Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசு தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடனப்படுத்துகிறது!

கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசு தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடனப்படுத்துகிறது!

E-mail Print PDF

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவும் ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகிறது. கனடாவின் மார்க்கம், அஜெக்ஸ், பிக்கறிங் நகரசபைகள் மற்றும் ரொறன்ரோ மாநகரசபை

ஆகியவற்றின் தமிழ்மொழி மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இம்மாகாணமும் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகின்றது.

இது குறித்து அறியவரும் செய்திகளின் பிரகாரம்:
ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் டால்ரன் மக்கென்றி அவர்கள் இது குறித்த அறிவித்தலை இன்று சனிக்கிழமை கனடாவில் இடம்பெறும் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழா நிகழ்வின் போது விடுக்கவுள்ளார்.

மாநகர, நகரசபைகள் போலல்லாது ஒன்ராறியோ அரசானது இதனைச் சட்டமூலமாக்கினாலேயே இது சாத்தியப்படும் என்பதால் இதனை தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேரணை மூலமாக உள்வாங்கி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் சட்டத்தை இயற்றும் உறுதிமொழியை நாளை மாகாண அரசு வழங்கவுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றில் புறநானுறாக நடைபெறும் தை மாதத்தை தமிழர்கள் மாதமாக அறிவிக்கும் செயற்பாடு கனடாவிலிருந்து ஏனைய மேற்குலக நாடுகளிற்கும் பரவி செம்மொழியின் வரலாற்றையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையை மூத்த தமிழ் ஆர்வலர்களிடையே கனடாவில் தற்போது இடம்பெற்றுவரும் இச் செயற்பாடுகள் எடுத்தியம்புகின்றன.

நாளைய தினம் கனடிய தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழாவில் இடம்பெறப்போகும் அறிவிப்பானது கீழ்க்கண்டவாறே அமையும் என ஒன்ராறியோ மாகாண அரசிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சட்டமூல உருவாக்கத்தை தனிநபர் பிரேரணையாகவே எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருப்பினும், இந்த விவகாரத்தை முதல்வரோ அல்லது ஒரு மூத்த அமைச்சரோ தனது தனிப்பட்ட பிரேரணையாக முன்மொழிந்து இச்சட்ட உருவாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளனர்.

"ஒன்றாரியோ லிபரல் அரசவையானது கனடியத் தமிழ்க் காங்கிரசுடன் தமிழ்மொழி மாதத்தை பிரகடனப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் பல மாதங்களாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்மொழி மாதமாக தை மாதத்தை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை நாங்கள் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒரு தனிநபர் பிரேரனையூடாக விரைவில் நிறைவேற்றவுள்ளோம்" என்பதே இன்றைய தினத்தில் வெளியிடப்படவுள்ள செய்தியின் சுருக்கமாகும்.

இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் கன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களினூடக கனடா தழுவியரீதியில் தமிழ் மாதமாக ஜனவரியைப் பிரகடனப்படுத்தும் முயற்சிகளிற்கும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பரிற்கு கோரிக்கை விடுத்து இந்த முயற்சிக்கு வித்திடும் என அதன் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இன்றைய நிகழ்ச்சிகளை உலகின் எத்திசையிலிருந்தும் மக்கள் www.canadiantamilcongress.ca என்ற இணைய முகவரியூடாக, கனடிய நேரப்படி பிற்பகல் 6.30 மணியிலிருந்து இரவு 12 மணிவரை பார்வையிடலாம் என்றும் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிரந்தர சமாதான வாழ்விற்காக தங்களை ஆகுதியாக்கிய ஆத்மாக்களின் விருப்பாக தமிழ்மொழி இன்று மேற்கில் தளைத்தோங்கி தனக்கென ஓரிடத்தை தரணியில் பெறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையே 2012ம் ஆண்டு தைத் திங்களும் பொங்கல் விழாவும் எடுத்தியம்பி நிற்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS