Monday, Mar 18th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் உலகை ஆட்டிப் படைக்கும் பேஷ்புக் - facebook எனும் போதை ஏறிய பூதம்

உலகை ஆட்டிப் படைக்கும் பேஷ்புக் - facebook எனும் போதை ஏறிய பூதம்

E-mail Print PDF

முன்பெல்லாம் மனிதனுடைய மூளைக்குள் நுளைய  கஷ்டப்பட்ட பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பல காட்டுகிறது. புரியாதிருந்த ஏராளமான புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது.

இன்ரநெற் வலையில் பேஷ்புக் என்னும் இணையம் எல்லோரையும் மயங்கவைத்து அடிமையாக்கி பலருக்கு பல துன்பங்களை கொடுத்தும், தமிழ் மக்களின் கலாச்சார சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஒரு தளமாக அமைந்துவிட்டது. அதற்கு அடிமையாகியவர்கள் போதை மருந்து உண்டவர்போல் அதனை விடவும் முடியாது தொடரவும் முடியாது அதற்குள் தமது வாழ்க்கையயே தொலைத்து விடுகின்றார்கள்.

மனித வாழ்வின் சகல பரிணாங்களையும் விஞ்ஞானம் படிப்படியாக மாற்றி வருகின்றது. “மாற்றங்கள் நிகழும், ஆனால் மாற்றங்கள் என்றுமே மாறாது" என்ற உண்மையை நவீன விஞ்ஞானம் மென்மேலும் நிரூபித்து வருகின்றது.

மேலும் இன்றைய தொழில்நுட்பம் பல நல்ல பொக்கிஷங்களை நமக்கு வாரி வாரி வழங்கி இருந்தாலும்,  அதன் பின்னணியில் விளைவது என்னவோ தீமைதான். மக்களின் எண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள், சிந்தனைப் பாங்கு ஆகியவற்றை உருவாக்குவதில் நவீன தொடர்புச் சாதனங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

மனித நாகரிக வரலாற்றின் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இன்டர்நெட் தொழில் நுட்பம், முழு உலகையும் நமது கைவீச்சுக்குக்கள் கொண்டுவந்துள்ளது. கைக்கெட்டாத் தூரங்களில் இருக்கும் வாய்ப்புக்களை அருகே கொண்டுவந்து சேர்த்துள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றுடன் புதிய கலை கலாசாரங்கள், வாழ்க்கை முறைகள், அரசியல், சமூக, பொருளாதாரம் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவுகளின் தோற்றுவாயாக இன்டர்நெட் நம்மை வந்தடைந்துள்ளது.

இன்றைய இணைய உலகில் 50 வயதை தாண்டிய இளையவர்களே(?) காதில் ஐபாடும், செல்போன் கையுமாக வலம் வருகின்ற இந்த விஞ்ஞான யுக காலத்தில் இளசுகளாகிய இன்றைய இள இரத்தங்களைப் பற்றி பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட்தான் இன்றைய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போயுள்ளது.

ஒரு 7 அல்லது 8 வருடத்திற்கு முன்னர் இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என்பனதேவையாக இருந்தது. ஆனால் இப்போது ஆப்பிள் ஜ போன் ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும் நமது கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்து வந்துவிடுகிறது இணையம்.

இன்றைய இணைய உலகில் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் எத்தனையோ இளைஞர்கள்... அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!  இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 5 க்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணிக்கு செல்லும் இள இரத்தம், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அளப்பரிய நன்மைகளை நமக்குத் தேடித்தந்துள்ள இந்த விஞ்ஞான விந்தை, சில தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கத் தவறவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன் மிக்க ஒரு கல்விச் சாதனமாக இருப்பதுடன், அவர்களை படுகுழியில் வீழ்த்துவதற்கும் இது காரணமாக இருந்து வருகின்றது.. இதே இன்டர்நெட் வழியாகத்தான் குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்களும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன.

குடும்பம் எனும் பூங்காவில் வீசும் புதுத் தென்றல் குழந்தைகள். பலரது வரண்டுபோன வாழ்க்கையில் வசந்தத்தைத் தோற்றவிப்பவர்கள் குழந்தைகள். இவர்கள் எமது எதிர்கால சமூகத்தின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணமாக விளங்கும் விலை மதிப்பற்ற சொத்துக்கள். இத்தகைய குழந்தைச் செல்வங்களை விஞ்ஞானத்தின் புது வரவான இன்டர்நெட், சேதப்படுத்திச் செயலிழக்கச் செய்கின்றது என்பதை அனைவரும் அறிவோம்.
.
தொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், "ஆன்-லைன்' கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.  இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, "சோஷியல் நெட்வொர்க்ஸ்” என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன.  ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.

அந்த வரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான “ஆர்குட், பேஸ்புக்” ' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

உலகை பேஸ்புக் என்னும் போதை வஸ்து போன்ற ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது. அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது. நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது. எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பயனாளிகளை மாற்றியிருக்கிறது அது.

உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது.பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைப்பின்னல்.. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 5,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து, "பேஸ்புக்' வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது: "பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹைபைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இவ்வாறு வசந்த் கூறினார்.

மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ்புக்.பேஸ்புக்கின் ஸ்தாபகரும், உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்றின்படி 6-17 வயதுகளுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் உள்ள 70 சதவீதமான வீடுகளில் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இன்டர்நெட்டை உபயோகிக்கும் சிறுவர்களுள் 20 சதவீதமானோர் பாலியல் ரீதியான நோக்கங்களுடன் அணுகப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 22 சதவீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள் உட்பட, பிறரது வீடுகளில் இன்டர்நெட்டை உபயோகிக்கும்போதே இவ்வாறு அணுகப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான சிறுவர்களுக்கு நிர்வாணப் படங்களும் பாலியல் காட்சிகளும் இன்டர்நெட் வழியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 17 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் இன்டர்நெட் மூலமாக அச்சுறுத்தல்கள், தொந்தரவு செய்தல் போன்றன இடம்பெற்றுள்ளன.

இன்டர்நெட்டில் பாலியல் ரீதியான படங்களையும் காட்சிகளையும் கண்ட சிறுவர்களுள் சுமார் 23 சதவீதமானோர் தாம் மிக மோசமாக மனம் குழம்பிக் கலக்கம் அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கான 89 சதவீத முயற்சிகள் Chat Room களிலும், Instant Message மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகாத இணையத்தளங்களைப் பார்வையிட்ட சிறுவர்களுள் சுமார் 40 சதவீதமானோர் இத்தகவலை இரகசியமாகவே தமக்குள் மூடி மறைத்து வைத்திருந்துள்ளார்கள்.

அத்துடன் தற்கால இளைஞகள் சிலர் குறும்பாக வேறு இணையங்களில் வெளியான இளம்பெண்களின் படங்களை நவீன தொழில் நுடப்ப வசதிகளைப் பாவித்து அதனை தன் காதலி, சினேகிதி என்று பேஸ்புக்கில் பதிவிலிடும் அனாகரிகச் செயல்களும் ஒருசிலரால் முன்னெடுக்க்ப்பெற்றுள்ளது. இதனால் ஒன்றும் அறியாத இளம் பெண்கள் அவமானத்திற்கும், அசைவ்கரியத்திற்கும் ஆளாகின்றனர்.

பெற்றோர்களும், பாதுகாவலர்களும் பெரியோர்களும் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து குடுத்து கவனமும், மேற்பார்வையும் கண்டிப்பும், அறிவுறுத்தலும் செய்தாலன்றி அவர்கள் செல்லும் பாதையை மாற்ற முடியாது.

BLOG COMMENTS POWERED BY DISQUS