Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்கள்) பூமியை ஆக்கிரமிப்பார்களா? ஆய்வுக் கண்ணோட்டம்

வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்கள்) பூமியை ஆக்கிரமிப்பார்களா? ஆய்வுக் கண்ணோட்டம்

E-mail Print PDF

உயிரினங்கள் ஜீவிக்கும் அதிசய கோளாக நாம் வாழும் பூமி மாத்திரமே அண்டவெளியில் உள்ளது என இதுவரை நம்பியிருந்த எமக்கு அண்மையில் வெளியான கண்டுபிடிப்புகள் அதிர்ச்சியைத் தருகின்றது. அண்டவெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும் இருந்போதிலும் மனித சக்திக்கு எட்டியவரையில் எந்தக் கோளிலும் இது வரை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது வானவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளால் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருகிறது.  இதுவரை வானியல் ஆய்வாளர்களால் சுமார் 50 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 16 கிரகங்கள் பூமியினை ஒத்ததாகவும், அவைபூமியை விட அளவில் பெரியதாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இக்கிரகங்கள் பூமியில் இருந்து 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்தக்கண்டுபிடிப்புக்கள் என்றோ ஒரு நாள் மனிதர்களை வேற்றுக்கிரகங்களுக்கு அழைத்து சென்று குடியமர்த்த முடியும் என நம்பப்படுகிறது

தற்போது முதல் முறையாக வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கும் சாத்தியம் இருப்பதற்கான சந்தேகம் அதிகரித்துள்ளது. எஸ்.ஈ.டி.ஐ. என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முறை. பிற கோள்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, மற்றும் இங்கிருந்து கதிர்களை அனுப்பி ஆராயும் முறையாகும்.

சமீபத்தில் இந்த முறையில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு புதுமையான தடயம் கிடைத்திருக்கிறது. அது வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் போல தோன்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கலிபோர்னியாவின் மவுன்டைன் விவில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. மைய ஆய்வாளர் டாகால்ஸ் வாகோச் கூறியதாவது:-
விண்மீன்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை கவனித்தோம். அது ஒரு ஒழுங்கற்ற நட்சத்திரக் கூட்டத்தால் கிடைத்த மாறுபட்ட தகவலாகவோ அல்லது தவறான அலை மாற்றத்தால் ஏற்பட்ட பதிவாகவோ இருக்கலாம். வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான சமிக்ஞையாகவும் இருக்க வாய்ப்புண்டு.

அது வேற்றுக்கிரக வாசிகளுக்கான அறிகுறியென்றால், அவர்களிடம் எவ்வாறு பேசுவது என்று ஆழமாக யோசித்து வருகிறோம். ஆகவே நாங்கள் வெற்றிட முறையில் தகவல்களை அனுப்பத் தொடங்கி இருக்கிறோம். அதை அங்குள்ள ஒவ்வொருவரும் கேட்கலாம். ஆனால் பதில் ஏதும் கிடைப்பதில்லை. பதில் வரும்வரை நாமாக ஒன்றை கற்பித்துக் கொள்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன் என்றார்.

ஸ்ரீலங்காவில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம்?
பல வருடங்களுக்கு முன்பே வேற்றுக்கிரகவாசிகள் இலங்கைக்கு வந்து செல்வதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் காட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்துள்ள புகைப்படத்தில் வட்டவடிவிலான பறக்கும் தட்டொன்று தென்படுவதுடன், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கிறீம் வர்ணங்களைக் கொண்டதாக அது தென்படுகின்றது. அதன் மேற்புறப்பரப்பு இளஞ்சிவப்பு வர்ணத்தில் பளபளத்ததாக பிரஸ்தாப அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தனது சேவை முடிந்து இங்கிலாந்து திரும்பிய பின் தான் எடுத்திருந்த பறக்கும் தட்டின் புகைப்படத்தை தனது முன்னைய விமானப்படை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு இங்கிலாந்தின் டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம் காணப்பட்தாக இலங்கைப் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.  நாட்டின் பல பாகங்களிலும் இந்த அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பறக்கும் தட்டுகளை சிலர் நேரடியாக பார்த்ததாக பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளனர். பறக்கும் தட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் தரையிறங்கியிருக்கலாம் என்று ஊடகம் வெளியிடப்பட்டுள்ளது.

பச்சை நிற உடலுடைய குள்ள மனிதர்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

2031 ஆம் ஆண்டளவில் மனித குலமானது வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் ‘ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன் எச்சரிக்கை

"வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு,'' என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும். ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS