Saturday, Jul 22nd

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் இணையம்: அறிந்துகொள்வோம்

இணையம்: அறிந்துகொள்வோம்

E-mail Print PDF


உலகின் மிகப்பெரிய கணனி வலையமைப்பாக இணையம் விளங்குகின்றது. உலகில் உள்ள 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த கணனி வலையமைப்புக்கள் இணையத்தில் இணைந்துள்ளன. கணனியானது 1946 அளவில் உருவாக்கப்பட்டு இற்றைக்கு 60 வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்டிருக்கிறது

இவ்விடைப்பட்ட காலப் பகுதியில் கணனித் தொழில்நுட்பம் ஏற்படுத்திய சாதனைகள் பல்லாயிரக் கணக்கானது. ஒரு புரட்சியாளனை போல் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்ட கணனித் தொழில்நுட்பமானது 1970 ஆம் தசாப்தத்தின் முன் அரை பகுதியில் தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் (Communication Technology) தன்னகத்தே இணைத்து கொண்டதன் பின்னர் அது மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெறலாயிற்று அதற்குக் காரணம் இணையம் என்றால் அது மிகையாகாது.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணனியூடாக ஆவணப் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணனி வலையமைப்பு அதிவேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை இன்டர்நெட் பெக்போன் எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான கணனிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேவர் கணனிகள் எனப்படும்.
பல்வேறு வகையான கணனிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol / Internet Protocol) என்னும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணனியிலிருந்தும் மற்றுமொரு கணனியுடன் இலகுவாக தொடர்பாட முடிகிறது.
இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணனி வலையமைப்பே பின்னர் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணனி வலையமைப்பு ARPANET என அழைப்பட்டது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடு ஒருவர் உரையாடுதல், ஆவணங்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்தில் ஈடுபடல் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் பார்ப்போம். ADSL (Asymmetric Digital Subscriber Line) அதிவேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.


Blog:
web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஒன்லைன் ஜேர்னல் (Online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்றதே. இணைய தள வடிவாக்கம் பற்றிய அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser:
இணைய சேவைகளில் ஒன்றான உலகிலேயே வலைத் தளமான www ஐ அணுகுவதற்குப் பயன்படும், மென் பொருளையே ப்ரவுசர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம் : இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ்), கூகுல் குரோம்.

Download: இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணனியிலிருந்து எமது கணனிக்கு ஆவணம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதை டவுன்லோட் எனப்படும்.

Domain name: இணையத்தில், இணைந்துள்ள கணனிகளை அல்லது இணைய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறையை டொமெய்ன் நேம் எனப்படுகிறது.

Dial up:
இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணனியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூட்டர் ஊடாக இணைக்கப்படும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E mail (Electronic mail): கணனி வலைமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாற்றிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் வடிவத்தில் இருக்கும். இங்கு பயனாளர் பெயரும் டொமெய்ன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet: ஒரு நிறுவனம் சார்ந்த கணனி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமின்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP (File Transfer Protocol):
இணைய வழியே பெரிய அளவிலான பல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை பிஹிஜி எனப்படுகிறது.

File attachment: மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மெண்ட் எனப்படுகிறது.

Firewall: இணையத்தைப் பயன்படுத்தி எமது கணனிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுருவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink: இணைய தளமொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும் இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS