Tuesday, Jan 16th

Last update11:57:46 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் April Fool (ஏப்ரல்பூல்) என்னும் சித்திரை முட்டாள் தினம்

April Fool (ஏப்ரல்பூல்) என்னும் சித்திரை முட்டாள் தினம்

E-mail Print PDF
No automatic alt text available.

முன்னொரு காலத்தில், இதே நாளில் என்ன நடந்தது என்பதை நாம் அறியவரும்போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சில சமயங்களில் நம்ப முடியாமலும் இருக்கும். அட இப்படியும் நடந்ததா என்று நாம் நம்மையே கேட்க வைக்கும் பல நிகழ்வுகள், காலத்திற்குக் காலம் அரங்கேறி விட்டன.

இன்றைய நவீன யுகத்தில், பத்திரிகைகள், வானொலிகள், இணையப் பக்கங்கள் என்று எல்லாமே போட்டிபோட்டுக் கொண்டு, வாசகர்களை, நேயர்களை முட்டாகளாக்குவதில், மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றன.

இவற்றில் ஏமாந்து முட்டாள்களாகி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 1957இல் சுவிஸ் விவசாயிகள் மரங்களிலிருந்து, பயத்தங்காய் பறிப்பதுபோல, நூடிள்ஸ் பறிப்பதைக் காட்டி, பலரை முழுமுட்டாள்கள் ஆக்குவதில், உலகப் பிரபல்யமான பீபீசி பெருவெற்றி கண்டது.

செய்திகளை பிரசுரிக்கும் செய்தித் தாள்கள், இணையங்கள், அன்றைய தினம் ஏப்ரல் முதலாம் திகதி என்பதை மறந்திருக்கும் வாசகர்களுக்கு பொய்யான செய்திகளை பதிவிலிட்டு சுலபமாக ஏமாற்றி விடுகின்றார்கள். அதன் மூலம் அவர்கள் இத் தினத்தை ஞாபப்படுத்துவதாக இருக்கின்றது. அதிலும் ஒரு சுகத்தை அனுபவிக்கின்றார்கள்.


இந்த நாளை முட்டாள்கள் தினமாக்கும் வழமை எப்பொழுது ஆரம்பித்தது?
1700ம் ஏப்ரல் முதலாந் திகதியன்று, ஆங்கிலேயர்கள்தான் இதைப் பிரபல்யமாக்குவதில் முனைந்தார்கள் என்றாலும், சில சரித்திர ஆசிரியர்களின் கருத்துப்படி, பிரான்ஸ் நாடு ஜூலியன் (Julian ) நாட்காட்டியிலிருந்து கிரகரியன் (Gregorian) நாட்காட்டிக்கு மாற்றம் கொண்டுவந்தபோதுதான் இது 1582இல் ஆரம்பித்தது என்று சொல்லப்படுகின்றது.

ஜனவரி 1க்கு புதுவருடம் கிரகரியன் நாட்காட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டாலும், இந்தப் புதிய நடைமுறையை உடனடியாக ஏற்காதவர்கள், மார்ச் மாதக் கடைசி வாரத்தில்தான் (ஜூலியன் நாட்காட்டியின்படி) புதுவருடத்தைக் கொண்டாடினார்கள். இது ஏப்ரல் முதலாந் திகதிவரை தொடர்ந்ததால், இவர்களை முட்டாள்கள் என்று கேலி செய்ய ஆரம்பித்து, இது வருடாவருடம் தொடர்ந்தது என்பது இவர்கள் கருத்தாக இருக்கின்றது.

18ம் நூற்றாண்டில், இது பிரிட்டன் முழுவதும் நன்றாகப் பரவிட்டது. ஸ்கொட்லாந்தில், இந்த முட்டாள்கள் தினத்திற்காக, இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.

மேலும் ஒரு வரலாறு
ஏப்ரல் ஒன்றாம் தேதியை ரோமானியர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள்.
காலம் காலமாக கடை பிடிக்க பட்ட இந்த நடை முறையை அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி 1562 ம் ஆண்டில் மாற்றி அமைத்தார்.

இந்த மாற்றத்தின் படி ஜனவரி ஒன்றாம் தேதிதான் புத்தாண்டு வருகிறது.  ithai நாடு முழுவதும் அறிவிக்கவும் செய்தார்.  

ஆனால் காலம் காலமாக கடை பிடித்த நடைமுறையை மாற்றி புது நடை முறைக்கு மாற பலருக்கு மனம் இடம் தரவில்லை.  கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை  தூக்கி மனையில் வை என்ற கதையாக இது என்ன கூத்து என்று,  பலர் பழைய ஏப்ரல் ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடினார்கள் .

இப்படி மாற மறுத்தவர்களை, மாறியவர்கள் முட்டாள்கள் என்றார்கள்.  இது தான் முட்டாள் தினமாக வந்ததற்கு முதல் காரணம்.  இது இப்படியே ராக்கை முளைத்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS