Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தற்போதைய நிலைமை - திரு. சிவபாதம் சிவானந்தம் அவர்களின் பதிவும் - ஆலய பூசகர்களின் பதிலும் - பனிப்புலம்.நெற்றில் (panipulam.net) (பதிவாகியது

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தற்போதைய நிலைமை - திரு. சிவபாதம் சிவானந்தம் அவர்களின் பதிவும் - ஆலய பூசகர்களின் பதிலும் - பனிப்புலம்.நெற்றில் (panipulam.net) (பதிவாகியது

E-mail Print PDF

திரு. சிவபாதம் சிவானந்தம் அவர்களின் பதிவும் ஆலய பூசகர்களின் பதிலும்:

January 15th, 2018 |  Author: இணைய நிர்வாகம்

அம்பாள் ஆலயத்தின் வசந்த மண்டபம் இடித்தழிக்கப்பட்டு அந்த நிலப்பகுதி ஆலய தர்மகர்த்தாக்களின் வீட்டு நிலத்துடன் இணைக்கப்பட்டு தனிநபர்கள் சொத்தாக்கப்பட இருப்பதாக அறிந்து மிகுந்த வேதனையுற்றதனாலும்,இவ்வாறு செய்வதற்கு 09.04.2017 அன்று இந்தியாவிலிருந்து ஆலயத்துக்கு வருகை தந்த “சஞ்சீவிராசா சுவாமிகள்” சாதகமான பதில் வழங்கியதாகவும் கூறப்பட்டு விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிந்தேன். எனவே,அன்றைய தினம் சாமியார் என்ன கூறினார் என்பதை அன்றைய தின கலந்துரையாடலில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் அறிவர்.எனினும் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

 

09.04.2017 அன்று அம்பாளினால் வரவழைக்கப்பட்ட சாமியார் ஆலயத்தின் கொடிமரம் மூடப்பட்டிருப்பதையும்,முற்காலத்தில் மூலஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட்டு வந்த உலோகத்தாலான மூலவர் வெளியே எடுக்கப்பட்டது தவறெனவும் உடனடியாக அந்த மூலவர் சிலை மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு,இரு மூலவர்களுக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம்,பூசைகள் நடாத்தப்படுதல் வேண்டுமென்றும் கூறினார்.இந்த விடயம் செய்யப்படாவிட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பதையும் விளக்கி கூறினார்.

அப்போது,ஆலய தர்மகர்த்தாக்களால், வசந்த மண்டபம் அமைக்கப்பட்டிருப்பதில் குறைபாடு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த சாமிகள் அதில் எந்த குறைபாடுகளுமில்லை என்றும்,வசந்த மண்டபம் அப்படியே இருக்கலாமென்றும் கூறினார். அப்போது ஆலய தர்மகர்த்தாக்களால் வசந்த மண்டபத்தை வெளியே அமைக்கலாமா என வினவப்பட்டது. அதற்கு சாமிகள் எப்படியும் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அங்கிருந்த பெரியோர்கள் வசந்த மண்டபம் அப்படியே இருப்பதுதான் நல்லதென்றும் இடம்மாற்றுவதற்கு அநுமதிக்கமுடியாதென்றும் கூறினார்கள். இந்த கருத்தை தமக்கு சாதகமாக்கி ஆலயத்தின் அமைவிட நிலத்தையே தமதாக்கி ஆலயத்துகுள்ளேயே வசிப்பதற்கு முயற்சிப்பது முறையாகுமா? என்பது சைவ வேதாகம மந்திரங்களை நன்கு கற்று பலவித சிவாச்சாரிய பட்டங்களைப் பெற்று,பூநூல் தரித்து,சிவ சின்னங்களை உடலெல்லாம் அணிந்துகொண்டு ஆலய நித்திய,நைமித்திய கிரிஜைகளை நடாத்திக்கொண்டிருக்கும் குருமார்களுக்கு ஏற்புடையதாகுமா?

