Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி இன்று 70 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கம் - ஆரம்பமும் வளர்ச்சியும்:

இன்று 70 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கம் - ஆரம்பமும் வளர்ச்சியும்:

E-mail Print PDF

கடந்த 14.05.2016 அன்று நடைபெற்ற பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களின் நடன சாகசங்களும், மழலை விளையாட்டுக்களும்.

முளையிலே பசளை இட்டு; அறிவூட்டி, வழிகாட்டி ஆர்வமூட்டி எமது சமூகத்தின் எதிகால அறிஞர்களையும், கல்விமான்களையும் நற்பழ விருட்சமாக்க உருவாக்கும் பணியில். முன்பள்ளி ஆசிரியர்களும், சனசமூக நிலைய நிர்வாகமும் அரச உத்தியோகத்தர்களும்.

“வாழ்க, வளர்க நற்பழ விருட்சமாக”

மழலைகள் நடனம் வீடியோ...

மழலைகளின் விளையாட்டுக்களை படமாக பார்வையிட...

மேலும் பல படங்கள் பார்வையிட..

அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கம் - ஆரம்பமும் வளர்ச்சியும்:

"எம் கடன் பணி செய்து கிடப்பதே"

(எமது சமூகத்தின் வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக இங்கே பதியப்பெற்றுள்ளது)

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான வெளிப் பிரகாரத்தின் தென்கீழ் மூலையில் இரண்டு மாடிகளுடன் உயர்ந்து நின்று; ஊர் மக்கள் மத்தியில் நற்பழ விருட்ஷமாக அமைந்து; ”கல்வி கல்லாதவன் கல்லு" என்ற தாரக மந்திரத்தை ஊட்டி உச்சாகம் கொடுத்து "வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ வழிகாட்டும்" அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கம் நம் ஊர் மக்களிற்கு இறைவியின் அருளினால் கிடைத்த ஒரு வெள்ளைப் பிரம்பாகும்.

1945 ம் ஆண்டு "சீனிபனை" என்னும் வளவில் எமது கிராம மக்கள் புதினப் பத்திரிகை வாசிப்பதற்கென அப்போதைய இளைஞர்களால் ஓர் வாசிகசாலை ஆரம்பிக்கப்பெற்றது. இவ் வாசிகசாலை விரிவாக்கப் பெற்று 1946ம் ஆண்டு பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம தர்மகர்தாவாக இருந்த பூசகர் கனகர் சுப்பையா அவர்களின் அனுமதியுடன் அம்பாள் ஆலய வீதிக்கு இடமாற்றம் செய்து (அப்பொழுது பணிப்புலம் என்ற இந்த சிற்றூர்; பண்ணாகம் என்னும் கிராமத்துடன் இணைந்து அதன் வடக்கே இருந்தமையால்) "அம்பாள் சனசமூக நிலையம் கிராம முன்னேற்றச் சங்கம்"; பண்ணாகம் - வடக்கு என பெயர் சூட்டி அரசாங்கத்தில் பதிவு செய்தனர்.

இச் சனசமூக நிலையத்தின் மூலம் எமது வருங்கால சந்ததியினரும் தொடர்ந்து பலன் பெற வேண்டும் என்ற தொலை நோக்கோடு நன்கு திட்டமிடப்பட்டு; நிரந்தரமான கட்டிடம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பெற்றன. ஊர்ப்பெரியோர்களும் இளைஞர்களும், யுவதிகளும் கோலாட்டம், கும்மிஅடித்த்ல், கரகாட்டம், தெருக்கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளை வீடுவீடாகவும், தெருவீதிவழியாகவும் நடாத்தி பணம் சேகரித்தும்; ஊரில் உள்ள எல்லோரும் தொண்டு வேலைகள் செய்தும் 1952ம் ஆண்டு அயல் ஊரவர்கள் பார்த்து பிரமிக்கத்தக்தாக இரு மாடிகளைக் கொண்ட நிரந்தர கட்டிடம் அமைக்கப்பெற்றது.

அமரர்களான; திரு. இ. பொ.சுப்பிரமணியம் (வுறூடி), திரு. ச. கந்தையா, திரு.இ. நடேசன், திரு. க. ஏகம்பரம், திரு. ஆ. நமசிவாயகம், திரு. வ. வரதராசா, திரு. ச. பொன்னம்பலம், திரு. நவரத்தினம், திரு.வ. மார்க்கண்டு, மற்றும் எம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. வி. கந்தசாமி, திரு. ச. அளகரத்தினம், திரு. வ. சிவஞ்ஞானம், திரு. அ. சதாசிவம், திரு. விசுவலிங்கம் (ஆசியர்), மற்றும் இங்கு பெயர் குறிப்பிடத் தவறிய அப்போதைய இளைஞர்களின் தளராத முயற்ச்சியும் ஓயாத உழைப்பும் இச் சனசமூக நிலையத்தின் ஆரம்பத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலகாரணிகளாக விழங்கிற்று.

இவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து பேருதவிகள் செய்து; உந்துசக்திகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்த பெரியோர்களில்; அமரர்களான திரு. இ. சோமசுந்தரம் (சிறாப்பர்),  திரு. த. குமாரசாமி (பொலிஸ் உத்தியோகத்தர்), வித்துவான் கா. வேல்முருகன் (ஆசிரியர்), திரு. சி. செல்வத்துரை (ஆசிரியர்), திரு. சின்னத்தம்பி (ஆசிரியர்), திரு. செல்வரத்தினம் (ஆசிரியர்), செட்டியார். ஆ. கந்தையா (ஆசிரியர்), வித்துவான் மு. விருத்தாசலம் (ஆசிரியர்), மற்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. சி. கந்தையா (ஆசிரியர்), திரு. க. தம்பையா (ஆசிரியர்) ஆகிய பெரியோர்களும் அடங்குவர்.

அவர்களைத் தொடர்ந்து; அமரர்களான "சைவப்புலவர்". ஆ. பாலகிருஸ்ணன், திரு. வ. சுப்பிரமணியம், திரு. சி. சுப்பிரமணியம், திரு. மு. குளந்தைவேலு, திரு. ச. சண்முகலிங்கம், திரு. சி. ஆறுமுகம், திரு. வே. பாலசிங்கம், திரு. சி. துரைராசா, திரு. சி. சிவானந்தன், திரு. ந. கந்தசாமி, திரு. த. பேரின்பநாதன், திரு. இ. சிங்கராசா, திரு. பொ. சுப்பிரமணியம், திரு. நா. பரம்சோதி, திரு.பொ. ஆராச்சி, திரு. புண்ணீயமூர்த்தி, திரு.சி. இராசையா, திரு. க. பாலசுப்பிரமணியம், திரு. பொ.பாலசிங்கம், திரு. சுப்பிரமணியம், திரு. த. மகாதேவர், திரு. தி. கனகசபை, திரு. சு. செல்வநாயகம், திரு. கு. செல்வரத்தினம், மற்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. த. கந்தையா, திரு. சி. தங்கராசா, திரு.செ. தங்கராசா, திரு. செ. இரத்தினதுரை, திரு. அ. சோமசுந்தரம், திரு. மு. திருப்பதி, திரு. பொ. சிவபாதம், திரு. க.தேவபூலோகராசா,  திரு. சோ. பஞ்சாட்சரம், திரு. தெய்வேந்திரம், திரு. கா. கோபாலகிருஷ்ணன், திரு. செ. திருநாவுக்கரசு, திரு. ஆ. செல்வராசா, திரு. வி. துரைரத்தினம், திருமதி. ஏ. சிவபாக்கியம், மற்றும் திருமதி. பா. நாகரத்தினம், திருமதி. க. குலமணி, திருமதி. க. இரஞ்சிதம், திருமதி. தெ. தனலட்சுமி, திருமதி. பூங்குஞ்சு, திருமதி. திலகவதி, திருமதி. ஞா. தேவயானி, திருமதி. இ. பகவதி, திருமதி. ம. புனிதவதி, இன்னும் பெயர் குறிப்பிடத் தவறிய பல இளைஞர்கள் யுவதிகளினாலும்; ;  

அவர்களைத் தொடர்ந்து; அமரர்களான திரு.வே. தேவராசா, திரு. சி. லிங்கலிங்கம், திரு.மு. லிங்கநாதன், திரு. செ. பரமநாதன், மற்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. க. கனகரத்தினம், திரு. ச.குமாரசிங்கம், திரு. த. தவராசா, திரு. ஆ. வரதராசா, திரு. இரத்தினசிங்கம், திரு. இ. பாலசுப்பிரமணியம், பொ. கருணாகரன், திரு. கா. இராமச்சந்திரன், திரு. ந. தருமதிலகன், திரு. க. பரமானந்தம், திரு. திரு. க. விக்னேஸ்வரன் திரு. சி. சிவலிங்கம், திரு. வி.துரைசிங்கம், திரு. க. ஜெகராசா, திரு. ஐ. வினாயகமூர்த்தி, இன்னும் பெயர் குறிப்பிடத் தவறிய பல இளைஞர்கள் யுவதிகளினாலும்;

அவர்களைத் தொடர்ந்து; திரு. சி. அருளானந்தம், திரு. இ. தறுமராசா, திரு. த. தனகோபால், திரு. க. சபாநாயகம், திரு. சு. கங்காதரன், திரு. க. தயாளன், திரு. இ. அருணகிரிநாதன், திரு. இ. மயிவாகனம். திரு. சு. ஜெகதீஸ்வரன், திரு. பொ. சூரசங்காரன், திரு. இ. சிவானந்தன், திரு. க. ஜெகதீஸ்வரன்(ஐயர்), திரு. வி. ராகவன், திரு. அ. பாலசுந்தரம், திரு. ஆ. தங்கராசா, திரு. அ.சந்திரகாந்தன் மற்றும் அமரர்களான திரு. வ. இராமச்சந்திரன், திரு. த. இராமகிருஸ்ண்ணன் இன்னும் பெயர் குறிப்பிடத் தவறிய பல இளைஞர்கள் யுவதிகளினாலும்;

அவர்களைத் தொடர்ந்து; திரு. சு. சுந்தரசிவம், திரு. அ. சச்சிதானந்தன், திரு. ந. உதயன், திரு. த. லவன், திரு. ப. மகேசன். திரு. த. பாலகுமார், திரு. க. அம்பிகைபாலன், திரு. சி.நடேசன், திரு. அ. குலேந்திரன், திரு. ந. இளங்கண்ணன், திரு. சி. சிவகுமார், திரு. ந. திலகராசா, திரு. ஆ. யோகன், திரு. செ.க. மோகன், திரு. சி. பாலசிங்கம், திரு. கு. ஈஸ்வரன், திரு. க. ஐங்கரன், திரு. கா. சண்முகம், திரு. த. குகனேஸ்வரன், திரு. ப. நகுலேஸ்வரன், திரு. இ. ரகுபதி, திரு. ம. சிவநேசன், திரு. சி. பாலசிங்கம், திரு. த. அம்பிகைபாலன், திரு. அ.சிவகரன், திரு. க. சுதா, திரு. கு. குகதீஸ்வரன், திரு. அ. சிதம்பரநாதன், திரு. இ மாணிக்கராசா இன்னும் பெயர் குறிப்பிடத் தவறிய பல இளைஞர்கள் யுவதிகளினாலும்; எமது கிராமத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டன.  

இச் சனசமூக நிலையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து; சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கம், இந்து இளைஞர் இயக்கம், மாதர் சங்கம் என பல கிளைகளுடன் கூடிய நற்பழவிருட்சம் போல் வளர்ந்து நமது மக்களுக்கு நற்பணியாற்றி; வடமாகாணத்தில் உள்ள சங்கங்களில் "ஏ" பிரிவிற்கு உயர்வு பெற்று எமது கிராமத்திற்கு நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தந்து முன்னணி வகித்து வந்தது.


பெரியோர்களினால் சனசமூகநிலைய கிராமமுன்னேற்றசங்கமும், இளைஞர்களினால் இந்து இளைஞர் இயக்கமும், யுவதிகளினால் மாதர் சங்கமும் நிர்வகிக்கப்பெற்றது. ஆண்டுகள் செல்லச் செல்ல பருவமாற்றத்தால் இளைஞர்களும், யுவதிகளும் பெரியோர்களாக; சிறுவர்களும் சிறுமியர்களும் இளைஞர்களாகவும், யுவதிகளாகவும் மாறி முதியோர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து வந்தனர்.


போர்க்கால சூழ்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாக சனசமூக நிலைய கிராம முன்னேற்ற சங்கமும், இந்து இளைஞர் இயக்கமும், மாதர் சங்கமும் தனித்தனியாக இயங்க முடியாது போகவே யாவும் ஒன்றினைந்து ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.


"எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் அப்பர் சுவாமிகளின் வாசகம் அம்பாள் சனசமூக நிலையத்தினுள் நுளைந்ததும் எம்மை வரவேற்கின்றது. மனிதராக பிறந்ததின் நோக்கம் இறைபணியுடன் பிற உயிகளுக்கும் பணி செய்யவே (பிற உயிகளிலும் இறைவன் இருக்கின்றார்) என எமக்கு ஞாபகப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் கடிதம் எழுதுவதற்கென அச்சிடப்பெற்ற எல்லா பத்திரங்களிலும் (Letter head) இவ் வாசகம் பொறிக்கப்பெற்றிருக்கும்.  கடிதமூலம் அரச திணைக்களங்களுடனோ அல்லது வேறு நிறுவனங்களுடனோ எமது நிலையம் தொடர்பு கொள்ளும் போது இந்த வாசகம் அவர்களுக்கு எங்கள் நிலையத்தின் உள் நோக்கத்தை சுலபமாக புரியச் செய்து வேலையை இலகுவாக்குகின்றது.


எமது கிராம முன்நேற்றச் சங்கத்தில் அமைந்திருக்கும் நூல் நிலையத்தில் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதப்பெற்ற விஞ்ஞான, கணித, கலை, கலாச்சார, சமய புத்தங்களும் வேறு பல நூல்களும் எமது மக்களின் வாசிப்பு திறனை ஊக்கிவிக்கின்றன. நூல் நிலையத்தினுள் பொறிக்கப்பெற்றிருக்கும் "வாசிப்பு ஒருவனை பூரண மனிதனாக்கும்" என்ற வாசகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் வாசிக்கத் தூண்டுகின்றது.


எமது கிராமத்தில் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்த போதும் எல்லோரும் ஒருதாய் மக்கள் போல் சகோதர மனப்பான்மையுடன் சந்தோசமாகவும் ஒற்றுமையாக வாழ இந்த சனசமூக நிலையமே முக்கிய காரணியாகும்.


இளம் சந்ததியினரிடையே கல்வியையும், சமய அறிவையும் மேம்படச் செய்வதற்காக இவ் நிலையத்தில் இலவச இரவு வகுப்புகள், தையல் பயிற்சி வகுப்புகள், சங்கீத வகுப்புகள், சமய வகுப்புகள் நடாத்தி அறிவை மேம்படச் செய்ததுடன் தொழில் பெற்றுக் கொள்வதற்கும் ஊக்கமும், ஆக்கமும் அளித்து வந்துள்ளது.


அத்துடன், விளையாட்டுப் போட்டிகள், நாடகப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடாத்தி இலைமறை காய்போல் மறைந்திருக்கும் எமது கிராம திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து மாவட்ட, மாகாண தேசிய விருதுகளும், பாராட்டுகளும் பெற்றுக்கொள்ள வழி சமைத்துக் கொடுத்துள்ளனர்.


எமது கிராம முன்னேற்றச் சங்கம் வேலையற்றிருக்கும் யுவதிகளுக்கு தொழில் பெற்றுக் கொடுக்கும் முகமாக அரச உதவியுடன் நெசவு நிலையம் ஆரம்பித்து பல ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அத்துடன் பொதுக் கிணறுகள் வெட்டிக் கொடுத்து தண்ணீர் பஞ்சத்தை போக்கியும், மலசகூடங்கள் கட்டிக் கொடுத்து சுகாதாரத்தைப் பேணியும் வந்துள்ளனர். எமது கிராமத்தில் அனேகமானோர் விவசாயிகளாக இருப்பதனால், அவர்கள் த்லையில் சுமந்துவரும் நெல், புல், விறகு போன்றவற்றை இறக்கி வைத்து இளைப்பாறுவதற்காக சுமைதாங்கிகளும் அமைத்து உதவியுள்ளார்கள்.


அம்பாள் சனமூகநிலையமும் மற்றும் அதன் கிளைச் சங்கங்களும் தற்பொழுது அங்கு வாழ்ந்து வரும் பெரியோர்களினாலும், இளைஞர்களினாலும், யுவதிகளினாலும் வெகுசிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது. எமது கிராமதில் வளர்ந்துவரும் வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக அங்கு வெளிவரும் பத்திரிகைகள் புலம்பெயர்ந்து வாழும் எமது கிராம உறவுகளின் உதவியுடன் கிடைக்க ஒழுங்குகள் செய்துள்ளனர்.


தற்பொழுது அயற்கிராமங்களில்; தமது கிராம மக்களின் முன்னேற்றம் கருதி வெளிநாடுகளில் வாழும் உறவுகளின் உதவியுடன் தங்கள் வாசிகசாலைகளில் கணினி, தொலைக்காட்சி போன்ற நவீன ஊடக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.


அதுபோல்; எங்கள் கிராம மக்களையும் மற்றவர்களோடு ஈடு இணையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்பும் நலன் விரும்பிகளை நிலைய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

குறிப்பு: இவ் நிலையத்தின் ஆரம்பத்திற்கும், வளர்ச்சிக்கும் உழைத்த தங்கள் பெயர்; இக் கட்டுரையில் குறிப்பிடத் தவறியிருந்தால், தயவு செய்து This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it மூலம் நிர்வாகிக்கு தெரியப்படுத்தி தங்கள் பெயரை உட்புகுத்திக் கொள்ளுங்கள்.

க.கனகரத்தினம்
பணிப்புலம்
பண்டத்த்ரிப்பு

10.10.2008


 

 2928.11.11.2016


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS