Thursday, Aug 16th

Last update12:42:19 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் 360 மணி நேரத்தில் அதாவது 15 தினங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடம் - சீனாவின் சாதனை - வீடியோ இணைப்பு

360 மணி நேரத்தில் அதாவது 15 தினங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடம் - சீனாவின் சாதனை - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

உலகம் வியக்கும் வேகத்தில் சீனா தனது நாட்டு ஜனத்தொகையையும், வளங்களையும் வைத்து; வேகம், விவேகம், தொழில்நுடபம் என்பனவற்றால் முன்னேறி வருகிறது. 360 மணி நேரத்தில் அதாவது 15 தினங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் உள்ள போட் குறூப் என்ற நிறுவனமே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள கூனான் மாநிலத்தில் வைத்து சீன விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிறைவேற்றிக் காட்டி உலகை அதிசயிக்க வைத்துள்ளார்கள்.

நத்தார் தினத்திற்கு சில தினங்கள் முன்னதாக தொடங்கி, புத்தாண்டு தினத்தன்று இந்தக் ஹோட்டல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 15 மாடிக் கட்டிடத்தை ஆறு தினங்களில் கட்டி சீன நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இப்பகுதியில் பூகம்பம் வந்தால் கட்டிடம் தாங்குமா என்ற கேள்வியை பலர் எழுப்பினர்.

சுமார் 9.0 ரிக்டர் அளவு நில நடுக்கத்தை கட்டிடம் தாங்கும் என்கிறார்கள் சீனர்கள். இந்த வேகத்தில் போனால் சீனாவின் குடித்தொகைப் பெருக்கம் அந்த நாட்டிற்கு பாரிய பிரச்சனையாக வருவதற்கு வாய்ப்பில்லை. காட்சி 01 : 30 மாடி கட்டிடம் – காட்சி 02 : 15 மாடி கட்டிடம்

 

30 மாடிக் கட்டிடம் 15 நாளில் கட்டும் விதம் - வீடியோவில்

15 மாடிக் கட்டிடம் 2 நாளில் கட்டும் விதம் வீடியோவில்


BLOG COMMENTS POWERED BY DISQUS