Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், மகர மண்டல விழா நிறைவும் பைரவர் மடையும் - கனடா ஐயப்பர் இந்து ஆலயம் - படங்கள் இணைப்பு

மகர மண்டல விழா நிறைவும் பைரவர் மடையும் - கனடா ஐயப்பர் இந்து ஆலயம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF
Image may contain: one or more people and indoor

மகர மண்டல விழா நிறைவும் பைரவர் மடையும் - கனடா ஐயப்பர் இந்து ஆலயம்

நிகழ்வுகளை தரிசிக்க கீழே உள்ள லிங்கை அழுத்துக

https://photos.google.com/…/AF1QipMtm-T601cqOSpqjK4Uahe4nSg…

 

அஷ்ட பைரவர்கள்

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதாலும்;  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதாலும் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார்.

பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான். தாருகாவன அழிவிற்குப் பிறகு ஈஸ்வரன் யோகா நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக ஈஸ்வரனின் கண்களை மூடி விடுகிறாள். ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார். ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும், இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கைப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பெரிய சிவபக்தர்கள். இவர்கள் தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். உலகெங்கும் ஒளியே இல்லாமல் இருக்கிறது. இருள் சூழ்ந்த உலகில் அசுரர்களின் தீயச்செயல்கள் பெருகுகின்றன.

அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்து நின்ற உலகை விடுவிக்க , தேவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். தாருகா (வனத்தை) புரம் அக்கினி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதை சக்தி தேவி தமது குமாரனாக எடுத்து வளர்த்து வந்தாள். தேவர்களின் துயர் நீக்க அக்கினிகுஞ்சுக்கு ஈசன் ஆணையிட, அதில் விஸ்வரூபம் எடுத்தவர் (வந்தவர் தான்) பைரவர். தேவர்களை காக்க எழுகிறார்.

முதலில் 8 பிரிவாக செயல்பட்டு, பிறகு 64 மூர்த்தங்களில் 64 சக்தி கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும், சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கின்றார். தனது பூத கணங்களுடன் ஒருவராக அவர்களை சேர்த்துக்கொள்கின்றார்.

சிவபக்தர்களான அரக்கர்களை அழித்த தோஷம் நீங்குவதற்காக ஸ்ரீ யோகபைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார். இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார ரூபமாக இருந்து அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும், சம்பக சஷ்டி எனவும் அழைக்கப்பட்டு கார்த்திகை மாதம் வரும் அம்மாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று காப்பு கட்டுதல் விழாவுடன் துவங்கி ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து தினம்தோறும் அஷ்ட பைரவர் ஹோமம், அபிஷேக ஆராதனைகள் அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. கொடிய துன்பம் தீர்த்து, நெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் தருவார் ஸ்ரீ யோகபைரவர்.

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.

இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

1. அசிதாங்க பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் பிராம்ஹி விளங்குகிறாள்.

2. ருரு பைரவர்

அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் காமாட்சி விளங்குகிறாள்.

3. சண்ட பைரவர்

அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் துர்க்கை கோவிலில் அருள் செய்கிறார்.மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் கௌமாரி விளங்குகிறாள்.

4. குரோத பைரவர்

அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் வைஷ்ணவி விளங்குகிறாள்.

5. உன்மத்த பைரவர்

அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் வராகி விளங்குகிறாள்.

6. கபால பைரவர்

அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார்.கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திரகிரக தோசத்திற்காக இந்த பைரவரை  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் இந்திராணி விளங்குகிறாள்.

7. பீக்ஷன பைரவர்

அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார்.சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் சாமுண்டி விளங்குகிறாள்.

8. சம்ஹார பைரவர்

அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒரு தெய்வமாய் சண்டிகை விளங்குகிறாள்.

பைரவரின் அவதாரம் பற்றி பிறிதொரு கதையும் கூறப்பெறுகின்றது

திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது,பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். குறிப்பாக,பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்!

இதில் சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு பண்ணினார். 'பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி' என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்தாராம் பைரவர். மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், ''முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அளித்தீர். இப்போது நீரே நான்முகனாகி விட்டீர். எனவே அவனை மன்னியுங்கள்!'' என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார்.

''வேதம் ஓதுவோருக்கு இனி நீரே அரசன்; அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு! யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு'' என்று அருளினார் ஈசன். எனவே, பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் வேதங்களை ஓதிக் கொண்டே இருப்பதால், வேதன், வேதி, வேதா,வேதபுரோகிதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

படிப்பு மற்றும் அறிவினால் வித்யாகர்வம் வந்து விடுகிறது; ஆணவமும் செருக்கும் உண்டாகிறது; இறுமாப்பு மற்றும் அகங்காரம் தலைதூக்கி விடுகிறது. இதனால் பொய்யும் புரட்டும் அதிகமாகி, பிற உயிர்களுக்குத் துன்பத்தையும் தீமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இவற்றையெல்லாம் சிவபெருமான் நீக்கினார் என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.

சுபம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS