Wednesday, Nov 14th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் பாலகிருஷ்ணன் விசுவலிங்கம் அவர்கள் - 27.11.2012

4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் பாலகிருஷ்ணன் விசுவலிங்கம் அவர்கள் - 27.11.2012

E-mail Print PDF

 


பணிப்புலம் பண்டத்தெரிப்பில் பிறந்து, வாழ்ந்து , பாலையூத்து திருகோணமலையில் 7  வருடங்கள் வாழ்ந்த  எங்களின் இதய தெய்வத்தின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி .

எமை நிலந்தரமாக நீங்கள் பிரிந்து
ஆண்டு நான்கு நகர்ந்துவிட்டது மாமா
ஆனால் எம்மிடம் நீங்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும்
எம்முள் செதுக்கப்பட்டுள்ளன கல்வெட்டுக்களாக..

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
இன்று தம்பி நீங்கள் இன்றி
உங்கள் நினைவுகளுடன் தவிக்கிறார்கள்
தன் மகனாக வளர்த்த தமையன் தமக்கை..

புன் சிரிப்போடு உமை பார்க்க நாங்கள் காத்திருக்க!  
புயல் வெள்ளமாக வந்த எமன் எமை பிரித்துவிட்டதே 
உங்களை எங்களிடமிருந்து  நிரந்தரமாக..
பட்ட கடன் தீர்க்க முடியாத பாவிகள் ஆனோம்...

அம்மாவாக பால் ஊட்டி, சோறுட்டி, பாடசாலை வரை தோளில் சுமந்து
எமை காத்து வளர்த்த எங்கள் கடவுளின் நினைவுகளுக்கு அஞ்சலி..
அப்பாவைப்போல் அரவணைத்து, அண்ணனாக அன்பு காட்டி
எமை பொத்தி பொத்தி வளர்த்த எங்கள்  ஆசை மாமாவின் நினைவுகளுக்கு அஞ்சலி ...

மழலை பேச்சும், என்றும் புன்னகை பூத்திருக்கும் உங்கள் முகமும்
என்றும் மறையாது மாமா எமை விட்டு ....

எங்களின்  மனக்கடலில் ஓயாது அடிக்கும் அலைகள் போல
வாழும் எங்கள் ஆசைச்  சின்ன மாமாவின் நினைவுகளுக்கு அஞ்சலி...
கடைசி மூச்சு உள்ளவரை எங்களின் நினைவுகளோடு வாழும்
எங்கள் இதய தெய்வத்துக்கு அஞ்சலி ......

மருமக்கள்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS