Tuesday, Mar 20th

Last update12:10:08 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் இந்தியா இந்தியாவின் கதை! - 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில்

இந்தியாவின் கதை! - 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில்

E-mail Print PDF

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஜோதிமாணிக்கம்" என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.

"M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!. இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது.

"THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !

ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்களே இந்தியாவின் முதல் குடி மக்களென்றும், அவ்வாறே, ஆபிரிக்கா இந்தியா என்று உருவாக்கம்  பெற்ற மனித சமூகம் அகில உலகிற்கும், அங்கிருந்த பரவி தமது வாழ்வாரத்தை நிலை நிறுத்தி கொண்டதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பெறுகிறது.

ஆபிரிக்கா தவிர்ந்து பார்க்கையில், எம்மைப்போன்ற அநேகருக்கு இந்தியாவே தாய் நாடு என்று புருவங்கள் உயர்த்தி பார்க்க வைக்கிறது.  24 பக்கங்களாக பிரிக்கப்பெற்ற இந்த Video தொடர் முழுப்பங்களையும் youtube இல் கண்டு கொள்ளலாம்.  முதலாவது பகுதிக்குரிய தொடர்பு இணைப்பு:

http://www.youtube.com/watch?v=CFz1HUt-cSU


ணிப்புலம்.கொம் இணையத்தளம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றும், இது சம்மந்தப்பட்டதுவே.  வெறுமனே இன்றைய தேதியில் இருக்ககூடிய சூடான விடயங்களை முரண்பாடுகளோடு விவாதித்ததோடு விட்டுவிடாது, எமது அடுத்த சந்ததியினருக்கு வேண்டிய தகவல்களையும் சேகரித்து அவர்களுக்கு எம்மாலான தடயங்களைவிட்டு வைத்து செல்வதும் எமது கடமையாகிறது.

எங்கள் பணிப்புல சமூகத்தின் வரலாற்றினையும், வழித்தோன்றல்களையும் அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்துவது எம் எதிர் கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லக்கூடிய ஒரு ஒப்பற்ற விடயமாக கொள்கிறோம்.  இதன் பொருட்டு, தகவல் சேகரிக்கும் பணி 2002 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கப்பெற்று விட்டது.  ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களால் பெரிதளவில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாயினும், இப்பணி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.  ஊரில் எஞ்சி இருக்கும் எம் மூதாதையர் மூலமாக கண்டறியக்  கூடியவற்றை கண்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்தி, எமது அடுத்த தலைமுறையினர்க்கு விட்டு செல்லலாம்.  அவர்கள், மேலே குறிப்பிட்டது போன்ற மரபு அணு பரிசோதனைகள் மூலம், உறவுகளாக நாம் எல்லோரும் எவ்வாறு பின்னிப் பிணைந்திருக்கின்றோம் என்பதனை எடுத்துக்கூறும் அடுத்த கட்டத்திற்கு இதனை நகர்த்தி செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.  இம் முயற்சிக்கு அனைவரும் தாமாகவே தகவல் சேகரித்து அனுப்பி வைத்தால், அவற்றை பத்திரமாக ஆவணப்படுத்தி, மக்களின் மேலதிக ஆராய்விற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.  இதற்கு எதுவாக, வெகு விரைவில், மரபியல்/பரம்பரை விடயங்களை பதிவு செய்யும் வசதி வாய்ப்பினை  எம் இணையமூலம் ஏற்படுத்தி தரும் முயற்சிகளில் இறங்கி உள்ளோம்.  இது ஒரு குடும்பத்திற்கான Family Tree மட்டும் அல்ல. சிறு துளி வெள்ளமாக,  எமது ஊர்கள் என்று நாம் கூறும் எம் அனைத்து பிரதேசங்களையும் ஒன்றிணைத்து வரும் குடும்பத்தின் கடமைப்பு.  இதில் மக்களின் தகவல் பதிவிற்கும் மக்களின் தகவல் தரிவிற்பிக்கும் ஏற்ப வசதிகள் ஏற்படுத்தித்தரப்பெறும்.

குறிப்பாக ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், எமது எதிர் கால சந்ததி தனது உறவுகளை தேடி அலைய வேண்டியதில்லை.  இப்படி ஆவணப்படுத்தப்பெற்ற கட்டமைப்பை அலசுவதன் மூலமே அவர்கள் தம் சுவடுகளை அறிந்து கொள்வார்கள்.

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS