Thursday, Aug 16th

Last update12:42:19 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் காதலர்தின வாழ்த்துகள் -14.02.2018

காதலர்தின வாழ்த்துகள் -14.02.2018

E-mail Print PDF

காதலால் ஒன்றிணைந்து திருமணமான காதலர்களுக்கும்;
திருமணமாகி ஒருவரை ஒருவர் காதலிக்கும் தம்பதியினர்க்கும்;
அன்பால், அறிவால், உறவால், உணர்வால், ஊரால், இனத்தால்
ஒன்றிணைது காதலித்துக் கொண்டிருக்கும் அன்பு காதலர்களுக்கும்
எமது காதலர்தின நல்வாழ்த்துக்கள்

காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்த அல்லது மலர்ந்த காதலை ஸ்திரப்படுத்த ரோஜாப்பூவை பரிமாறி தங்கள் மனங்கள் பரிமாறுப்படுவதான உணர்வை உண்டுபண்ணி ஒன்றினைந்து  விளிகளால் கதைபேசி களிப்புறும் இந்நாள் உண்மையில் ஒரு துயரம் நிறைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே உருவானது.

வலண்டையின் என்ற பாதிரியார் ஒருவருமே திருமணம் செய்யக் கூடாது என இரண்டாவது கிளாடியஸ் மன்னரின் கட்டளையையும் மீறி காதலர்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்தார் என்ற காரணத்தினால் கைது செய்யப் பெற்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பெற்று, தலை துண்டிக்கப்பட்ட நாளே (14.02.270) இன்று காதலர் தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது  

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண்டாவது கிளாடியஸ் மன்னரின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனது இராணுவ வீரர்கள் அவனை விட்டு விலகிப் போயினர். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை.
யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி  பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

ஒருநாள் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள் என எண்ணினான். 

இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிடைத்துவிடும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் அவனுக்கு தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது".  ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும் என கட்டளையிட்டான்.

இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் ஒரு கண் தெரியாத அஸ்டோரியசு என்ற பெண்மீது சிறைச்சாலை தலைவனின் மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

கைது செய்யப் பெற்று சிறையில் அடைத்து பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அத்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும் வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க வழி இழந்து, நீ
மன வலி தாங்காது கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல்
மக்களுக்காக பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு வழியாய் இரு!!
சந்தோஷ ஒளி உன் கண்களில் மின்னும்!!

உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.
அன்புக்கு, காதலுக்கு மரியாதை செய்யும் திருநாளே நாம் இன்று கொண்டாடும் காதலர்தினம்.

 

Happy Valentine’s Day
A day for the Roses, Kisses, Love and more ….

Days of celebration fall each and every month, for our loved and others while a day is set for one’s life partner in particular.

Celebrated annually across the globe on February 14, is a day for lovers, and loved ones filled with a month full of love, kisses, hugs, red roses and gifts. The month of February is treated as the month of Romance filled with joy though many tend to forget the true meaning of the day itself.

Saint Valentine’s Day, commonly shortened to Valentine’s Day, is an annual commemoration held on February 14 celebrating love and affection between intimate companions.

The day is named after one or more early Christian martyrs, Saint Valentine, and was established by Pope Gelasius I in 500 AD. It was deleted from the Roman calendar of saints in 1969 by Pope Paul VI, but its religious observance is still permitted.

It is traditionally a day on which lovers express their love for each other by presenting flowers, offering confectionery, and sending greeting cards (known as “valentines”). The day first became associated with romantic love in the circle of Geoffrey Chaucer in the High Middle Ages, when the tradition of courtly love flourished.

This day involves mutual exchange of Valentines. Loved ones celebrate by presenting flowers, gifts , offering candies ,sending e cards , sending love messages and much more all in the name of St. Valentine, the patron saint of lovers.

Valentines signs and symbols generally have an outline of a heart and containing picture of CUPID with wings. Now the tradition of sending Cards and Greetings with Valentine Hearts engraved on them has become very popular.

 

 

4738.07.02.2016

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS