Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!(படங்கள் இணைப்பு)

அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!(படங்கள் இணைப்பு)

E-mail Print PDF

22.1-.2011

ஏராளமான உயிரினங்களின் சரணாலயமாக திகழும் பிரேசிலின் அமேசன் காட்டில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அமேசன் காட்டுக்குச் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தான் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

கமராவின் முன்னாள் சிறுவர்கள் இருக்கிறார்கள் அதன் பின்னால் ஒரு உருவம் தெரிகிறது. அதன் பக்கத்தில் ஒளிவட்டமும் தெரிகிறது. வேற்றுக்கிரக வாசிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குறித்த காட்சிகள் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

 

அமேசன் மழைக்காடுகளில் பலவற்றிற்குப் பஞ்சமில்லை. ஏழு மில்லியன் சதுரக் கிலோமீற்றர் பரப்பளவை ஆக்ரமிக்கும் தென் அமெரிக்காவின் அமேசன் நதிப் படுக்கையில் ஏறத்தாழ ஐந்தரை மில்லியன் ச.கிலோமீற்றர் விஸ்தீரணமான பகுதியை, மழைக்காடுகள் நிறைத்திருக்கின்றன. இந்தக்காடுகள் 9 தென் அமெரிக்க நாடுகளுக்குப் பரவியிருப்பினும், பெரும்பகுதி-அதாவது 60வீதமான காடு பிரேசிலில்தான் இருக்கின்றது. அடுத்த இடத்திலிருப்பது பேரு. இங்கு 13 வீதமான மழைக்காடுகளைக் காணமுடியும். மிகுதி 27 வீதமான காடுகள், கொலம்பியா, வெனிசூலா, ஈகுவடோர், பொல்வியா, கயானா, சுரிநாம், பிரெஞ் கயானா போன்ற இடங்களில் பரவலாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான அளவு வாசனைத் திரவியங்களைக் கொண்ட மழைக்காடுகள் என்ற பெருமை, இந்த அமேசன் மழைக்காடுகளையே சார்கின்றது. பிரேசில் நாட்டின் அமேசன் மழைக்காட்டில், இதுவரையில் சந்தித்திராத காட்டு வாசிகள் அங்கு வாழ்கின்றனர். சிலர், கண்ணில் தென்பட்டு, முழு உலகையுமே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றர்கள். இந்த அரிய கண்டுபிடிப்பை, பிரேசில் அரசாங்கமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மக்கள் நடமாடும் பிரதேசங்களைத் தவிர்த்து, காடுகளில் பரவலாக தமது தனி உலகத்தை அமைத்துக் கொண்டு, அமேசன் நதிப் படுக்கைக் காடுகளில் சிறு தொகையினர் வாழ்ந்து வருகின்றார்கள். Funai என்ற அமைப்பு, விமானங்களில் இந்தக் காடுகளுக்கு மேலாகப் பறந்து, இப்படி வாழ்ந்து வருபவர்களை நோட்டம் விட்டபடி இருந்து வருகின்றது.

இவர்களால் கண்டுபிடிக்கப்படும் இடங்கள், அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் அந்நிய மனிதர்கள் நுழைந்து, காட்டுவாசிகள் இராஜ்யத்தை சீர்குலைக்காமல் இருக்க, விழிப்போடு, இவற்றைக் கண்காணித்து வருகின்றன. இந்த அமைப்பின் ஒரு கணிப்பின்படி, காட்டுக்குள்  வேறுபட்ட இடங்களில் 68  கூட்டங்கள் வரையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட குழுவில், 200 பேர் வரையில் இருக்கலாம் என்று கணித்திருக்கின்றார்கள். வைக்கோலால் வேயப்பட்ட நான்கு பெரிய குடிசைகள்தான் இவர்கள் வதிவிடம். சோளம், வாழை, கச்சான், போன்றவற்றோடு, ஏனையவற்றையும்  இவர்கள் பயிரிட்டு வருவதாக அறியப்படுகின்றது. Pano என்ற மொழியைப் பேசும் இனத்தைச் சார்ந்த காட்டுவாசிகளாக இவர்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த இனத்தவர்கள் பிரேசில் அமேசன் காடுகளிலும், பெரு, பொல்வியன் காடுகளிலும் காணப்படுகின்றார்கள்.

இவர்கள் பேருவை எல்லையாகக் கொண்ட பிரேசில் அமேசன் காடுகளில் வாழ்ந்து வருவதாகவும், இந்தப் பிராந்தியம் ஏறத்தாழ போர்த்துக்கல் நாட்டளவு பெரியது என்று கூறப்படுகின்றது. ஒருவர் ஒருவருடன் தொடர்பு வைத்திராத 14 வித்தியாசமான இனக் காட்டுவாசிகள் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

அமேசன் நதியின் தோற்றம்

குழுக்களாக வாழும் காட்டுவாசிகள்

BLOG COMMENTS POWERED BY DISQUS