Thursday, Mar 22nd

Last update08:40:09 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் - ஆய்வறிக்கை ”தொண்டர்” கு. வி. கந்தசாமி அவர்கள்

சம்பில்துறை - சம்புநாதீஸ்வரர் - ஆய்வறிக்கை ”தொண்டர்” கு. வி. கந்தசாமி அவர்கள்

E-mail Print PDF

புராதன சம்புநாதீஸ்வரத்தில் சிவபெருமானின் தியான சிலை - சிவ தொண்டர் சபை


சிவமயம்

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)

சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வரலாறு

 

 

பண்டைய ஆய்வுகள்:
நாம் வாழ்கின்ற இந்தப் பூவுலகின்கண் இருபத்தோராம் நூற்றாண்டு பிறக்கும் வரைக்கும், கடந்து போன காலச் சம்பவங்களைப் பற்றி, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

இந்த பூகோள இயற்கை அமைப்பும், இங்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் இற்றை வரைக்கும் ஏற்பட்ட சம்பவங்களும், இவற்றினால் உலகில் உண்டான மாற்றங்கள், எல்லாவற்றையும் நன்கு துரிவிப் பூரண ஆதாரங்களோடு ஆராய்ந்துள்ளனர்.

இயற்கையாக:
உலகில் உண்டான பூமிப்பிரளயம், பூமிநடுக்கம், எரிமலை, பெரும்புயல், பெருமழை, வெள்ளப்பெருக்கு, கடல்கொந்தளிப்பு, கொடிய தொற்றுநோய்கள் போல்வனவும் பிறவும்.

செயற்கையாக:
மனித குல இனச் சண்டை, நிலச்சண்டை, மதச்சண்டை, மொழிச்சண்டை, கல்வெட்டுகள், புதைபொருள் ஆராச்சிகள், கர்ண் பரம்பரையாக வந்த கதைகள், பண்டைக்கலப் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், சமய நூல்கள் இப்படிப் பலவுமே வரலாறுகளாக வெளிக் கொணரப் பெற்றிருப்பன.

பகுத்தறிவு பெற்ற மனிதராக வாழத் தொடங்கிய காலத்தை, இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகக் கணித்துள்ளனர். அக்கால உலகில் வாழ்ந்த மக்களின் வாழ்வு முறை (நாகரீகம்) வளர்ந்திருந்த இடங்களாகக் காணப்பெற்றவை.
1.   சுமேரிய நாகரீகம்
2.   நைல் நதிக்கரை நாகரீகம்
3.   சிந்து நதிக்கரை நாகரீகம் என்பனவே முக்கியமானவை.

எம்முடைய ஆராச்சிக்கு, ஆசியாக் கண்டத்து  சிந்துநதிக்கரை நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்வதே சிறப்புடைத்து. இதற்கு சிறந்த ஆய்வறிக்கையாக கொள்ள சிறந்த நூல் "பண்டைய இந்திய வரலாறு" என்பதாகும்.

இது "சேர் யோன் மாஷல்" போன்ற தலைசிறந்த பல்துறை ஆராய்ச்சிப் பேராசிரியர் போன்றோர்களினால் எழுதப் பெற்றுள்ள வரலாற்று நூலாகும்.

இமயமலையின் வடக்கே உற்பத்தியாகி, பாகிஸ்தான் பிரதேசத்துள் பாய்ந்து கொண்டிருக்கிறது சிந்துப் பெருநதி. இதன் கரையோரங்களில் 1000 மைல்தூர இடைவெளியில் "மொகன்சதாரோ", "கறப்பா" என்ற இரு பண்டைக்காலப் பெரு நகரங்கள் மண்ணுள் மாண்டிருப்பதைக் கண்டனர்.

ஆதி திராவிட தமிழ் இனத்தின் தொன்மை வரலாறு:
பல்லாண்டுகளாக இவற்றினை ஆழத்தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டனர். கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகவே இதைக் கணக்கிட்டுள்ளனர். சுட்ட களிமண் கட்டிகளினால் பல அடுக்கு மாளிகைகளாகக் கட்டி இருந்தமையும், நீண்ட விசாலமான தெருக்கள் அமைக்கப் பெற்றிருந்தமையும், நீச்சல் தடாகங்கள் இருந்தமையும் கண்டறியப் பெற்றன. மக்கள் குடியிருந்த இடங்களின் அதிஉயர் புனிதமான பகுதிகளில், சிவலிங்க சொரூபங்களை வைத்து இறைவழிபாட்டுமுறை அமைந்திருந்ததையும் நன்கு ஆராய்ந்து அறிக்கைசெய்துள்ளனர். அன்று வாழ்ந்த மக்கள் "ஆதி திராவிடர்" என்பதே ஆராச்சியாளரின் முடிபாகும்.

தமிழின் தொன்மை:
ஆதிதிராவிட மக்களின் "சிவலிங்க" வழிபாட்டுடன் பின்னிப் பிணைந்தது "சைவசமயம்". இது கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதாகும். பல தடவைகள் இயற்கை அனர்த்தங்களான பூமிப்பிரளையம் போன்றவற்றால் மண்ணுள் மாண்டுபோன சம்பவங்களும் தெளிவாயிற்று. அன்று வாழ்ந்திருந்த ஆதிதிராவிடர் தம் எண்ணக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டது "பழம் தமிழ் மொழி" என்பதும் மொழி ஆராச்சிகளை மேற்கொண்டோர் கண்ட முடிவாகும்.

பண்டைக்காலம் வாழ்ந்த மக்கள் பேச்சு வழக்கில் இருந்த பல மொழிகளில் "Greek", "Latin" போல்வன சிறந்தனவாகவே இருந்த போதும், நாளடைவில் வழக்கொழிந்து போக நேர்ந்து விட்டது. ஆயினும் அன்றும் இன்றும் தனது இளமை குன்றாது இருக்கின்ற ஒரே மொழி "தமிழ்" என்பதாகும்.  உலக வழக்கிலுள்ள் மொழி ஆராய்ச்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்ட மேதாவிகளினால் இன்று எமது தாய் மொழி தமிழ் "செம்மொழி" என்ற் கணிக்கப் பெற்றிருப்பது சிறப்புடைத்து.

மக்கள் பெருக்கமும், இடமாற்றமும், மொழிமாற்றமும்:
பண்டைக் காலத்தில் வட இந்திய சிந்து-நதி தீரங்களில் வாழ்ந்த மக்கள் ஆதி திராவிடர் என்பதும், பேச்சில் இருந்த மொழி தமிழ் என்பதும்,  வரலாற்றில் ஏற்கப் பெற்றது. காலப் போக்கில்; சனப் பெருக்கம் காரணமாகவும், இருப்பிட மாற்றங்கள் ஏற்படக் காரணமான போது தாய் மொழியாம் தமிழ்மொழி சிதைந்து, சேய்-மொழிகளாகக் கன்னடம், தெலுங்கு, கவின் மலையாளம் துளு எனப் பலமொழிகள் உருவாகி வளம் பெறலாயின. ஒரே இனம், ஆதிதிராவிட இனத்தவர் மத்தியில், பல்மொழிப் பிரயோகமும் ஒரு சைவ வழிபாடும் தொடர்ந்து வருவது "இறைசக்தி" திருவிளையாடலன்றி வேறல்ல.

ஆரியர் படையெடுப்பும் ஆதிக்கமும்:
கி.மு. 3500 ஆண்டுகள் வாக்கில், மேற்காசியக் கண்டத்திலிருந்து "ஆரிய" இனத்தவர்கள் ஹைபர் கணவாய் வழியாகக் கிழக்கு நோக்கி குதிரைப் படையுடன் வந்து வட இந்தியாவுக்குள் புகுந்தனர். பரந்திருந்து வாழ்ந்த பன்மொழி பேசிய திராவிடர் மத்தியில் பன் மொழிப் பிரயோகம் பலவகைகளிலும் பாதித்தது. இந்த சிக்கல் நிலையினை ஆரிய - அந்தணர்கள் மூலதனமாக்கிக் கொண்டு தமது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி சைவ சிவலிங்க வழிபாட்டுக்கு மந்திர மொழி என்று "சமஸ்கிருதத்தை" வழிபாட்டுத் தெய்வ மொழியாக்கிக்  கொள்ள முடிந்தது. அன்று தொடங்கியது, இன்று வரைக்கும் சில ஆயிரம் ஆண்டுகளாக நிலை பெற்றிருப்பதும் வியப்பன்றோ!

கி.மு. 3500 ஆண்டுவாக்கில் வட இந்தியாவுள் நூளைந்த ஆரியப் படையெடுப்பாளர்கள்; வட இந்தியாவில் வாழ்ந்த ஆதிதிராவிட பன்மொழி பேசியோரைச் சுலபமாக வெற்றி கண்டு, மேலாதிக்கம் பெற்று, அடக்கி ஆழவும் முனைந்தனர். இதனால் வெறுப்புற்ற தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளம் பேசிய மக்கள் புலம்பெயர்ந்து இந்தியத் தென்னாடு நோக்கி வந்து "டெக்கான்" பிரதேசத்துள் குடியேற நேர்ந்தது. ஆரியர் என்ற பிராமணரும் பிந்தொடர்ந்து வந்து, சகல இன மக்களோடும் இரண்டறக் கலந்து கொண்ட போதும், சமஸ்கிருத பூசை ஆராதனை ஆகியவற்றை நிலைநாட்டிக் கொண்டனர்.

உயர்ந்த சாதித் தோறணையும், சைவசமய பூசாராதனை மேலாதிக்கமும், சமஸ்கிருத மந்திரமொழிப் பிரயோகமும், இன்றும் உறுதியாகவே இருக்கின்றது. ஆரியர் என்போரது சாதுரியத்தினால், பல சென்ற நூற்றாண்டுகளாக பல்வகை அந்நியரின் இந்தியப் படையெடுப்புகளின் போதும் தம் செல்வாக்கைப் பேணிக் காத்திருக்கின்றனர். இறுதியாகத் தென்கிழக்காசியப் பிரதேசத்தையே கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியரும், இந்திய நாட்டில் உருவாகியிருந்த பல மதக்கொகைகளும், எண்ணரிய கற்பனைத் தெய்வங்களையும், ஒன்றாக இணைத்து "இந்துமதம்" என்ற பெயரில் ஆரியப் பிராமணரின் செல்வாக்குடனேயே  சமஸ்கிருத ஆராதனை ஆதிக்கம் பெற்றிருக்கின்றது.

6ஆம், 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில், மறு சமயங்களான சமணம், பௌத்தம் போல்வன புகுத்த முனைந்தபோது நாயன்மார்-நால்வர் தேவார-திருவாசங்கள் தமிழில் பாடி அற்புதங்களை நிகழ்த்தியதாக அறிகின்றோம்.

பூமிப்பந்தில் இயற்கை/செயற்கை செல்வாக்கு:
நாம் இன்று காண்கின்ற இந்து மகா சமுத்திரம், பரந்து விரிந்த பெரு நிலப்பரப்பாகவே முன்பு இருந்ததாகவும், அதற்கு ஐரோப்பியர் "லமூறியாக் கண்டம்" என்றனர். சங்ககால இலக்கியத்தில் தமிழ்பாவில்  "குமரிக் கண்டம்" என்றனர்.

இடைக் காலங்களில் ஏற்பட்ட பூமிப் பிரளயங்கள், சமுத்திர கொந்தளிப்புகள் போன்ற பல இயற்கை அனர்த்தங்களினால், இந்து சமுத்திரம் உருவாகியும், பல நூறு தீவுகள் உருவாகவும் நேர்ந்ததென்று ஆராச்சி வரலாறு கூறுகின்றது.  இப்படி இயற்கை கோளாறினால் தென்னிந்தியாவில் இருந்து; இலங்கைத்தீவும் உருவாகி உள்ளது உண்மை. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்-இந்திய , கன்னியாகுமரி, நாகர்கோவில் பிரதேசங்களோடு, வட-இலங்கையும் சேர்ந்து பரந்திருந்தது.

இதனை நிரூபிக்கச் சிறந்த ஆதாரங்கள் இன்றும் பலவுள.  கன்னியாகுமரி, நாகர்-கோவில் பிரதேசத்துடன் வலிகாமம் பிடதேசம் சேர்ந்து இருந்தது. அங்கெல்லாம் தமிழர்களே வாழ்ந்தார்கள். இவ் இரு பிரதேசங்களிலும் இன்னும் அணு அளவேனும் வேற்றுமையை காணமுடியாது.  நிலவளம், நீர்வளம், வான்பயிர், செய்-பயிர், தோட்டம், துரவு, கிணறு, துலா, இறைப்பு முறை, வீடு வளவு, தெருத்திண்ணை, மாடு, ஆடு வளப்பு, பேச்சுத் தமிழ், ஆண், பெண் உடை நடை பாவனை, கோவில், குளம், விரதம், பூசை ஆராதனை, மக்களின் தோற்றத்தோடு மரபணு ஒற்றுமை, (பாச உணர்வு) அனைத்தும் ஒன்றாக இருப்பதை இன்றும் உறுதி செய்கின்றன.  இவை தவிர உலகின்கண் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களோ, செயற்கை யுத்தங்கள், புலம் பெயர்வுகள், ஆட்சி அதிகாரங்கள், மாற்றங்கள் இப்படியான எதுவித செல்வாக்கும் புகுந்து விடாத படிக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகவே உலகில் பல பிரதேசங்களில் நிறையச் சேரிகளும், பட்டிதொட்டிகளும் இருந்து வருகின்றதையும் அவதானிக்கலாம்.

நாம் திருச்சுழிபுரம் பதியை உற்று நோக்குமிடத்து, பிரளயத்தால் நிலப்பரப்பு இந்து சமுத்திரம் ஆனபோதும், சம்பில்துறை பட்டினம் சமுத்திரக் கொந்தளிப்பால் சங்கமம் ஆனபோதும், வளமைபோல் இங்கு நிலை கொண்டிருந்த சைவசமயச் செல்வாக்கினுள் வேறு எந்தச் சமயச் செவாக்காவது இடம் பிடித்திருக்க இன்று வரைக்கும் அங்கு இயலவில்லை என்பதும் உற்று நோக்கற்பாலது. மிகப் பழமையான பல சைவ ஆலயங்கள் நிறைந்திருப்பதும், பல சித்தர்கள், சிரேஷ்டர்கள், யோகர்கள் இங்கு வாழ்ந்து, புனித பூமியாக்கிப் பிரிந்ததும், ஆதாரபூர்வமான (இறந்தகால) வரலாறுகளாகும்.

திருச்சுழிபுரம் சீமைக்கு சிறப்பளிக்கும் சிவாலயம்:
கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிந்து வெளி நாகரீக காலத்தில் வாழ்ந்த ஆதிதிராவிடரின் வணக்கத்துக்கான "சிவலிங்க விக்கிரக" வழிபாட்டு முறை முறை உருவாக நேர்ந்த் தத்துவ ஆராய்ச்சி, சைவத்தின் தமிழ் இனத்தின், பண்டைக்காலத்து மிக உச்ச நிலைமயை நன்கு படம் பிடித்துக் காட்டுவதாகும்.

அண்டசராச்சரங்கள் அனைத்தினதும் ஆகர்ண சக்தியை கண்டுணர்ந்து, களித்தவர்களில் பலர் அக்காலத்தில் வாழ்ந்த ஆதிதிராவிடராகும். பூமிப்பந்தும், கிரகங்கள், நட்சத்திரங்களும், மனித ஊனுடலை இயக்கு சக்தியாக விளங்கும், ஆத்மாவோடு ஆகர்ண சக்திப் பிணைப்பு உண்டென்பதை அவதானித்து சோதிடக் கலையை நிலைநாட்டியுள்ளனர். சோதிடக் கணிப்புக்கு பஞ்ச (5) அம்சங்கள்:
1. வாரம்,  2. திதி,  3. நட்சத்திரம்,  4. யோகம்,  5.  கரணம் என்பன.

இவற்றின் இயக்க ஈப்பும், மானிட இயக்கு சக்திக்குக் காரணம் என்பதை அன்று தொட்டு இன்று வரைக்கும் மறைபொருள் ஞானமாக கொண்டிருப்பதால் விளங்க முடியும்.

பகுத்தறிவு படிப்படியாக மேலோங்க வாழ்ந்த மானிடப் பிறப்பில், ஆதிதிராவிடத் தமிழ் மக்கள் தம் மரபு அணுவும்மாறாது, இன்று வரைக்கும் இருந்து வருவதும் தனிச்சிறப்பேயாம். பண்டைய நாட்களில் பலர் வாழ்க்கையின் மர்மத்தைப் பற்றி ஆழ்ந்திருந்து சிந்திக்கத் தலைப்பட்டனர்.

யோகக்கலை மூலம் கண்டு கொண்ட ஞானஒளி:
மானிடர் பிறப்பது, வாழ்வது, இறப்பது இவை எதனால்? எப்படி? ஏன்? என்பது கேள்வி. மனிதர் வேடுவராக அலைந்த போது, உணவுக்கு மிருகங்களைப் பறவைகளைக் கொன்று தின்றதைப் பகுதறிவு மேலிடச் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது.  ஐந்தறிவு படைத்தவற்றை உற்று நோக்கி, மாமிசபோசினி, தாவர போசினி, இவற்றின் வேறுபட்ட தன்மைகளால் ஈர்க்கப் பெற்றும், பாவம், புண்ணியம் பற்றி உணரவும் முடிந்தது.  தாவர போசினிகளான யானை, குதிரை, ஒட்டகம், மாடு, ஆடு, எருமை, மான், மரை அனைத்தும் அன்றிலிருந்த ஆதி திராவிடருக்கு, அறிவூட்டிகளாக தெரிந்தன.

பல சிறந்த சிந்தனையாளர்கள், தனித்திருந்து ஆழ்ந்து சிந்திக்கலாயினர். ஆற்றங்கரை ஓரங்களில் மரநிழலின் கீழும், குகைகளிலும் தவம் மேற்கொள்ள முனைந்தனர். உயிர்வாழ உணவுக்கு இலை, குழை, தளைகளும், கிழங்கு பழ் வகைகளும், தாகத்திற்கு நன்நீரும் பருகினர்.  உடல் வளம் பேணப் பிராணயாமப் பயிற்சியோடு, யோகக்கலைகளையும் கற்றுக் கொண்டனர். உள்மனதில் அருள் ஒளி பிரகாசித்த போது சிறந்த சிந்தனைகளுக்கே ஆளாக ஏதுவாயிற்று.

திராவிடர்களில் இப்படிச் சிறந்து நோக்கியவர்களே; பண்டைய ஞானிகள்,முனிவர்கள், தபசிகள், யோகிகள், இருஷிகள், சித்தர்கள் என்போர். இவர்களுக்கு நீண்ட ஆயுட்பலமும் கிடைக்கப் பெற்றதும் உண்மை.

சைவ சித்தாந்த முப்பொருள் தத்துவ விளக்கம்:
உலகில் சீவாத்மாக்களின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பதற்கான காரண காரியங்களைக் கண்டறிய விளைந்தோரின் ஆழ்மனதில் கண்டுணர்ந்த முப்பெரும் தத்துவங்களே; பதி,  பசு,  பாசம் என்பன.  என்றுமுள்ள பசு = ஆன்மா = உயிர்.  ஆணவ மலத்துடன் (பாசம்), கர்ம வினைக்கேற்ப, ஐம்பெரும் பூதங்களின் (மாயை) ஆக்கத்தில், பிறவிகள் பலவிதம் எடுப்பதாகும்.

இதுவேதான் பண்டக்கால ஆதிதிராவிட, வீரசைவர்களான ஞானிகளின் நீண்ட தவத்தின் பயனாகத் தெளிந்து, உலகுக்கு அறியத்தந்த, "சைவசித்தாந்த முப்பொருள் தத்துவமாகும்".  அஃதே (1)  பதி,   (2)   பசு,   (3)   பாசம்.

"பதி" எங்கும் நிறைந்ததும், சுயசொரூபமற்றதுமாகும்.  தெய்வீக அருள் கைவரப் பெற்ற ஔவைப் பாட்டியின் அருள்வாக்கின்படி அணுவுக்குள் அணுவாகி, அப்பாலுக்கு அப்பாலாய், கணுமுற்றி நின்றது என்னும் போது; விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின்படி பிராணவாயு போன்றவற்றை, மேலும் பிளந்து  Neutron, Proton, Electron  போன்றவற்றின் சக்தி வலிமைக்கு அப்பாலுக்கப்பாலான எல்லாம் வல்ல பொருளே இறைசக்தி = பதி.

மேலே குறிக்கப்பெற்ற கடவுளின் படைப்பாகக் காண்கின்ற அண்ட சராசரங்களையும் அணுவும் பிறளாது இயங்க வைத்து, ஆத்மப் பிறவிகளையெல்லாம் மும்மலப்பிடியில் பிறந்து, வாழ்ந்து, பிரிந்து, பின்பு பிறக்ககும் போது பிராரப்தவினைப் பயனாகவே பிறக்க வைக்கிறார். இங்கே மனிதர் ஒன்றை நன்றாக உணரவேண்டும்; நல்வினை, தீவினைப் பயனே மறுபிறவிக்கு மூலகாரணம்.

ஆதி திராவிடர் பகுத்தறிந்தபடி விலங்குகளில், தாவர மாமிச போசினிகளில் கண்டறிந்த பாவ புண்ணிய தத்துவப் பொருளை உணர்ந்தோம? இல்லை.

உருவம் இல்லாத "பதி" பகுத்தறிவு பெற்ற மனிதப் பிறவிக்கு, பட்டுண்ர்வை வலியுறுத்தவே சிவலிங்கத் திருவுருவம் அருளப் பெற்றதாகும்.  அண்டசராசரங்கள் அனைத்திலும் எண்ணிறந்த வடிவில் பிறப்பது, வாழ்வது, பிரிவது எதனால் ? ஏன் ? என்பதாகும். அனத்துவித பிறப்பு உருவாவதற்கு எதிமறையான இருபால் உறவே ஆதிமூல ஆதாரம் என அறிந்து கொண்டனர். நாதம் - விந்து என்கின்ற ஆண் - பெண் எதிர்மறையான இருபால் பிணைப்பை (Possitive + Negetive)  அருள் வடிவாக்கி "சிவலிங்க சொரூப" அருளைப் பெற்றது.

சிவலிங்க வழிபாடு:
ஆதித் திராவிடர் தம் வாழ்விட மத்தியில், சிவலிங்க சொரூபத்தை ஆதிமூலத்தில் அமர்த்தி, ந்ல்நீர் கொண்டு நீராட்டி, ஒளிவிளக்கேற்றி, சேமக்கலம், சங்கு, மணி கொண்டு ஓசை எழுப்பி, தீப தூபங்காட்டி, பூச்சொரிந்து, அமைதி காத்துத் தனித்திருந்து சிந்தையை அடக்கி, தேவையைத் தியானித்து, தெய்வத்திடம் வேண்டினர்.  இப்படியே பல்லாயிரம் ஆண்டுகள் பறந்தோடியதன் பின்பே, கிமு.3500 ம் ஆண்டுகள் வாக்கில் ஆரிய அந்தணரின் ஆதிக்கம் ஆரம்பமாயிற்று.

ஆரியரின் படையெடுப்புக்கு முன்பதாக பரந்த ஆசியாக் கண்டத்தில் ஏற்பட்ட பிரளயத்தால்; சகல் பாகங்களிலும் இருந்த சிவலிங்க வழிபாடுகள் மண்மூடிப் போகக் காரணமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டிலும், மண்ணுள் மாண்டிருக்கும் சொரூபங்கள் கண்டெடுக்கப் பெற்றுள்ள வரலாறுகளையும் கண்டோம்.

பரந்த பூமிப்பந்தில் மறைந்த சிவலிங்க சொரூபங்கள்:
கீழைத்தேசத்துக்கும் மேலைத்தேசத்திற்கும் இடையில், பசுபிக் சமுத்திரத்தில், காவாய் தீவுகளில் ஒன்றான ”குவை” என்னும் தீவில், 1975ம் ஆண்டு மாசிமாதம்"வைலு" ந்திக்கரையில், அமெரிக்க சுப்பிரமுனிய சுவாமிகளால் ஓர் "சுயம்புலிங்கம்" இருக்கக் கண்டு அதனையே மையமாகக் கொண்டு இன்று அங்கு "சன்மார்க்க இறைவன் கோவில்" உருவாகி வருகிறது.  ஆசியாக் கண்டத்தின் பல பாகங்களிலும், சொரூபங்கள் மண்மூடிக் கிடப்பதைக் கண்ட வரலாற்களும் பல உள.  இலங்கத்தீவின் எட்டுத்திக்கிலும் பண்டைக்காலச் சிவாலயங்கள் இருப்பதைக் காண்கிறோம்.  வடநாட்டில்லிருந்து (பங்களாதேஷ்) 2500 ஆண்டுகளுக்கு முன்பு; நாடு கடத்தப்பட்ட அரசகுமாரன் "விஜயன்" தன் 700 பரிவாரங்களோடு பயனித்து வந்து சேர்ந்த இலங்கையில், பழுதடைந்த 5 சிவாலயங்களைத் திருத்திக் கொடுத்த வரலாற்றினை, சிங்கள் மக்களின் இதிகாசமான பாளி மொழி ”பௌத்த மகாவம்சத்தில்” குறிப்பிட்டிருப்பதில் காணலாம்.  அவற்றுள் நான்கு வெளிப்ப்டையக கண்டு கொள்ளப்பெற்றன. 5 வது சம்புநாதீஸ்வரர் என அறிய வருகின்றது.

7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மாரினால் தேவாரப் பதிகத்தில் பாடப்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான "திருக்கேதீஸ்வரம்" 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாதோட்டக் காட்டுக்குள் மாண்டிருந்து, தோண்டி எழுந்தருளப் பெற்றதும் நாம் அறிந்ததே.  ஆரிய அந்தணர் காலத்தில் ஆக்கப் பெற்ற புராண இதிகாச வரலாறுகள் சஸ்கிருதத்தில் எழுதப் பெற்றுத், த்மிழிலும் மொழி பெயர்க்கப்பெற்றன. பதினெண் புராணங்களில் தட்ஷ்ண காண்டத்தில் "சுயம்புநாத படனம்" விரித்துரைகின்ற சிவாலயமே திருச்சுழிபுரத்தின் சிறப்ப்னை உலகறியச் செய்யப் போகின்ற நாதீஸ்வரம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக மறைஎது கிடப்பதை, கனடியத் திரு நாட்டிலேதான் "உதயன்" வாரச் செதியாக 5 தடவைகளாக வெளிக் கொணரத் திருவருள் கைகூடியது.

புராண இதிகாச, இலக்கியங்களில் சைவசமய புரட்டுகள்:
நடந்த வரலாறுகளுக்கு உண்மைக்குப் புறம்பான உப கதைகளை புகுத்தி, கடவுள்களின் அவதார்ங்களாக வருணித்தும், பொகளை மெய்களாக்கியும், சமஸ்கிருத மூலமொழியில் எழுதப் பெற்ற பல புராண இதிகாசங்கள் ஆதிதிராவிடர் பரம்பரையிலேயே வந்தவர் மத்தியில் இன்று வரைக்கும் ஆதிக்கம்  செலுத்துவதை அறியலாம்.

இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட எழுதப்பெற்ற சஸ்கிருத நூலே பதினெண்புராணம். சுயம்புநாத படனத்தின் உண்மை வரல்லாற்றுக் குறிப்பின் படிக்கு;  ”நாவலிங்ககாட்டில்”, தோட்டம் செய்ய விரும்பிய வேளாண் வைரவன்; காட்டை வெட்டி அழித்த போது கண்டு கொண்டதே சுயம்புநாத சிவலிங்கம். கேள்வியுற்ற வன்னி அரசன், அங்கு அமைச்சரை அனுப்பி ஆலயம் அமைத்து , பூசைகளின் செலவுக்காக, நிலபுலங்களை மானியமாக அளித்தான்.

உண்மை வரலாற்றினை உறுதிப்படுதும் அளவுக்கு அங்கே எந்தப் பெரிய ஆலயங்களுக்கும் இல்லாத அளவுக்கு (3500 ஆண்டுகளுக்கு முன்பு) வழங்கிய மானியங்களின் எச்சங்கள்; இன்று வரைக்கும் பொன்னாலை,  நெல்லியான், திருவடி நிலை, சம்பித்துறை, மாதகல், சில்லாலை, வரைக்கும் இருப்பது வியப்பன்றோ!.

20ஆம் நூற்றாண்டில்  நாம் நன்கு கண்டறிந்தது; சிவாலயத்தின் நன்செய், புஞ்சை நிலபுலங்களை அனேக பொதுமக்கள் அங்கு குத்தகைக்கும், ஈட்டுக்கும் பெற்றவற்றை சத்தியக் கடதாசி மூலம் பின்பு அறுதி உறுதி முடித்து, அபகரித்தும், விற்றும், அவமே சிடைவுற்றதை ஆதாரபூர்வமாகக் கண்டு கொண்டோம்.

வேளாண்வைரவன் பரம்பரையின் சுயம்புநாதீஸ்வரம்,; காலப்போக்கில் சம்பில்துறைப் பட்டினத்தின்ல் எழுந்தருளி இருந்த போது, சைவ வணிகச் செட்டியார்களின் ஆதிக்கச் செல்வாக்குக்கு சென்றடைந்தது. இவர்களின் காலத்தில்தான், அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையும், தம்பி மகிந்தனும், அரசமரக்கிளைகளோடு புத்த மதத்தை இலங்கையி பரப்புவதற்காக கடல் வழி வந்து இறங்கிய துறைமுகம் "சம்பில் துறைமுகமாகும்".

சம்பில்துறை பட்டினத்தில், சம்புநாதீஸ்வரமும்,  காவிரிப்பூம்பட்டினத்தை கடல்கொள்ளை கொண்டது போல்; இங்கேயும் இந்து சமுத்திரக் கொந்தளிபினால் சம்பிதுறை பட்டினமும் சங்கமமாகியது. 20ஆம் நூற்றாண்டு ந்டுப்பகுதியில் சம்பில்துறைச் சமுத்திரத்தில் நீண்டதூரம் நீந்திச் சென்றபோது, நீருக்குள் முருகைக்கல் கட்டிட இடிபாடுகள் இருக்க நாம் கண முடிந்தது.  பண்டைய வணிகச் செட்டியார் பரம்பரையினர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு முன்பு , துறைமுகங்களில் குலதெய்வங்களுக்கு ஆராதனை நிகழ்தாது வணிகத்தை ஆரம்பிப்பதில்லை.

சமுத்திரத்தில் சங்கமான பின்பு; சம்புநாத சிவாலயம் இடம் மாறி மாறி இறுதியாக 1820 ல் கடற்கரையை அண்டியிருக்கும் வயல்கரை - சாத்தாவோலை என்னும் செட்டிகுறிச்சியில் எழுந்தருளப் பெற்று , நித்திய பூசைகள் நிகழ்ந்தன. அப்போது நைமித்திய திருவிழாக்கள் இங்கு நடைபெறவில்லை.  ஆலய நிலபுலங்களே; இவ் ஆலயம் நெடுங்காலமாக அழியப்படாதிருக்க அருள்பாலித்தது.  "சிவசக்தி" திருவிளையாடலின் அற்புத நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்திக்க வல்லார் நன்கு அறிந்து கொள்ளமுடியும்.

திருச்சிற்றம்பலம்

1956.23.02.2016

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS