Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் சோழ அரசர்களும் சைவ சமயமும் - பகுதி - 2

சோழ அரசர்களும் சைவ சமயமும் - பகுதி - 2

E-mail Print PDF

தஞ்சாவூர் அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன

புகழ் பெற்ற இளவரசன்
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்து இறந்தான்.[1]

உத்தம சோழனுக்கு இக்கொலையில் சம்மந்தம் இல்லையென்று சொல்லவதற்கில்லை, உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதிவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதிதான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.[2]

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,

அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.

"பெரிய கோயில்' என்ற அடைமொழியைப் பெற்றது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்.

இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

இங்கு தல விநாயகர் கன்னி விநாயகர் ஆவார். மூலவர் பிரகதீஸ்வரரை, ராஜராஜ சோழன் தன் காலத்தில் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் வணங்கியுள்ளான்.

உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவ லிங்கங்கள் உள்ளன.

தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கங்களுக்கே செய் யப்படுகிறது. கோபுரம் பிரமிடு அமைப் பில் இருப்பதாலும், ராஜராஜன் ஆத்மார்த்தமாக கட்டிய கோயில் என்பதாலும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உஷ்ணமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

மிகப்பெரிய லிங்கம் இருந்தாலும் இங்கு பீடம் இல்லை. முதலில் உள்ள மராட்டிய நுழைவு வாயில் கோபுரம் 1803ல் கட்டப்பட்டது. இதை அடுத்துள்ள கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 நிலை 7 கலசங்கள் உள்ளன.

மூன்றாவது உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் 3 நிலை, 5 கலசங்கள் உள்ளன. இது கி.பி. 988ல் கட்டப்பட்டது. கருவூர் சித்தர் சன்னதி பின்புறம் உள்ள மரத்தில் மரப்பல்லியை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ராஜராஜ சோழன்- வானவன் மாதேவியின் மகன் ராஜேந்திர சோழன். இவன் தன் தந்தை கட்டிய பெரிய கோயிலைப் போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளான். ராஜராஜனும் மற்றவர்களும் இக்கோயிலுக்கு 183 கிலோ தங்க பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜைப்பொருள் மற்றும் நைவேத்தியத்திற்காக 40 கிராமங்கள், 10 ஆயிரம் பசுக்கள் தந்துள்ளனர்.

16.5 அடி உயரமும், 7.5 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய துவார பாலகர்கள் இங்குள்ளனர். இக்கோயிலின் கோபுர கலசம் 340 கிலோ எடையுள்ள செம்புத்தகடால் ஆனது. இதற்கு 12.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள கற்கள் தேவைப்பட்டது.

இவை திருச்சி அருகே உள்ள மம்மலையில் இருந்து எடுத்து வரப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.

உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுனர்களே கிடையாது. இராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாக கட்டிய (கி.பி.985 - 1012)அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி . இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இங்குள்ள நந்தியைப்போல் வேறு எங்கும் கிடையாது. அத்தனை பிரமாண்டமாக இருக்கும். இது 12 அடிஉயரம் உடையது.

அகலம்(குறுக்களவு) 6 அடி ஆகும். உட்கார்ந்துள்ள நீளம் 9 அடி. இது திருச்சிக்கருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கல் எடுத்து வந்து இதை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.  கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம். இங்குள்ள முருகன் சந்நிதி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.500 வருடம் பழமையானது.  விநாயகர் சந்நிதி மகாராஷ்டிர சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் அடித்தளத்தில் சோழ மன்னரின் மானியங்கள் திருப்பணிகள், தானங்கள் குறித்த செய்திகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

சோழர்களின் மெய்க் கீர்த்திகள் பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவனுக்குப் பிறகு இவன் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவன் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள்சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

இரண்டாம் வகையான மெய்க் கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

போர்கள்
கேரளப் போர் இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

மலைநாடு கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

ஈழப் போர் ஈழம் இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஈழப் படையெடுப்பின் விளைவுகள் சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

ஈழத்தில் சோழக் கோயில்கள் இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

பிற வெற்றிகள் மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான்.(சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி கி.பி 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)

சத்யாசிரயனுடன் போர் 922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.

இராஜேந்திரன் தலைமை தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள் சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

வேங்கி இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரூம் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்ற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.

மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.

வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல் முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.

வேங்கிப் போர் கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.

கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.

இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இராண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.

பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.

ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.

வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான்.

சோழமண்டலம்
தொன்மைக் காலத்திலிருந்தே சோழநாடு என்றிருந்த பெயர் இராசராசன் காலத்தில்தான் முதன் முதலில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது.
சோழமண்டலம் எனும் பெயர் கி.பி. 1009 முதல் அழைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. 

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்
1. இராசராசசோழன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )
3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்
5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு
7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்
8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்
9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )
10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் (கோயில் நிர்வாக அதிகாரி)
11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கு சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.

பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும்

இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!  

ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு கூடிய ஒரு நினைவகம் கட்ட வேண்டும.

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.

1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

மாலத் தீவுகளைக் கைப்பற்றல் இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவு.

இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.

இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்
இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.

சமயக் கொள்கை
ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜன் இந்தியாவின் பெரும் இராஜதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்ட்டன் பட்டயங்கள் கூறுகிறது.

நிர்வாகம்
நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராஜேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

குடும்பம்
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள்.

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)

இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.

இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்
இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.

மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.

வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.
பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

பெண் அதிகாரிகள்
அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்

சபைக்குரிய அலுவலர்கள்
பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்
கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.

கணக்கன்
சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்.

பாடி காப்பான்
கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.

தண்டுவான்
கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.

அடிக்கீழ் நிற்பான்
ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.

சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா?
இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை

சோழர்கால கப்பல்கள்.
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்
மேச ஞாயிறு - சித்திரை மாதம்
ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
கடக ஞாயிறு - ஆடி மாதம்
சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
மகர ஞாயிறு - தை மாதம்
கும்ப ஞாயிறு - மாசி மாதம்
மீன ஞாயிறு- பங்குனி மாதம்

சோழர் கால இலக்கண நூல்கள்
தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்

சோழர் கால நிகண்டு
பிங்கலந்தை

சோழர் கால ஏரிகள்
செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்
மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
பொன்னேரி - ஜெயங்கொண்டம்
வீரநாராயண பேரேரி- வீராணம்
திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
கவீர ஏரி ( கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை

சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்
பழவேற்காடு.
சென்னப்பட்டினம்
மாமல்லை.
சதுரங்க்கப்பட்டினம்
வசவ சமுத்திரம்
மரக்கானம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
காவேரிப்பூம்பட்டினம்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம்
முத்துப்பேட்டை
தொண்டி
தேவிப்பட்டினம்
அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
இராமேசுவரம்
பெரிய பட்டினம்
குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி
கொற்கை
காயல்பட்டினம்
குமரி.

உலகளந்தான் கோல்
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்
இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.

உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.
மேற்கோள்கள்
சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
varalaaru.com.
சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 239.
சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 240.

இராசேந்திர சோழன் சோழர்களின்புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.

இணை அரசனாக நிர்வகித்தல் இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும் இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

நாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும் கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவ சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.

படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்.
கடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது

பண்ணை இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம் இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல் தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.

எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிகாலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன.

தெற்கில் குழப்பம் பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இக்காலத்திய பாண்டிய கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.

'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று [[பாண்டியர்|பாண்டியர்களுடன்] இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த('தாதை முன்வந்த')விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும்.

பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழப்பேரரசின் கருணை சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.

இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள்ள், விஜயாலயச் சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழ நாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.

சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளை கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்க, குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர்.

விருதுகள்
இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது.

இராஜேந்திரசோழனின் சிறப்புப்பட்டங்கள்.
மதுராந்தகன்
உத்தமசோழன்
சோழேந்திரசிம்மன்
விக்ரமசோழன்
முடிகொண்டசோழன்
பண்டிதசோழன்
கடாரம்கொண்டசோழன்
கங்கைகொண்டசோழன்
வீரராஜேந்திரன்
பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்கொண்ட ஐயன்
அதிசயசோழன்
ஜயசிம்மசரபன்
மலைநாடுகொண்டான்
மன்னைகொண்டசோழன்
மகிபாலகுலகாலன்
வீரசோழன்
ராஜ ராஜேந்திரன்
இரட்டை படைகொண்டசோழன்
நிருபதிவாரகன்
மனுகுலசோழன்
ராஜ வித்யாதரன்
உத்தரவிடாங்கன்
தாணவிணோதரன்
பராக்கிரமசோழன்

பட்டத்தரசிகள்
திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான், பஞ்சவன் மாதேவியார், வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளித்தாள். இம்மன்னனின் மற்றோரு மகள் புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் 6-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044ல் காலமாயிருக்க வேண்டும்.

மேற்கோள்கள்
சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் ஒன்று
உசாத்துணைகள்
Keay, John (2001). India: A History. New York: Grove Press. ISBN 0-8021-3797-0.
Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
Rothermund, Dietmar; Kulke, Hermann (1998). A history of India. New York: Routledge. ISBN 0-415-15482-0.
Schmidt, Karl Ludwig (1997). An Atlas and Survey of South Asian History (Sources and Studies in World History). Armonk, N.Y: M.E. Sharpe. ISBN 1-56324-334-2.
South Indian Inscriptions
இராசாதிராசச் சோழன்

இராசேந்திரச் சோழன்

வீரராசேந்திரச் சோழன்

அதிராசேந்திரச் சோழன்


சோழ மன்னர்களின் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. நடராஜர் சிதம்பரம்
2. பசுபதீஸ்வரர் திருவேட்களம்
3. உச்சிநாதேசுவரர் திருநெல்வாயல்
4. பால்வண்ண நாதர் திருக்கழிப்பாலை
5. சிவலோக தியாகேசர் திருநல்லுர் பெருமணம்
6. திருமேனிஅழகர் திருமயேந்திரப்பள்ளி
7. முல்லைவன நாதர் தென்திருமுல்லைவாசல்
8. சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர்
9. சாயாவனேஸ்வரர் திருசாய்க்காடு (சாயாவனம்)
10. பல்லவனேஸ்வரர் திருபல்லவனீச்சுரம்
11. சுவேதஆரன்யேஸ்வரர் திருவெண்காடு
12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை திருக்காட்டுப்பள்ளி
13. வெள்ளடையீசுவரர் திருக்குருகாவூர் வெள்ளடை
14. பிரம்மபுரீசர் சீர்காழி
15. சத்தபுரீசுவரர் திருகோலக்கா
16. வைத்தியநாதர் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
17. கண்ணாயிரநாதர் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
18. கடைமுடிநாதர் திருக்கடைமுடி
19. மஹாலக்ஷ்மி நாதர் திருநின்றியூர்
20. சிவலோகநாதர் திருபுன்கூர்
21. அருட்சோம நாதேஸ்வரர் நீடூர்
22. ஆபத்சகாயேஸ்வரர் திருஅன்னியூர்
23. கல்யாணசுந்தரர் திருவேள்விக்குடி
24. ஐராவதேஸ்வரர் திருஎதிர்கொள்பாடி
25. அருள்வள்ள நாதர் திருமணஞ்சேரி
26. வீரட்டேஸ்வரர் திருக்குருக்கை
27. குற்றம் பொருத்த நாதர் திருக்கருப்பறியலூர்
28. கோந்தல நாதர் திருக்குரக்குக்கா
29. மாணிக்கவண்ணர் திருவாளொளிப்புத்தூர்
30. நீலகண்டேசர் திருமண்ணிப்படிக்கரை
31. துயரந்தீர்த்தநாதர் திருஓமாம்புலியூர்
32. பதஞ்சலி நாதர் திருக்கானாட்டுமுல்லூர்
33. சௌந்தரேசுவரர் திருநாரையூர்
34. அமிர்தகடேசர் திருக்கடம்பூர்
35. பசுபதி நாதர் திருபந்தனைநல்லூர்
36. அக்னீஸ்வரர் திருகஞ்சனூர்
37. திருக்கோடீஸ்வரர் திருகோடிக்கா
38. பிராண நாதேஸ்வரர் திருமங்கலக்குடி
39. செஞ்சடையப்பர் திருப்பனந்தாள்
40. பாலுகந்த ஈஸ்வரர் திருஆப்பாடி
41. சத்யகிரீஸ்வரர் திருசேய்ஞலூர்
42. கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
43. வில்வஆரன்யேஸ்வரர் திருவியலூர்
44. கோடீஸ்வரர் திருக்கொட்டையூர்
45. எழுத்தறிநாதர் திருஇன்னாம்பர்
46. சாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்
47. விஜயநாதர் திருவிசயமங்கை
48. வில்வவனநாதர் திருவைகாவூர்
49. குலைவணங்குநாதர் வடகுரங்காடுதுறை
50. ஆபத்சகாயநாதர் திருப்பழனம்
51. ஐயாரப்பர் திருவையாறு
52. நெய்யாடியப்பர் திருநெய்த்தானம்
53. வியாக்ர புரீசர் திருப்பெரும்புலியூர்
54. வஜ்ரதம்ப நாதர் திருமழபாடி
55. வடமூலநாதர் திருப்பழுவூர்
56. செம்மேனி நாதர் திருக்கானூர்
57. சத்யவாகீஸ்வரர் திருஅன்பில் ஆலாந்துறை
58. ஆம்பிரவன நாதர் திருமாந்துறை
59. திருமூலநாதர் திருபாற்றுறை
60. ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா
61. ஞீலிவனேஸ்வரர் திருபைஞ்ஜிலி
62. மாற்றுறை வரதீஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
63. மரகதேஸ்வரர் திருஈங்கோய்மலை

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. ரத்னகிரிநாதர் திருவாட்போக்கி
2. கடம்பவன நாதேஸ்வரர் திருகடம்பந்துறை
3. பராய்த்துறை நாதர் திருப்பராய்த்துறை
4. உஜ்ஜீவ நாதர் திருகற்குடி
5. பஞ்சவர்னேஸ்வரர் திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)
6. தாயுமானவர் திருச்சிராப்பள்ளி
7. எறும்பீசர் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
8. நித்திய சுந்தரர் திருநெடுங்களம்
9. தீயாடியப்பர் மேலை திருக்காட்டுப்பள்ளி
10. ஆத்மநாதேஸ்வரர் திருவாலம்பொழில்
11. புஷ்பவன நாதர் திருபூந்துருத்தி
12. பிரம்மசிரகண்டீசர் திருக்கண்டியூர்
13. தொலையாச்செல்வர் திருசோற்றுத்துறை
14. வேதபுரீசர் திருவேதிகுடி
15. வசிஷ்டேஸ்வரர் திருதென்குடித்திட்டை
16. ஆலந்துறை நாதர் திருபுள்ளமங்கை
17. சக்ரவாகேஸ்வரர் திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
18. முல்லைவன நாதர் திருக்கருகாவூர்
19. பாலைவன நாதர் திருப்பாலைத்துறை
20. கல்யாண சுந்தரேஸ்வரர் திருநல்லூர்
21. பசுபதீஸ்வரர் ஆவூர் பசுபதீச்சரம்
22. சிவகொழுந்தீசர் திருசத்திமுற்றம்
23. தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்
24. சோமேஸ்வரர் பழையாறை வடதளி
25. கற்பகநாதர் திருவலஞ்சுழி
26. கும்பேஸ்வரர் திருக்குடமூக்கு (கும்பகோனம்)
27. நாகேஸ்வரசுவாமி திருக்குடந்தை கீழ்கோட்டம்
28. காசி விஸ்வநாதர் திருக்குடந்தைக் காரோணம்
29. சண்பக ஆரண்யேஸ்வரர் திருநாகேஸ்வரம்
30. மஹாலிங்கேஸ்வரர் திருவிடைமருதூர்
31. ஆபத்சகாயநாதர் தென்குரங்காடுதுறை
32. நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி
33. வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில்
34. உமாமஹேஸ்வரர் திருநல்லம்
35. கோகிலேஸ்வரர் திருக்கோழம்பம்
36. மாசிலாமனி ஈஸ்வரர் திருவாவடுதுறை
37. உக்தவேதீஸ்வரர் திருத்துருத்தி (குத்தாலம்)
38. வேதபுரீஸ்வரர் திருவழுந்தூர்
39. மயூரநாதர் மயிலாடுதுறை
40. துறைகாட்டும் வள்ளலார் திருவிளநகர்
41. வீரட்டேஸ்வரர் திருப்பறியலூர் (பரசலூர்)
42. சுவர்ணபுரீசர் திருசெம்பொன்பள்ளி
43. நற்றுணையப்பர் திருநனிபள்ளி (புஞ்ஜை)
44. வலம்புரநாதர் திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
45. சங்கருனாதேஸ்வரர் திருதலைச்சங்காடு
46. தான்தோன்றியப்பர் திருஆக்கூர்
47. அமிர்தகடேஸ்வரர் திருக்கடவூர்
48. பிரம்மபுரீஸ்வரர் திருக்கடவூர் மயானம்
49. திருமேனிஅழகர் திருவேட்டக்குடி
50. பார்வதீஸ்வரர் திருதெளிச்சேரி (கோயில்பத்து)
51. யாழ்மூரிநாதர் திருதர்மபுரம்
52. தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு
53. ஐராவதேஸ்வரர் திருக்கோட்டாறு
54. பிரம்மபுரீசர் அம்பர் பெருந்திருக்கோவில்
55. மாகாளநாதர் அம்பர் மாகாளம்
56. முயற்சிநாதேஸ்வரர் திருமீயச்சூர்
57. சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோவில்
58. மதிமுத்தீஸ்வரர் திருதிலதைப்பதி
59. பாம்பு புரேஸ்வரர் திருப்பாம்புரம்
60. மங்களநாதர் சிறுகுடி
61. நேத்ரார்பனேஸ்வரர் திருவீழிமிழிலை
62. அக்னீஸ்வரர் திருவன்னியூர்
63. சற்குனநாதேஸ்வரர் திருக்கருவிலிக்கொட்டிட்டை
64. சிவானந்தேஸ்வரர் திருபேணுபெருந்துறை
65. சித்தி நாதேஸ்வரர் திருநறையூர்
66. படிக்காசு அளித்த நாதர் அரிசிற்கரைப்புத்தூர்
67. சிவபுரநாதர் சிவபுரம்
68. அமிர்தகலேஸ்வரர் திருகலயநல்லூர்
69. சற்குனலிங்கேஸ்வரர் திருக்கருக்குடி
70. வாஞ்சிநாதர் திருவாஞ்சியம்
71. மதுவனேஸ்வரர் நன்னிலம்
72. பசுபதீஸ்வரர் திருகொண்டீச்சரம்
73. சௌந்தர்யநாதர் திருப்பனையூர்
74. வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி
75. அக்னீஸ்வரர் திருப்புகலூர்
76. வர்த்தமானேஸ்வரர் திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
77. இராமணதேஸ்வரர் இராமனதீச்சுரம்
78. திருபயற்றுநாதர் திருபயற்றூர்
79. உத்தராபதீஸ்வரர் திருசெங்கட்டாங்குடி
80. இரத்தினகிரீஸ்வரர் திருமருகல்
81. அயவந்தீஸ்வரர் திருச்சாத்தமங்கை
82. காயாரோகனேஸ்வரர் நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
83. வெண்ணைலிங்கேஸ்வரர் சிக்கல்
84. கேடிலியப்பர் திருக்கீழ்வேளூர்
85. தேவபுரீஸ்வரர் தேவூர்
86. முக்கோண நாதேஸ்வரர் பள்ளியின் முக்கூடல்
87. வன்மீகி நாதர் திருவாரூர்
88. அறனெறியப்பர் திருவாரூர் அரநெறி
89. தூவாய் நாயனார் ஆரூர் பறவையுன்மண்டளி
90. பதஞ்சலி மனோஹரர் திருவிளமர்
91. கரவீரநாதர் திருக்கரவீரம்
92. பிரியாதநாதர் திருப்பெருவேளுர்
93. ஆடவல்லீஸ்வரர் திருதலையாலங்காடு
94. கோனேஸ்வரர் திருக்குடவாயில்
95. செந்நெறியப்பர் திருச்சேறை
96. பாலசவனநாதர் திருநாலூர் மயானம்
97. சொர்ணபுரீசுவரர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
98. ஆபத்சகாயேஸ்வரர் திருஇரும்பூளை (ஆலங்குடி)
99. பாதாளேஸ்வரர் திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
100. சாட்சி நாநர் திருஅவளிவநல்லூர்
101. பரிதியப்பர் திருப்பரிதிநியமம்
102. வெண்ணிக்கரும்பர் திருவெண்ணியூர்
103. புஷ்பவனநாதர் திருப்பூவனூர்
104. சர்ப்ப புரீஸ்வரர் திருப்பாதாளீச்சரம்
105. களர்முலைநாதேஸ்வரர் திருக்களர்
106. பொன்வைத்த நாதேஸ்வரர் திருசிற்றேமம்
107. மந்திர புரீஸ்வரர் திருவுசத்தானம்
108. சற்குனநாதேஸ்வரர் திருஇடும்பாவனம்
109. கற்பகநாதர் திருக்கடிக்குளம்
110. நீணெறிநாதர் திருத்தண்டலை நீணெறி
111. கொழுந்தீசர் திருக்கோட்டூர்
112. வெண்டுறைநாதர் திருவெண்டுறை
113. வில்வவனேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர்
114. ஜகதீஸ்வரர் திருப்பேரெயில்
115. அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு
116. வெள்ளிமலைநாதர் திருதெங்கூர்
117. நெல்லிவனநாதேஸ்வரர் திருநெல்லிக்கா
118. மாணிக்கவண்ணர் திருநாட்டியாத்தான்குடி
119. கண்ணாயிரநாதர் திருக்காறாயில்
120. நடுதறியப்பர் திருகன்றாப்பூர்
121. மனத்துனைநாதர் திருவலிவலம்
122. கைசின நாதேஸ்வரர் திருகைச்சினம்
123. கோளிலிநாதர் திருக்கோளிலி
124. வாய்மூர்நாதர் திருவாய்மூர்
125. மறைக்காட்டு மணாளர் திருமறைக்காடு (வேதாரண்யம்)
126. அகஸ்தீஸ்வரர் அகத்தியான்பள்ளி
127. அமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. சங்கமேஸ்வரர் திருநணா (பவானி)
2. அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு
3. பசுபதிநாதர் கருவூர் (கரூர்)
4. திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி
5. கொடுமுடிநாதர் திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6. அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7. விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள
இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. அரத்துறை நாதர் திருநெல்வாயில் அரத்துறை
2. சுடர்கொழுந்தீசர் தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3. நெறிகாட்டுநாயகர் திருக்கூடலையாற்றுர்
4. திருநீலகண்டர் திருஎருக்கத்தம்புலியூர்
5. சிவக்கொழுந்தீசர் திருத்திணை நகர்
6. சோபுரநாதர் திருச்சோபுரம்
7. அதிகை வீரட்டநாதர் திருவதிகை
8. திருநாவலேஸ்வரர் திருநாவலூர்
9. பழமலைநாதர் திருமுதுகுன்றம்
10. வெண்ணையப்பர் திருநெல்வெண்ணை
11. வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர்
12. அறையணிநாதர் திருஅறையணிநல்லூர்
13. இடையாற்று நாதர் திருவிடையாறு
14. தடுத்து ஆட்கொண்டநாதர் திருவெண்ணைநல்லுர்
15. சிஷ்டகுருநாதர் திருத்துறையூர்
16. வடுகூர்நாதர் வடுகூர்
17. வாமனபுரீஸ்வரர் திருமாணிகுழி
18. பாடலீஸ்வரர் திருப்பாதிரிப்புலியூர்
19. சிவலோக நாதர் திருமுண்டீச்சரம்
20. பனங்காட்டீசர் புறவர் பனங்காட்டூர்
21. அழகிய நாதர் திரு ஆமாத்தூர்
22. அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலை

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர்  திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர்  திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர்  திருவக்கரை
30. அரசிலிநாதர் திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்

சுபம்

BLOG COMMENTS POWERED BY DISQUS