Saturday, Oct 21st

Last update05:45:10 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் புதிய கணினிகளில் அறிமுகமாகும் புதிய தொழில் நுட்பங்கள் - அறிந்து கொள்வோம்

புதிய கணினிகளில் அறிமுகமாகும் புதிய தொழில் நுட்பங்கள் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

புதிய கணினிகளில் சில புதிய தொழில் நுட்பங்கள் உட்புகுத்தப் பெற்றிருப்பதனால், கணினி பாவிப்பவர்கள் இவை பற்றிய அறிவை பெற்றிருந்தால் அனைவருக்குமே இவை உதவியாக இருக்கும் எனக் கருதி இங்கே. பதிவாகின்றது.

1. யு.இ.எப்.ஐ. (UEFI): யூபை எனச்சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம், புதிய கணினிகளில் இயக்கத்தில் இணைக்கப்படுகின்றன. இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கணினிகளில் பொருத்தப் பெற்றிருக்கும் BIOS (Basic Input Output System) interface க்குப் பதிலாக இந்த புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

நீங்கள் கணினியை ஓன் செய்ததும், உங்கள் கணினியில்  இணைக்கப்பெற்றுள்ள ஹார்ட்வேர் சாதனங்களின் விபரங்களை அறிந்து கொண்டு அவை சரியாக இயங்கும் நிலையில் உள்ளனவா என BIOS செய்வது போல்"post" என்ற பரிசோதனை செய்தயைச் செய்த பின் இந்த UEFI இடைமுகம் கணினியை இயக்ககும்.

எல்லாம் சரியாக இயங்க்கும் நிலையில் இருக்கிறது என அறிந்தவுடன் கணியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்பரேட்டிங் சிஸ்டத்தினை பெற்று அதனை இயங்கச்செய்கின்றது. இதன் பின்னரே கணினி இயங்க ஆரம்பிக்கின்றது இவையாவும் நொடிப் பொழுதில் ஒவ்வொரு கணினியிலும் நிகழ்பவையாகும்.

தற்போது பாவனையில் உள்ள பயாஸ் (BIOS) இவற்றை செய்து வந்தாலும், புதிதாக அறிமுகப்படுதவுள்ள UEFI பலவகை சிப் கட்டமைப்பினை புதிதாக வெளிவந்துள்ள வேகம் கூடிய CPU க்களுக்கு (ப்ராசசர்களுக்கு) சாதகமாக  இயங்குகின்றது. (இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் - 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம். ஆனால், (BIOS) பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்யமாட்டாது. மேலும் (BIOS) பயாஸ் 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும். தற்போது அனேகமாக அனைவரும் பாவிப்பது 32 பிற் விண்டோஸ் ஒபரேற்றிங் சிஸ்ரமே.

புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

2. 32 பிட், விண்டோஸ் ஒபறேறிங் சிஸ்ரத்தை 64 பிட் விண்டோஸ் ஒபறேறிங் சிஸ்ரமாக அப்கிறேட் செய்யமுடியுமா?
முடியாது. இது தீர்வு கிடைக்காத ஒரு பிரச்னை. 32 பிட் ஹோம் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, 32 பிட் புரபஷனல் சிஸ்டமாக அப்கிரேட் செய்துவிடலாம். ஆனால் 64 பிட் பதிப்பிற்கு உயர்த்த வேண்டும் என்றால், புதியதாக 64 விண்டோஸ் ஒபறேற்றிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 32 பிட், விண்டோஸ் ஒபறேறிங் சிஸ்ரத்தை 64 பிட் விண்டோஸ் ஒபறேறிங் சிஸ்ரமாக அப்கிறேட் செய்திட முடியாது.

விண்டோஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டம், தன்னிடம் வரும் தகவல்களை நாம் பயன்படுத்தும் (32/64 பிட் பதிப்பு) சிஸ்டத்திற்கேற்பவே செயல்பெறுகின்றது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தகவல்களை ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் எடுத்து இயங்கும். ஆனால் 32 பிட் ஒபறேற்றிங் சிஸ்டத்திற்கு அந்த அளவு தகவல்களை ஒரே நேரத்தில் கையாள இயலாது. அதனாலேயே விண்டோஸ் 64 பிட் ஒபறேற்றிங் சிஸ்ரத்தினை உடைய கணினியானது 32 பிட் ஒபறேற்றிங் சிஸ்ரத்தை உடைய கணினியிலும் வேகமாக இயங்குகின்றது.

அத்துடன் விண்டோஸ் சிஸ்டம் தரும் Easy Transfer பயன்பாட்டின் மூலம், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்கள் இடையே மாற்ற முடியாது. இவற்றை அனுப்பும் மற்றும் பெறும் சாதனங்களில் உள்ள சி.பி.யு.க்கள் அடிப்படையில், மாறுபாடு கொண்ட தகவல்கள் கட்டமைப்பினைப் பயன்படுத்துகின்றன.

32 பிட் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுகையில், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்களையும் அந்த வேகத்திற்கேற்றதாக மாற்ற வேண்டும். 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவதற்குக் காரணமே, கம்ப்யூட்டரில் உள்ள 64 பிட் ப்ராசசரின் இயக்க வேகத்தின் அனுகூலங்களைப் பெறுவதற்காகத்தான். (இப்போது வரும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் 64 பிட் ப்ராசசர்களையே கொண்டுள்ளன.) இவற்றின் ராம் மெமரியும் 4 ஜிபி மற்றும் அதற்கு மேலான அளவில் உள்ளது. அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இல்லை எனில், 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவது தேவையற்ற ஒன்றாகும்.

3. புதியதாக மொனிட்டர் ஒன்று வாங்கப் போகிறீர்களா? இரண்டு வகையான டிஸ்பிளே தரும் மொனிட்டர்களைப் பார்க்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் Twisted Nematic பேனல்கள் காட்டும் டிஸ்பிளே மற்றும் புதியதாய் வந்திருக்கும் InPlane Switching (IPS) பேனல்கள் கொண்ட டிஸ்பிளே என இரண்டு வகைகளைக் காணலாம். இதில் எது சிறப்பானது? நிச்சயமாய் இரண்டாவது வகை தான். ஏன் என்று இங்கே காணலாம்.

ஐ.பி.எஸ். பேனல்களால், முந்தைய டி.என். பேனல்களைக் காட்டிலும் அதிக வண்ணங்கள் மற்றும் ஒளி வெளிப்பாட்டு மதிப்புடன் படங்களைக் காட்ட முடியும். நாம் அதிகமான கோணங்களில் பார்க்க முடியும். டி.என். பேனல்களைச் சற்று அழுத்தினால் வண்ணம் வெளிர ஆரம்பிக்கும். ஐ.பி.எஸ். பேனல்களில் இந்த பிரச்னை இல்லை. எனவே டச் ஸ்கிரீன் போன்றவற்றிற்கு ஐ.பி.எஸ். பேனல்களே உகந்தவையாகின்றன. ஐ.பி.எஸ். பேனல்கள், சென்ற 1996 ஆம் ஆண்டிலேயே வடிவமைக்கப்பட்டாலும், இத் தொழில் நுட்பம் இன்னும் தர நிர்ணயம் செய்யப்படாததால், வர்த்தக ரீதியாக இது வளரவில்லை.

ஐ.பி.எஸ். பேனல் திரைகளில், சூப்பர் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ப்ரோ (Super IPS மற்றும் IPS Pro) என சில வகைகள் உள்ளன. அடிப்படையான ஐ.பி.எஸ். பேனல்களில் கூடுதல் அம்சங்களுடனும், சிறப்பான டிஸ்பிளேயுடனும் இந்த வகைகள் உள்ளன.
டி.என். பேனல்கள் தயாரிப்பது செலவு நோக்கில் மிகவும் குறைவு என்பதால், இவற்றைக் கொண்டிருக்கும் மொனிட்டர்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. மேலும் டி.என். பேனல்கள், ஐ.பி.எஸ். பேனல்களைக் காட்டிலும் கூடுதல் பிரைட்னஸ் காட்ட முடியும்; அதிகமான எண்ணிக்கையில் ரெப்ரெஷ் ரேட் கொள்ள முடியும். எனவே இவை முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் அப்ளிகேஷன்களுக்கு உகந்தவையாக உள்ளன.

4. தண்டர்போல்ட் போர்ட் (Thunderbolt port): இன்டெல் நிறுவனம் தயாரித்த புதிய மிக அதிக வேகத்தில் இயங்கும் இன்டர்பேஸ் தான் தண்டர்போல்ட் போர்ட். 2011 ஆம் ஆண்டிலேயே, ஆப்பிள் நிறுவனம் தன் மேக் புக் ப்ரோ கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்தியது. விண்டோஸ் சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, இப்போதுதான் தண்டர்போல்ட் போர்ட் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வரத் தொடங்கி உள்ளன.

தண்டர்போல்ட் போர்ட்கள் கொண்ட சாதனங்கள் நாம் வாங்கும் விலைக்குக் கிடைத்தால் நல்லதுதான். கூடுதல் வேகத்தில் சாதனங்களுக்கிடையே டேட்டாக்களைக் கடத்த முடியும். தண்டர்போல்ட் இடைமுகத்தில், high speed PCI Express interface மற்றும் DisplayPort interface ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, ஒரே இன்டர்பேஸாகக் கிடைக்கிறது.

இது சீரியல் டேட்டா மாற்றத்தை சப்போர்ட் செய்கிறது. இதனால், வெகு தொலைவிற்கு டேட்டாவினை வேகமாகக் கடத்தலாம். தண்டர்போல்ட் இடைமுகத்தில், ஒரே ஒரு கேபிள் மூலம் டேட்டா, ஆடியோ, வீடியோ மற்றும் மின்சக்தியை வேகமாகக் கொண்டு செல்ல முடியும். இதனால், ஹார்ட்வேர் தயாரிப்பவர்கள், மற்ற சாதனங்களை இணைக்க, கேபிள் மற்றும் போர்ட்களின் எண்ணிக்கையைக் குறைவான எண்ணிக்கையில் தரலாம்.

சந்தையில் தண்டர்போல்ட் கேபிள்கள் மற்றும் போர்ட்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இவற்றைப் பெற்றுப் பயன்படுத்தினால், இதன் கூடுதல் பயன் விளங்கும்.

5. யு.எஸ்.பி.3 விஷேசம் என்ன? அதன் தகவல் பரிமாறும் வேகம், விநாடிக்கு 5 கிகாபிட்ஸ். யு.எஸ்.பி.2ன் வேகம் விநாடிக்கு ஜஸ்ட் 460 மெகாபிட்ஸ் தான்.

நாம் மாற்றிக் கொள்ளும் தகவல்களின் அளவு அவ்வளவு இல்லை என்றாலும், வேகத்தைப் பொறுத்தவரை யு.எஸ்.பி.3 மிக அதிக வேகம்தான். யு.எஸ்.பி,3 இரு வழிப்பாதை போன்றது.

இரு பக்கங்களில் இருந்தும் தகவல்களை ஒரே நேரத்தில் மாற்றலாம். ஆனால், யு.எஸ்.பி. 2 ஒரு வழிப் பாதை மட்டுமே. ஆனால், யு.எஸ்.பி.3ன் வேகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற கேபிள் உங்களிடம் இருப்பது அவசியம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS