Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம்

பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம்

E-mail Print PDF

இன்று பெரிய வெள்ளி கொண்டாடும் எமது கிறிஸ்தவ உறவுகளுக்காக சிறப்புக் கட்டுரை

(பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம்)

உலகம் முழுவதும் யேசுவின் மரணத்தை பல கோணங்களில் நினைவு கூர்வதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று தேவன் உன்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீ எப்படி எனது மரணத்தை நினைவு கூருகிறாய்? இதற்கான பதிலை நீயறிய இந்த எசாயாவின் புத்தகம் 53ம் அதிகாரம் முழுவதையும் மிக அமைதியாகவும், தியானத்தோடும் வாசித்து தியானிப்பாய் ஆகில் இந்த சிலுவையின் தியாகத்தை உன்னால் அறிய முடியும். அதின் மறைவில் மறைந்திருக்கும் தியாகத்தின் அன்பை உன்னால் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. 2010 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இப்படியான ஒரு நாளைக் கண்டிராவிட்டால் மனுக்குலத்தின் கதி இன்று எப்படியிருக்கும் என்று நீயே சிந்தித்துப்பார்.

யேசு சிலுவையில் மரித்தார் என்பதல்ல பெரிய வெள்ளி. தேவன் தாம் படைத்த மக்கள் தன்னைமறந்து, தன்னுடைய வழிகளை விட்டு அவனவன் தன்தன் வழியிலே போய், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தேவமகிமையைக்காண முடியாமல் இருந்த பாவம் என்ற அந்த தடைச்சுவரை சிலுவை மரணத்தின் முPலம் தகர்த்து மனுக்குலத்திற்கு விடுதலையைத் தந்தநாள். பிரிவும் உறவும் மீண்டும் சந்தித்த நாள். இத்தனையும் நடந்து முடிய ஓர் தியாகம் நடக்க வேண்டியிருந்தது. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.

வசனம் 10. ஒரு விசேசித்த பலி ஒன்றை செலுத்த வேண்டியிருந்தது. காரணம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் மிகத்தெழிவாக கூறுகிறது. பிரிவும் உறவும் சந்தித்த இடத்திலே, பிரிந்திருந்த உறவை மீண்டும் சீர்படுத்த இரத்தம் சிந்தப்படவேண்டியதாக இருந்தது. அந்த இரத்தத்தினால் நமக்கு நித்திய ஜீவன் அருளப்பட்டது. யேசு தமது ஆத்துமா, சரீரத்தை உலக மக்களின் விடுதலைக்காக வருத்தப்படுத்த வேண்டியிருந்தது. காரணம் வசனம் 11 இவ்வாறு கூறுகிறது. அவர் தமது ஆத்தும வருத்தத்தின்பலனைக் கண்டு திருப்தியாவார்.

அவர் எவ்வாறன தனது ஆத்தும வருத்தத்தின் பலனை உன்னிடத்தில் காணவிரும்புகிறார்? அவர் கொடியசவுக்கினால் அடிக்கப்பட்டு, முள்முடி தரிக்கப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு இரத்தம் தோய்ந்த கண்களுடன் சிலுவையில் தொங்கியவராக ஏதோவொன்றைக் காணவிரும்புகிறார். வெளிப்படுத்தல் 7:9,14 இவ்வாறு கூறுகிறது. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்@ இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். இந்த கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருக்கிறியா? அல்லது இந்தத்தியாகத்தை உணராதவனாக, அறியாதவனாக நீ இருக்கிறியா? சற்று சிந்தித்துப்பார். மேலே வாசித்த 9,14 ம் வசனங்களில் சொல்லப்பட்டவனாக, அதாவது யேசுக்கிறீஸ்த்துவின் இரத்தத்தால் பாவங்கள், சாபங்களிலிருந்து கழுவிப் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக நீ நிற்பதைக் யேசு காணும்போது தனது ஆத்துமவருத்தத்தின் பலனைக் உன்னில் கண்டு; அவர் திருப்தியாவார். மாறாக அங்கு உன்னைக் காணவிட்டால் துக்கத்தோடு உன்னைப்பார்ப்பார். காரணம் நித்தியம் நித்தியமாக தேவனுடன் வாழும் வாழ்கையை உதாசீனம் செய்துவிட்டு, நித்திய நரக வாழ்க்கையை நீ அனுபவிக்கப் போகிறாய் என்று.

பிரியமான சகோதர சகோதரிகளே, கடவுள் மனிதர்களைப் படைத்தது, தம்மை நாம் அறிந்து நேசித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவுமே என்று நாம் சிறுபிள்ளைகளாக இருந்த போது பாடசாலைகளில் சொல்லித்தந்ததை உங்களுக்கு இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று தேவன் தம்மையும், தமது தன்மையையும் அறிந்து கொள்ளும் படியான ஓர் வேளையை உங்கள் முன் வைக்கிறார். அந்த வேளையை நீ உனதாக்கிக்கொள்ள விரும்பினால், உனக்கு அறிமுகமான கிறீஸ்த்தவர்களுடன் தொடர்புகொண்டு ஆலயத்திற்குப் போய் உன்னை ஒப்புக்கொடுத்து, தேவனை ஆராதிக்கிறபிள்ளையாகமாறு. அப்போது கர்த்தர் உன்னை பரிசுத்தப்படுத்தி புதுவாழ்வு தருவார்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று இந்த நல்ல தீர்மானத்தை எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருந்து, எசாயா 53:5இல் உள்ளபடி உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதற்கிணங்க பாவம் என்கிற மரணத்தில் இருந்து நித்தியஜீவன் என்கிற புதுவாழ்வைப் பெற்று உம்மிலே நிலைத்திருந்து வாழ உதவி செய்யும் பிதாவே, ஆமேன்BLOG COMMENTS POWERED BY DISQUS