எமது நாட்டில் எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத ஆலயத்தின் உள்ளேயே வீடுகள் அமைத்து குடும்பம் நடாத்துவது எங்களூர் அம்பாள் ஆலயத்தில் மட்டுமேயாகும் என நினைக்கிறேன்.எனவே,ஆலய தர்ம கர்த்தாக்களுக்கு ஒன்றைமட்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். அதாவது,27.01.2017 அன்று ஆலயத்தில் நடைபெற்ற பூசையில் பங்கேற்றபோது நான் வைத்த கோரிக்கையாவது “எனக்கு காட்டும் காட்சிகள்,கனவுகள் முதலியன ஏன்?,எதற்காக? என்பதை எனக்கு உணர்த்தி எனது கடமை என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதாகும். அன்றைய பூசை நேரத்தில் என்றுமில்லாதவாறு எனது உடலில் ஏற்பட்ட வலி எனக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது. பூசைகள் நிறைவு பெற்றதுதும் உடல்வலியும்குணமாகிவிட்டது. இது எனக்கு ஒரு மறக்கமுடியாத அநுபவமாகும். அன்று நான் வைத்த கோரிக்கைக்கான பதிலைத் தருவதற்காகவே (09.04.2017) அம்பாள் இந்தியாவிலிருந்து சஞ்சீவிராஜா சுவாமிகளையும்,என்னையும் அழைத்தா போலும்.

இந்த நிகழ்வானது எனக்கு மட்டுமன்றி சாமியாருக்கும்,அவர் குடும்பத்தாருக்கும் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமன்றி பிரச்சினைகள் இருக்கும் ஆலய விடயங்களில் என்றைக்குமே தலையிட விரும்பாத சாமியார் எப்படி ஐயா தங்கள் ஆலய விடயத்தில் பேசுவதற்கு சம்மதித்தார்?எனறு அவருடைய மூத்த மகன் ஆச்சரியப்பட்டார். இங்குதான் அம்பாளின் அருட்கருணையை உணர முடிந்தது. அதுமட்டுமன்றி அம்பாளுடனான பூர்வீகத் தொடர்புகள் பற்றியும் அறிய முடிந்தது.

எனவே,ஆலய தர்மகர்த்தாக்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்வது,தயவு செய்து பல முன்னோர்கள் செய்த தவறுகளைப்போல தாங்களும் தவறுகளைச் செய்யாது,நிலையற்ற,பாவங்கள் பலவற்றை தரவல்ல ஆலய உடமைகளுக்கு ஆசைகொள்ளாது,அம்பாளால் தங்களுக்கு தரப்பட்ட இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அம்பாளின் பாதக்கமலங்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் பாக்கியத்தை தங்கள் அடுத்த சந்ததிக்கும் தேடிக்கொடுங்கள்.தங்கள் மூதாதையர்கள் தங்களுக்கு இந்த பாக்கியத்தை தேடித்தந்ததுபோல் தங்களும் தங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கும் தேடிக்கொடுங்கள்.

சி.சிவானந்தம்

Share this:

Email

Print

 

மேலதிக செய்திகள்:

திருவிழா உபயகாரர்களிடம் ஓர் பணிவன்பான வேண்டுகோள்!

இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி.சஞ்சீவிராஜா சுவாமி அவர்கள் அம்பாள் ஆலயம் பற்றி கூறிய கருத்துகள்

இரா. சம்பந்தனுக்கு ‘இறைபணிச் செம்மல் பட்டம்’ வழங்கிக் கௌரவிப்பு!

அம்பாள் ஆலய தர்மகர்த்தாக்களிடமும், ஊர் மக்களிடமும் பணிவன்பான வேண்டுகோள்!

தவறாக நடக்க முயற்சித்த சாமியாரை உருட்டுக்கட்டையால் வெளுத்து வாங்கிய பெண்கள்!

Posted in செய்திகள்

9 Responses to “”

சிவானந்தம்:

January 22, 2018 at 09:24

அவசியமற்ற அவசரமான வசந்த மண்டப இடிப்பும்,மீள் கட்டுமானமும் ஏன்? எதற்காக? என்பதை மக்களே சிந்தியுங்கள்! ஆலயத்தில் அவசியமான திருப்பணி வேலைகள் பல இருக்கும்போது தேவையற்ற இந்த வேலை அவசியமா? ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடந்து எவ்வளவு காலம்? மரண அவலம் ஏன் தொடர்கிறது? ஏற்கனவே மூவருடைய அந்தியேட்டி கிரியையே முடிவுறாத நிலையில் நான்காவது முதியவரும் அழைக்கப்பட்டுவிட்டார்.இந்த நிலை எதனால், எத்தனை வருடங்களாக தொடர்கின்றது என்பதை மக்களே சிந்திப்பீர்களா? யாராலும் ஒருபோதும் பணம் கொடுத்து அம்பாளின் அருளை பெற்றுவிட முடியாது. ஆலயத்தில் சைவ வேதாகம நெறிமுறைகளுக்கமைய, ஒழுங்காக நித்திய ,நைமித்திய கிரியைகள் செய்யப்படுதல் வேண்டும். இலங்கை தமிழ்மக்கள் சுனாமியாலும்,யுத்தத்தாலும் அழிந்தது போதாதென்று இன்று வீதி விபத்துக்கள்,கொலை,தற்கொலைகளால் தினமும் அழிந்துகொண்டிருப்பதற்கு காரணம் இலங்கையிலுள்ள சைவாலயங்களின் தவறான நடைமுறைகளேயென ஆன்மீக அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதாவது ஆலயங்கள் வியாபார நிலையங்கள்போல நடாத்தப்படுவதும்,மேலும் ஆலயங்களில் கொடிமரங்கள் ஆலயத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டிருப்பது மட்டுமன்றி,துணிகளாலும்.பொலித்தீனாலும் மூடிகட்டப்படிருப்பது.மேல்பகுதியும் நாலாபக்கமும் மூடி அடைக்கப்பட்டிருப்பதுவும்,இது போதாதென்று பூசை நேரங்களில் சிறிது நேரம் மட்டுமே ஆலயத்தை திறந்துவிட்டு மீதிநேரம் முழுவதும் பூட்டிவைப்பதனால் மக்களுக்கு இறைவனின் அருள்சக்தி சென்றடைவதில்லையாதலால் மக்கள் மத்தியில் இறைநம்பிக்கை, ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் முக்கியத்துவம் என்பது பற்றிய விழிப்புணர்வு குறைந்து வருவதனாலே இறப்புகளின் வீதம் அதிகரித்து செல்கின்றது என ஆன்மீக அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமன்றி உடலை வருத்தியும்,பணத்தை கொடுத்தும் சுலபமாக இறையருளை பெற்றுவிடலாம் என்ற மக்களின் தவறான கருத்து பற்றியும் ஆன்மீக அறிஞர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவுள்ளது.எனவே ஊர்மக்களே அம்பாள் ஆலய விடயத்தில் நல்ல முடிவெடுக்கவேண்டும். ஓம் சக்தி பராசக்தி !

Reply

kunaththilakam saanthai:

January 22, 2018 at 14:30

நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அது புறக்குடத்தில் வார்த்த நீரே .இப்போது அவர்களுடன் சேர்ந்து கல்லு வைத்த விலாங்கினங்களும் நம்மவரே.மக்களால் தெரிவு செய்யப்படட திருப்பணிச்சபை செயலிழந்து போய்இருக்க அத்திருப்பணிச்சபையில் இருந்த ஒரு முக்கியஸ்தர் காணி பிடிக்கும் முயற்சசிக்குத்துணையாகக் கல்லுடன் நிற்கும் படத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன் .சீ இப்படியும் பதவி மோகமா ?

இன்னும் ஒரு விடையம் இந்த வசந்த மண்டபத்தை நீட்டிக் கட்டியவரின் மகனே தன தந்தையின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டு முன்னணியில் நிற்பது .இதுதான் உலகம் .

Reply

சிவானந்தம்:

January 22, 2018 at 21:56

தாங்கள் ஒரு தூய இறைபக்தன் என்பதனால் ஊரிலிருந்து துணிச்சலுடன் தங்கள் கருத்துகளை வழங்குகிறீர்கள். வசந்த மண்டப அத்திவார கல் நாட்டு விழாவின் படங்கள் பற்றி அயலூர் நண்பர்கள் மூலமே அறிந்து பார்க்க முடிந்தது. தாங்கள் கூறிய பங்காளர்கள் பற்றிய கருத்துக்களை நானும் முதலில் உணர்ந்துகொண்டேன். “தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி” பாவம் இவர் தன் தந்தைக்கு துரோகம் இழைத்தது மட்டுமன்றி அவருக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையையும் மறந்து பாவத்தின்மேல் பாவத்தை செய்வது பாவம் இவரது அடுத்த சந்ததியினரே அனுபவிக்கப்போகிறார்கள் என்பதை அறியாது செயற்படுகிறார். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து ஆன்மீக செயற்பாட்டில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் நாட்டில் எமது மக்கள் தொடர்ந்து வீதி விபத்துக்கள்,கொலை,தற்கொலை,நோய்களால் அதிகளவில் இறந்துகொண்டிருப்பது பற்றியும்,அதற்கான காரணங்கள்,முன்னெடுக்க இருக்கும் செயல்திட்டங்கள் பற்றியும் கதைத்தார். அவரின் கருத்துப்படி தற்போது எங்கள் ஆன்மீக அறிஞர்கள் நாட்டிலுள்ள ஆலயங்களின் தவறான நடவடிக்கைகளே இதற்கெல்லாம் காரணமென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.இதுபற்றி முதல் கருத்தில் எழுதியுள்ளேன்.ஆனால் எமது தாயின் சக்தியையும், வெளிப்படுத்தப்படுகொண்டிருக்கும் சீற்றங்களையும் நீண்டகாலத்துக்கு ஆலய தர்மகர்த்தாக்களால் அலட்சியம் செய்யமுடியாது.தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற கர்வத்திலும்,நீதிமன்ற சட்டங்கள் தங்களுக்கு சார்பாகவே இருக்கின்றதென்பதாலும்,புலம்பெயர்ந்தோரின் பலயீனத்தையும் உணர்ந்துகொண்டு ஆடுகிறார்கள்.இதற்கான விடையை எம்தாய் விரைவில் தெரிவிப்பா என்ற நம்பிக்கை எனக்குள்ளது.தொடரப்போகும் மரண அவலமே பாடம் புகட்டும். ஓம் சக்தி பரா சக்தி! அச்சக்தி மகா சக்தி!

நன்றி !

Reply

பனிப்புலம் அம்பாள்:

January 17, 2018 at 16:07

ஐயா ,சிவானந்தம் ஐயா இது எங்கடை சொத்து. இன்சை ஆறும் எதுவும் கதைக்கேலாது. நீங்கள் வேணுமெண்டால் உங்கடை காணியிலை உங்கள் விருப்பம் போல் கட்டுங்கோ. இனிமேல் இதைப் பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம் .

Reply

சிவானந்தம்:

January 18, 2018 at 13:38

தங்களது சுய நிலைதனை மக்களுக்கு எழுத்துமூலம் அறியத்தந்த தங்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகள்!

ஊர்மக்களின் குலதெய்வ ஆலயத்தை தங்களுடைய சொத்து யாரும் எதுவும் கதைக்க முடியாது என்று சொல்வதற்கு தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அல்லது தங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. 1790 -1812 வரையிலான காலப்பகுதியில் இந்த ஆலயம் எப்படி இருந்தது? எவ்வளவு நிலத்துடன் இருந்தது? எப்படியான வழிபாடுகள் நடைபெற்றன? மேலும், ஆலயத்தை பெரிதாக கட்டும்போது ஆலயத்துக்கு பூமிதானம் செய்தவர்கள் யார்?யார்?.தங்களுடைய மூதாதையர்களா?அல்லது எமதூரில் வாழ்ந்த ஊர்மக்களா? தங்களுடைய மூதாதையர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? என்பதாவது தாங்கள் அறிவீர்களா? இந்த கேள்விகளுக்கு அம்பாளை தவிர மனிதர்கள் யாராலும் விடை கூற முடியவே முடியாது. ஏனெனில் அடிக்கடி நடைபெற்ற இயற்கை அனர்த்தங்கள்,அந்நிய தேசத்தவர்களின் ஆக்கிரமிப்புகள் பல ஆலயங்களின் வரலாறுகளை அழித்துவிட்டன.எனவே அம்பாள் ஆலயத்தை தங்களது தனிப்பட்ட சொத்து என்று சொல்வதற்கு தங்களுக்கு மட்டுமல்ல ஊர்மக்கள் யாருக்குமே தகுதியில்லை.

இந்த உடலே நமக்கு சொந்தமில்லாதபோது,உடலின் இயக்கமே நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது வேறு என்னதான் நமக்கு சொந்தமாகும்? “நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் “ஆகிய பஞ்சபூதங்களும் எப்படி பூமியிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி,அவற்றை அழிக்கவும் செய்கின்றனவே ஏன் என்பதை அறிவீர்களா? இந்த பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்களில் “மனிதன்” மட்டும் தான் தான் அறிவிலும்,செயலிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறான்.ஆனால்,பூமியில் வாழும் ஊர்வன,பறவைகள் விலங்குகள்,எல்லாவற்றுக்கும் மேலாக தாவரங்கள் முதலியனவற்றுக்கு இருக்கிற அறிவு,சக்தி மனிதனுக்கு இருக்கிறதா? பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றங்கலிருந்து தம்மை பாதுகாத்து வாழ்வதற்கு மனிதனுக்கு உணவு,உடை,உறையுள் என எத்தனை தேவைப்படுகிறது.ஆனால் மேற்கூறிய

உயிர்களுக்கு இவைகளில் உணவை தவிர வேறு என்ன தேவை?உணவுக்காக மட்டுமே அவை போராடுகின்றன.எனினும் மனிதர்களுக்கெல்லாம் சுவை,சுவையாக விதவிதமான உணவுகளை நின்ற இடத்தில் நின்றபடியே தயாரித்து தருகின்றனவே “தாவரங்கள்,மரங்கள்” முதலியன இவற்றை விட மனிதன் உயர்ந்தவனா? மேலும்,மனிதர்கள் ஒவ்வொருவரும் எதற்காக தனித்தனி “தோற்றம்,திறமை,தகுதி நிலைகள்,தன் கண்களுக்கே தெரியாத வித்தியாசமான கைரேகை அமைப்புகள்,தன்னால் கட்டுப்படுத்த முடியாத உடல்,என்பவற்றை கொண்டிருக்கிறானே? ஏன் என்பதை நினைத்து பார்பீர்களா? இதுபற்றி எழுதப்போனால் நிறைய எழுதலாம்.எனவே” தாங்கள் மனிதர்களின் சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடவில்லை.தெய்வீக சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.இதன் விளைவுகளுக்கான பதில்களை அம்பாள் வெளிப்படுத்திக்காட்டிகொண்டிருந்தும் தாங்கள் தங்கள் நிலைப்பாடை மாற்றுவதாகவில்லை. ஆனால் இதைப்பற்றி கதைக்கவேண்டாம் என்று எனக்கு சொல்வதற்கு தாங்கள் தகுதியற்றவர்கள்.ஏனெனில் நான் எனது நிலைதனை தங்களுடன் நேரிலும் கதைத்திருக்கிறேன்,இணையங்கள் வாயிலாகவும் எழுதி வருகிறேன். அம்பாளின் அருட்பேராற்றல்,கருணையினால் செயல் வடிவிலும் (09.04.2017) நிரூபித்து காட்டியது மட்டுமன்றி தங்களது ஒத்துழைப்புடன் அம்பாளின் அருள் காட்ச்சியை நினைவுகூருமுகமாக வெள்ளிக்கவசத்தை (14.04.2017) அன்று அன்பளிப்பு செய்தேன். எனவே ஆலய விடயத்தில் நான் நானாக எழுதவில்லை.என்நிலையை நானே அறிவேன்.24.04.2017 அம்பாள் கனவில் தோன்றி விடுத்த கோரிக்கையை என்னால் நிறுத்த முடியாது.அதை நிறுத்த வைப்பது என்தாயே அன்றி தாங்களல்ல.

எனது வேண்டுதல்களை அம்பாள் எப்படி நிறைவு செய்கிறாவோ அப்படி இந்த விடயத்திலும் இனி எனது நிலைதனை தீர்மானிப்பா என்ற நம்பிக்கையுடன் என்தாயின் பாதகமலங்களை பணிந்து எனது இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.தங்கள் கருத்தை பார்க்கும்போது தாங்கள் இறைபக்தர்களல்ல! பணபக்தர்களே! என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

நன்றி !

ஓம் சக்தி பராசக்தி!

Reply

kunaththilakam saanthai:

January 19, 2018 at 17:27

நண்பன் சிவானந்தம் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் .இனியாவது இவர்கள் உணர்வார்களா ?

Reply

சிவானந்தம்:

January 20, 2018 at 09:54

தூய பக்தரே இறைவனை உணர்வர்! வசந்த மண்டப வேலையும் ஆலய தர்மகர்த்தாக்களின் 20இலட்ச்சம் ரூபா முற்பண அன்பளிப்புடனும் அத்திவார பூசையுடனும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன்.ஆனால் ஏனைய திருப்பணிகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது அதுமட்டுமன்றி ஒரு ஆலயத்தின் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படு முன்னர் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பின்னரே வேலைகள் ஆரம்பிபார்கள்.ஆனால் இந்த வருட திருவிழா என்ற பணச்சடங்கை தவறவிடக்கூடாது

என்பதனால் “இறாலை போட்டே சுறா பிடிக்க வேண்டும்” என்ற முதுமொழிக்கமைய அவசரமான வசந்தமண்டப குறுக்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. திருவிழா நடந்தால் தானே புலம்பெயர்ந்தோர் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். அன்று வசந்த மண்டபம் நீண்டதால் ஆலய தர்மகர்தாக்களுக்கு ஆலயம் “அவர்கள் சொத்து” என்ற அதிஷ்ட்டம் அடித்தது ஆனால் பாவம் வசந்தமண்டபத்தை நீளமாக கட்டியவருக்கோ அகால மரணம் சம்பவித்தது. ஆனால் வசந்த மண்டபம் குறுக்கப்பட்டு ஆலய தர்மகர்த்தாக்களின் அரண்மனை விரிவடைய போவதால் என்ன ஏற்படுமோ அம்பாளே அறிவா!

அழகுறு வசந்த மண்டபம் மலருமா?அல்லது அம்பாளின் விஸ்வரூபம் அதிகரிக்குமா? அனைவருக்கும் காலமே பதில் கூறவேண்டும் . ஓம் சக்தி பராசக்தி!

Reply

சிவானந்தம்:

January 16, 2018 at 22:12

கருத்துக்களை வழங்குபவர்கள் விடயத்துக்கு ஏற்றாப்போல கருத்துக்களை வழங்குவதே நன்மை தரும். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”

இந்த விடயத்தில் ஆலய தர்மகர்தாக்கள் தாங்கள் உண்மையான அம்பாளின் பக்தர்களாக இருந்தால் தங்கள் கருத்தை இந்த இணையத்தினூடாக மக்கள் அனைவருக்கும் பகிரங்கமாக அறிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நானோ ஒரு சாதாரண அம்பாளை வழிபடும் சாதாரண அடியவன்.தாங்களோ வேதாகம நெறிமுறைகளை முறையே பயின்று,பட்டங்கள் பல பெற்று,சிவசின்னங்கள் பல அணிந்து,பூநூல் தரித்த சிவாச்சாரியார்களாக அம்பாளுக்கு மட்டுமன்றி ஆலயங்கள் பலவற்றிலும் பன்னெடும்காலமாக நித்திய நைமித்திய கிரியைகளை செய்பவர்கள்.ஆகவே என்னைவிட தங்களுக்கே அம்பாளின் அருள்காட்சிகள்,அசரீரிகள்,அற்புதங்கள் பலவற்றை காட்டுவா என நினைக்கிறேன்.எனவே தங்கள் மௌனத்தை கலைத்து என்னிடம் மக்கள் கேட்ட இந்த விடயத்துக்கு பதில் தருவீர்களா? இல்லையேல் முகநூலில் பதில் தருவீர்களா?

ஆதிகாலத்தில் ஊர்மக்கள் ஆலயங்களுக்கு தத்தம் நிலங்களை பூமிதானம் செய்தார்கள்.தற்காலத்தில் தாங்கள் அந்நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து இன்று ஆலயத்தையே அழித்து நிலங்களை ஆக்கிரமிக்க முனைவது எப்படி நியாயமாகும்?. சைவாலயங்களில் எங்கேயாவது தங்களைப்போல் ஆலயத்துக்குள்ளேயே பெரும் வீடுகளை கட்டி இல்லறம் நடாத்தும் மக்கள் இருக்கின்றார்களா? அப்படி தங்களுக்கு தெரிந்த ஆலயங்கள் இருந்தால் அறியத்தருவீர்களா?

நன்றி!

ஓம் சக்தி பராசக்தி!

Reply

vadivelan canada:

January 16, 2018 at 17:01

இது மக்களுக்கு அம்பாள் ஆலையம் அகங்கார ஆதீன கர்த்தாக்களுக்கு அது வியாபார ஸ்தலம் .

Reply

Leave a Reply

Name (required)

Mail (will not be published) (required)

Website

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

 

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS