Thursday, Jul 27th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் சமூக தொழில் முயற்சியாண்மையும், நபர்களுக்கிடையிலான உறவுகளும்

சமூக தொழில் முயற்சியாண்மையும், நபர்களுக்கிடையிலான உறவுகளும்

E-mail Print PDF

நீங்கள் எந்தவொரு வர்த்தகத்திலும் வெற்றிபெற வேண்டுமாயின் தொழில் முயற்சியாண்மையே அதற்கு அடித்தளமாகும். நீங்கள் சொந்த வர்த்தகம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் எனின், கீழ்வரும் தொழில் முயற்சிசார் வழிமுறைகளை நீங்கள் அவ்வாறே பின்பற்றுதல் அவசியம். நீங்கள் ஏற்கனவே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்றால், தொழில்முயற்சிசார் அணுமுறைகளுடன் நீங்கள் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவ் வர்த்தகத்தை ஸ்திரமான தன்மையுடன் அபிவிருத்தி செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக, தொழில்முயற்சியின் சிறப்பு இயல்புகள் தொடர்பில் நீங்கள் கற்றறிந்து கொள்ளும் அதேநேரம் தொழில் முயற்சிசார் திறன்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி பாரம்பரியமான ஒரு வர்த்தகராக திகழ்வதற்குப் பதிலாக, வர்த்தக உலகின் ஏணியில் ஒரு தொழில்முயற்சியாளராக நீங்கள் மேல்நோக்கி செல்ல முடியும்.

சமூக தொழில்முயற்சியாண்மை என்றால் என்ன?

நீங்கள் ஒரு வர்த்தகத்தை முன்கொண்டு செல்கின்ற வேளையில், நீங்கள் சமூக அபிவிருத்தி அல்லது சனசமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதை எளிதாக்க உங்களுக்கு உதவிபுரிகின்ற வடிவில் அமைந்த தொழில்முயற்சியாண்மையே இதுவாகும். நீங்கள் ஒரு முழு அளவிலான சமூக தொழில்முயற்சியாளராகவும் உங்களது வர்த்தகமானது முழு அளவிலான சமூக நிறுவனமாகவும் காணப்படுகின்றது என்றால், அனைத்து இலாபத்தையும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை ஆகிவற்றுக்காக நீங்கள் மீள்-முதலீடு செய்யுங்கள். எவ்வாறிருப்பினும், சாதாரண வர்த்தக செயற்பாடுகளில் முழு அளவிலானதொரு சமூக தொழில்முயற்சியாண்மையை பேணுவது சாத்தியமில்லாத பட்சத்திலும், சமூக முன்னேற்றம் அல்லது சனசமூக அபிவிருதிற்கு பங்களிப்புச் செய்யும் தன்மையை சில வர்த்தகங்கள் இயல்பாகவே கொண்டுள்ளன. இவ்வாறான வர்த்தகங்களின் உரிமையாளர்கள் தொழில்முயற்சிசார் தராதரங்கள் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவார்களாயின், அவர்கள் தமது வர்த்தக வழிமுறையில் சாதகமான வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடிவதுடன் சமூக ஃ சனசமூக அபிவிருத்திக்கு போதுமானளவுக்கு பங்களிப்பு வழங்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஒரு சமூக தொழில்முயற்சியாளர் கொண்டிருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு திறனான 'பயன்தரவல்லதும் சாதகமானதுமான நபர்களுக்கு இடையிலான உறவினை கட்டியெழுப்புதல்' தொடர்பில் நாம் இப்போது கலந்துரையாடுவோம்.

பயன்தரவல்ல நபர்களுக்கு இடையிலான உறவுகளை உருவாக்குதல் மற்றும் பேணுதல்:

பயன்தரவல்ல நபர்களுக்கு இடையிலான உறவுகளை உருவாக்குதலும் அதனை பேணுதலும் என்பது ஒரு சமூக தொழில்முயற்சியாளரிடம் கட்டாயமாக காணப்பட வேண்டிய ஒரு திறனாகும். அது மாத்திரமன்றி, எந்தவொரு வர்த்தகத்திலும் தன்னை ஈடுபடுத்தியுள்ள எந்தவொரு தொழில்முயற்சியாளருக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு திறனாகவும் இது காணப்படுகின்றது. ஒரு தொழில்முயற்சியாளர் என்ற வகையில், பொதுமக்களுடன் எந்த வேளையில் தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்தரவல்ல மற்றும் சாதகமாக உறவினை உருவாக்கும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ளவில்லை எனின், அது உங்களது வர்த்தகத்தில் மோசமான தாக்கத்தை தாக்கத்தை செலுத்தலாம். அத்துடன் சமூகம் ஃ சனசமூகத்தின் அபிவிருத்திக்காக நீங்கள் வழங்கும் பங்களிப்பினையும் குறைவடையச் செய்ய முடியும். இதன் இறுதிப் பெறுபேறானது - நிறுவனம் சீரழிந்து போவதாகவே இருக்கும். அதேபோன்று, ஏனையோருடன் மன மகிழ்ச்சியான மற்றும் சாதகமான உறவுகளை உருவாக்குவதற்கும் அதனைப் பேணுவதற்கும் அவசியமாகவுள்ள பொருத்தமான திறன்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களுடன் தொடர்புகளை மேற்கொள்கின்ற வேளைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் நீங்கள் கூடிய கவனம் செலுத்துவீர்களாயின், இவ்வாறான திறன்களை நீங்கள் விருத்தி செய்து கொள்ள முடியும்.

பயன்தரவல்ல நபர்களுக்கு இடையிலான உறவுகளை உருவாக்குவதற்காகவும்  பேணுவதற்காகவும் நீங்கள் செயற்படுகின்ற வேளையில், பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

• மற்றைய நபரை நீங்கள் ஒரு முக்கிய நபராக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை அவர் உணர்வதற்கு இடமளியுங்கள்.
• திறந்த மனதுடன் அவரோடு வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்.
• அவரது உரையாடலை கருத்தொருமித்து கவனமாக செவிமடுங்கள்.
• அவரது தேவைகளை ஃ பிரச்சினைகளை சிறப்பாக புரிந்து கொண்டு, தீர்வுகளை வழங்குங்கள்.
• அவரினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மொழி நடை ஒன்றினை பயன்படுத்துங்கள்.
• உரையாடலின் ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் இறுதிப் பகுதி ஆகியவற்றில் மேம்பட்ட தராதரத்தினை பேணிக் கொள்ளுங்கள்.
• தேவையற்ற நகைச்சுவைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• உங்களது நேர்மையையும், நற்பண்பினையும் எந்த வேளையிலும் வெளிப்படுத்துங்கள்.
• அவரது நேரத்தின் பெறுமதியை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
• மிக அதிகமாகவோ அல்லது மிகச் சொற்பமாகவோ உரையாட வேண்டாம்.
• தொடர்பில்லாத விடயங்கள் குறித்துப் பேச வேண்டாம்.
• இந்த உறவானது அவருக்கு அனுகூலங்களைக் கொண்டுவரும் என்பதை அவர் விளங்கிக் கொள்வதற்கு அவருக்கு இடமளியுங்கள்.
• உங்களுடன் மீண்டும் உரையாடுவதற்கான தூண்டுதலை அவருக்கு அளிக்கக் கூடியதொரு சிறப்பான முறையில், அவருடனான உறவினை கட்டியெழுப்புங்கள்.

ஒரு சமூக தொழில்முயற்சியாளர் என்ற வகையில், நீங்கள் உங்களது வாடிக்கை¬யாளர்-களுடன் மட்டுமன்றி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்து கொள்ளவுள்ளவர்கள், விநியோகஸ்தர்கள், ஊழியர்கள், உங்களது வர்த்தக நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசாங்க ஊழியர்கள், வங்கியியலாளர்கள் மற்றும் சமூகத்துடனும் நீங்கள் சாதகமான உறவுகளை உருவாக்குவதும் அதனை பேணி வருவதும் அவசியம்.

சாதகமான நபர்களுக்கிடையிலான உறவுகளை முகாமை செய்வதனால் பெற்றுக் கொள்ளும் அனுகூலங்கள்:

• வாடிக்கையாளர் தளம் வளர்ச்சியடைதல்.
• தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளல்.
• வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக விடுக்கப்படும் வெளிப்புற அச்சுறுத்தல்களை குறைத்தல்.
• உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான எண்ணங்கள் மற்றும் யோசனைகளை உள்வாங்கிக் கொள்தல்.
• வர்த்தகம் தொடர்பான நன்மதிப்பினை உயர்த்திக் கொள்ளல்

பயன்தரவல்லதும் சாதகமானதுமான நபர்களுக்கு இடையிலான உறவுகளை உருவாக்குதலும் அவற்றைப் பேணுதலும் எந்தவொரு தொழில்முயற்சியாளரும் மேற்கொள்ள வேண்டிய மிகக் கட்டாயமான செயற்பாடாகவுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சமூக தொழில்முயற்சியாளர் இந்தத் திறனை மென்மேலும் கற்றறிந்து கொள்வது அவசியமாகும்

 

 


BLOG COMMENTS POWERED BY DISQUS