Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் இணையதளங்களில் இருக்கும் சில வசதிகள்

இணையதளங்களில் இருக்கும் சில வசதிகள்

E-mail Print PDF

இணையத்தில் சமூக வலைத் தளங்கள்! (Social Networking Sites)

இணையத்தில் உலகத்தில் உள்ளவர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கருத்து களைப் பகிர்ந்து கொள்ள உதவும் இணையத்தளங்களின் விபரம்

இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites).

இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன. இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.

1. ட்விட்டர் (Twitter): 2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey) என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

2. யு-ட்யூப் (You Tube): வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். "நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்' என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.

3. பேஸ்புக் (Facebook): ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.

4. ஹி 5 (Hi 5): இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.

5. ஆர்குட் (Orkut): கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.

வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம்.

சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம். இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும்.

நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும். இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.

நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.

உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.

இணையப் பக்கமொன்றி மொத்தப் பக்கத்தையும் Screen Print Shot எடுப்பது எப்படி?
எந்த பிரவுசரும் இதற்கான வசதியைத் தன்னிடம் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்தால், திரையில் தெரியும் பகுதி மட்டுமே பைலாகக் கிடைக்கும்.

முழுமையாகக் கிடைக்க ஒரு தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம் துணையைத்தான் நாட வேண்டும்.

ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.

Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன.

இந்த புரோகிராம்கள் எங்கு உள்ளன என்று ஒரு சர்ச் இஞ்சின் மூலம் தேடி அறிந்து பயன்படுத்தவும்.


பெரிய பைலை பிரித்து இடமாற்றம் செய்தபின் இணைக்கும் மெபொருள்

பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள்.

ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை.

அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம்.

அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.

இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.

இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும். இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள்.

இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும்.

பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும். அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து Start பட்டனை அழுத்தவும். உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும்.

நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம்.

இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும்.

File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும்.

அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும்.

அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும். இப்போது இணைக்கும் வேலை தொடங்கும்.

மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.

பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.

இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற http://www.hjsplit.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

பயனுள்ள பத்து இணையதளங்கள்

1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு

http://www.screenr.com

2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள்

http://www.copypastecharacter.com

3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு

http://www.faxzero.com/

4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க

http://studio.stupeflix.com

5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு

http://www.ratemydrawings.com

6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப

http://www.mailvu.com

7. உங்கள் ஆங்கில ஆக்கங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகளை கண்டறிய

http://www.polishmywriting.com

8. பெரிய கோப்புக்களை பரிமாற்றம் செய்ய

https://www.wetransfer.com


9. உங்கள் கனவு இல்லத்தினை முப்பரிமாணத்தில் உருவாக்க

http://www.homestyler.com


10.புகைப்படங்களின் தகவல்களை அறிய

http://regex.info/exif.cgi


BLOG COMMENTS POWERED BY DISQUS