக்கள் யாவும் பொது மக்கள் நன்கொடைகளாகவும், நேர்த்தியாகவும் ஆலயத்திற்கு அவ்வப்போது வழங்கப் பெற்ற பொதுச் சொத்தாகும்.

இவ் ஆலய வளாகமானது (தேரோடும் வீதியுடன்) தற்பொழுது நில இலாச்சம் 33.01 பரப்பளவைக் கொண்டதாகும். இதில் ஆலய ஸ்தாபகரின் சொந்த நிலமாக ஆலயம் அமைந்த நில இலாச்சம் 7 பரப்பு தவிர்ந்த மிகுதி 26.01 பரப்பு நிலம் ஆலய தேரோடும் வீதி அமைப்பதற்காகவும், ஆலயத்தை விசாலமாக அமைப்பதற்கும் பொது மக்கள் அவ்வப்போது ஆலயத்திற்கு வழங்கப் பெற்ற பொது நிலமாகும். இதற்கான ஆவணங்கள் எதுவும் ஆலயத்தை பரிபாலிப்பவர்களிடம் இல்லை என்பதே உண்மை. ஆலய பரிபாலகர்கள் இன்றுவரை பரப்பு நில இலாச்சம் 7 பரப்பிற்கான வரிப் பணத்தையே பிரதேச சபை யில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ் ஆலயத்திற்கு சொந்தமானகண்ணாம்பிச் சாந்தை, வேட்டையாடு சாந்தை,இடையன்புலம் ஆகிய மூன்று ஆதனங்களையும் கந்தையா சதாசிவக் குருக்கள், வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் ஆகியோர் இரு பங்குகளாக கூறு போட்டு அவர்களது சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தி; அவற்றை தமது இளைய மகன்மாருக்கு சொந்த ஆதனமாக ஒப்படைத்து உறுதியாக்கப் பெற்றுள்ளது. ஆலய பங்குரிமைகாரர்கள் தங்கள் பங்குக் காலத்தில் இவ் ஆதனங்களில் இருந்து வரும் வருமானங்களையும் பெற்று பூசைகளை சிறப்பாக செய்வதற்காகவே பொது மக்களால் இவ் ஆதனங்கள் ஆலயத்திற்கு நன்கொடைகளாக வழங்கப் பெற்றவைகளாகும்.

5.
ஆலய சமயத்தரும நம்பிகைச் சொத்துக்களை; ஆலய தர்மகர்த்தாக்களோ, அன்றி ஆலயத்தை பரிபாலிப்பவர்களோ, மேற்பார்வை செய்பவர்களோ அல்லது ஆலயத்தில் பூசை செய்து வருபவர்களோ அவற்றிற்கு சொந்தம் கொண்டாடவோ, அபகரிக்கவோ, தம்வயப்படுத்திக் கொள்ளவோ அல்லது ஆட்சி உரிமையை காட்டி நன்கொடை வழங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்பது யாபெரும் அறிந்ததே.

ஆனால்; 02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 உறுதி மூலம் ஆலய பரிபாலனத்தையும், ஆலய வளாகத்தின் ஆலயத்தின் வடக்கு-உள்வீதிக்கும், வடக்கு வெளிவீதிக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆலய ஆதீனகர்த்தாக்கள் இருவருக்கு 1. கந்தையா சதாசிவக் குருக்கள், 2. வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் ஆகியோருக்கு அவர்களது சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளதுடன்; கந்தையா சதாசிவம் குருக்கள் தனது இளைய மகனான சிவஸ்ரீ அற்புதராசா குருக்களுக்கும், வேலாயுதம் பேரின்பநாதன் குருக்கள் தனது இளையமகனான சிவஸ்ரீ இன்பராசா குருக்களுக்கும் அவர்களின் சொந்த ஆதனங்களாக வெளிப்படுத்தி தமது சீவிய உரித்துடன் ஒப்படைத்துள்ளனர். சிவஸ்ரீ பேரின்பநாதக் குருக்கள் பெற்றுக் கொண்ட வீட்டுடன் கூடிய ஆதனத்திற்கு ஆலய வடக்கு உள்வீதியில் அமைந்துள்ள இரண்டாம் தீர்த்தக் கிணற்றிலும், ஆலயவெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள கிணற்றில் வழிவாய்கால் பாவிப்புடன் கூடிய கிணற்றுப் பங்கும் (ஆலய மணிமண்டப வாசலின் முன்பக்கமாக) வழங்கி உறுதியாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய வளாக ஆதனத்தில் ஆலய வடக்கு உள்வீதிக்கும், வடக்கு வெளி வீதிக்கும் இடையில் அமைந்த நிலத்தில் பூந்தோட்டமும், அபிழ்சேகத்திற்கு தேவையான இளநீர், வெற்றிலை, பாக்கு மற்றும் தேசிக்காய் போன்றனவற்றை பெற்றுக் கொள்வதாக தென்னை, கமுகு, வெற்றிலைக் கொழுந்து என்பனவற்றையும் பூ மரங்களையும் சமாதியாகிய ஆதீனகர்த்தாக்கள் பயிரிட்டு பூசைக்குரிய பூக்களையும், அபிழ்ஷேகத்துக்குரிய பொருட்களையும் பெற்று வந்தனர். அவை இப்போது அழிந்து விட அவற்றை மாற்றீடு செய்யாது தமது ஆட்சி உரிமை காட்டி அவ் ஆதனத்தை தமது சொந்த ஆதனமாக உரிமையாக்கியுள்ளார்கள்.

அதனால்; ஆலய வாகனசாலையை விசாலமாக்கி கட்டுவதற்கோ, அல்லது புதிதாக வேறு தேவைகளுக்கான கட்டிடங்களை அமைப்பதற்கோ இடமின்மை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்திற்கு பொதுமக்கள் தங்கள் நேர்த்திகளாக வழங்கும் வாகனங்கள், குடைகள் யாவும் இடமின்மை காரணமாக உள்வீதியில் வைக்கப் பெற்று இருப்பதனால்; தூசுகளினாலும், மழைத் தூவானங்களினாலும் சேதமடைகின்றன.  

வேலாயுதம் பேரின்பநாதன் குருக்களுகள் உறுதியாக்கிக் கொண்ட ஆதனத்தில் அமைந்துள்ள வீடு ஆலய பங்குரிமைகாரர்கள் தமது பங்குரிமைக் காலத்தில் தங்கியிருந்து ஆலயத்தை பரிபாலித்து வருவதுடன்; மஹோற்சவ விழாகாலத்தில் வெளியூர் குருக்கள்மாருக்கு தங்குமிடவசதி கொடுக்கவேண்டி இருந்தமையால் இவ் வீட்டையும் திருத்தி விசாலமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால், 2003 – 2006 ஆண்டு காலத்தில் இராசகோபுரம் அமைப்பதற்காக சுமார் 35 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட முன் கொட்டகை கழற்றப் பெற்ற போது அவறில் இருந்த ஓடுகள், மரங்கள், தீராந்திகளைக் கொண்டு இவ் வீட்டில் வசித்து வந்த வேலாயுதம் பேரின்பநாதக் குருக்கள் அவர்கள் ஆலய வீட்டு வாடகைப் பணத்தை செலவு செய்து அவ் வீட்டை விசாலமாக திருத்தி அமைக்கும் திருப்பணியச் செய்துள்ளார்.

1975 - 1976
ஆகிய காலப் பகுதியில் அமைந்த தமிழ் வருடம் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களின் பூசை உருமைக்காலமாகும். அதனால் பூசகர் வேலாயுதம் அவர்கள் ஆலய வீட்டில் தங்கியிருந்து ஆலயத்தை பரிபாலித்து பூசைகளை செய்வித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த தமிழ் வருஷம் பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு உரிய காலமாகும். பூசகர் கனகர் வேலாயுதம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தமையால் தம்பியாரான பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் அனுமதியுடன் அங்கு வாழ்ந்து அதே வருடம் இறைபதம் எய்தினார்.

இறைபதம் எய்திய தந்தையாரின் பிதிர் கடமைகளை செய்வதற்காக பேரின்பநாத குருக்கள் அவ் வீட்டில் வசித்து வருகையில் ஆலயத்தில் உரிமைகாரர்களுக்கும், திருப்பணிச் சபையினருக்கும்ம் இடையே எழுந்த உரிமைப் பிரச்சனை காரணமாக ஆலயம் பூட்டப் பெற்றது. அதனால் ஆலயம் மீண்டும் திறக்கும் வரை பூசகர் பேரின்பநாதன் அவர்கள் அவ் வீட்டிலேய வசித்து வந்தார்.

அத்துடன் ஆலய பூசை உரிமை பங்காளிகளுடன் செய்த ஒப்பந்தத்தின் பிரகாரமும், பூசை உரிமை பங்காளிகள் ஆலய வீதிச் சுற்றாடலில் வசித்து வந்தமையாலும், வாடகையாக ஆலயத்தில் திருப்பணி செய்வதாகவும் கூறியமையால் இன்றுவரை அவரே கோயில் வீட்டில் வசித்து வருகின்றார். (அதனால் அவர் அங்கு வசித்த காலத்தை தனது ஆட்சிக் காலம் என குறிப்பிடுகின்றார்.)

6.    (இவ் ஆலயம் பூசைகள் இன்றி பூட்டப் பெற்றதற்கான சூழ்நிலை) இவ் ஆலய தர்மகர்த்தாக்களாக இருந்த பூசகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் தம்பிப்பிள்ளை அவர்களும் இருவாரகால இடைவெளியில் சமாதியடைந்ததும்; இவ் ஆலயத்தில் இயங்கி வந்த திருப்பணிச் சபையினர் ஆலய நிர்வாகத்தை கைப்பற்ற முயன்றதால்; ஆலய தர்மகர்த்தாக்களுக்கும் ஆலய திருப்பணிச் சபையினருக்கும் இடையில் எழுந்த உரிமைப் பிரச்சனை காரணமாக இவ் ஆலயம் பூட்டப் பெற்று மஜிஸ்றேற் / மாவட்ட / உயர் நீதிமன்றுகளில் (10845, TR-1807, TR-2149) வழக்கு நடைபெற்று வந்தன.

இவ் ஆலயம் நிரந்தரமாக பூட்டப் பெற்றிருந்த 1976ம் - 1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்; இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் 1978ம் ஆண்டு ஆலய உரிமைகாரர் சுமார்வருடம் கீரிமலை ஐயம்பிள்ளைக் குருக்கள், அளவெட்டி நவரத்தின குருக்கள் மூலம் பூசைகள் செய்து வந்ததுடன், அவர்களை பூசைகள் செய்யவிடாது இனம் தெரியாதோர் மறித்ததினால்; 1979ல் நித்திய பூசைகளை செய்வதற்காக இதுவரைகாலமும் ஆசாரமற்று இருந்த கந்தையா சதாசிவம், வேலாயுதம் பேரின்பநாதன், தம்பிப்பிள்ளை அம்பிகைபாலன் ஆகியோர் சமயதீட்சை பெற்று வீரசைவர்களாகி ஆசாரசீலர்களாக நித்திய பூசைகளை செய்து வந்துள்ளனர். அதனைத் தொடந்து எழுந்த குழப்பம்கள் காரணமாக மீண்டும் ஆலயம் பூட்டப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சில வருடங்களின் பின்னர் வழிபடுவோர் சபையினர் சமர்ப்பித்த மனுவின் பிரகாரம் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பெற்று; (சுமார் 9 வருடங்கள் 1985 முதல் 1994ம் ஆண்டுவரை) இவ் ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக நைமித்திய காமிக பூசைகளையும்; 1970ம் ஆண்டு முதல் 1976 ம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதியில் இவ் ஆலய நித்திய (மூன்று காலம்) பூசைகளும், நைமித்திய, காமிக பூசைகளும் சுழிபுரம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராமண (பறாளாய் முருகன் ஆலய பிரதம குரு பாலகுருசாமி சர்மா முதலான) குருமார் மூலம் நடாத்தப் பெற்று வந்துள்ளது.

1970 கும்பாபிஷேகம் முதல் ஆலயம் பூட்டப் பெற்ற காலம் வரை (1976 வரை) சுழிபுரம் குடியிருப்பு பிராமண குருமார் மூலம் நித்திய, நைமித்திய, காமிக பூசைகளை செய்வித்து வரும் இக் காலகட்டத்தில்; மல்லாகம் நீதிமன்று தீக்கிரையானதால் வழக்கு கோப்புகள் யாவும் அழிந்துபோயின. 1993ம் ஆண்டு தமிழீழ காவல்துறையினர் தலையிட்டு விசாரணை செய்த பின்னர் 1994.02.05 அன்று ஆலய முழுப்பொறுப்பையும் ஆலய தர்மகர்த்தா பரம்பரையினரிடம் ஒப்படைத்தனர்.

இவ் ஆலய தர்மகர்த்தாக்கள் ஆசாரமற்றவர்களாக இருந்தமையால்; 1970ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் பின்னர் பிராமண குருமாரே எல்லாப் பூசைகளையும் செய்ய வேண்டும் என பொது மக்கள் விரும்பினர். அதனால் திருப்பணிச் சபையினர் ஆலய பூசகர்களின் முழுச் சம்மதத்துடன் பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்று நித்திய பூசைக்கான ஊதியத்தை பிராமண குருமாருக்கு வழங்கி வந்தனர். ஆனால் நைமித்திய, காமிக பூசைகளுக்கான ஒழுங்குகள் யாவும், ஆதீனகர்த்தாக்கள் வழமைபோல் செய்து வந்ததுடன். அதற்கான ஊதியத்தையும் பிராமண குருமாருக்கு வழங்கி வந்துள்ளனர்.

இதுவரை காலமும் இவ் ஆலய தர்மகர்த்தாக்களாகவும், பரிபாலகர்களாகவும், பூசகர்களாகவும் செயல் பெற்று; ஆலயத்தை பொதுமக்களின் நேர்த்திகள், நன்கொடைகளுடன் வளர்த்தெடுத்து; தமது சொந்த வருமானத்திற்கேற்ப (ஆலய சொத்துக்களை, நன்கொடைகளை தீண்டாது) வாழ்ந்து சமாதி அடைந்த பூசகர் வேலாயுதர் கனகர், பூசகர் கனகர் சுப்பையா, பூசகர் கனகர் கந்தையா, பூசகர் கனகர் வேலாயுதம், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை ஆகியோரினால் ஆலய அசையும் அசையா சொத்துக்களை தமக்கு உரிமையாக்கிக் கொள்ள முடியாது இருந்தனர் அல்லது செய்ய விரும்பாது இருந்த ஆலய (அசையும், அசையா) வளங்களை இரகசியமாக தமக்கே உரிமையாக்கும் சுயநல செயலை; சமாதியாகிய பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் பின்னுரிமைகாரர்களுக்கு தெரியாமல்; பூசகர் கந்தையா அவர்களினதும், பூசகர் வேலாயுதம் அவர்களினதும் தற்போதைய உரிமைகாரர்களாக இருக்கும் தர்மகர்த்தாக்கள் இருவர் செய்துள்ளனர்.

ஆலயத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து ஆலய அசையும், அசையா சொத்துக்களை பராமரித்து, பாதுகாத்து ஆலயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தர்மகர்ர்த்தாக்களே பயிரை மேய்ந்து தம் பிள்ளைகளை போசிக்கின்றனர்.

அதனால்; 02.08.2012 ம் திகதி உறுதி இலக்கம் 1405 உறுதி மூலம் மூன்றாவது பங்காளிக்கு தெரியாமல் இரகசியமாக எழுதப் பெற்ற உறுதியை செல்லுபடியற்றதாக தீர்ப்பு வழங்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் பங்கிற்கு யாழ்/மாவட்ட நீதிமன்றினால் நியமிக்கப் பெற்ற பின்னுரிமைகாரர்களால் வழக்குத் தொடரப்பெற்றுள்ளது.

நன்றி

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS